31

ஆதியை கண்டவன் திகைக்க ஆதியோ சிரித்தவன் "ஹலோ ப்ரோ எப்படி இருக்கீங்க "என்றான்.

தனது உள்ளங்கை இரண்டையும் தேய்த்தவன் "இங்க ரொம்ப சில்லுனு இருக்குல்ல சென்னைல இருந்துட்டு இங்க செட் ஆகிறது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் "என்று கூறியவன் அவன் தன்னையே அதிர்ந்து நோக்குவதை பார்த்து "அட என்ன ப்ரோ நின்னுக்கிட்டே இருக்கீங்க உக்காருங்க காபி சாப்பிடுறீங்களா ?"என்று கேட்க கெளதம் வேண்டுமா வேண்டாமா என்று கூறும் முன்னே அங்கிருந்த வெய்டரிடம் "டூ காபி "என்று கூறி அவனை நோக்கி திரும்ப கௌதமோ அவனை கேள்வியாய் பார்த்தான் .

ஆதி "என்ன ப்ரோ பாக்குறீங்க ?"என்று கேட்க

கௌதமோ புருவமுடிச்சுடன் "எப்படி நா இங்க இருக்குறத கண்டு பிடிச்ச ?"என்று கேட்க

ஆதியோ தோளை குலுக்கியவன் "ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம். நீங்க சென்னைல வேலை பார்த்த ஆபீஸ்ல போய் கேட்டேன் முதல்ல சொல்லல அப்பறோம் என் friendoda அக்கா அதாவது ரோகினி உங்க அசிஸ்டண்டா தான ஒர்க் பண்ணாங்க அப்பறோம் அவங்க மூலமா நீங்க கேரளா வந்துடீங்கனு தெரிஞ்சுது .இங்க உங்க ஆபீஸ்ல வந்து விசாரிச்சேன் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லிட்டாங்க சிம்பிள்.செமஸ்டர் leave வேற விட்டது நல்லதா போச்சு "என்று கூறி coffeeyai குடிக்க

கௌதமோ தனக்கு வந்த coffeeyai ஒரு மிடறு அருந்தியவாறு "நீ எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பார்க்க வரணும் ?"என்று கேட்க

அவனோ தன் கையிலிருந்த கோப்பையை மேஜையில் வைத்தவன் "இது ஒரு நல்ல கேள்வி "என்றவன் பின் தனது தோள் பையிலிருந்து ஒரு திருமண அழைப்பிதழை எடுத்து அவன் முன் வைத்தான் .கெளதம் என்ன இது என்பதை போல் பார்க்க ஆதியோ "அட என்ன ப்ரோ invitation குடுத்தா அதை பிரிச்சு பார்க்கணும் என்னையே பார்க்க கூடாது "என்று கூற கௌதமோ சற்று நடுங்கும் காரத்துடன் அந்த திருமண அழைப்பிதழை பார்த்தான் தான் நினைத்ததற்கு இருக்க கூடாது என்ற வேண்டுதலுடன் .எனில் கடவுள் அவனின் வேண்டுதலை ஏற்கவில்லை போல .

அதை பிரித்து பார்த்தவனிற்கோ அதின் உள் இருந்த செய்தி அவனை உயிரோடு கொன்றது ."எஸ்.ஜான்வி வெட்ஸ் என்.அபிஷேக்"என்று இருந்த வார்த்தைகள் இது ஜான்வியின் திருமண அழைப்பிதழ் என்று அவன் மூலையில் சம்மட்டி இட்டு கூற அவனோ தேதியை பார்க்க இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்று இருந்தது .

கண்களில் கண்ணீர் கோர்க்க அதில் இருந்த ஜான்வியின் பெயரை வருடியவன் மனது இது தான் நிதர்சனம் என்று அறிந்தாலும் அதை ஏற்க முடியாமல் சண்டி தனம் செய்தது .இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் இருக்கையில் அவளின் தம்பி இங்கு என்ன செய்கிறான் ?என்று நினைத்து அவனை பார்க்க

ஆதியோ அவன் பார்வையை உணர்ந்தவன் போல் "என்னடா இன்னும் ரெண்டு நாளுல அக்கா கல்யாணத்த வச்சுக்கிட்டு உங்க முன்னாடி உக்காந்துருக்கேனேனு பாக்குறீங்களா ?உங்கள கையோட கூட்டிட்டு போகணும்னு தான் அங்க எல்லா வேலையும் விட்டுட்டு வந்தேன் ."என்று கூற

