35

ஜான்வி அனைத்தையும் கூறி முடித்து அவன் முகத்தை பார்க்க கௌதமோ இருபத்தி ஐந்து வயது முழுமை அடைந்த தான் இப்படி கோழை போல் தனது காதலை உதறி சென்றிருக்க தனது மடத்தனத்தை சரி செய்வதற்காக ஆதி செய்த செயல்கள் அவனிற்கு குற்ற உணர்வை மேலும் மேலும் அதிகரித்தது .

அவனின் முகபாவனைகள் மாறுவதை வைத்தே அவனின் எண்ண ஓட்டத்தை அறிந்த ஜான்வி எம்பி அவன் தலைமுடியை கலைத்தவள் "ரொம்பப..... பீல் பண்ணாத அதான் எல்லாம் சரி ஆயிடுச்சுல்ல "என்று கூறியவள் அவனின் காடு போல் வளர்ந்து இருந்த தாடியை ஒரு வித முகசுழிப்போடு வருடினாள் "என்னடா இது முகத்துல ஒரு அமேசான் காடே வளர்ந்துருக்கு .எனக்கும் எப்படி வளர்த்தனு secret சொல்லேன் தலை முடி எனக்கு கொட்டிக்கிட்டே இருக்கு "என்று கேட்க

அவனோ அவள் கேட்ட தோரணையில் சிரித்தவன் "ஆங் அர்ஜுன் ரெட்டி ஸ்டைல்ல ."என்று கூற

அவளோ"ஓஒ என்றவள் பின் கலவரத்துடன் அவனின் முகத்தை ஏறிட்டாள் "ஹே அன்னைக்கு ஜீவி கல்யாணத்துல ட்ரின்க் பண்ண மாறி ட்ரின்க் பண்றியா டெய்லி ?அப்டிலாம் ஏதும் இல்லேல?"என்று கேட்க

அவனோ அவள் பதட்டத்தில் புன்னகைத்தவன் இல்லை என்று இடவலமாய் தலை அசைத்தான்"ஜீவிதா marriageல ட்ரின்க் பண்ணதோட சரி அதுக்கடுத்து சரி பண்ணல "என்று கூற அவளோ நம்பலாமா என்பதை போல் ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையில் புன்னகைத்தவன் அவள் தலையில் லேசாய் கொட்டி "அட நம்பு ஜானுமா குடிக்கல"என்று கூற

அவளும் அதன் பின்னே நிம்மதியுற்றவள் "ஏனோ ?"என்று கேட்க

அவனோ அவள் நெற்றியில் தன் நெற்றி கொண்டு முட்டியவன் "என் ஜானுக்கு பிடிக்காதே ."என்று கூற அவளோ கண்மூடி சிரித்தாள்.

சிறிது நேரம் அங்கே அதன் பின் மௌனமே ஆட்சிபுரிய இருவரையும் கலைத்தது ஜான்வியின் அலைபேசி சிணுங்கள் .யாரது என்று எடுத்து பார்க்க ஆதி தான் அழைத்திருந்தான் .அதை எடுத்து காதில் வைத்தவள்"சொல்லுடா "என்று கூற

ஆதி "அடியேய் உங்க feelingslaam புரியுது ஆனா அதுக்குன்னு இப்டியாடி ஒரு மனுஷன் அரை மணி நேரமா மொட்டைமாடி கதவை தட்டுறது கூட தெரியாம நிப்பீங்க? கதவை திற டி எரும "என்று கூற

கௌதமோ அவன் கத்துவது அவனிற்கும் கேட்க சிரித்தவன் அவளை விடுவித்து கதவை திறந்தான் ;.ஆதி இருவரையும் முறைத்தவன் பின் கை கட்டி நின்றான் .இருவரையும் பார்த்தவன் "அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ?"என்று கேட்க

கெளதம் "நா ஒரு தடவ உங்க அப்பா கிட்ட பேசணும் ஆதி "என்று கூற ஆதியின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள் .

சிறிது யோசித்தவன் "இவ்வளவு நடந்ததை பாத்ததுக்கு அப்புறமும் அவர் ஒத்துப்பாருனு நெனைக்குறீங்களா பாவா ?"என்று கேட்க

அவனோ "தெரில ஆதி ஆனா ஓடி போய் கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல .ஒரு தடவ என் அம்மாகிட்டயும் உன் அப்பாகிட்டயும் பேசி பாக்குறேன் .ஓகேனா அவங்க விருப்பத்தோடு நடக்கும் இல்லேனா ....வேற வழி இல்ல அவங்க விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கணும் .ஆனா இன்னொரு தடவ உன் அக்காவை இழக்குற ideala நான் இல்ல "என்று கூற

