28
தன் தலையில் இடி இறங்கியதை போல் உணர்ந்தவள் கன்னத்தில் கண்ணீர் வஞ்சனையின்றி வழிந்தோட அதை துடைக்கக் கூட மனமில்லாமல் தழுதழுத்த குரலில் மீண்டும் வினவினாள் "வெ... விளையாடாத கெளதம் நீ என்ன லவ் பண்ற எனக்கு தெரியும் "என்று கூற
அவனோ ஏளனமாய் "நா சொன்னேனா ?"என்று கேட்டான் .அவனின் கேள்விக்கு பேச்சற்று அமர்ந்தாள் ஜான்வி ஆம் அவன் ஒரு நாளும் கூறியதில்லையே அவளை காதலிப்பதாக .அப்படியென்றால் அவனின் செய்கைகள் ,அவனின் பார்வைகள் அனைத்தையும் நானே எனக்கு சாதகமாய் நினைத்துக்கொண்டேனா ?உண்மையில் அவன் மனதில் எனக்கு இடமே இல்லையா?என்று நினைத்தவள் தொண்டைக்குழியில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டு வருவேனா என்று அடம் பிடித்தது .இருந்தும் மனமோ இல்லை அவன் எதற்கோ நடிக்கிறான் பொய் கூறுகிறான் என்று கூற அவள் அடுத்து கேள்விகளை தொடுத்தாள் "எந்த பொண்ணு கிட்டயம் உரிமை எடுத்து பேசாதவன் திவ்ய கிட்ட கூட எதையும் ஷேர் பண்ணாதவன் என்கிட்டே எல்லாத்தையும் சொன்னியே எதுக்கு?ஒரு நாள் கூப்பிடலேன்னாலும் கோவம் வந்து கத்துவியே அது எதுக்கு ?அன்னைக்கு கூட மாப்ள பாக்க போறாங்கன்னு சொன்னப்போ அந்த கத்து கத்துணியே அது எதுக்கு ?"என்று கேட்க
அவனோ "சிம்பிள் உன்னோட பேசுனா என்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் என்ன விட்டு போற மாறி இருக்கும் அதான் ,and அன்னைக்கு மாப்ள பாக்குறாங்கனு நீ சொன்னப்போ உனக்கு விருப்பம் இல்லனு சொன்ன .எந்த நல்ல நண்பனும் ஒரு frienduku புடிக்காத விஷயம் அவ மேல திணிச்சாங்கன்னா கோவம் தான் படுவான் .நீ என்ன பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் நல்ல friend அதான் உன்கிட்ட சொன்னேன் ."என்று கூற
அவளோ அவன் பதிலில் கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் வழிந்தோட இறுதி முயற்சியாய் முயன்று வார்த்தையை தேடி பிடித்தவள் "அப் .....அப்போ எதுக்கு கெளதம் அன்னைக்கு மண்டபத்துல என்ன hug பண்ண ?எதுக்கு என் நெத்தில kiss பண்ண ?"என்று கேட்க
அவனோ "ஓஹ் common ஜானு இன்னும் 1960s லேயே இருக்க .நெத்தில தான கிஸ் பண்ணேன் ?நீ என்கிட்டே பேசாம நழுவி ஓடிக்கிட்டே இருந்த அதனால உன்ன பிடிச்சு வைக்குறதுக்காக உன்ன hug பண்ணேன் அண்ட் அன்னைக்கு பார்க்க கொஞ்சம் அழகா இருந்த அதான் தோணுச்சு நெத்தில கிஸ் பண்ணேன் அதுக்கு நீ இப்டி நினைப்பனு கொஞ்சம் கூட நா எதிர் பார்க்கல ஜான்வி "என்று கூற
அவளோ விரக்தியாய் சிரித்தவள் "யார் அழகா இருந்தாலும் கிஸ் பண்ணிருவியா கெளதம் ?"என்று கேட்க
அவனோ அப்புறம் கோபத்தில் சிவந்தவன் "ஜானு "என்று உறுமினான்
என்றும் அவனின் ஜானுவின் என்றும் உருகுபவள் இன்றோ கோபம் கொண்டு வெகுண்டெழுந்தால் "என்ன அப்டி கூப்பிடாத கெளதம் .நான் தான் முட்டாள் உன்னோட பார்வை உன்னோட செய்கை எல்லாத்தையும் பார்த்து நீ என்ன லவ் பண்றனு நெனச்சு மனசுல ஆசையா வளர்த்த நான் தான் முட்டாள்.ஒவ்வொரு தடவை நீ அன்புக்காக ஏங்கி உடைஞ்சு போகுறப்போவும் உனக்காக நான் எப்போவும் இருக்கணும்னு நெனச்சு நீ எவ்ளோ கோபப்பட்டாலும் அமைதியா வாங்கிக்கிட்டேனே நான் தான் முட்டாள்.இது எல்லாம் நீ என்மேல எடுத்துக்கிட்டா உரிமைன்னு நெனச்சேன்டா ஆனா கடைசி வரைக்கும் என்ன நீ ஒரு stress busteraavum ஒரு ஜோக்கர் மாறியும் தான் பாத்துருக்க அப்டினு இன்னைக்கு தான் புரியுது " என்றவள் அவன் அழைப்பில் இருக்கிறான் என்பதையும் மறந்து உடைந்து அழுதாள்.
