3
எதிரில் புன்னகையுடன் நின்றிருந்த திவ்யாவை அந்த மூன்று நண்பர்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விட்டது .அதன் பின் அந்த பத்து பேரையும் அழைத்து சென்றவள் அவர்களுக்கு அவர்களின் பணிகளை விலக்கிக் கொண்டிருந்தாள் .மெயின் ட்ரைனராக அவள் இருக்க அவ்வப்பொழுது சிலரை கே டி எனப்படும் knowledge transitionற்காக அழைப்பர் .
அந்த ஒரு நாளிலேயே அங்கு அவர்கள் டீம் இல் இருந்த பத்து பெரும் நட்புகளாகி இருக்க அதில் பல மாநிலத்தவரும் இருந்தது பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கொடுத்தது .
அதில் திவ்யா அவர்களை விட ஒரு வயது தான் மூத்தவள் என்பது அனைவருக்குமே ஆச்சர்யம் .வேலைக்கு சேர்ந்த ஒரே வருடத்தில் காக்னிசன்ட்டில் டீம் லீடராக பதவி வகிக்க வேண்டுமென்றால் அது சாதாரண விஷயம் அல்ல .
அவ்வப்பொழுது குட்டி குட்டி பிரேக்குகளுடன் முதல் நாள் வேலைப்பளு அதிகம் இல்லாமல் மிகவும் நன்றாகவே சென்றது . லஞ்ச் பிரேக்கில் அனைவரும் சேர்ந்து உண்ண அங்கு ஒரு குட்டி கலாட்டாவேநடந்து விட்டது .
ஜீவிதா ஒரு இடத்தில் பொருந்தி போவதற்கு சற்று கால அவகாசம் எடுத்துக்கொள்வதால் அனைவரையும் அறிந்த பிறகே தனது குறும்பு தனங்களை எல்லாம் வெளிக்காட்டுவாள் ப்ரவீனும் அவ்விதமே . எனில் ஜான்வி அப்படி இல்லை .இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்வாள் .
பார்க்க தான் பாவமாக இருக்கும் முகம் எனில் அவள் செய்யும் வாலுத்தனத்தை எல்லாம் பட்டியலிட்டால் அடிஷனல் ஷீட் தான் வாங்க வேண்டும் .அப்படி ஒரு வாயாடி வாலு .ஆதலால் அவள் அந்த குரூப்பின் செல்ல பிள்ளையாக மாறிப்போக திவ்யாவிற்கு favourite ஆகவும் மாறிப்போனால் ஒரே நாளில் .அன்றைய நாளும் முடிவிற்கு வர அனைவரும் தத்தம் விடுதிகளை நோக்கி பயணித்தனர் .
மூவரும் ஆபிசில் கொடுக்கப்பட்ட பேருந்தில் ஏற அவசர அவசரமாக திவ்யாவும் வந்து ஏறினாள்.ஏறியவள் ஜான்வியின் அருகில் இருந்த காலி சீட்டில் அமர்ந்து கொண்டாள் .அவளிற்கு cab வழங்கப்பட்டிருந்தது .என் இவள் இங்கு ஏறுகிறாள் என்று குழப்பமாக ஜான்வி பார்க்க திவ்யாவோ அவளை நோக்கி புன்னகைத்தவள் காதில் ear phoneனை மாட்டிக்கொள்ள ஜான்வியும் ஜன்னல் பக்கம் ஆர்வமாய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அதன் பின் அவர்கள் மூவரும் இறங்குமிடமும் வந்து விட திவ்யாவும் அங்கு இறங்கிக்கொண்டாள் .ஜான்வியும் ஜீவிதாவும் தங்கி இருந்த விடுதிக்கு அப்படியே பின் பக்கம் அமைந்திருந்தது ஒரு மேன்ஷன்.அங்கே சென்று கொண்டிருந்தாள் திவ்யா .வெளியே நின்றவள் கௌதமிற்கு அழைப்பு விடுத்து அவனை வர சொல்ல அந்த மாலை வேளையில் நண்பர்கள் இருவரும் அந்த areavil நடக்க துவங்கினர் .
