32
கெளதம் சற்று பதற்றதுடன் காத்திருந்தான் ஜான்வியை சந்திக்க போகும் தருணத்தை எதிர்நோக்கி .திருமணம் முடிந்து அனைவரும் உணவுண்ண செல்ல ஜான்வியோ அவனை முறைத்தபடி மேலே மொட்டை மாடிக்கு சென்றாள்.அவள் மாடிக்கு செல்வதை கவனித்தவன் கைக் கடிகாரத்தை பார்க்க அது சரியாய் பன்னிரண்டு என்று காட்டியது .
கௌதமோ ஆதியின் புறம் திரும்பி பாவமாய் பார்க்க ஆதியோ "அப்டி பாக்காதீங்க பாவா .சிரிப்பா வருது போங்க மேல "என்று கூறி அனுப்பி வைத்தான் .
கெளதம் மனதில் "நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன் .என்ன இப்டி கூட்டிட்டு வந்து அவகிட்ட நல்லா கோர்த்து விட்டுட்டியே டா பாவி "என்று நினைத்தவாறு இஷ்ட தெய்வம் அனைத்தையும் வேண்டியபடி மேலே சென்றான் .
மொட்டைமாடியின் கதவு திறந்து இருக்க மேலே சென்ற பின் அந்த கதவை ஆதியின் அறிவுரை படி சாற்றி விட்டான் கெளதம் . ஜான்வி எங்கே என்று கண்களால் அவன் தேட அங்கே மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் சுவற்றின் அருகில் அந்த புறம் இருந்த தென்னந்தோப்பை வெரித்தவாறு கை கட்டி நின்றிருந்தாள் அவள் .
ஊதா நிறத்தில் வெள்ளி நிற ஜரிகை வைத்த பட்டு புடவை அணிந்திருந்தாள்.அவளின் நிறத்திற்கு அந்த வண்ணம் அவளின் நிறத்தை மேலும் எடுப்பாக அழகாக காட்டியது .இடையை தொட்டிருந்த அடர்த்தியான கூந்தலை ஒற்றை சென்டர் கிளிப்பில் அவள் அடக்கி மீதத்தை விரித்து விட்டிருக்க அங்கு அடித்த மிதமான தென்றல் அவள் கூந்தலை வருடி சென்றது .சற்றே பூசினார் போல் இருக்கும் அவள் தேகம் வெகுவாக இளைத்து இருந்தது .முகத்தில் இயல்பாய் இருக்கும் குறும்பு பொய் இறுக்கம் குடி இருந்தது .இலக்கே இன்றி வெறித்துக் கொண்டிருந்தவளின் அழகு அவள் முகத்தில் இருந்த வெறுமையால் வெகுவாக குறைந்தார் போல தெரிந்தது அவனிற்கு .
மனமும் வலித்தது எப்படி இருந்தவளை தனது செயல் இப்படி மாற்றி விட்டதே என்று .முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் அருகில் சென்று நின்றவன் அவள் தோளில் கை வைத்து "ஜானு "என்று அழைத்த மறுநொடி தன் கன்னத்தை கையால் தாங்கி இருந்தான் கெளதம்.அவன் இடது கன்னத்தை பலமாக தாக்கி இருந்தது அவனின் ஜானுவின் பூங்கரம் .
எதிர் பார்த்தது தான் என்பதை போல் நிமிர்ந்தவன் கோபத்தால் சிவந்து துடித்த உதட்டுடன் கண்ணில் குளிர்ந்திருந்த கண்ணீருடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் பார்த்து கண்ணீரோடு புன்னகைத்தவன் "சாரி "என்று கூற அவளோ அவனின் மறு கன்னத்திலும் அறைந்தாள்.
அவள் கொடுக்கும் அடியை புன்னகையுடன் வாங்கியவன் மீண்டும் மீண்டும் அவளை பார்த்து "சாரி ,சாரி "என்று கூற அவளோ அழுகையில் துடித்த உதட்டுடன் கோபமும் போட்டி போட விம்மியபடியே அடித்தாள்.