கௌதமோ அந்த அழைப்பிதழை மூடியவன் "என்னால வர முடியாது "என்று கூற

ஆதியோ கையை கட்டி அவனை கூர்ந்து பார்த்தவன் "என்னாலயும் அப்டி விட்டுட்டு போக முடியாது "என்று கூற

கௌதமோ சுள்ளென்று ஏறிய கோபத்தில் அவனை தீயாய் முறைத்தவன் "என்ன மெரட்டுறியா ?"என்று கேட்க

அவனோ "சா சா உங்கள எல்லாம் மிரட்ட முடியுமா ."என்றவன் முகத்தை தீவிரமாகி "இதோ பாருங்க எனக்கு உங்கள கூட்டிட்டு வரணும்னு எந்த அவசியமும் இல்ல. என் அக்கா கழுத்துல தாலி ஏறும் போது அவளோட புத்திக்கு உரைக்கனும் அவ இன்னும் கௌதமோட காதலி இல்ல இன்னொருத்தனோட பொண்டாட்டின்னு .அது உங்கள அவ நேர்ல பார்க்காத வரைக்கும் நடக்காது அதுக்காக தான் உங்கள கூப்பிடுறேன் "என்று கூற

அவனோ "என்னால் முடியாது "என்று கூற

ஆதி "ஏன் முடியாது உங்களுக்கு ஜான்வி ஒரு நல்ல friend மட்டும் தான? ஒரு நல்ல friendoda கல்யாணத்துக்கு வரதுக்கு எதுக்கு இவ்ளோ பிடிவாதம் ?ஒரு வேளை அவளை நீங்க friendaa பாக்காததாலயோ ?"என்று கேட்க கௌதமோ என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் தெடிக் கொண்டு இருந்தான் .

அவனின் முகபாவத்தை பார்த்து சிரித்த ஆதி "என்ன யோசிக்க முடியலையா என்ன சொல்றதுன்னு? நா வேணுனா ஒரு அரை மணி நேரம் வாக் போய்ட்டு வரேன் நல்ல பதிலா யோசிச்சு வைக்குறீங்களா ?ஆனா நம்புற மாரி இருக்கணும் "என்று கேட்க

கௌதமோ மெளனமாக இருந்தவன் பின் "நா வரேன் "என்றான் .

ஆதி"குட் அப்போ கிளம்புங்க உங்க வீட்டுக்கு போய் துணி மணி எல்லாம் எடுத்துட்டு நாம போவோம் "என்று கூற

அவனோ "இல்ல நீ முதல்ல கெளம்பு நான் நாளைக்கு கெளம்பி வரேன் "என்று கூற

ஆதி "நம்பலாமா ?"என்று கேட்க

கௌதமோ புன்னகைத்தவன் "என் friend கல்யாணத்துக்கு எப்படி நா வராம இருப்பேன் ?லீவு சொல்லணும் கொஞ்சம் பர்சனல் வேலையும் இருக்கு முடுச்சுட்டு வரேன் "என்று கூற

ஆதி "உங்க பேச்சை நம்பி இப்போ நான் கிளம்புறேன் வந்துருங்க "என்று கூறி விடைபெற்றவன் சற்று தூரம் சென்று திரும்பி பார்க்க கெளதம் அந்த திருமண பத்திரிக்கையை விரித்து அதில் இருந்த ஜான்வியின் பெயரை வருடியவாறு மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் .

அதை பார்த்து இதழ் பிரிக்காமல் சிரித்த ஆதி "இப்படி தானே என் அக்காவும் துடித்திருப்பாள் "என்று நினைத்தவன் விறுவிறுவென்று மீண்டும் திரும்பி நடக்க துவங்கி விட்டான் .கெளதம் அந்த திருமண அழைப்பிதழை பார்த்ததில் இருந்தே பித்து பிடித்தது போல் இருக்க அன்றிலிருந்து விடுப்பு எடுத்தவன் தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்து கட்டிலில் பொத்தென்று விழுந்தான் .

அவனின் அரை முழுக்க ஜான்வியின் புகைப்படம் தான் ஒட்டி இருந்தான் .அவளும் அவனும் சேர்ந்து எடுத்தது ,ஜீவிதா,பிரவீன் மற்றும் அவளின் instagrammil இருந்த அவள் புகைப்படங்கள் ,அன்று ஜீவிதாவின் திருமண வரவேற்ப்பின் பொழுது அவளை அவளே அறியாமல் எடுத்த புகைப்படங்கள் என்று அவளின் புகைப்படங்களே அவனின் அறையின் ஒரு பக்க சுவற்றை ஆக்ரமித்து இருக்க கையில் இருந்த திருமண பத்திரிக்கையை பார்த்து முதல் முதலாக உடைந்து அழுதான் கெளதம் .