அவனோ அவளின் அழுகையில் கண்கள் கலங்க இது வரை முயன்று கடுமையாய் பேசியவனால் அவளின் அழுகையை சமாளிக்க முடியவில்லை .தன வாயை கை கொண்டு மூடியவன் கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவனின் கன்னத்தில் வழிந்தோடியது .அழுகையை விழுங்கியவன் பின் முயன்று வரவைத்து கடுமையான குரலில் "சாரி ஜானு ம்ம்ம்.... ஜான்வி நா இப்டி எல்லாம் உனக்கு எண்ணங்கள் விதைக்கிற அளவுக்கு நடந்துருப்பேனு நினைக்கல "என்று கூற
அவளோ கண்ணீரை அழுத்தி துடைத்தவள் "நம்புறேன் கெளதம் ஒரு kercheifah சாக்கா வச்சு என்ன பாக்க பதினஞ்சு மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்த,டெய்லி நான் பேசலேனா என்னோட சண்டை போட்ட , நெனச்சப்போ எல்லாம் வீடியோ கால் பண்ணி பேசாம என்ன பாத்துட்டு மட்டும் cut பண்ண,மாப்ள பாக்குறாங்கனு சொன்னப்போ பொசஸிவ் ஆகி கத்துனா நீ என்ன friendaah மட்டும் தான் பாத்த அப்டினு நான் நம்புறேன்."என்று அந்த friendil அழுத்தம் கொடுத்து கூறியவள் பின் " .ஆனா நீ என்ன ஏமாத்திருக்காதா நெனச்சு உன்ன தாண்ட ஏமாத்திக்குற "என்று கூறியவள் பின் கண்ணைஅழுத்த துடைத்து "ஓகே கெளதம் சந்தோஷமான விஷயம் எனக்கு மாப்ள பாக்குறாங்க கூடிய சீக்ரம் கல்யாணம் நடக்கும் கண்டிப்பா வந்துரு "என்றவள் இணைப்பை துண்டித்து விட்டாள்.
அவள் பேச பேச கைகளை இறுக்கி மூடி அழுகையை கட்டுப்படுத்தியவன் அவள் இணைப்பை துண்டித்த அடுத்த நொடி "ஜானு" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினான் .அமர்ந்திருந்த இடத்த்தை விட்டு எழுந்து அந்த அறையில் நடந்தவன் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க வழியில்லாமல் தலைமுடியை அழுத்த கோதி அவள் பெயரையே இடைவிடாமல் உச்சரித்தவன் சுவற்றை தன் கையில் ரத்தம் வரும் வரை குத்தினான் .உடல் வலியை விட மனவலி அவனை வாட்டி எடுத்தது .நினைவுகளோ அன்று அந்த மண்டபத்தில் நடந்ததை எண்ணிப்பார்த்தது .
தன்னவளின் நெற்றியில் தன்னையும் மீறி முத்தமிட்டவன் அவள் தப்பி ஓடவும் சிரிப்புடன் வெண்ணிலவை ரசித்தவாறு கைப்பிடி சுவற்றில் கைவைத்து நின்றான் அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க.மனதிலோ அவள் நிறைந்திருந்தாள். ஒரு வித மோனநிலையில் நின்றிருந்தவனின் சிந்தனைகளை தடை செய்தது பின்னே கேட்ட"ஒரு நிமிஷம் உன் கிட்ட பேசணும்"என்ற ஒரு ஆணின் குரல் .
யாரது என்று திரும்பியவனின் கண்ணில் பட்டது என்னவோ அவனை ஆராய்ச்சியோடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டிருந்த ஜான்வியின் தந்தை தான் .அவரை பார்த்து சிரித்தவன் "சொல்லுங்க அங்கிள் "என்று கூற
அவரோ அலட்சியமாய் அவனை பார்த்தவன் "எப்படி டா?இத்தனை வருஷமா அப்பா அம்மா பேச்சுக்கு ஒரு சொல் மீறாம நடந்த என் பொண்ண உன் வலையில விழ வச்ச ?இதுக்காகவே வளர்த்து விடுவார்களோ உன் வீட்டுல ?"என்று கேட்க
அவனோ அவர் கேட்ட தோரணையில் கோபம் மூண்டாலும் தன் ஜானுவின் தந்தை என்பதால் அமைதி காத்தவன் கையை கட்டிக்கொண்டு அவரை நேராய் பார்த்தவன் பிசிறின்றி தெளிவாய் "நானே பேசணும்னு நெனச்சேன் நீங்களே ஆரம்பிச்சுடீங்க .நான் உங்க பொண்ண விரும்புறேன் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறேன் "
அவரோ அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தவர்"என் பொண்ண கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு ?"என்று கேட்க
அவனோ அவரை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்து நின்றவன் "நெஞ்சு முழுக்க அவ மேல காதல் இருக்கு ,உழைக்க உடம்புல தெம்பு இருக்கு ,அவ மனசுல எனக்கே எனக்கான காதல் இருக்குது இதுக்கு மேல என்ன வேணும் ?"என்று கேட்க
அவரோ "ஓஒ உழைக்க தெம்பு இருக்கோ அய்யாவோட மாச சம்பளம் என்ன ?"என்று கேட்க
அவனோ சற்று தயங்கியவன் "மு. முப்பதாயிரம்"
அவரோ "அதை கேக்கல emi அதெல்லாம் போக எவ்ளோ ?"என்று கேட்க
அவனோ "இருபத்தி ரெண்டாயிரம் "என்றான்
அவர் "இருபத்தி ரெண்டாயிரம் .... ஹும் சொந்த வீடிருக்கா?"என்று கேட்க
அவனோ இல்லை என்று தலை அசைத்தான்
அவர் "அதுவும் இல்ல சரி விடு உன்ன நாளைக்கே எவனாச்சு கொன்னு போட்டுடான்னு வையேன் உனக்காக கண்ணீர் விட உன் அப்பா அம்மாவாச்சு இருக்காங்களா ?நா உன் வளர்ப்பு அப்பாவை பத்தி கேக்கல"என்று கேட்க அவனோ தலை குனிந்தவாறு இல்லை என்றான் .