கெளதம் ஒவ்வொரு அடிக்கும் புன்னகை விரிய மீண்டும் மீண்டும் "சாரி "என்று கூறி ஆதி வாங்கியவன் ஒரு கட்டத்தில் அடிக்க வந்தவளின் கையை பற்றி "ஜானு போதும் சாரி டி "என்று கூற
அவளோ கையை விளக்க போராடியபடி "ஜானுவாம் ஜானு .இப்போ தான் தெருஞ்சுதா டா நா உனக்கு ஜானுனு? மூணு மாசமா எங்க இருக்க அப்டினே தெரியாம ஓடி ஒளிஞ்சியே இப்போ எதுக்கு வந்த ?இருக்கேனா செத்துட்டேனான்னு பாக்குறதுக்கு வந்தியா ?"என்று அழுகைக்குரலுடன் கேட்க
அவனோ தான் பற்றி இருந்த அவளின் கையை இழுத்து தன் மேல் வந்து விழுந்தவளை தன்னோடு இறுக்கி அணைத்தான் .அவள் அவனிடம் இருந்து விலக போராட அவனோ சிரித்தபடி "ரொம்ப முயற்சி பண்ணாத நானா விட்டா தான் போக முடியும் .எவ்ளோ வேணாலும் திட்டு அடி ஆனா இப்டியே திட்டு "என்று கூற
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் "எதுக்கு டா இப்போ கட்டி பிடிக்குற ?நா யாரு உனக்கு ?எந்த உரிமைல நீ என்ன கட்டி பிடிக்குற ?இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு போனவன் தான நீ ,இப்போ எந்த உரிமைல என்ன கட்டி பிடிக்குற ?"என்று கேட்க
அவனோ அவள் கண்களை கூர்ந்து பார்த்தவன் "எந்த உரிமைல கட்டி பிடிக்குறேன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஜானு "என்று கூற
அவளோ "ஒரு ஆணியும் எனக்கு தெரியாது .அப்டி நெனச்சு ஒரு தடவ பட்டதே ஆயுசுக்கும் போதும் "என்று கூறி முகத்தை திருப்ப அவனோ புன்னகையுடன் ஒற்றை கையால் அவள் இடுப்பை தன்னோடு இறுக்கியவன் மற்றொரு கையால் அவள் கன்னத்தை பற்றி தன் கண்ணை பார்க்குமாறு செய்தான் .
தன் கன்னத்தை பற்றிய அவன் கையை தட்டி விட அவள் முயற்சிக்க அவனோ உடும்பு பிடியாய் பிடித்திருந்தான் .பலம் கொண்டு அவள் முகத்தை தன் முகம் நோக்கி நிமிர்த்தினான் .முதலில் முரண்டு பிடித்து திமிறி விலக முயற்சி செய்தவள் அவனின் கண்ணை சந்தித்தபின் வழக்கம் போல் அவன் பார்வை வீச்சில் ஏதோ சூழலில் சிக்கியதை போல் சிக்கி மீள முடியாமல் தொலைந்து செயலற்று நின்றாள்.
நான்கு கண்களும் ஒன்றை ஒன்று சந்தித்து சிக்க மீள முடியாமல் தவிக்க . அவள் இத்தனை நாளாய் அவன் வாயிலிருந்து கேட்க ஏங்கி கொண்டிருந்த அந்த மூன்று வார்த்தைகளை கூறினான் "ஐ லவ் யு ஜானு"என்று
தான் கேட்டது கனவா நனவா என்பதை போல் அவள் விழி விரித்து பார்க்க அவனோ அவள் விழி விரிப்பில் சொக்கியவன் குனிந்து மென்மையாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவள் காதிற்கு அருகில் குனிந்தவன் அவள் காது மடலில் தனது உதடுகள் உரச மீண்டும் சன்னமான குரலில் கூறினான் "ஐ லவ் யு ஜானு "என்று .