நிதர்சனம் அவன் மனதை ஈட்டியாய் குத்தியது ."தப்பு பண்ணிட்டேன் ஜானு ,தப்பு பண்ணிட்டேன் .நீ என் ஜானு டி உன் அப்பா சொன்னதுக்காக உன்னை விட்டு வந்து இருக்க கூடாது ,ஓடி ஒளிஞ்சு இருக்க கூடாது ,உன்னை நான் அழ வச்சு இருக்க கூடாது ,உன்னை கெஞ்ச வச்சு இருக்க கூடாது ஜானு .இன்னும் ரெண்டு நாள்ல நீ இன்னொருத்தன் மனைவி ஆயிடுவியா டி ?அதை பாக்குற சக்தி எனக்கு இருக்கா ?என் காதலுக்கு சக்தியே இல்லையா ஜானு? அது உன்னை என்கிட்டே சேர்க்காதா ?"என்று பிதற்றியவனை தேற்றுவார் தான் அங்கு யாரும் இல்லை ,இரண்டு மணி நேரம் அழுது தீர்த்தவன் பின் முகம் தெளிவாக தனது உடமைகளை எடுத்து வைக்க துவங்கினான் .

அடுத்த நாள் வேலைக்கு சென்றவன் மாலை நான்கு மணி போல் கோவை செல்லும் பேருந்தில் ஏறினான் .மனதில் எந்த எண்ணங்களும் இல்லை கண்களில் எந்த தேடலும் இல்லை .மனத்திலும் மூலையிலும் கண்களிலும் வெறுமை கொட்டிக் கிடந்தது .காதில் ஒலித்த பாடல் மட்டுமே அவனின் மனநிலையை கூறுவதாய் இருந்தது

"காதல் என்னும் சொல்லை

நானும் சொல்ல வில்லை

சொல்ல வந்த நேரம் காதல்

எந்தன் கையில் இல்லை ....

என்றும் எனது கண்ணிலே

உன் பிம்பம்

உன்னை எண்ணி வாழ்வதே

என் இன்பம்

இங்கு நீ சிரிக்க

நான் பார்த்தாலே

என் காதல் வாழும் "என்ற பாடல் வரிகள் அவனின் நெஞ்சத்தை தைக்க அனுமதி இன்றி இரு கண்ணீர் துளிகள் அவன் கண்ணிலிருந்து பேருந்து ஜன்னல் கம்பியில் பட்டு தெறித்தது .

இரவு ஒன்பது மணி போல் அழைப்பிதழில் இருந்த மண்டபத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கினான் கெளதம் .இறங்கியவனின் கண்களில் முதலில் பட்டதே ஜான்வி வெட்ஸ் அபிஷேக் என்ற flex தான் .

அதை கண்களில் துளிர்ந்த கண்ணீரோடு பார்த்தபடி நின்றவனை வாசலில் இருந்த ஜான்வியின் தந்தை கண்டுகொண்டவர் இவன் எங்கு இங்கே என்பதை போல் பார்க்க ஆதியோ அதற்குள் கௌதமின் அருகில் சென்றவன் "அடடே வர மாடீங்கனு நெனச்சேன் வந்துடீங்களே வாங்க ப்ரோ "என்று கூற

கெளதம் "ஜான்வி கல்யாணத்துக்கு நா இல்லாம எப்படி ?"என்று முயன்று முறுவலித்தபடி உள்ளே வர ஜான்வியின் தந்தையோ அவனை கேள்வியாய் பார்த்தபடி இருந்தார் .

அதியோ "என்னப்பா குழப்பமாவே பாக்குறீங்க ?நம்ம ஜான்வி அக்கா friend தான் "என்று கூற

அவரோ தெரியாததை போல் "ஓ அப்டியா சரி சின்னு உள்ள கூட்டிட்டு போ "என்று கூறினான் .

ஆதி "change ஆயிட்டு வாரீங்களா ப்ரோ சாப்பிட ?இப்போ தான் reception முடுஞ்சது ?"என்று கேட்க

அவனோ "இல்ல ஆதி நா பிஸ்கட் சாப்டுட்டேன் . கொஞ்சம் தலை வலிக்குது நான் காலைல கல்யாணத்துக்கு வரேன் எனக்கு ரூம் மட்டும் காட்டுங்க "என்று கூற

அவனும் "ஓகே ப்ரோ "என்று கூறியவன் அவனை தான் தங்கி இருந்த அறையில் கொண்டு விட்டான் .கெளதம் தனது பையை ஒரு ஓரமாய் வைத்தவன் கட்டிலில் சாய்ந்து கண்ணீர் விட்டபடி உறங்கி போனான் .