திவ்யா"என்னடா ரூம்லாம் புடிச்சிருக்கா ?"என்க
அவனோ "ஹான் நல்லா இருக்கு திவி economicallaavum இருக்கு "என்க
திவ்யா "ம்ம் அப்போ சரி அப்பா அம்மா கிட்ட பேசிட்டியா ?"என்க
அவனோ "ம்ம் பேசிட்டேன் "என்றதோடு முடித்துக்கொண்டான் .என்னதான் நெருங்கிய தோழியாய் இருந்தாலும் தனது குடும்ப விஷயங்களை பற்றி திவ்யாவிடம் பேச ஏனோ கௌதமிற்கு விருப்பம் இருந்ததில்லை .ஆதலால் தனது தாய் தன்னிடம் காட்டும் ஒதுக்கத்தையும் தான் தனது தாயிடம் காட்டும் ஒதுக்கத்தையும் மறைத்து விடுவான் .
இருவரும் பேசிக்கொண்டே வர அங்கிருந்த ஒரு சற்று பெரிய அளவிலான பேக்கரி முன் நின்ற திவ்யா "கெளதம் இங்க லெமன் டீ சூப்பராக இருக்கும் வாயேன் குடுச்சுட்டே பேசலாம் "என்று கூறி உள்ளே அழைத்து செல்ல
அவனும் தலை அசைத்தவன் "எங்கெங்கே நல்ல சோறு கிடைக்கும்னு மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சுக்க "என்று தலையில் அடித்தவாறு அவளை பின் தொடர்ந்தான் அவன் .அவர்கள் இருவரும் ஒரு இருவர் அமரும் tabelil கெளதம் மற்ற நாற்காலிகள் புறமும் திவ்யா வாசலை நோக்கிய புறமும் அமர்ந்து கதை பேசியபடி லெமன் டீ குடித்துக்கொண்டிருந்தனர் .அவள் கூறியதை போல் லெமன் டீ மிகவும் நன்றாக இருந்தது அங்கே .
கெளதம் "இன்னிக்கு உன் ஒர்க் எப்படி போச்சு ?"என்க
அவளோ "இன்னைக்கு புது பசங்க join ஆய்ருந்தாங்க டா ட்ரைனிங் periodla .நான் தான் ற்றின் பண்ண போறேன் .என் டீம்ல பத்து பேரு அதுல ஜான்வினு ஒரு பொண்ணு டா .பாக்க தான் பாவமா இருந்தா சரியான வாலு .வாய தெரிந்தா மூடாம பேசுறா .நா அவ்ளோ சீக்ரம் யாரோடயும் attach ஆக மாட்டேன் உனக்கே தெரியும்ல நானே அவளை பாத்த ரெண்டு மணி நேரத்துல அவ்ளோ அட்டாச் ஆயிட்டேன் அவ கிட்ட "என்க
கௌதமோ வழக்கம் போல் ஆர்வமில்லாமல்" ஓஹ்" என்றான்
.பேசிக்கொண்டிருந்த திவ்யா திடீரென்று பின் பக்கம் பார்த்தவள் முகம் மலர "சொல்லிகிட்டே இருந்தேன் வந்துட்டா பாரு .அந்த எல்லோ கலர் சுடி டாப் தான் ஜான்வி "என்க அவனோ பின்னே திரும்பி பார்க்க அவன் காலையில் கண்ட அதே பெண் மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற பூக்கள் தெளித்தவாறு இருந்த சுடி டாப் மற்றும் கருப்பு லெக்கின்ஸில் தோள் வரை புரண்டிருந்த முடிகளில் ஒன்றிரண்டு முன்னே வந்து வந்து விழ ஆற்றை ஊதியவாறு தனது இரு நண்பர்களுடன் பேசியபடி வந்துக்கொண்டிருந்தாள்.அவனின் மனமோ காலையில் அவன் ரயில்வே ஸ்டேஷனின் வெளியே பலூன் வாங்கிக்கொண்டிருந்த அவளின் பிம்பத்தை கண் முன் கொணர காரணமில்லாமல் அவன் இதழ்கள் ஏனோ புன்னகையில் விரிந்தது
அவள் கண்கள் பேசும் பாஷையில் கட்டுண்டிருந்தவன் இதழ்கள் மேலும் விரிய அதன் பின்னே உணர்ந்தான் பேசி பழகி இராத பெண்ணை இத்தனை நேரமாய் தான் பார்த்துக்கொண்டிருப்பதை (ஒரு ஒரு நிமிஷம் தான்பா இருக்கும் ).