அது வரை கோபத்தை இழுத்து வைத்தவளால் அதன் பின்னும் இழுத்து வைக்க முடியவில்லை.எத்தனை நாட்கள் ஏங்கினாள் இந்த வார்த்தைகளை கேட்க .இறுதி வரை கேட்க முடியாமல் பொய் விடுமோ என்று எதனை இரவுகள் துடித்திருப்பாள் .அவளின் தேடல்களுக்கு தவிப்பிற்கும் முற்று புள்ளி வைத்தார் போல் கனவில் ஓராயிரம் முறை அவனின் குரலில் கற்பனை செய்த வார்த்தைகளை நிஜத்தில் கெட்டவளிற்கோ மனதில் ஏதோ பெரும் பாரத்தை அகற்றினார் போன்று ,திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டவளிற்கு இருள் திடீரென விலகி அவ்விடமே ஒளியால் நிறைந்ததாய் போன்று ஆனந்தத்தின் உச்சத்தை கொடுத்தது .
அவனது கழுத்தை தாவி கட்டிக்கொண்டவள் வெடித்து அழத் துவங்கினாள்.அவள் உடலை இடையோடு சேர்த்து தன்னோடு புதையுமளவு அவளை தானும் கட்டிக்க கொண்டவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து மௌனமாய் கண்ணீர் வடித்தான் .
அவனை அடித்து அடித்து அழுது சோர்ந்தவள் மெல்ல கீழே இறங்கி அவன் மார்பில் சாய்ந்து கொண்டே பேசினாள்."ஏன் டா இப்டி பண்ண ?நா எவ்ளோ துடிச்சேன் தெரியுமா ?எந்த பிரச்னையா இருந்தாலும் என் கிட்ட சொல்லிருக்கலாமே ?எதுக்காக இப்டி என்ன உயிரோட கொன்ன?"என்று மார்பில் அடித்தபடி வினவ
அவனோ அவளின் தலையில் தன் கன்னம் பதித்தபடி "தெரியல டி .மனசுல பயம் .உன் அப்பா சொன்னமாரி உன்ன ஏதாச்சு பண்ணிருவாரோன்னு பயம் ,இயலாமை அவர் சொன்ன மாரி கண்டிப்பா இதே lifestyle உனக்கு என்னால குடுக்க முடியாது ,inferiority உன்னோட ஸ்டேட்ஸ்க்கும் என்னோட ஸ்டேட்ஸ்க்கும் நடுவுல இருந்த வித்யாசம் ,insecurity எங்க இப்போ என்ன புடுச்சுருக்குனு சொல்லி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பிற்காலத்துல இந்த lifestyle எல்லாம் கெடைக்கலயோ தப்பான முடிவு எடுத்திட்டேனோன்னு நெனச்சு வருந்தி என்ன வெறுத்துருவியோன்னு insecurity . இது எல்லாம் சேர்ந்து என்னோட காதல உன்கிட்ட சொல்ல விடல டி.ஆனா அது இவ்ளோ பாதிப்பை குடுக்கும்னு நான் நெனைச்சதே இல்ல ஜானு "என்று கூற
அவளோ அவனின் கடைசி வாக்கியத்தில் மேலும் கோபம் வர அவனிடம் இருந்து திமிறி விலகியவள் கோபம் தெறிக்கும் விழிகளோடு அவனை முறைத்தாள் .
