37
திருமணம் முடித்து கௌதமின் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றனர் .ஜான்வியின் தாயின் அறிவுரைப்படி முதலில் ஜான்வி அங்கிருந்த ஒரு சிறிய பூஜை அறையில் சென்று விளக்கேற்றி தொழுத பின் ஒவ்வொரு சடங்காய் செய்தனர் .
பாலும் பழமும் கொடுக்க வேண்டும் .முதலில் ஜான்வியிடம் பார்வதி கொடுத்தவர் "ஜான்வி பாதி குடுச்சுட்டு கௌதமுக்கு கு..."என்று கூறி முடிப்பதற்குள் ஜான்வியோ மொத்த பாலையும் குடித்துவிட்டு முழித்துக் கொண்டிருந்தாள் .
அவளின் திருட்டு முழியை பார்த்து அனைவரும் சிரிக்க கௌதமோ அவளின் திருட்டு முழியில் முதலில் சிரித்தவன் பின் அவளின் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதட்டின் மேல் ஒட்டி இருந்த பாலை துடைத்து விட்டான் .
பார்வதியோ தலையில் அடித்துக் கொண்டார் " பாதி குடுச்சுட்டு மீதியை கௌதமுக்கு குடுன்னு சொல்றதுக்குள்ள இப்டி குடுச்சு முடுச்சுட்ட "என்று கேட்க
அவளோ "அம்மா காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடலம்மா.மணி இப்போ ரெண்டு ஆச்சு அப்பறோம் எனக்கு பசிக்குமுள்ள "என்று முகத்தை சுருக்கி கூற அவள் கூறிய விதத்தில் அனைவரும் சிரிக்க பார்வதியோ முறைக்க முயன்று சிரித்துவிட்டார்
.தலையில் அடித்துக் கொண்டவர் இன்னொரு கிளாஸ் பாலை எடுத்து வந்து கௌதமிடம் முதலில் கொடுத்தார் .அவன் பாதி அருந்திவிட்டு ஜான்வியிடம் கொடுக்க அவள் அதையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டாள்.அவள் குடிக்கும் வேகத்திலேயே அவள் பசியை உணர்ந்தவன் "அத்தை எல்லாரும் சாப்பிட போகலாம்.கல்யாணம் முடுஞ்சதும் வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லி இங்க வந்து ரொம்ப நேரமாச்சு. "என்று கூற பின் அனைவரும் சென்று ஒரு உணவகத்தில் கிண்டலும் கேலிகளுடனும் உண்டனர் .
இறுதியாக அனைவருக்கும் ரசகுல்லா வைக்கப்பட ஆதியோ அந்த ரசகுல்லாவை பார்த்தவன் சத்தமிட்டு சிரிக்க துவங்கினான் .அவன் அப்படி சத்தமிட்டு சிரிப்பதை பார்த்து அனைவரும் குழம்ப ஜான்வியோ அவனின் சிரிப்பின் பொருள் உணர்ந்து "ஷு.... ஷு... ஆதி"என்று அருகில் இருந்த அவன் வாயை பொத்த
ஆதியோ அவளின் கையை எடுத்து விட்டவன் "என்ன மினியன் உன்னோட வீர தீர சாகசத்தை சொல்லணும்ல "என்று கூற பார்வதி அவன் கூற போகும் சம்பவத்தை நினைத்து புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார் .
கெளதம் குழப்பமாய் அவனை பார்த்தவன் "என்னடா நடந்துச்சு இப்டி சிரிக்குற ?"என்று கேட்க
ஆதி "அதுவா பாவா அது ஒரு குட்டி கதை "என்று கூற
கௌதமோ என்ன கதை என்று தெரிந்து கொள்ள ஆவல் கொண்டவனாய் "என்னடா நடந்துச்சு சொல்லு "என்று கூற ஜான்வி அவன் புறம் திரும்பியவள் "அத்து வேணாம் டா ப்ளீஸ் "என்று கூற அவனோ அவள் கூறுவதை காதிலேயே வாங்காமல் ஆதியிடம் கதை கேட்க ஜான்வியோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் .
ஐந்து மாதத்திற்கு முன் ,
ஆதியும் ஜான்வியும் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் .அப்பொழுது அதில் ரசகுல்லாவிற்கான அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் வந்தது .
