34

ஆதி அறையின் வாயிலில் நின்றிருந்த தன் தாயை பார்த்து அதிர்ந்தான் .பார்வதி அவனை முறைத்தபடி கை கட்டி நின்றவர் "எத்தனை நாளா இதெல்லாம் நடக்குது ஆதி ?"என்று கேட்க

அவனோ அவர் அருகில் சென்று கதவை சாத்தி தாழிட்டவன் "அம்மா கொஞ்சம் வந்து உக்காருங்க சொல்றேன் "என்று சொல்ல

அவரோ "என்னடா நெனச்சுட்டு இருக்க ?உன் இஷ்டத்துக்கு பண்ற ?உன் அப்பாவை தல குனிய வைக்கணும்னே கங்கணம் கட்டிக்கிட்டு திரியுரியா ?எங்க இருந்ததா இவ்ளோ தைரியம் வந்துச்சு உனக்கு "என்று கத்த

அவனோ "அப்பாவை தல குனிய வைக்கணும்னு அலையால அம்மா அக்கா கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும்னு நெனச்சு இதெல்லாம் பண்ணுறேன் .உங்களுக்கு அவளோட ஸ்டேஜ் என்னனு தெரியுமா?அவ ஒழுங்கா சாப்பிட்டு பல நாள் ஆச்சு .சாப்பிடுற சாப்பாடா எல்லாம் பாதி நேரம் வாந்தியா எடுத்துருறா .கொஞ்சம் கூட தூங்குறது இல்ல, எதையும் வாய திறந்து பேசுறது இல்ல, இன்னும் கொஞ்ச நாள் விட்டா கூட பைத்தியம் ஆயிடுவா.அண்ட் அவ காதலிச்சது ஒன்னும் third rated பொறுக்கியவோ ரௌடியாவோ இல்ல .நீங்களே தேடி கண்டு புடுச்சாலும் அப்டி பையன்லாம் கிடைக்க மாட்டான்.அப்பா அவள் வாழ்க்கை தன்னோட வறட்டு பிடிவாதத்துக்காகவும் வெட்டி கௌரவத்துக்காகவும் பலியாக்க பாக்குறாருமா நீயே இதை படுச்சு பாரு "என்று கூறி அவரின் கையில் அவளின் தந்தை எழுதி வைத்திருந்த டைரியை கொடுக்க அவரோ முதலில் வேண்டா வெறுப்பாக வாங்கி படித்தவர் பின் அவர் செய்து வைத்திருந்த காரியத்தை அவரின் மூலமாகவே அறிந்ததை கண்டு கைகள் நடுங்கியது .

ஏழு வருடம் தவமிருந்து பெற்ற மகளை அல்லவா கொல்லுவேன் என்று கூறி இருந்தார் தனது கௌரவத்திற்காக .கண்களில் கண்ணீர் நிறைய மகளின் இந்த ஒரு வார நிலையை யோசித்து பார்த்தவரிற்கு முதல் முறையாக பயம் வந்தது .ஏனெனில் அவள் இப்படியே இருந்தால் ஒரு கட்டத்தில் அதீத மனஉளைச்சலில் எந்த முடிவு வேண்டும் என்றாலும் எடுக்கலாமே .

அவர் யோசனையில் இருக்க ஆதி "இன்னும் உங்களுக்கு seriousness புரியலம்மா "என்றவன் தனது cupboardil இருந்து ஒரு டப்பாவை எடுத்து வந்தான் .

அதை அவர் முன் காட்டியவன் "இது என்னனு தெரியுதா? தூக்க மாத்திரை .உங்க சீமந்த புதல்வி கடந்த ரெண்டு நாளா டெய்லி இதை போட்டுட்டு தான் தூங்குறா .அவளுக்கு தூக்கம் வர்ரதில்ல .இதை மொத்தமா வாயில போட்டுக்க அவளுக்கு எவ்ளோ நேரம் ஆகும் ?"என்று கேட்க அவரிற்கோ உடல் நடுங்க துவங்கி விட்டது அப்படி ஏதாவது நடந்தால் என்ன ஆகும் என்று நினைக்கயிலேயே .