இது வரை தன் கையில் வாகாய் தன் உடலோடு ஒரு அங்கமாய் அடங்கி இருந்தவள் திடீரென பிரிந்து நின்றதில் ஏமாற்றம் அடைந்தவன் அவளை என்ன டி என்பதை போல் பார்க்க அவளின் கண்களில் தெரிந்த கோபத்தில் குழம்பினான் "நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு திடீர்னு என்ன ?"என்பதை போல் அவன் மனம் எண்ணமிட்டு
அவளோ அவனை இடுப்பில் கைவைத்து முறைத்தவள் "ஏன் டா நா என்ன teenager ஆஹ் ?உன்னோட சம்பளம் உன்னோட பேமிலி situation எல்லாம் தெரிஞ்சு தான லவ் பண்ணேன் ?என்னவோ வயசு கோளாரஹ் loveனு நெனச்சுட்டு சுத்துறவ மாதிரி இப்போ புடுச்சது நாளைக்கு புடிக்காம போய் என்ன விட்டு போயிருவனு சொல்ற ?இது தான் என்ன நீ புருஞ்சு வச்சுருக்குற லட்சணமா ?"என்று கேட்க
அவனோ தன் வாயாலேயே இருந்ததையும் கெடுத்துக் கொண்டோம் என்று மனதில் தன்னை தானே காரி துப்பியவன் வெளியே அவளிடம் நெருங்கியவாறு "ஐயோ அப்படி எல்லாம் நினைக்கல டி "என்று கூற
அவளோ பின்னால் நகர்ந்தபடி "வேற எப்படி நெனச்ச ?நீ சொன்னதுக்கு அது தான் அர்த்தம் .என்ன பாத்தா என்ன நேரத்துக்கு ஒருத்தன நெனச்சுட்டு சுத்துறவ மாறி இருக்கா ?"என்று கேட்க
அவனோ அவளின் கூற்றில் கோபமுற்றவன் கையை ஓங்கி "அறைஞ்சுருவேன் ஜானு இப்டிலாம் உன்ன நீயே கேவலப் படுத்திகிட்டா "என்று கூற
அவளோ அவனை முறைத்தவள் "அடி டா அடி. நீ சொன்னதுக்கு அது தான் அர்த்தம் .ஓ அப்டி நெனைச்சதால தான சார் நீங்க விட்டுட்டு போனதும் வீட்ல பாக்குறவன கட்டிக்கிட்டு அவனோட சந்தோஷமா வாழுவேன்னு நெனச்சு விட்டுட்டு போன .என் தலை எழுத்து உன்..."என்று பேசிக்கொண்டே இருந்தவள் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது .
என்ன பேச முடியல? என்று அவள் குழம்ப அப்பொழுதே கவனித்தாள் தனது இதழ்கள் அவனின் இதழ்களுக்குள் சிக்கிக் கொண்டு இருப்பதை .என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளவே அவளிற்கு பத்து நொடி எடுக்க உணர்ந்த பின்னோ அவளின் கண்கள் அதிர்ச்சியில் வெளியே தெறித்து விழும் அளவிற்கு விரிந்தது .
கௌதமோ அவளின் அபத்தமான பேச்சினை தடை படுத்த கோபத்துடன் அவளை இழுத்து அவள் இதழை சிறை எடுத்தவன் முதல் முதலாய் அவள்
மெல்லிய இதழ் தீண்டிய தித்திப்புடன் அவளின் அதிர்ந்து விரிந்த விழிகள் அவன் ரசனையை தூண்ட சிறு சிரிப்புடன் தன்னவளின் இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தான் .
ஜான்வி அவனை தள்ளி விட்டு விளக்குவதற்காக திமிர அவனோ அவளின் திமிறல்களுக்கும் சேர்த்து அவளை தன்னோடு இறுக்கினான் .முதலில் கோபத்தில் அவனை தள்ளியவள் பின் தன்னவன் மேல் இருந்த காதலில் கொஞ்சம் கொஞ்சமாய் கோபத்திரை விலக அவள் இமைகள் தானாக மூடிக் கொண்டது அவள் கைகள் அவனின் சட்டை காலரை இறுகப் பற்றிக் கொண்டது .
எத்தனை நேரம் நீடித்ததோ ஜான்விக்கு மூச்சு முட்டுவதை உணர்ந்த பின்னே தன்னிலை அடைந்த கெளதம் விருப்பமே இன்றி தன் இதழ்களை அவள் இதழ்களில் இருந்து பிரித்தான் .ஜான்வியோ கண்களை இறுக்கி மூடி இன்னும் அவன் சட்டை காலரை பிடித்தபடி நின்றிருக்க சிரிப்புடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் காதில் குனிந்தவன்"இனி ஒரு தடவை ஓவரா பேசுனனு வையேன் புனிஷ்மென்ட் இப்டி தான் இருக்கும் "என்று கூற அவளோ வெட்கத்துடன் தலை ஆட்டியவள் சிவந்த கன்னங்களை மறைக்க அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.