மூவரும் உள்ள வந்ததும் சென்று லெமன் டீ ஆர்டர் சொல்ல திவ்யாவோ அதே நேரம் தனக்கு ஏதோ முக்கியமான கால் வந்ததால் தான் கிளம்ப வேண்டும் என்று கூறி கிளம்பினாள் .திவ்யா "கெளதம் அம்மா ஏதோ urgentaa கூப்பிடுறாங்கடா நா கெளம்பனும் நீ கெளம்புறியா ?என்க
அவனோ ஏதோ நினைத்தவன் "இல்ல திவி நா கொஞ்ச நேரம் நடந்துக்குட்டு அப்ரோமா போய்க்குறேன்"என்று கூற
அவளோ இருந்த அவசரத்தில் "சரிடா டேக் கேர் "என்றவள் cab பில் ஏறி சென்று விட்டால் .அவள் சென்றதும் மீண்டும் அந்த கடைக்குள் வந்தவன் அந்த மூவரும் அமர்ந்திருந்த tabelirku எதிர்த்த tabelil ஜான்வியை பார்த்தவாறு அமர்ந்தவன் இன்னொரு லெமன் டீயை ஆர்டர் செய்து குடிப்பதை போல் பாசாங்கு செய்தபடி அவர்கள் பேசுவதை கவனிக்க துடங்கினேன் .
மூவரும் இல்லாத குட்டி கலாட்டாக்களை எல்லாம் பண்ணியபடி டீயை அருந்த ஜான்வியோ திடீரென எவனையோ பார்த்தவள் தனக்குள்ளே சிரிக்க ஆரம்பித்தாள் .அங்கே கௌதமும் திரும்பி பார்க்க ஒரு காலேஜ் செல்லும் வயதில் இருந்த ஒருவன் தலையில் இருந்த அனைத்து முடியையும் சுத்தமாக மொட்டை போல் எடுத்து விட்டு ஒரே ஒரு இடத்தில் சற்று வட்டமாய் கொஞ்சம் ட்ரிம் செய்ததை போல் முடியை அவனது அதன் நடுவிலிருந்து குடும்பி போல் முடியை வளர்த்து வைத்திருந்தான் .
அதை பார்த்த ஜான்வியோ பிரவீனின் கையை சுரண்டியவள் "டேய்ய் மண்டகசாயம் "என்க
அவனோ "என்ன "என்பதை போல் டீயை குடித்துக்கொண்டே பார்க்க
அவளோ அவனை சுட்டி காட்டியவள் "சின்ன சின்ன ஆசை அவன் குடும்பியை புடுச்சு இழுக்க ஆசை "என்று பாட கௌதமிற்கோ குபீரென்று சிரிப்பு வந்து விட்டது அவள் பாடிய தோரணையில் .
ப்ரவீனா குடித்துக்கொண்டிருந்த டீயை ஜீவிதாவின் முகத்திலேயே துப்பியவன் "ஏன் டி வாய வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா "என்க
அவன் தலையிலேயே பட்டென்று தட்டினால் ஜீவிதா தன் முகத்தை துடைத்தபடி "இப்போ நா face wash பண்ணி விடுன்னு கேட்டேனா டா "என்க
ஜான்வியோ நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டாள் பிரவீனின் சந்தோஷமா என்பதை போன்ற பார்வையில் .