சிறிது நேரம் மௌனமாய் இருந்தவர் பின் பேச துவங்கினார் ."இது வரைக்கும் உன் அப்பாவை எதிர்த்து நா எதுவும் பண்ணதில்ல ஆதி .இனியும் பண்ண போறதில்ல .ஆனா உனக்கு என்னால மறைமுகமா ஹெல்ப் பண்ண முடியும் .கண்டிப்பா அவளுக்கு நம்ம எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா ஆசீர்வாதம் பண்ணி கல்யாணம் நடக்காது .உங்க அப்பா கிட்ட இதை பத்தி பேசுனா கண்டிப்பா அவர் என் புள்ளைக்கு அவர் கையாலேயே விஷம் வச்சு குடுத்துருவாரு .அவங்க ஊர் பக்கம் கௌரவ கொலை ஒன்னும் புதுசு இல்ல.உன்னோட அத்தைக்கு என்ன நடந்துச்சுனு தெரியும்ல ஆதி ? பாவம் காதலிச்சவனே தவிர்த்து வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னவளுக்கு தான் கையாலேயே வேஷத்தை வச்சு உன் பாடி ஊட்டி விட்டுட்டாங்க.நா அத்தனை ஏச்சு பேச்சு எல்லாம் வாங்கி தவமிருந்து பெத்த பொண்ணு அவ .அவளோட வாழ்க்கை இவங்களுக்கு பயந்துட்டு என்னால பலி கொடுக்க முடியாது ."என்று கூற

ஆதி ஆமோதிப்பாய் தலை அசைத்தவன் "தெரியும்மா அதனால தான் இவ்ளோ வேலை பார்க்க வேண்டியதா இருக்கு .கவலைப்படாதீங்க இந்த கல்யாணம் நடக்காது."என்று கூற அவரும் சரி என்று தலை அசைத்தார் .

ஆதி "இப்போ எனக்காக நீ இன்னைக்கு ஒருத்தர் கிட்ட பேசணும்மா "என்று கூற

அவர் குழப்பமாய் "யார்கிட்ட ?"என்று கேட்க

அவனோ சிரித்தவன் ஏதோ ஒரு எண்ணை அழுத்தி காதில் வைத்தபடி "கௌதமோட அப்பா கிட்ட "என்று கூற அவரோ திகைத்தார் .

பார்வதி "என்ன ஆதி வெளயாடுற ?"என்று கூற

அவனோ அதற்குள் அப்புறத்தில் இருந்தவர் எடுக்க "அங்கிள் நான் தான் ஆதி .அம்மா கிட்ட பேசணும்னு சொன்னீங்களே தரேன் இதோ"என்று அவரிடம் நீட்ட

அவரோ அவனை முறைத்தபடி வாங்கி காதில் வைத்தவர் "ஹலோ "என்றார் .

அந்தப்புரம் கௌதமின் தந்தையோ "வணக்கம் மா நா கௌதமோட அப்பா "என்று கூற

பார்வதி "வணக்கம் நான் ஜான்வியோட அம்மா "என்று கூறினார் .

பின் கௌதமின் தந்தை "ஆதி ரெண்டு நாள் முன்னாடி என்னோட பேசுனான் மா. என் பையன்....... என்னோட உண்மையான பையன் இல்லம்மா .என் தம்பி பையன் தான் .என் பொண்டாட்டியும் உங்க husband மாதிரி தான் .ரொம்ப ஜாதி பார்ப்பா .என்னோட தம்பிக்கு அவளோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தப்போ தான் என் தம்பி அவன் கூட படுச்ச பொண்ண காதலிச்சு எங்க எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணிகிட்டான் .அப்போ இருந்தே என் பொண்டாட்டிக்கும் என் தம்பி பொண்டாட்டி மேலயும் என் தம்பி புள்ள கெளதம் மேலயும் வெறுப்பு அதிகமா இருந்துச்சு .அவனுக்கு மூணு வயசு இருக்கேல ஒரு accidentla என் தம்பியும் அவன் பொண்டாட்டியும் இறந்துட்டாங்க .அப்போ பெரியப்பன் நான் இருக்கேல கௌதம அனாதையா விட மனசு வரலம்மா.என் பொண்டாட்டி எதிர்ப்பையும் மீறி தான் அவனை நான் வளர்த்தேன் .ஆனா என்னால எந்த சந்தோஷமும் அவனுக்கு குடுக்க முடியலம்மா .அவ முன்னாடி என்னால அவன் கிட்ட சிரிச்சு கூட பேச முடியாது.ஆனா தனியா இருக்கேல அவன் கிட்ட ஒரு நண்பனா தான் நா பழகுனேன் .