அவளை சிரிப்புடன் தன்னோடு இறுக்கியவன் "நா வளர்ந்த விதம் அப்டி ஜானு புருஞ்சுக்கோ .நா ஆசைப்பட்ட எதுவும் எனக்கு mostly கெடச்சது இல்ல, அப்டியே கிடைச்சாலும் அது ஈஸியா கெடச்சது இல்ல . அதான் முதல்ல இருந்தே உன்மேல ஏதோ ஒரு வித்யாசமான உணர்வு இருந்தாலும் என்ன நானே ஏமாத்திக்கிட்டேன் இல்ல இல்ல நீ என் friend மட்டும் தான் friend மட்டும் தான் அப்டினு. ஆனா ஒரு கட்டத்துக்கு மேல என்னால என் மனச ஏமாத்த முடியல .இப்போ கூட எனக்கு நீ கெடைப்பியான்னு தெரியல ."என்று கூற
அவளோ அவன் வாயை பொத்தியவள் "உன் திருவாயை மூடு .இந்த மூணு மாசத்துலயே நான் ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பொழைச்சுகிட்டு இருந்தேன் நீ இல்லாம .இந்த மாறி ஒரு situation வரும்னு தான் நான் loveh பண்ணாம இருந்தேன் ஆனா எப்போ எப்படினு தெரியல உன்ன நான் லவ் பண்ணிட்டேன் .சரியோ தப்போ என் அப்பா இப்போ ஒத்துக்கலேனாலும் வருங்காலத்துல கூட மனசு மாறலாம் ஆனா நீ எனக்கு இல்லாம ஆயிட்டா எப்போவும் எனக்கு திரும்ப கிடைக்க மாட்ட .உன்ன விட்டு அப்பா பாக்குறவன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அது துரோகம் தான், உனக்காக அப்பா அம்மாவை விட்டு வந்தாலும் அது துரோகம் தான், ரெண்டும் வேணாம்னு செத்து போனாலும் அது துரோகம் தான் .தினம் தினம் வேற ஒருத்தனுக்கு துரோகம் பண்ணி அவன் வாழ்க்கை கெடுக்குறதுக்கு பழியை ஏத்துக்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம் அப்டினு தான் தோணுது ."என்று கூற
கெளதம் யோசனையுடன் "இது....சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியல ஜானு .ஒரு தடவை வந்து பேசி பாக்குறேன் "என்று கூற
அவளோ குறும்போடு சிரித்தவள்"பேசு பேசு இங்க உன் மாமனார் மட்டும் தான் பிரச்சன. என் மாமனார் ,உன் மாமியார்லாம் பச்சை கொடி காட்டி பல நாள் ஆச்சு "என்று கூற
கௌதமோ தன் தந்தைக்கு தன் காதல் விவகாரம் தெரியுமா என்று உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு சென்றான் .கெளதம் "ஐயோ என்ன தான் டி நடந்துச்சு இந்த ரெண்டரை மாசத்துல? சொல்லி தொலையேன் ஒண்ணுமே புரியாம மண்டை வேடுச்சுரும் போல "என்று கூற
அவளோ சிரிப்புடன் கையை சுழல் போல் இரண்டு மூன்று முறை வட்டமாக சுற்றியவள் மேலே பார்த்தாள் .அவனோ அவள் மேலே பார்ப்பதை பார்த்து குழம்பியவன் அவள் தலையில் மெல்ல கொட்டி "நா இங்க கேட்டுகிட்டு இருக்கேன் நீ என்ன வானத்தை பாக்குற "என்று கேட்க
அவளோ அவன் கன்னத்திலே ஒரு போடு போட்டவள் "எரும flashback சொல்லேல் மேல பாக்கணும். அப்போ தான் சொல்லுவேன் "என்று கூற அவனோ மீண்டும் தலை தூக்க துவங்கிய அவள் குறும்புத்தனத்தில் சிரித்தவன் அவள் கூறியதை போல் மேலே பார்த்தான் .
இரண்டரை மாதங்களுக்கு முன் .........
நீங்க இப்போவே மேல பாக்காதீங்க . நாளைக்கு updatela பாருங்க கழுத்து வலி வந்துர போது.
எப்படி guys இருந்துச்சு அப்டேட் ?ரொமான்ஸ் கொஞ்சம் முகம் சுழிக்குற மாறி ஆய்ருச்சுனா சாரி .அங்க அந்த feel தேவை பட்டுச்சு அதான் எழுதிட்டேன். பட் அப்டி தோணுச்சுனா சொல்லுங்க எடிட் பண்ணிரலாம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top