குண்டு குண்டாக வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற ரசகுல்லாவை பார்க்க பார்க்க ஆதிக்கும் ஜான்விக்கும் நாவில் எச்சில் ஊற ஆதி "மினியன் ரசகுல்லா சாப்பிடலாமா ?அம்மா அப்பா வேற வீட்ல இல்ல நீ பாதி நான் பாதி deal okvaa "என்று கேட்க
ஜான்வி "ஆங் சாப்பிடலாம்டா நா செய்றேன் "என்று கூற
அவனோ அவளை பரிதாபமாய் பார்த்தவன் "ஹே வேணாம்டி ப்ளஸ் பக்கத்துல தான் ஸ்வீட் கடை போய் வாங்கிட்டு வரேன் ஆளுக்கு பாதியா சாப்பிடலாம் "என்று கூற
அவளோ இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "என்னோட சமையலை சாப்பிட்டு பாருடா கடைல வைக்குறத எல்லாம் அடுத்து சாப்பிடவே மாட்ட "என்று கூற
அவனோ பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவன் அவளின் ஆர்வத்தை கெடுக்க வேண்டாமென்று"என்னவோ செய் "என்று கூறி அமர்ந்து விட்டான் .அவளோ எழுந்து கையை தட்டியபடி உள்ளே சென்றவள் ஒரு மணி நேரமாய் அங்கிருந்த சாமான்களை உருட்டும் சத்தமே கேட்டுக் கொண்டிருந்தது .
ஆதி என்ன செய்கிறாள் என்று நினைத்து உள்ளே சென்றவன் என்ன ஆனது என்று பார்க்க ஆன் பார்த்ததோ பாத்திரத்தில் இருந்த சட்டியை வெறித்துக் கொண்டிருந்த ஜான்வியை தான் .என்ன ஆச்சு என்று அருகில் சென்று அவள் தலையில் தட்டியவன் "என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ?"என்று கேட்க
அவளோ ஈஈஈ என்று இளித்தால்.ஆதி "இவ இளிக்கிறதே சரி இல்லையே "என்று நினைத்தவன் அந்த சட்டியை பார்க்க அதிலோ ரசகுல்லா உடைந்து உடைந்து ஜீனிக் பாகோடு ஒன்றாய் கலந்து கூழ் போல் இருந்தது .
அதை கண்டு நெஞ்சில் கை வைத்தவன் "என்னடி இது ?"என்று கேட்க
ஜான்வியோ தலையை சொரிந்தபடி "அது வந்துடா ரசகுல்லாவுக்கு பன்னீர் எடுத்தேனா ஆனா அது வரவே இல்லடா அதான் அப்டியே ஊத்திட்டேன் ஜீரால "என்று கூறி இளிக்க அவனோ தலையில் அடித்தவன் அந்த சட்டியில் இருந்த ரசகுல்லா
(ரசத்தை ) எடுத்து வாயில் வைக்க அதை வாயில் வைத்ததுமே உணர்ந்து கொண்டான் அவள் செய்த கிறுக்கு தனத்தை .ஆதி "அக்கா .... பன்னீர் பாலுள எடுப்பார்களா தயிறுல எடுப்பார்களா ?"என்று கேட்க
ஜான்வி "லூசு மாறி கேள்வி கேக்குற பாலுள தான் எடுப்பாங்க "என்று கூற
ஆதி அவள் தலையிலேயே கொட்டியவன் "அப்பறோம் ஏன்டி ஒர ஊத்துனா தயிறுல ரசகுல்லா செஞ்சு வச்சுருக்குற ?"என்று கேட்க
ஜான்வி வாயை பிறந்தவள் "அப்போ அது பால் இல்லையா ?"என்று கேட்க ஆதி அவள் கழுத்தருகில் கையை நெறிப்பதை போல் கொண்டு போனவன் பின் அந்த சட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் இருந்த நாய்க்கு ஊற்றிவிட்டு வந்தான் .
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் அனைவரும் காலை உணவு உண்டு கொண்டிருக்க பார்வதி "ஆதி நம்ம தெருவுல ரெண்டு நாய் சுத்திகிட்டு இருந்துச்சுல ."