ரொம்ப வெறுப்பை கக்குறா அவன் மேலன்னு அஞ்சாவது படிக்கேல இருந்து hostella தான் படிக்க வச்சேன் .இதை எல்லாம் ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா என் பையன் முகத்துல இந்த ஒரு வருஷமா உங்க பொண்ணு வந்ததுக்கு அப்பறோம் தான்மா உண்மையான சிரிப்பையும் சந்தோஷத்தையும் பார்க்குறேன் .அவன் எதுக்காக இதை என் கிட்ட மறைச்சான்னு தெரியல .என்னாலயும் வெளிப்படையா அவனுக்கு சப்போர்ட் பண்ண முடியாதுமா .ஏன்னா அவனுக்கு என் பொண்ணோட குணம் கெட்ட நாத்தனாரை கல்யாணம் பண்ணி வைக்க என் பொண்டாட்டியும் மகளும் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க.பொறந்ததுல இருந்து அட்ஜஸ்ட் பண்ணியே வாழ்ந்துட்டான் இனியும் அவன் வாழ்க்கை அப்டி இருக்க கூடாதுனு நெனைக்கிறேன் .என் பையனுக்கு உங்க பொண்ண கட்டி வைப்பீங்களா ?"என்று கேட்க

பார்வதியோ ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவர் பின் "என் பொண்ணு ஒருத்தன இந்த அளவுக்கு காதலிக்குறானா அப்போ அவன் அவளை எந்த அளவுக்கு அவனோட இருக்கேல சந்தோஷமா வச்சுருந்துருப்பானு எனக்கு புரியுது .எனக்கு பரிபூரண சம்மதம் அண்ணா"என்று கூற

அவரும் புன்னகைத்தவர் "இதை என் கிட்ட சொல்லி இருந்தாலே நான் சுமூகமான முடுச்சு இருப்பேன் .இப்போ எங்க போனான் என்ன ஆனான்னே சொல்லாம போய் உக்காந்துருக்கான் பெரிய தியாகி மாறி "என்று கூற

பார்வதியோ சிரித்தவர்"இந்த காலத்து பசங்க எங்க மனசு விட்டு பேசுறாங்க பெத்தவங்க கிட்ட ?என்ன தான் நாம நண்பர்கள் மாரி பழகுனாலும் இந்த விஷயத்துல அவங்க இஷ்டத்துக்கு தான் பண்ணுறாங்க "என்று கூற

ஆதி போனிற்கு வாங்கி ஸ்பீக்கரில் போட்டவன் "மாமா அதெலாம் ஒன்னும் கவலைப்படாதீங்க பாவா இருக்குற இடத்தை கண்டு புடுச்சாச்சு ஆனா உங்க பையனுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி வைத்தியமும் உங்க மருமக கையாள ஒரு சின்ன பூஜையும் இருக்கு "என்று கூற

அவரோ சிரித்தவர் " ரத்தம் வராம அடிக்க சொல்லுப்பா "என்று கூறி வைத்து விட்டார் .

பார்வதி அவனை மலைப்பாய் பார்க்க அவனோ "அவ்ளோ பெரிய விஷயம் இல்ல மம்மி அக்கா இன்ஸ்டா அக்கௌன்ட்ல லாகின் பண்ணி கெளதம் பாவாவும் அவளும் commonaa follow பண்ற அக்கௌன்ட் எதுன்னு பார்த்தேன் ,திவ்யா அக்கா அக்கௌன்ட் கிடைச்சுது.அப்பறம் அவங்களுக்கு request குடுத்து பேசி கெளதம் பாவாவோட அப்பா நம்பர் வாங்குனேன் ரெண்டு நாள் முன்னாடி .ஆனா அவர் ரொம்ப ஸ்வீட் புருஞ்சுகிட்டாரு .உங்க கிட்ட பேசணும்னு சொன்னாரு எப்படி டா ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன் நீங்களே ஒட்டு கேட்டு என் வேலைய மிச்சம் பண்ணிடீங்க "என்று கூற

அவரோ அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவர் "என் செல்லம் நல்ல காரியம் பண்ண டா "என்று கூற

அவனோ சிரித்தவன் "ஏம்மா நீ பாட்டுக்கு நீ பெத்து வச்ச அரை அடி கிட்ட உளறி வச்சுராத .சரியான ஓட்ட வாய் ஏதாச்சு பண்ணி சொதப்பி விட்டுருவா "என்று கூற அவரும் சரி என்று தலை அசைத்து வெளியே சென்றார் .