ஆதி சிறிது யோசித்தவன் ஜான்வியிடம் திரும்பி "அக்கா உன் ஆபீஸ்ல எதுக்கும் ஒரு 4 days லீவு சொல்லு அப்பறோம் பாவா நீங்க நாளைக்கே வந்து பேசிடுங்க வீட்ல lets make திஸ் quick "என்று கூற

அவனிற்கும் அதுவே சரி என்று பட புன்னகையுடன் தலை ஆட்டியபடி "ஆனா ஒன்னுடா என் கதைல நான் முதல்ல இருந்து பண்ண performanceah எல்லாம் நீ கடைசி நேரத்துல வந்து overtake பண்ணிட்ட "என்று கூற

ஆதி லேசாய் புன்னகைத்தவன் "சரி விடுங்க பாவா ரொம்ப நேரம் காணாம இருந்த எல்லாரும் தேடுவாங்க சோ கீழ போலாம் "என்று கூறினான் .

ஜான்வி தலை அசைத்து கீழே ஓட கெளதம் அவள் பின்னே செல்ல போக ஆதி அவன் கையை பிடித்து அவன் கிளையில் ஒரு கைக்குட்டையை கொடுத்தான் .கெளதம் புரியாமல் பார்க்க ஆதியோ சற்று தயக்கத்தோடு தன் கழுத்தை தேய்த்தவன் "உங்க......உதட்டுல லிப்ஸ்டிக் இருக்கு துடைங்க அதை"என்று கூற கௌதமோ அசடு வழிய சிரித்தவன் தன் உதடை அழுந்த துடைத்துக் கொள்ள ஆதி நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து கொண்டான் .

அடுத்த நாள் காலை ஜான்வியின் வீட்டில் பரபரப்பாக விடிந்தது .கெளதம் நேற்று இரவே அழைத்து கூறி விட்டான் அவனது வீட்டில் அவனது தாயார் பேயாட்டம் ஆடி அவனை ஒதுக்கிவிட்டதாக .அவனது வீடு நிலைமைக்கு பலமடங்கு மோசமானது தான் ஜான்வியின் வீடு என்ன ஆக போகிறதோ என்று அங்கே ஆதி,ஜான்வி,பார்வதி மூவரும் அன்றைய இரவு தூங்காமல் கழிக்க சேகரோ என்றும் போல் வழமையான தனது காலை நேர coffee யுடன் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார் .பார்வதி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு வெட்டிய காய்கறியையே மீண்டும் மீண்டும் வெட்ட ஆதி சேஷன் இயல்பாக இருப்பதை போல் தொலைக்காட்சியை பார்க்க ஜான்வியோ தன் கையில் பத்து விரல்கள் சரியாக இருக்கிறதா என்று பத்தாயிரமாவது முறையாய் சரி பார்த்து கொண்டிருந்தாள் .

மணி ஒன்பதரையை நெருங்க கௌதமின் வரவை எதிர்நோக்கி மூவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர் .சேரியை ஒன்பது நாற்பதிற்கு வீட்டின் அழைப்புமணி அடிக்க சேகரோ ஜான்வியிடம் குரல் கொடுத்தார் "ஜான்வி யாருனு பாரு "என்று கூற ஜான்வியோ தடதடக்கும் இதயத்துடன் கதவை திறந்தாள் .அங்கே அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கெளதம் தான் நின்றிருந்தான் .சந்தன நிறத்தில் ஒரு போர்மல் சட்டை கீழே அவனின் அடர்நீல jeansil அந்த காடு போன்ற தாடியை shave செய்து அவனின் அக்மார்க் புன்னகையுடன் அவளை பார்த்து கண்ணடித்தவன் "ஜானு என்ன சைட் அடிச்சது போதும் வழி விடு நா என் மாமனார்கிட்ட பேசிட்டு வரேன் "என்று coollaaga விசில் அடித்தபடி உள்ளே செல்ல ஜான்வியோ என்ன நடக்க போகிறதோ என்று தடதடத்த மனதுடன் அவனை பின் தொடர்ந்தார் .

