30

எதையோ நினைத்து சிரித்துக் கொண்ட ஆதி தனது அலைபேசியை எடுத்து தனது அத்தை ரேவதிக்கு அழைப்பு விடுத்தான் .

ரேவதி பூஜை அறையில் இருந்து அப்பொழுதே வெளியில் வந்தவர் ஆதியின் என்னை பார்த்ததும் ஒரு நொடி குழம்பினார் இவன் காரியம் இல்லாம கால் பண்ண மாட்டானே என்று .அவர் யோசனையோடு தனது காதில் வைத்து "ஹலோ சின்னு "என்று கூற

அவனோ முயன்று வரவழைத்த குதூகலத்தோடு "ஹலோ அத்த எலா உன்னாரு மீறு? (எப்படி இருக்கீங்க நீங்க ?)"என்று கேட்க

அவரோ "ஹான் நல்லா இருக்கேன் சின்னு என்ன திடீர்னு கால் பண்ணிருக்க ?"என்று கேட்க

அவனோ "அத்தை அப்பா ஜான்விக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுருக்காரு அண்ட் அவளும் இந்த தடவ ஓகே சொல்ல போறாளாம் மாப்ள பாக்குறதுக்கு "என்று கூற

அவரோ உற்சாகம் வடிந்த குரலில் "இப்போ அதுக்கு என்ன சின்னு ?"என்று கேட்க

அவனோ "அட என்ன அத்த நீங்க ,அபி பாவா க்கு இப்போ ஜானுவை பொண்ணு கேட்கலாமே "என்று கேட்க

அவரோ "அவ தான் இஷ்டம் இல்லனு சொல்லிட்டாளே சின்னு "என்று கூற

அவனோ "ஐயோ அத்த அவ அபி பாவாவை புடிக்கலைனா சொன்னா? இப்பதைக்கு கல்யாணம் வேணாம்னு தான சொன்னா? இப்போ தான் அவளே ஒகே அப்டினு சொல்லுறாளே. நீங்க அபி பாவாவுக்கு இப்போ பொண்ணு கேட்டா ஓகே ஆயடுமே "என்று கூற அவரின் மனமும் அதே கணக்கை தான் போட்டது.

தான் நினைத்ததை போல் ஜான்வியை மருமகள் ஆக்கி விடலாம் என்று நினைத்தவர் அவன் அதிக நேரம் அவர் பேசாமல் அமைதி காத்ததால் "ஹலோ ஹலோ "என்று கத்தும் பொழுதே சுயநினைவுக்கு வந்தவர் "நல்ல ஐடியா சின்னு அபி வேற ப்ரொஜெக்ட்டுக்காக us போயிருக்கான் கால்ஸ் அட்டென்ட் பண்ண மாட்டேங்குறானே ?"என்று கூற

அவனோ மனதில் அதுனால தான இப்போ பொண்ணு கேக்க சொல்றேன் என்று நினைத்தவன் "நீங்க வாங்க அத்த பாவா உங்க பேச்சு மீரியா நடந்துக்க போறாரு

"என்று கூற

அவரும் "இதோ இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன் சின்னு "என்று கூறி அழைப்பை துண்டித்தார் .

அவன் பேசி முடிப்பதற்கும் ஜான்வி வெளியே வருவதற்கும் சரியாய் இருக்க அவன் அவளை பார்த்து மீண்டும் கேட்டான் "அப்போ உன் முடிவுல மாற மாட்ட?"என்று கேட்க

அவளோ சற்று தடுமாறி பின் உறுதியான குரலில் "இல்ல "என்றாள்

அவனோ கையை கட்டியவன் "அப்போ சரி இப்போவே போய் அப்பா கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லு "என்று கூற

அவளோ "அது கொஞ்சம் டைம் வேணும் "என்று சொல்ல

அவனோ நக்கலாய் உதடு சுழித்தவன் "அப்போ உன் முடிவு மாறலாம்னு உனக்கே பயம் வருது இல்ல ஜான்வி "என்று கிண்டல் செய்து அவளின் ஈகோவை தூண்டி விட்டான் .

ஜான்வி"நா ஒன்னும் அந்த கெளதம் மாறி கொரங்கு இல்ல நெனச்சு நெனச்சு முடிவெடுக்க நா முடிவெடுத்த எடுத்தது தான் .இப்போவே போய் ஓகே சொல்றேண்டா "என்று கூறி கீழே செல்ல அவனோ சிரித்துக்கொண்டான் போ போ என்று .

அவள் கீழே செல்ல அவளின் அன்னையோ பதற்றமாய் அவள் அருகில் வந்தவர் அவளின் நெற்றி கழுத்தை தொட்டு பார்த்து காய்ச்சல் அடிக்கவில்லை என்று தெரிந்த பின்னே நிம்மதி ஆனார் .பின் அவளை உணவுண்ண சொல்ல தந்தையுடன் அமர்ந்து உணவு உண்ண துவங்கினாள் ஜான்வி .