ஆதி "ஆமாமா என்ன அதுக்கு ?"என்று கேட்க
அவரோ "இல்லடா எப்போவும் சாப்பாடு வைக்க போனேன்னா ஆவலா வந்து சாப்புடும் இன்னைக்கு சாதம் வச்சேன் தெறிச்சு ஓடிருச்சுடா ரெண்டும் "என்று கூற
அவனோ "எந்த பாத்திரத்துல மா வச்சீங்க ?"என்று கேட்க அவரோ நேற்று ஜான்வி ரசகுல்லா செய்த பாத்திரத்தை காட்டினார் .
அதை பார்த்து ஆதி சிரித்தவன் "இனி அந்த பாத்திரத்துல நீ அமிர்தமே வச்சாலும் அது வெஷத்த பார்த்த மாதிரி தான் மா ஓடும் "என்று கூறி நேற்று நடந்த சம்பவத்தை கூறி சிரிக்க ஜான்வியோ தன இடது கையால் முகத்தை மறைத்தபடி உண்ணுவதை தொடர்ந்தாள் (சோறு முக்கியம் )
இதை கூறி சிரித்த ஆதி "இவ சமையலை சாப்பிடுறதும் ஒன்னு தான் ஒரு பாட்டில் விஷத்தை குடிக்குறதும் ஒன்னு தான் "என்று கூற ஜான்வியோ அருகில் இருந்த ஆதியின் தொடையை நறுக்கென்று கிள்ளி வைத்தால் .ஜான்வி "என்ன டேமேஜ் பண்ணலேன்னா தூக்கமே வராதாதா உனக்கு "என்று அவனை சரமாரியாக அடித்தவளை கெளதம் தோளோடு அணைத்து அமைதிப் படுத்தினான் .
இப்படி கலாட்டாக்களோடு அங்கு உணவுவேளை நகர ப்ரவீனோ தன் எதிரே அமர்ந்திருந்தவளையே குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் .
அவள் ஆதித்யாவின் தங்கை ஸ்வேதா .மாநிறமாக தேகம் சற்று பெரிய கண்கள் குண்டு கன்னங்கள் என்று பார்க்க ஒரு பார்பி பொம்மை போல் இருப்பாள்.இரண்டு மூன்று முறை மட்டுமே ஜீவிதாவின் திருமணத்தின் பொழுது பார்த்திருக்கிறான் எனில் அவனின் கவனத்தை பெரிதும் ஈர்த்திடாத அவளோ நெற்றில் இருந்து அவனின் மூலையில் சூறாவளியென சுழன்றடித்துக் கொண்டிருக்கிறாள் அவளின் வார்த்தைகளால் .
நேற்று மாலை ,
அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவசரமாய் அங்கு வந்த ஆதி பிரவீன் என்றழைத்தான் .பிரவீன் "என்ன மச்சான் ?"(ஜீவிதாவின் திருமணத்தின் பின் இருவரும் மிகவும் நெருங்கி இருந்தனர் .
ஆதி "மாப்ள தங்கச்சி திடுதிப்புனு வந்து ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுகிட்டு கூட்டிட்டு வானு சொல்லுறா டா எனக்கு இங்க வேற வேலை இருக்கு கொஞ்சம் போய் கூட்டிட்டு வரியா ?"என்று கேட்க
பிரவீன் அவளை திருமணத்தில் பார்த்த ஞாபகம் இருந்ததால் "ஓகே மச்சான் பைக் சாவி குடுங்க "என்று கூறி ரயில் நிலையத்திற்கு சென்றான் .
ரயில் நிலையத்திற்கு சென்றவன் எங்கே என்று ஸ்வேதாவை தேட அவன் கண்ணில் சிக்கியது அவனின் முன்னாள் காதலி ரேஷ்மி அவளது கணவனுடன் சிரித்து பேசியபடி செல்லும் காட்சி .
முழுதாய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு பார்க்கிறான் .முடிந்து போன அத்யாயம் அவள் என்று மனதில் கூறிக் கொண்டாலும் அவளது மேடிட்ட வயிற்றை பார்த்து மனதில் சுருக்கென்ற வலி தாக்குவதை தடுக்க முடியவில்லை .வெகுநேரமாய் அவள் சென்றபின்னும் அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தவனை யாரோ தோள் தொட்டு உலுக்கியதிலேயே சுயநினைவுக்கு வந்தான் .