அடுத்த நாள் காலை யாரிற்கும் காத்திராமல் விடிய ஆதி கௌதமை உலுக்கிக் கொண்டிருந்தான் ."ப்ரோ ப்ரோ எந்திரிங்க இன்னும் அரை மணி நேரத்துல முஹூர்த்தம் "என்று கூற

அவனோ கண்ணை திறந்தவன் "5 மினிட்ஸ் ஆதி "என்று கூறி உள்ளே குளியலறைக்குள் சென்றான் .பின் தனது உடமைகளில் இருந்து ஒரு இளநீல நிற சட்டையை எடுத்தவன் அதை வருடினான் .அவனிற்கு ஞாபகங்கள் பின்னோக்கி சென்றது .

மாலை ஆறு மணி போல் தனது அறையில் மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை அவனின் தந்தையின் குரல் கலைத்தது .

கௌதமின் தந்தை "கெளதம் உனக்கு ஏதோ பார்சல் வந்துருக்கு பாரு "என்று கூற

கௌதமோ "என்ன பார்சல்? நா ஏதும் போடலையே? "என்று குழம்பியவாறு வர அங்கே இருந்த flipkart ஊழியன் அவனிடம் sign வாங்கி ஒரு பார்சல் கொடுத்து விட்டு சென்றான்.

கெளதம் "தான் ஆர்டர் செய்யவில்லை "என்றதற்கு

அவனோ "இந்த முகவரி தான் போட்டிருந்தது பணம் முன்பே கட்டிவிட்டனர் "என்று கூறி செல்ல கௌதமோ அந்த parcellai குழப்பத்தோடு வாங்கி தன் அறைக்கு வந்தவன் என்ன என்று பிரித்து பார்க்க அதில் அவனிற்கு பிடித்த இளநீல நிறத்தில் அழகான சட்டை இருந்தது .

அதை திருப்பி பார்த்தவன் யார் அனுப்பி இருப்பார் என்று யோசிக்க அவனின் அலைபேசி சிணுங்கி அவனை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது .ஜானு என்ற பெயரை பாத்து புன்னகைத்தவபடி எடுத்து காதில் வைத்தவன் "சொல்லு ஜானு "என்று கூற

ஜான்வியோ "உனக்கு ஷர்ட் புடுச்சுருக்கா அத்து ?"என்றாள் .

கெளதம் புன்னகைத்தவன் "நீயா அனுப்பிச்ச சூப்பரா இருக்கு டி "என்று சொல்ல

ஜான்வியோ "ஹாப்பாடா எங்க புடிக்காம போய்டுமோனு நெனச்சேன் ."என்று கூற

கெளதம் "ஆமா திடீர்னு என்ன gift ?"என்று கேட்க

ஜான்வி "ம்ம் தம்பிக்கு ஷர்ட் பாத்துட்டு இருந்தேன் அப்போ இதை பார்த்ததும் உன் ஞாபகம் வந்தது .நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் வாங்கிட்டேன் "என்று கூற

அவனோ அவள் பதிலில் புன்னகைத்தவன் "தேங்க்ஸ் ஜானு "என்று கூற

அவள் "அதை நீயே வச்சுக்கோ . ஏதாச்சு ஸ்பெஷல் occasionla போடு "என்று கூறி வைத்து நினைவில் வந்தது .

மங்கள வாத்தியம் முழங்கும் சத்தத்தில் கனவுலகில் இருந்து மீண்டு வந்தவன் கனத்த மனதுடன் அந்த சட்டையை போட்டு கீழே வழக்கம் போல் ஒரு jeansai போட்டு விட்டு தலையை சீவி கீழே வந்தான் .அவன் வந்து அமர்ந்ததும் அவன் அருகில் சென்று ஆதி அமர்ந்து கொண்டான் .

கெளதம் அங்கே என்ன நடக்கிறது ?மணவறையில் அமர்ந்திருக்கும் ஆடவன் யார் ?என்று கூட நிமிர்ந்து கூட பார்க்கவில்லை .எங்கே தனது இதயம் அந்த காட்சியை கண்டு வெடித்து விடுமோ என்று அஞ்சியவன் தலை குனிந்தவாறே அமர்ந்து இருந்தான் .