உள்ளே வரவேற்பறைக்கு வந்த கெளதம் சேகரை பார்த்து "வணக்கம் மாமா"என்று கூற

அவரோ அவனை இங்கு எதிர்பார்க்காமல் முதலில் திகைத்தனர் பின் அவனின் மாமா என்ற அழைப்பில் கோபம் கொண்டு "ஹே யார் நீ என்ன எதுக்கு மாமான்னு கூப்டுற ?"என்று கேட்க

அவனோ அவரிற்கு எதிரில் நின்றவன் "இதோ பாருங்க மாமா மறுபடி உங்ககிட்ட சண்டை போட எல்லாம் எனக்கு மூட் இல்ல .சொல்ல வரத சொல்லிருறேன்"என்றவன் ஒரு லெட்டரை எடுத்து அவர் கண் முன் காட்டினான் ."காதல் தோல்வில குடுச்சுட்டு உருப்படாம போயிருப்பேன்னு நெனச்சுருப்பீங்க பட் யு were wrong goovernment எக்ஸாம் clear பண்ணிட்டேன். டைரக்ட் ப்ராஜெக்ட் மேனேஜர் போஸ்டிங் ,சென்னைல தான் போஸ்டிங் .மாசம் அறுபதாயிரம் சம்பளம் .இது உங்க த்ரிப்திக்காக என்னால உங்க பொண்ண நல்லா பாத்துக்க முடியும் financially too அதுக்காக சொன்னது.ஜான்வி ...எனக்கு அவ எவ்ளோ இம்போர்ட்டண்ட்ன்னு வார்த்தையால சாத்தியமா என்னால சொல்ல முடியாது மாமா .அவ என் உயிர் அதுக்கும் மேல்னு கூட சொல்லலாம் அவ இல்லாம என்னால கண்டிப்பா வாழ முடியாது . என்ன விடுங்க உங்க பொண்ணு கண்டிப்பா வேற எவன் கூடவும் சந்தோஷமா வாழ மாட்டா ஏன்னா "என்று அவளின் கையை பிடித்து தனது கைவளைவில் நிற்க வைத்தவன் "she loves me more than loving herself .ப்ளீஸ் மாமா இந்த societyum ,ஜாதியும் நீங்க பெத்த உங்க பொண்ணோட சந்தோஷத்தை பலிக்குடுத்து உங்கள புகழணும்னு நெனைக்குறீங்களா ?"என்று கேட்க

சேகரோ சற்றும் இளகாமல் ஜான்வியை நேருக்கு நேர் பார்த்தவர் "லவ் பண்ணிருக்கானு தெரிஞ்ச அன்னைக்கே உன்ன அடுச்சு தோலை உருச்சுருந்தா கண்ட நாயும் இப்போ வாசப்படி ஏறி உள்ள வந்து பேசுவானா "என்று கேட்க கெளதம் ஏதோ சொல்ல வரும்முன் அங்கே ஜான்வியின் குரல் அழுத்தமாய் கேட்டது "அப்பா மரியாதை குடுத்து பேசுங்க "என்று .

தன் முன் பேசுவதற்கே தயங்கி நிற்பவள் தன்னையே எதிரிற்பதில் கோபம் தலைக்கு ஏற கையில் இருந்த செய்தித்தாளை தூக்கி போட்டவர் "என்னையே எதிர்த்து பேசுறியாடி கழுதை? உன்ன படிக்க வச்சு வேலைக்கு அனுப்புனா லவ் பண்றீங்களா லவ்வுஹ் மரியாதையா வாய மூடிட்டு உள்ள போடி "என்று கூற

அவளோ உள்ளே சற்று உதறினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கௌதமின் கையை கெட்டியாக பிடித்தவள் "முடியாது .இவன் கிட்ட என்ன குறை இருக்குனு வேண்டாம் வேண்டாம்னு சொல்றீங்க ?"என்று கேட்க

அவரோ "இவனுக்கு கட்டி குடுத்தா என் கெளரவம் என்னத்துக்கு டி ஆகுறது ?வெளிய தல காட்ட வேணாமா ? அவ்வளவு செல்லம் குடுத்து வளர்த்து உன்ன ஒரு அன்னக்காவடிக்கு கல்யாணம் பண்ணி தர சொல்றியா ?"என்று கேட்க

ஆதி தனது தந்தையின் வார்த்தை தடிப்பதையும் கெளதம் முயன்று தனது கோபத்தை கட்டுப்படுத்துவதையும் பார்த்தவன் "அப்பா மரியாதையா பேசுங்க "என்று கூற

அவரோ "ஆதி நீ உன் வேலைய பாரு "என்றவர்

ஜான்வியிடம் திரும்பி "முடிவா என்னடி சொல்ற நீ ?என் பொண்ணா இருந்து சந்தோஷமா இருக்க போறியா இல்ல அவனோட போய் சீரழிய போறியா ?"என்று கேட்க

அதுவரை அமைதியாய் இருந்த பார்வதியோ அந்த கணம் தன் வாயை திறந்து பேசினார் "ஜான்வி நீ கெளம்பு டி அந்த பையனோட .இங்க இருந்த உங்க அப்பா ஜாதி வெறிக்கு நீயும் பலி ஆகி சீரழிய தான் போற . அதுக்கு அந்த பையனோட போயாச்சு நல்லபடியா வாழு போ "என்று கூற சேகரோ தன் மனைவி தன்னை எதிர்த்து பேசியதை அதிர்ச்சியுடன் பார்த்தார் .