அங்கே அவனை பார்த்து ஒரு சிறிய புன்னகையுடன் நின்றிருந்தாள் ஸ்வேதா .அவளை பார்த்த பின்னே இங்கே தான் வந்ததன் காரணம் புத்தியில் உரைக்க போலியாய் சிரித்தவன் "சாரி ஸ்வேதா வந்து ரொம்ப நேரம் ஆச்சா ?"என்று கேட்க
அவளோ புன்னகைத்தவள் "அரை மணி நேரம் தான் ஆச்சு .கெளம்பலாமா ?"என்று கேட்க அவனும் ஒரு தலை அசைப்புடன் முன்னே நடந்தான் .
அவன் முன்னே செல்லும் முன் சற்று தயங்கியவள் "ஒ..... ஒரு நிமிஷம் "என்று அழைத்தாள் .
அவன் என்ன என்று நோக்க அவளோ தன்னிடம் இருந்த கை குட்டையை கொடுத்தவள் "கண்ணை தொடச்சுக்கோங்க "என்று கூற அப்பொழுதே உணர்ந்தான் கண்ணில் இருந்து கன்னத்தில் அவனே அறியாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை .
தயக்கத்தோடு அவளிடம் வாங்கியவன் "டஸ்ட் ... பட்டுருக்கும்னு நினைக்குறேன் "என்று கூற அவளோ ஒன்றும் கூறாமல் புன்னகையோடு அவன் பின்னே தனது உடமைகள் நிறைந்த பையை நடுவில் வைத்து அமர்ந்து கொண்டாள்.
இருவரும் வீட்டிற்கு வந்து சேர அதன் பின் பிரவீன் தனது வேலைகளை பார்க்க சென்று விட்டான் .அன்று இரவு அங்கிருந்த வரவேற்பறையில் தான் அனைத்து நண்பர்களும் உறங்கி கொண்டிருந்தார்கள் .அன்று ஏனோ பிரவீனிற்கு உறக்கம் கண்களை தழுவவே இல்லை .ரேஷ்மியை பார்த்த தாக்கம் அவள் நினைவுகள் மனதில் முட்டி மோதி அவனை அலைக்கழிக்க இரவு ஒரு மணி வரை புரண்டு புரண்டு படுத்தவன் அதன் பின்னும் உறக்கம் வராததால் மாடிக்கு செல்லலாம் என்று மேலே ஏறினான் .
அங்கே சுவற்றில் கை ஊன்றி ஒரு வரி உருவம் நிலவின் ஒளியில் மங்கலாய் தெரிய இந்த நேரத்தில் யாரது என்று நினைத்தவன் அருகில் செல்ல காற்றில் அசைந்தாடிய விரிந்த கூந்தலை தன் காதிற்கு பின் சொருகிவிட்டபடி அந்த நிலவை பார்த்து நின்றிருந்தாள் ஸ்வேதா .
இருள் சூழ்ந்த வானில் வைரங்களை கொட்டினார் போல் நட்சத்திரங்கள் மின்னி மறைய அவற்றின் மணி மகுடமாக மூன்றாம் பிறையாக நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது .அந்த வானையே ஒரு சிறு புன்னகையுடன் வெறித்துக் கொண்டிருந்த ஸ்வேதாவின் மோன நிலையை கலைத்தது பிரவீனின் குரல் "இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற ஸ்வேதா ?"என்று கேட்க
அவனின் குரலில் திரும்பியவள் "ஒன்னும் இல்ல தூக்கம் வரல அதான் நீங்க ஏன் இங்க வந்தீங்க? "என்று கேட்க அவள் அருகில் மூன்றடி இடைவேளை விட்டு கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றவன் "அதே தான் தூக்கம் வரல "என்று கூற அவள் ஒரு புன்னகையுடன் மீண்டும் வானை வெறிக்க துவங்கி விட்டாள்.ப்ரவீனும் அவள் செய்து கொண்டிருந்த அதே வேலையை தான் செய்ய துவங்கினான் .