உணவு வேளை அமைதியாக கழிய அவளின் ஜான்வியின் தந்தையோ "என்ன முடிவு பண்ணிருக்குற ஜான்வி ?"என்று கேட்க

அவளோ சற்று நிதானித்தவள் இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் "உங்க இஷ்டம் அப்பா "என்றதோடு முடித்துக் கொண்டாள்.அவரிற்கு அந்த வார்த்தையை அவள் வாயில் இருந்து கேட்டதும் எத்தனை ஆனந்தமாய் இருந்தது என்று வார்த்தையால் கூற முடியாது .

அவர் "அப்போ அந்த நாலு வரன்ல எது oknu பாத்து சொல்லு ஜான்வி "என்று கூறி அந்த நான்கு புகைப்படத்தையும் எடுத்து கொடுக்க வாசலில்

ரேவதியின் குரல் கேட்டது "வீட்லயே பையன் இருக்கேல எதுக்கு அண்ணையா வெளிய பாக்குறீங்க ?"என்று .

சேகர் அவரின் வரவில் மகிழ்ந்தவர் "வாமா வந்து உக்காரு "என்று கூற

அவரோ வரவேற்பறையில் ஜான்வி அமர்ந்து இருந்த கதிரையில் அவள் அருகில் அமர்ந்தவள் அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து "இப்போவாச்சு கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சே "என்று கூறி தன் அண்ணனிடம் திரும்பியவர் "வீட்லயே மாப்பிளையை வச்சுக்கிட்டு எதுக்கு அண்ணய்யா வெளிய தேடுறீங்க ?"என்று கேட்க

அவரோ "அது...ரேவதி முதல்ல அபியை தான் ஜான்விக்கு கேட்டோம் அவ தான விருப்பம் இல்லனு சொன்னா ?"என்று கேட்க

ஆதிசேஷனோ "அவ கல்யாணத்துல விருப்பம் இல்லனு தானப்பா சொன்னா அபி பாவாவையா வேணாம்னு சொன்னா ?டைம் தான் கேட்டா என்ன ஜான்வி "என்று கேட்க அவளோ எதற்கும் பதில் சொல்லாமல் இறுக்கமாக தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்.

ரேவதி "சின்னு சொன்ன மாதிரி கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு தான அண்ணையா அவ சொன்னா .இப்போவும் சொல்றேன் ஜான்வியை என் மருமகளா ஆக்கிக்குறதுல எனக்கு பரிபூரண சம்மதம். நீங்க தான் யோசிச்சு சொல்லணும் "என்று சொல்ல

பார்வதியோ சந்தோஷத்துடன் "சொல்லு ஜான்வி அபியையே பேசிறலாமா ?"என்று கேட்க அவளோ ஒன்றும் சொல்லாமல் இரண்டு நிமிடம் இருந்தவள் பின் மெல்லமாக தலை ஆட்டினாள் சம்மதம் என்பதை போல் .அங்கு இருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாட ரேவதி அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டவாறு தான் கையேடு வாங்கி வந்திருந்த பூவை அவள் தலையில் வைத்துவிட்டார் .

ரேவதி "அபி ரெண்டு மாசம் கழிச்சு project முடுச்சுட்டு வந்துருவான் அண்ணய்யா .ரெண்டு மாசத்துல அவன் வந்ததும் வீட்லயே நிச்சயம் வச்சுக்கலாம் அப்ரோமா கல்யாணம் வச்சுக்கலாம் "என்று கூற

சேகர் "எதுக்கும் அபி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே ரேவதி ?"என்று கூற

ரேவதியோ அபி மேல் இருந்த அதீத நம்பிக்கையில் "அதெல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணய்யா அவன் என் பேச்சு மீறி நடக்க மாட்டான் .அது மட்டும் இல்லாம இந்த ரெண்டு மாசம் அவனை கால் பண்ணவும் முடியாது "என்று கூற அவரும் மனதில் இருந்த நெருடல்கள் நீங்கி முழுமனதோடு தலை ஆட்டினார் .

ஆதியோ இவர்கள் யாரையும் பார்க்கவில்லை ஜான்வியின் தலை குனிந்து மௌனமாய் கண்ணீர் வடிக்கும் முகத்தை தான் பார்த்துக் கொண்டே இருந்தான் .மனதில் இன்னும் இரண்டு மாதத்தில் உன் கண்ணீரை மொத்தமாக துடைப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டவன் வெளியே சிரித்த முகமாய் "அப்பா அக்காவுக்கு கல்யாணம் fix ஆகி இருக்கு treatlaam இல்லையா ?"என்று கேட்க

அவரோ "கொடுத்துட்டா போச்சு "என்று கூறி சிரித்தார் .அங்கு யாரிற்கான திருமண செய்தியை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக உரையாடுகிறார்களோ அவளோ காதில் எதுவும் விழாமல் இயந்திரம் போல் அமர்ந்து இருந்தாள் கண்ணில் வழிந்த கண்ணீருடன் .