நாட்கள் அதன் போக்கில் செல்ல இரண்டு மாதம் முடிந்து இருந்தது .நாளை நிச்சயம் என்று இருக்கையில் இன்று மாலை தான் அபி அமெரிக்காவில் இருந்து திரும்புகிறான்.அவனிற்கு இன்னும் விஷயம் தெரியாது .மூன்று மாதமாய் சுத்தமாய் வீட்டாருடன் தொடர்பற்று தவித்து போய் வந்திருந்தான் .

அவன் ஐந்து மணி போல் உள்ளே "அம்மா "என்ற கூவலுடன் வர

ரேவதியோ அவன் வரவில் மகிழ்ந்தவர் "அடடே அபி கண்ணா வந்துட்டியாடா "என்று கூற

அவனோ அவரை கட்டிக் கொண்டவன் "லூசு பயலுக leave இல்லாம கொலையா கொன்னுட்டானுங்க மா. i missed u so much "என்று கூறி பிரிந்தவன் சுற்றி முற்றி கண்களால் தங்கையை தேடினான் .

அபி "எங்கம்மா குட்டிச்சாத்தானை காணோம் "என்று கேட்க

ரேவதியோ "அவளா அவ உங்க மாமா வீட்டுக்கு உங்க அப்பாவோட போய் இருக்கா."என்றவர் பின் என்ன தோன்றியதோ..." கண்ணா நீ முதல்ல போய் ரெடி ஆகி வா மாமா வீட்டுக்கு போகலாம் உனக்கு ஒரு surprise இருக்கு "என்று கூற அவனோ குழம்பியவன் ஒரு வேலை ராகவி ஆதி காதல் விஷயம் தெரிந்துவிட்டதோ என்று நினைக்க ரேவதி"என்னடா போய் ரெடி ஆகு "என்று கூற

அவனோ குழப்பதோடு "சரிமா ":என்று கூறி தயாராகி வந்தான் .பின் அவனும் அவன் அன்னையும் அங்கு ஜான்வியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் .

அங்கே வரவேற்பறையில் சேகரும் அபியின் தந்தையும் எதேரெதிர் கதிரையில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க ராகவியும் ஜான்வியும் ஒரு கதிரையில் அமர்ந்து இருந்தனர் .ராகவி ஏதோ பேசியபடி இருக்க ஜான்வியோ அவள் பேசுவது காதில் விழுந்தாலும் கருத்தில் பதியாமல் ம்ம் ம்ம் என்று அவள் கூறுவதற்கெல்லாம் ம்ம் கொட்டிக் கொண்டிருந்தாள் .

அபி உள்ளே வந்ததும் அவனை பார்த்த ராகவி "அண்ணா "என்று கூறியபடி அவனை சென்று அணைத்துக்கொண்டவளோ "நல்ல வேளை நான் கூட நாளைக்கு தான் வருவியோன்னு நெனச்சேன் "என்றவள் ஜான்வியிடம் திரும்பி "வதினா அண்ணன் வந்துட்டாரு இனி அவர் கூட பேசுங்க நான் உங்களுக்குள்ள வர மாட்டேன் "என்று கூற

அபியோ அவளின் வதினா என்ற அழைப்பில் திகைத்தவன் ராகவியிடம் "லூசு இப்போ எதுக்கு அவளை வதினானு கூப்டுற ?"என்று கேட்க

ரேவதியோ "நா சொன்ன surprise இது தான் அபி உனக்கும் ஜான்விக்கும் நாளைக்கு நிச்சயம் .இன்னும் பதினஞ்சு நாளுல கல்யாணம் fix பண்ணிருக்கோம் .எப்படி are you happy ?"என்று கேட்க

அவனோ அவர் கூறிய செய்தியில் திகைத்தவன் அடுத்த நிமிடம் கத்த துவங்கினான் "யாரை கேட்டு இதை முடிவு பண்ணீங்க ?"என்று கத்த

ஆதியோ அவன் அருகில் ஒன்றுமே தெரியாததை போல் வந்தவன் "என்ன பாவா இப்டி சொல்றீங்க ?இதுக்கு முன்னாடி நீங்க தான ஜான்வியை பொண்ணு கேட்டீங்க ?இப்போ என்ன "என்று கேட்க

அபியோ அவன் புறம் குழப்பத்தோடு திரும்பியவன் "ஏன் உன்...என்று ஏதோ கூற வந்தவன் ஆதியின் விழி அசைவில் தான் கூற வந்ததை மறைத்து "அது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது ஆதி "என்று கூற