சில்லென்று மிதமாய் வீசிய தென்றலும் பரபரப்புகள் அனைத்தும் அடங்கி அங்கே அந்த நிசப்தத்தில் எங்கோ கசிந்த மெல்லிய பாடல் வரிகளும் ஒரு வித சுகத்தை தர இருவரும் அந்த இரவின் அழகில் இலக்கிலா சிந்தனைகளோடு மௌனத்தை துணையாகி நின்றிருந்தனர் .
ஐந்து நிமிடம் மௌனமாய் கழிய ஸ்வேதா தயக்கமாய் பேச ஆரம்பித்தாள் "நீ.. நீங்க இன்னும் ரேஷ்மியா மறக்கலயா ?"என்று
அவனோ அவள் கேட்ட சடாரென்று அவள் புறம் திரும்பியவன் உனக்கு எப்படி தெரியும் என்பதை போல் திரும்பி பார்க்க அவளோ புன்னகைத்தவள் "நானும் உங்க காலேஜ் உங்க டிபார்ட்மென்ட் தான் பட் ஒரு வருஷம் ஜூனியர் ."என்று கூற
பிரவீன் "என் காலெஜ் ஆஹ் பட் நான் உன்ன பார்த்ததே இல்லையே "என்று கூற
அவளோ வாய்க்குள்ளேயே முனங்கினாள் "உங்களுக்கு அவளை தவிர்த்து எது தான் கண்ணுல பட்டுச்சு "என்று
அவன் "புரியல "என்று கேட்க
அவளோ "இல்ல ஒன்னும் இல்ல ...."என்று கூற
அவனோ ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவன் "first லவ் மறக்க முடியாது ஸ்வேதா அதெல்லாம் லவ் பண்ணவங்களுக்கு தான் புரியும் உனக்கெல்லாம் புரியாது "என்று கூற அவளோ சிரித்தாள் .
அவள் சிரிப்பதில் குழம்பியவன் "என்ன சிரிக்குற ?"என்று கேட்க
அவளோ "நான் லவ் பண்ணலன்னு நீங்களா முடிவு பண்ணிப்பீங்களா ?"என்று கேட்க
அவனோ விழிவிரித்து அவளை பார்த்தான் "அட பாவி பாக்க ரொம்ப சைலெண்டா இருக்க . எப்போ ஆரம்பிச்சுச்சு ?"என்று கேட்க
அவளோ அவனை நோக்கி திரும்பியவள் பழைய நினைவுகளில் மூழ்க துவங்கினாள்"அப்போ நான் 12th படுச்சுட்டு இருந்தேன் அப்போ எங்க ஸ்கூல்ல national level athletics மீட் நடந்துச்சு .நிறைய colleges ஸ்கூல்ஸ்ல இருந்து வந்துருந்தாங்க .நான் அங்க அன்னைக்கு volunteer duty பார்த்துட்டு இருந்தேன் .அப்போ தான் அவனை முதல் முதல்ல பார்த்தேன் .800 metre ரன்னிங் ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு .participants எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்க அப்போ திடீர்னு ஒரு participant மயங்கி விழுந்துட்டார் கிரௌண்ட்ல .மத்த participants எல்லாம் தங்களோட ட்ராக்கஹ் பாத்து ஓடேல ஒருத்தர் மட்டும் ஓடுறத நிறுத்திட்டு volunteers உள்ள வரதுக்குள்ள ட்ராக்ள நின்னு அந்த participant கிட்ட வந்து அவனை தூக்கிட்டு வந்து பக்கத்துல இருக்குற பெஞ்சுல படுக்க வச்சுட்டு அப்பறோம் மறுபடி ஓடுனான்.அந்த ரேஸ்ல அவன் தோத்துட்டான் ஆனா அவனோட அந்த ஹெல்பிங் quality என் மனசுல ஆழமா பதிஞ்சுருச்சு .ஒரு crush மாதிரி .அப்பறோம் ரெண்டு நாள் அவனை பாக்குறதுக்காகவே என் duty இல்லாத நாளுலயும் கிரௌண்ட்லயே சுத்திகிட்டு இருந்தேன் ."என்று கூற
பிரவீன் "பார்றா .அப்பறோம் என்ன ஆச்சு போய் பேசுனியா அவன் கிட்ட ?"என்று கேட்க
அவளோ "நேர்ல போய் பேச தைரியம் வரல அதுனால காலேஜ் name மட்டும் பார்த்து வச்சுக்கிட்டேன் .வீட்ல அடம் புடுச்சு அவனுக்காகவே இங்க இருந்த காலேஜ் எல்லாம் விட்டுட்டு அங்க அவன் காலேஜ்ல கோயம்பத்தூர்ல join பண்ணேன் "என்று கூற பிரவீன் "பையன் நம்ம காலெஜ்ஆஹ் ?அப்போ என் batchaa தான் இருப்பான் யாருனு சொல்லு "என்று கூற
அவளோ "சொல்லி முடிக்கேல உங்களுக்கே தெருஞ்சுரும் கேளுங்க "என்று கூற அவனும் மேலே சொல் என்பதை போல் நின்றான் .