பின் ரேவதி சென்றதும் தனது அறைக்கு வந்தவள் தனது அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள் .மனம் அவனை அழைத்து பேசு என்றது மூளையோ வேண்டாம் என்றது .பின் ஒரு முடிவெடுத்தவளாய் கடைசியாக அழைத்து பாப்போம் என்று அவள் கௌதமை அழைக்க கௌதமோ அங்கு தன் எதிரில் இருந்த கடலையே வெறித்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவெடுத்தார் போல் பெருமூழு விட்டவன் உள்ளங்கையில் மூடி வைத்து இருந்த sim மை ரெண்டு நசுக்கி அங்கே அவன் அமர்ந்து இருந்த இடத்திலேயே போட்டு விட்டு எழுந்து நடந்தான் .இங்கு ஜான்வியோ அந்த எண்ணிற்கு அழைத்து அழைத்து சோர்ந்தவள் உதடு துடித்த அழுகையுடன் மெத்தையில் விழுந்தாள் .அவள் கண்முன்னே அவள் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் கானல் நீரென மறைய துவங்கியது .

இரண்டரை மாதங்கள் ரெக்கை கட்டியார் போல் சென்றது ,

மூணாறு, கேரளா ,

அங்கு ஒரு பெரிய resort construction siteil கெளதம் கீழே ஒரு யூனிட்டில் நின்று வேலை வாங்கி கொண்டு இருந்தான் .இந்த இரண்டரை மாதத்தில் கெளதம் அடையாளமே தெரியாதது போல் மாறி இருந்தான்.முன்பு போல் கத்துவது இல்லை பணியாளர்களிடம் .பொறுமையாய் நிதானமாய் தனது வேலைகளை விளக்கி அவர்களிடம் வேலை வாங்கினான் ,புகை பிடிப்பதை நிறுத்தி இருந்தான் ,உருவத்திலோ மொத்தமாய் மாரி இருந்தான் .தோள் பட்டை வரை தாறு மாறாய் வளர்ந்து இருந்த முடி ,கண்ணில் தூங்காததன் அடையாளமாய் சிகப்பு நிறம் நிறைந்து இருக்க கண்ணின் கீழ் அழுத்தமான கருவளையம் இருந்தது .முகத்தில் பாதியை மறைத்த தாடி ,ஐந்து கிலோவாவது இளைத்திருப்பான் என்று பார்த்ததும் கூற வைக்கும் இளைத்து கருத்த தேகம் என்று மொத்தமாய் கலை இழந்து போய் இருந்தான் கெளதம்.முகத்தில் சாந்தம் குடியிருக்க அந்த சாந்தத்தையும் மீறிய வெறுமையை கண்கள் எப்பொழுதும் தாங்கி இருந்தது .

யாரிடமும் பேசுவது இல்லை தன் குடும்பத்தார் உட்பட .விரும்பியே கேரளாவிற்கு transfer வாங்கி வந்தவன் வேலை தவிர யாரிடமும் பேசாது தனது உலகத்தை தானே குறுக்கிக் கொண்டான் .அவன் பேசும் ஒரே ஆள் ஜான்வி தான் (புகைப்படம் ).காலையில் வேலைக்கு செல்பவன் அங்கே அவன் தங்கி இருந்த பகுதியின் அருகில் இருந்த lakein நடை பாதையில் நடந்து விட்டு உறக்கம் கண்ணை தழுவும் நேரம்,குளிர் உடலை ஊசியை குத்தும் நேரம் தான் வீட்டிற்கு வருவான் .தன்னவளின் புகைப்படத்துடன் பேசுபவன் அப்படியே உறங்கியும் போவான் .எதற்காக வாழ்கிறோம் என்றே பிடிப்பு இல்லாத ஒரு வாழ்வு தான் வாழ்ந்து கொண்டிருந்தான் கெளதம் .

தன் அருகில் நின்ற தனது ஜூனியரிடம் "இன்னைக்குள்ள இந்த sectionla பிளூரிங் நடந்து முடுஞ்சுருக்கணும் "என்று ஆங்கிலத்தில் விலக்கிக் கொண்டிருந்தவனை அங்கே வேலை பார்த்த ஒருவர் வந்து அழைத்தார் "கெளதம் சார் "என்று .

அவன் என்ன என்று திரும்ப அவரோ "உங்கள பார்க்க யாரோ வந்துருக்காங்க சார் "என்று ஆங்கிலத்தில் கூற அவனோ தான் இங்கு வந்தது யாரிற்கும் தெரியாதே யார் வந்திருப்பார் என்று யோசித்தவன் பின் தலை ஆட்டி அவர்களை பின் தொடர்ந்தான் .

இருபுறமும் புல்வெளி இருக்க நடுவே கற்கள் பதித்த தாரையாய் வழி இருக்க அந்த ரெசார்ட்டின் செயல் படும் முன் பகுதியில் இருந்த காபி ஷோப்பிற்கு அழைத்து வந்த அந்த ஊழியர் அங்கிருந்த மூன்றாவது மேஜையில் பின்னால் திரும்பி அமர்ந்து இருக்கும் ஒரு இளைஞன் தான் தன்னை பார்க்க வந்திருப்பதாக கூற யார் என்று யோசித்துக் கொண்டே வந்தவன் தன் எதிரே இருந்த நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் .அவன் முன் சிரித்தபடி அமர்ந்து இருந்தான் ஆதிசேஷன் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top