ஜான்வி "அம்மா..."

என்று ஏதோ கூற வர பார்வதி அவளை கண்களால் அமைதிப்படுத்தியவர் போ என்றார் .

ஜான்வி அதன் பின் தன் தந்தையை ஒரு முறை தீர்க்கமாய் பார்த்தவள் மேலே சென்று தனது பெட்டியை எடுத்து வந்தவள் "இதுல இருக்குற டிரஸ் என் கைல இருக்குற போன் என் சம்பளத்துல வாங்குனது "என்றவள் தனது கை கழுத்தில் காதில் இருந்த அணிகலன்களை கழற்றி வைத்துவிட்டு கௌதமின் புறம் திரும்பியவள் "போலாமா ?"என்று கேட்க

அவனோ "ஜானு கொஞ்சம் .."என்று கூற

அவளோ அவன் உதட்டில் கை வைத்தவள் "உன்னோட சுயகௌரவத்த விட்டு நீ கெஞ்சணும்னு அவசியம் இல்ல அவருக்கு புரியப்போறதும் இல்ல கெளம்பு "என்று கூற அவனும், தலை ஆட்டி அவளுடன் வெளியேறினான் அவளது கையை இறுக்கி பிடித்தபடி .இனி என்றும் விடப்போவதில்லை என்பதை போல் இருந்தது அவனின் பிடி .

சேகரோ தன் கண் முன் இன்னொருவன் முக்கியம் என்று தன்னை உதறிச் செல்லும் தன் மகளை பார்த்து கோபத்தில் புகைந்தவர் தனது எதிரில் இருந்த ஜான்வியின் புகைப்படத்தை எடுத்து உடைக்க போக பார்வதியோ அவரிடம் இருந்து அதை பிடிங்கி சுவற்றில் மாட்டியவர்"அது என் பொண்ணோட படம் ஏதாச்சு பண்ணீங்க நா மனுஷியா இருக்க மாட்டேன் "என்று கூற

சேகர் "என்ன ரொம்ப சீருற ?என் காசுலயே உக்காந்து சாப்டுகிட்டு என்னையே எதிர்க்குற அளவுக்கு எங்க இருந்து உனக்கு திமிரு வந்துச்சு ?"என்று கேட்க

அவரோ "உங்களோட முப்பது வருஷமா குப்பை கொட்டுறேனே உங்க திமிரு கொஞ்சமாச்சு ஓட்டிக்காதா ?அண்ட் ஒன்ன மறந்துடீங்கனு நினைக்குறேன் நீங்க பார்ட்னரா இருக்குற கம்பெனி என் அப்பா ஆரம்பிச்ச இப்போ என் அண்ணன் நடத்திக்கிட்டு இருக்குற கம்பெனி .சோ யார் காசுல யார் சாப்பிடுறானு நீங்க முடிவு பண்ணிக்கோங்க "என்று கூறி தோலை குலுக்க

சேகர் "என்னடி ஓவரா பேசுற ?"என்று கையை ஓங்க

அவரோ அவர் கையை பிடித்தவர் "அடி விழுந்தா வாங்கிக்க நான் ஒன்னும் பழைய பார்வதி இல்ல .domestic violence கேஸ் குடுத்துருவேன் .ஏதோ கெளரவம் கௌரவம்னு குதிச்சீங்களே பொண்டாட்டி உயிரோட இருக்கேலேயே வேற ஒருத்திய ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க போய் போலீஸ் வந்து தடுத்தப்போ போகாத உங்க கௌரவம் என் பொண்ணு ஒரு நல்லவனா காதலிச்சு கல்யாணம் பண்றதால போக போகுது ?"என்று கேட்டுவிட்டு உள்ளே சென்று விட ஆதியோ தன் அன்னைக்கு மனதில் சபாஷ் போட்டுக்கொண்டான் .

இருவரும் அந்த வரவேற்பறையில் இருந்து களைய அந்த வரவேற்பறையில் சேகர் மட்டுமே நின்றுக்கொண்டிருந்தார் .அவரின் ஆணவமும் ,வறட்டு கௌரவமும் ,ஜாதி வெறியும் அவரிற்கு முதல் அடியாய் சொந்த வீட்டில் தனிமையை கொடுத்தது எனில்....அதை உணர்வாரா அவர் ?

இன்னும் 1 அப்டேட் தான்பா நாளைக்கு epilogue அண்ட் updateoda வரேன் 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top