ஸ்வேதா "ரொம்ப எதிர்பார்ப்போட முதல் நாள் காலேஜ் வந்தேன் அவனை பார்ப்போமா மாட்டோமான்னு ஒரு வித படபடப்போட இருந்தேன் .தூரத்துல இருந்து பார்க்கவும் செஞ்சேன் .இப்டியே ஒரு ஒரு மாசமா தூரத்துல இருந்தே அவனை பார்த்துட்டு இருந்தேன் .அவனோட கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்த crushah காதலா மாத்திருச்சு .அன்னைக்கு அவன் birthday எப்டியோ தைரியத்தை எல்லாம் திரட்டி அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணிரலாம்னு போனேன் .அப்போ நான் பார்தது என்னவோ அவன் வேற ஒரு பொண்ணுக்கு ரோஸ் குடுத்து ஐ லவ் யூனு சொல்ல அவ அதை accept பண்ணுறத தான் ."என்று கரகரத்த குரலில் கூற பிரவீனிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
ஒரு நிமிடம் மௌனத்தில் கரைய தன் குரலை சீர்படுத்திய ஸ்வேதா மீண்டும் பேச துவங்கினாள் "என் மனசுக்கு புருஞ்சுச்சு அவன் உனக்கானவன் இல்ல இல்லனு ஆனா புத்தி அதை ஏத்துக்கல.வழக்கம் போல தூரத்துல இருந்தே அவனை பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டேன் . அதுகாப்புறோம் அவன் காலேஜ் முடுஞ்சு போனான் நான் ஒரு வருஷம் மீதம் இருந்த என் படிப்பை முடுச்சுட்டு பெங்களூர்ல வேலை கெடச்சு அங்க போய்ட்டேன் .தினம் தினம் அவனை மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம நான் தவிச்சுக்கிட்டு இருந்தப்போ தான் அவனை அவன் காதலிச்ச பொண்ணு விட்டுட்டு போய்ட்டானு தெரிஞ்சுச்சு .எனக்கு சந்தோஷப்படுறதா இல்ல அவனோட மனநிலையை நெனச்சு வருத்தப்படுறதான்னு புரியல.ஏன்னா அவன் அவளை உயிருக்கு மேளா காதலிச்சான் . ஆனா ஏதோ ஒரு மூலைல என் காதல் ஜெயிச்சுடும்னு நம்பிக்கை இருக்கு "என்று கூற
ப்ரவீனோ "அட லூசே அதான் அவ விட்டுட்டு போய்ட்டாளே நீ இப்போ ப்ரொபோஸ் பண்ணலாம்ல அந்த பையனுக்கு ?"என்று கேட்க
அவளோ "accept பண்ணிப்பானா என்ன ? "என்று கேட்க
பிரவீன் "அது..... தெரியல பட் இத்தனை வருஷமா அவனை லவ் பண்ணிருக்க. அப்போ கண்டிப்பா உன்னால உன் லவ் மூலமா அந்த பொண்ணு குடுத்த கசப்பான ஞாபகங்களை அழிக்க முடியும் ட்ரை பண்ணி பாரு "என்று கூற
ஸ்வேதா அவனது கண்ணை தீர்க்கமாய் பார்த்தவள் நிதானமாய் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்" இ லவ் யு பிரவீன் "என்று .