இவ்வாறு ஒரு லெமன் டீயை ஒரு மணி நேரமாய் கலாட்டா செய்தே குடித்தவர்கள் வெளியே வர அங்கோ மழை சாரலடிக்க ஆரம்பித்து இருந்தது .அனைத்து பெண்களிற்கு மழை பிடிப்பதை போல் இவளும் அப்படி ரோட்டில் இறங்கி ஆடுவாளோ என்று நினைத்திருந்த கௌதமிற்கு நேரெதிராய் மழை விழுவதை சுழித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்வி .
ஜான்வி "ஏன் டி இந்த மழை இப்போ தான் வரணுமா "என்க
ஜீவிதா "அடியே அரை அடி அதென்ன சொல்லி வச்சுக்கிட்டா வருது ?எல்லாத்துக்கும் மழை பிடிக்கும்னா இவ மட்டும் விதி விளக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நின்னதும் போகலாம் "என்று நினைத்து மூவரும் நிற்க மழையோ வெளுத்து வாங்க துவங்கியது .
பொறுமை இழந்தவள் "இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல ".என்று அவள் கூற ஜீவிதாவும் ப்ரவீனுமோ என்ன செய்ய போகிறாள் என்று பார்க்க அவளோ" ஒன் டூ த்ரீ" என்று கூறியவள் "ஓடிடு டா கைபுள்ள என்று சத்ததுடன் அந்த கடையில் இருந்து ஓட துவங்கி விட்டாள்.
ஜீவிதாவும் ப்ரவீனுமோ தலையில் அடித்துக்கொண்டவர்கள் "அட அரை அடி பைத்தியமே "என்று கூறி அவர்களும் பின்னோடே ஓட அவள் செய்கையில் அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான் கெளதம் .
கொட்டும் மழையில் இறங்கி நடந்தவன் இலக்கில்லா சிந்தனைகளோடு முகத்தில் உறைந்த புன்னகையோடும் மேன்ஷனிற்குள் வந்தவன் பின் நனைந்த தன் உடைகளை மாற்றி விட்டு கண்ணாடியின் முன் நின்று தன் தலையை துவட்டிக்கொண்டிருக்க கண்ணாடியில் திடீரென அவள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த பிம்பம் தோன்றி மறைவதை போல் ஒரு மாயையை ஏற்படுத்த தன் தலையில் தானே தட்டிக்கொண்டவனின் வாயோ தன்னால் முணுமுணுத்தது குட்டச்சி என்று .
இவளோ உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடி வந்து உடையை மாற்றியவள் அதற்குள் ஹச்சு ஹச்சென்று தும்ம ஆரம்பித்து விட்டாள் .ஜீவிதாவோயிடம் திரும்பியவள் "ஏன் ஜீவி தும்முன யாரோ நெனைக்குறாங்கனு சொல்லுவாங்கல்ல என்ன யாரு நெனைக்க போறா ?"என்று நாடியில் ஒரு விரலை தட்டியவாறு யோசிக்க
ஜீவிதாவோ அவள் தலையிலேயே கொட்டியவள்"வயசாச்சு இருபத்தி ஒன்னு ஆனா இன்னும் எல் கே கி புள்ள மாறியே இரு தலையை ஒழுங்கா தொவட்டாம இருந்த தும்மல் தான் வரும் "என்று அவள் அருகில் வந்தவள் அவள் தலையை துவட்ட ஆரம்பிக்க அவள் துவட்டும்போது பாதியிலேயே அவள் இடுப்பை கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்து விட்டாள் ஜான்வி .
அவளை கண்டு சிரித்தவள் "வளரவே மாட்டடி நீ "என்று அவளை நேராய் படுக்க வைத்தவள் தனது படுக்கையில் சென்று அமர்ந்தவள் பிரவீனிடம் அழைப்பு விடுத்தது ஒழுங்காய் தலையை துவட்ட கூறிவிட்டு தனது மொபைலில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டாள் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top