சேகர்" அபி என்னாச்சு எதுக்கு கத்துற ?"என்று கூற

அவனோ "மாமா என்ன மன்னிச்சுருங்க எனக்கு ஜான்வியை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல "என்று கூற ஜான்வியோ இந்த இரண்டு மாதத்தில் கௌதமை மறக்கவும் முடியாமல் அவசரத்தில் சம்மதம் தெரிவித்த இந்த திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவள் அவன் விருப்பம் இல்லை என்று கூறியதில் மகிழ்ந்து சடாரென்று அவன் முகத்தை ஆனந்த கண்ணீரோடு ஏறிட்டு பார்க்க ரேவதியோ அவள் வருந்தி அழுகிறாள் என்று நினைத்தவர் கோபத்தோடு அபியை நெருங்கி "ஏன் அபி ?ஜான்விக்கு என்ன கொறச்சல் ?"என்று கேட்க

அவனோ "அவள் தங்கமான பொண்ணு தான் .ஆனா என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது ."என்று கூற

ரேவதி "அதான் ஏன் டா ?"என்று கேட்க

அவனோ சற்று தயங்கியவன் பின் "நா..... வேற ஒரு பொண்ண விரும்புறேன் .அவ பேரு ஜான்வி ஸ்ரீதர் ."என்று கூற ரேவதி கோபமாய் ஏதோ கூற வர

அவனோ "பதறாதீங்க நம்ம caste தான் .என்னோட ப்ரொஜெக்ட்ல தான் work பண்ணா ரெண்டு வருஷமா .புடுச்சுச்சு லவ் பண்ணிட்டேன் .ஆறு மாசமா லவ் பண்றேன்.அவங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும் .ஓகே சொல்லிட்டாங்க .ப்ராஜெக்ட் முடுச்சு வந்ததும் வீட்ல பேசி கல்யாணம் முடிவு பண்ணலாம்னு தான் நெனச்சேன் பட் அதுக்குள்ள இப்டி ஒரு காரியத்தை பண்ணி வச்சுருப்பீங்கனு நா எதிர் பார்க்கல "என்றவன் ஜான்வியின் புறம் திரும்பி "i am sorry ஜான்வி "என்று கூற

ரேவதி தன் அண்ணனின் சோர்ந்த முகத்தை பார்த்து கோபமுற்றவர் ஏதோ கூற வர ஜான்வியோ "அத்த வேணாம் கம்பெல் பண்ணாதீங்க .கம்பெல் பண்ணி பண்ற கல்யாண வாழ்க்கை என்னைக்கும் நல்லா இருக்காது .பாவாவுக்கு அவர் விரும்புற பொண்ணையே கட்டி வைங்க ப்ளீஸ் "என்றவள் என் வேலை முடிந்தது என்பதை போல் மேலே சென்று விட்டாள்.

சேகர் அந்த பெண் அவர்களின் ஜாதியை சேர்ந்தவள் தான் என்பதால் ரேவதியிடம் திரும்பியவர் "ரேவதி விடு பையன் ஆச பட்டுட்டான்.பொண்ணும் நம்ம ஆளு தான ஜான்விக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்க இருந்த அன்னைக்கே அபிக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் வச்சுறலாம் .எனக்கு எந்த வருத்தமும் இல்லம்மா "என்று கூற அவரும் அரை மனதாய் ஆமோதித்தார் .

ஆதி இவை எல்லாவற்றையும் பார்த்து நமட்டு சிரிப்போடு நிற்க அபியோ அவனை கொலை வெறியோடு முறைத்தான்.அவன் அருகில் சென்று நின்றவன் ஆதிக்கு மட்டும் கேட்கும் குரலில் "எதுக்கு டா இந்த ட்ராமா ?உன்கிட்ட தான் சொல்லிருக்கேன்ல ஜான்வியை லவ் பன்றேன்னு "என்று கேட்க

ஆதியோ அவனிற்கு மட்டும் கேட்கும் குரலில் "பாவா இப்போ என்னால தான் உனக்கு சீக்ரம் இன்னும் பதினஞ்சே நாளுல கல்யாணம் நடக்க போகுது சோ thank பண்ணுங்க என்ன .எதுக்கு இந்த ட்ராமானு கேட்டீங்கல்ல சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்க வேண்டி இருந்தது அதுக்காக தான் "என்றவன் ஜான்வியை பின்தொடர்ந்து அவளின் அறைக்கு சென்றான் .