தான் கேட்டதை உணரவே அவனிற்கு இரண்டு நிமிடம் எடுக்க பேச்சு வராமல் தடுமாறியவன் "ஸ்... ஸ்வே.... என் ...."என்று உளற
அவளோ சிரித்தவள் "சொல்ல சொன்னீங்க சொல்லிட்டேன் இனி உங்க சாய்ஸ் நல்லா யோசிச்சு முடிவை சொல்லுங்க ."என்றவள் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்.அன்று இரவில் இருந்து அதே யோசனையை இருந்தவன் என்ன கூறுவது என்று தெரியாமல் இன்று தன் எதிரில் அமர்ந்திருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தான்.ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான ஓடை போன்ற ஒரு குணம் .அவள் அதிகமாக பேசி கூட அவன் பார்த்ததில்லை .இந்த இரண்டு நாட்களாக கூட தன்னிடம் வந்து எதுவும் கேட்கவில்லை அவ்வளவு ஏன் அவன் இருக்கும் இடத்தில கூட அவள் இருப்பதில்லை எனில் அவள் பார்வை மட்டும் அவனை தொடர்வதை அவனும் அறிந்திருந்தான் .
இப்படி யோசனையில் உலகம் மறந்து அமர்ந்திருந்தவன் அருகில் இருந்த ஜீவிதா அவன் தோளை தொட்டு உலுக்க அதில் சுயநினைவடைந்தவன் அவளை கண்டு விழிக்க ஜீவிதா "எரும என்ன கனவு கண்டுட்டு இருக்குறியா ?எல்லாரும் சாப்பிட்டு கெளம்பியாச்சு நீ என்ன இன்னும் சாப்பிட தட்டையே தேச்சுட்டு இருக்க ?"என்று கேட்க அப்பொழுதே அனைவரும் கிளம்பியதை உணர்ந்தவன் அவன் இன்னொரு கையால் கழுத்தை அழுத்தி தேய்த்தவன் அசடு வழிந்தபடி கை கழுவ சென்று விட அவனின் பின்னே ஒரு செருமல் சத்தம் கேட்டது
.திரும்பாமலே யாரென்று உணர்ந்து கொண்டவன் என்னென்று தெரியாத உணர்வுடன் என்ன கேட்க போகிறாளோ என்று திரும்ப ஸ்வேதாவோ அவன் எதிர்பார்த்த எதையும் கேட்காமல்"purse வேண்டாமா ?"என்றவள்
அவன் மறந்து மேஜையில் வைத்து விட்டு சென்ற அவனது purseai அவன் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர பிரவீன் "ஸ்வேதா ஒரு நிமிஷம் "என்றான்
அவள் நிற்க பிரவீன் "எனக்கு நீ சொன்னதுக்கு என்ன சொல்றதுன்னு தெரில .இன்னும் என்னோட pastla இருந்து வெளிய வந்துட்டேனான்னு கேட்டா இல்லனு தான் சொல்லுவேன் .ஆனா .... அதையும் சேர்த்து உன்னால என்ன ஏத்துக்க முடியுமா ?"என்று கேட்க
அவளோ சிரிப்புடன் திரும்பியவள் "is that a yes ?என்று கேட்க"
அவனோ கழுத்தை அழுத்தி தேய்த்து அவள் கண்ணை தவிர்த்தவன் "ம்ம்.... பட் கொஞ்சம் time வேணும்"என்று கூற
அவளோ புன்னகை முகம் முழுதும் விரிய அவன் அருகில் சற்று நெருங்கியவள் "அஞ்சு வருஷம் வெயிட் பண்ணிட்டேன் இனி கொஞ்ச நாள் வெயிட் பண்ண மாட்டேனா ?take your own time "என்று கூறி செல்ல ப்ரவீனா குழப்பத்தோடு அவளை பார்த்தான் என்ன மாதிரியான அன்பு இது என்று .எனில் அவன் மனதில் அவனே அறியாமல் இந்த ஆர்பாட்டமில்லா குணத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை ஈர்க்க துவங்கி இருந்தால் ஸ்வேதா.
மன்னிச்சு மக்களே epilogue குடுத்து முடிக்கலாம்னு தான் நெனச்சேன் பட் என்னவோ incomplete ஆன ,மாதிரி ஒரு feel சோ எனக்கு complete feel தர வரைக்கும் இந்த கதை எழுதுறேன். அது எப்போ வரும்னு தெரியாது மே பெ நெஸ்ட் episodelaye கூட வரலாம் .மன்னிச்சு for my தொல்லைஸ்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top