பின் மங்கள நாணை ஆசீர்வாதம் வாங்குவதற்காக அவன் முன் தட்டை ஏதோ ஒரு பெண் நீட்ட அவன் அமைதியாக அந்த தாலியையே வெறித்தான் .அவன் அருகில் அமர்ந்த ஆதி "அட என்ன ஜான்வி உன் friend தாலியையே பாக்காதவாறு மாரி பாக்குறாரு ?"என்று கேட்க

ஜான்வி என்ற பெயரில் அதிர்ந்து அவசர அவசரமாக அவன் அந்த பெண்ணின் முகம் நோக்க அவளோ அவனை தான் கண்ணீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்ள தன் இணையை தவிப்புடன் கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.கௌதமின் கண்களிலோ ஆனந்தம் ,தவிப்பு ,வலி ஜான்வியின் கண்களிலோ கோபம் ,தவிப்பு, இயலாமை .

இருவரும் எத்தனை நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனரோ ஆதி அவன் தோள் தொட அதில் சுயநினைவு அடைந்தவன் தாலியை தொட்டு வணங்க ஜான்வி அடுத்த நபரிடம் ஆசி வாங்க சென்றாள் .

கௌதமோ அவசர அவசரமாக மணவறையை பார்க்க அங்கு ஒரு ஆடவனும் ஏதோ அவன் அறிந்திடாத பெண்ணும் அமர்ந்து இருந்தனர் .சுற்றி பார்க்க பிரவீன் ,ஜீவிதா இருவரும் இல்லை . கௌதமின் மனதில் குழப்ப அலைகள் முட்டி மோதின .ஜான்விக்கு தானே திருமணம் என்று பத்திரிக்கையில் இருந்தது ?வெளியில் கூட அப்படி தானே இருந்தது ?எனில் மணமேடையில் வேறு பெண் அமர்ந்திருக்கிறாள்? இவளோ தாலிக்கு ஆசி வாங்குகிறாள் ? என்று அவன் குழம்பி தவித்தான் .

சிறிது நேரம் அவனின் குழம்பிய முகத்தை பார்த்து புன்னகைத்த ஆதி பின் அவன் தோள் தொட்டவன் "பாவா ரொம்ப confuse ஆவாதீங்க கல்யாணம் அபிக்கும் ஜான்விக்கும் தான். ஆனா ஜான்வி சேகரோட இல்ல ஜான்வி ஸ்ரீதரோட.பக்கா லவ் marriage இது "என்று கூற கௌதமிற்கு அந்த நொடி ஏதோ பெரும் பாறாங்கல்லை மனதில் இருந்து எடுத்ததை போன்ற நிம்மதி பிறக்க கண்களில் ஆனந்த கண்ணீர் நிறைய மனம் லேசாகி பறந்தது .விட்டால் இறங்கி குத்தாட்டம் ஆடுவான் .

அவன் கண்கள் அவசரமாய் ஜான்வியை தேட அவள் அந்த மணவறையில் ஓரத்தில் அவனை பார்த்தபடி இல்லை முறைத்தபடி தான் நின்று கொண்டிருந்தாள் .அவன் கண்களாலேயே "சாரி "என்று கூற அவளோ கண்களாலேயே அவனை எரித்தவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளின் கோபத்தை ரசித்தவன் பின் திருமணம் முடியும் வரை அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்தான் .ஆதி "போதும் போதும் பார்த்தது .உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் அக்கா சரியா பன்னெண்டு மணிக்கு மொட்டை மாடில இருப்பா போய் பேசுங்க "என்று கூற

கெளதம் "மச்சான் ...அப்டி கூப்பிடலாம்ல?"என்று கேட்க

அவனோ அவன் கேட்ட தோரணையில் சிரித்தவன் "அப்படி தான் கூப்பிடனும். என்ன ?"என்று கேட்க

கௌதமோ "உன் அக்கா கிட்ட இப்போ மாட்டுனா என்ன கொன்னாலும் கொன்னுடுவா கொஞ்சம் நீயும் கூட வாயேன் "என்று கூற

ஆதியோ "நோ நோ வாய்ப்பே இல்ல பாவா என் அப்பாவை சமாளிக்கணும் அண்ட் நீங்க அவளை பத்தி யோசிக்காம பண்ண அந்த காரியத்தால் அவ இந்த மூணு மாசத்துல அனுபவிச்ச வலி ரொம்ப அதிகம் .நீங்களே பாத்துக்கோங்க "என்று கூற அவனோ பயத்தால் எச்சில் கூட்டி விழுங்கினான் .என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்று. அவளோ அவன் பயந்தது தவறே இல்லை என்பதை போல் அவனை பார்வையாலேயே பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top