ஜான்வி தன அறைக்கு வரும் வரை அமைதியாய் இருந்தவள் பின் திருமணம் நின்று விட்டது என்பதே முகத்தில் பிரகாசத்தை கூட நீண்ட நாட்களுக்கு பின் கெளதம் அவளிற்கு வாங்கி கொடுத்திருந்த ஒரு கரடி பொம்மையை தேடி எடுத்தவள் அதை தூசி தட்டி நெஞ்சோடு அணைத்தபடி சிரிப்புடன் அமர்ந்து இருந்தாள் .

அந்த பொம்மையை கட்டிப் பிடிக்கும் பொழுதெல்லாம் அவனையே அணைத்திருப்பதை போல் அவளிற்கு உணர்வு வரும் .கண்மூடி அந்த பொம்மையை அனைத்திருந்தவள் ஊமையாய் இதழ்களில் உறைந்த சிரிப்புடன் கண்ணீர் சிந்த அவளின் அந்த நிலையை கலைத்தது ஆதியின் "ரொம்ப சந்தோஷமா இருக்க போல ?"என்று கேட்க

ஜான்வியோ முகத்தை கடுமையாக்கியவள் "அதெல்லாம் ஒன்னும் இல்லையே "என்று கூற

ஆதியோ போலியாய் வருந்தியவன் "அய்யயோ நீ சந்தோஷப்பட மாட்டேன்னு தெருஞ்சுருந்தா தேவை இல்லாம அபி மாமா already லவ் பண்ராருனு தெரிஞ்சே அவருக்கும் உனக்கும் கல்யாணம் fix ஆக வச்சு,கெளதம் பாவா அப்பாகிட்ட பேசி ஓகே வாங்கி ,அம்மாகிட்ட பேசி அவங்க கிட்டயும் ok வாங்கி கெளதம் இருக்குற இடத்தை கண்டுபுடுச்சு அவரை வர வைக்க இல்லாத தகுடுதத்தம்லாம் பண்ணி இருக்க மாட்டேனே "என்று கூற ஜான்வியை அவன் கூறியதில் திகைத்தவள் இவ்வளவும் தனக்காக செய்தானா என்று மலைப்போடு அவனை பார்க்க அவனோ சிரித்து அவள் தலை முடியை கலைத்தவன் "என்ன மினியன்.நீ கோவத்துல அப்டி சொல்லிட்டா உன்ன அப்டியே விட்டுருவேனா ?நீ இந்த ரெண்டு மாசமா அவசரப்பட்டு ஓகே சொல்லிட்டோமேன்னு எவ்ளோ துடிச்சானு தெரியும் டி .நீ வாழ்க்கை fullaa இப்டியே துடிப்பனு தெரிஞ்சும் எப்படி அப்டியே விடுவேன் ?எல்லாம் ரெடி .அபி பாவாவை உள்ள இழுத்து விட்டதே அவர் லவ் பண்ற பொண்ணு பேரும் ஜான்வி அப்டிங்குறதால தான் .உன் கௌதம உன்கிட்ட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு அதுக்கப்புறோம் அவரை அடிக்குறதோ வெட்டுறதோ அது உன் பாடு "என்று கூற

ஜான்வியோ கண்ணீரோடு தாவி தன் தம்பியை அணைத்துக் கொண்டவள் "thank you thank you சோ மச் டா பனைமரம்"என்று கூற

அவனோ "ஹா finally என் மினியன் என்ன ரெண்டு மாசம் கழிச்சு பனை மரம்னு கூப்பிட்டுட்டா பா."என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி "இங்க பாரு என்னால உன்ன அவரோட சேர்த்து தான் வைக்க முடியும் அதுவும் மறைமுகமா .தப்ப நெனச்சுக்காத ஆனா வேற option இல்ல. ஓடி போய் தான் கல்யாணம் பண்ண போற.நீ இங்க இருந்தா ஒன்னு பைத்தியமாவ இல்ல உன் லவ் மேட்டர் தெரிஞ்சு நம்ம பெத்த புண்ணியவானே உனக்கு சமாதி கட்டிருவாரு .தப்பு தான் ஆனா வேற வழி இல்ல .காலம் தான் மாத்தணும் மாத்தும்னு நம்புவோம் . எதுக்கும் ரெடியாவே இரு.எப்போவும் நான் ,அம்மா அப்பறோம் உன் மாமனார் உன் பக்கம் சப்போர்ட் பண்ண இருக்கோம் "என்று கூற அவளும் தலையை ஆட்டினாள் .அவள் இந்த இரண்டு மாதம் அனுபவித்த நரக வேதனை அவளிற்கு எதையும் எதிர்க்கும் துணிவை கொடுத்திருந்தது .

flash back ஓவர்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top