அவர் "அதுவும் இல்ல சரி நீ எங்க ஜாதியா ?"என்று கேட்க அவனோ இல்லை என்று தலை அசைத்தான் .
அவர் "கிளிஞ்சது .ஒரு சொந்த வீடு இல்ல ,ஒரு சொல்லிக்குற மாறி சம்பளம் இல்ல ,சொந்த பந்தம்னு ஒரு நாதி இல்ல நீ எல்லாம் எந்த தைரியத்துல டா லவ் பண்ற ?என் பொண்ணு இன்னைக்கு போட்டுருக்குற ட்ரெஸ்ஸோட வேலை தெரியுமா ?உன் சம்பளத்தை விட ஐயாயிரம் ரூபா அதிகம் .அவளை நாங்க அவளோட விருப்பத்துக்காக மட்டும் தான் வேலைக்கு அனுப்புறோம் அவ நெனச்சா lifelong கால்மேல கால் போட்டுக்கிட்டு உக்காந்து சாப்பிடலாம் .உன்னால என்ன சந்தோஷத்தை குடுக்க முடியும் என் பொண்ணுக்கு ?"என்று கேட்க
அவனோ "government எக்ஸாம் எழுதினேன் அங்கிள் இந்த தடவை செலக்ட் ஆகல நெஸ்ட் டைம் கண்டிப்பா செலக்ட் ஆய்ருவேன் செட்டில் ஆய்ருவேன் அங்கிள் நல்லா பாத்துப்பேன் உங்க பொண்ண ப்ளீஸ் "என்று அவனின் இயல்பு குணத்தை மறந்து முதல் முறை ஒருவரிடம் கெஞ்சினான் கெளதம் தன்னவளை தன்னிடம் கொடுத்துவிடும்படி .
அவரோ"இங்க பைனான்சியல் ஸ்டேட்டஸ் மட்டும் நான் பாக்கல கெளதம் ,உனக்கு என் பொண்ண கட்டிக்குடுக்குறதால societyla என் மானம் போய்டும்,உறவுகள்ல விரிசல் வரும் இது எல்லாம் விட என்ன ஒத்துக்க சொல்றியே உன்ன வளர்த்த உன் அப்பா இதுக்கு ஒத்துக்குவாரா ?"என்று கேட்க கௌதமின் மனம் இடித்துரைத்து இல்லை என்று .
அவன் மௌனமாய் இருக்க அவனது மௌனத்தை சாதகமாக்கியவர்"இது என்னைக்கும் workout ஆகாது கெளதம் .என் பொண்ணு என்ன மீறி வந்தாலும் கண்டிப்பா ஒரு நாள் feel பண்ணுவா ஏன்னா பல வருஷம் கழிச்சு பொறந்த குழந்தை அவ அவளை அப்டி வளர்த்திருக்கேன் ஒரு கஷ்டம் தெரியாம.அவளை இது வரைக்கும் சமயக்கட்டுல ஒரு வேலை பார்க்க விட்டதில்லை தெரியுமா ?எப்போவாவது டி போடுறதோட சேரி அதுவும் அவ தம்பிக்காக போடுவா.அவ ஏன் இத்தனை உறவுகளை விட்டுட்டு உன் பின்னாடி வரனும்? அதுக்கு பெட்டெர் நீ அவளை விட்டு போய்டு "என்று கூற அவனோ அவரை அடிபட்ட பார்வை பார்த்தான்.
அவன் தோளில் கை வைத்து அழுத்தியவர்"இதை நான் மெரட்டுறதா நெனச்சாலும் சரி என் பொண்ணோட நல்ல வாழ்க்கைக்காக உன்கிட்ட கெஞ்சுறேன்னு நெனச்சாலும் சரி அவள் வாழ்க்கையை விட்டு போய்டு கெளதம் அது தான் அவளுக்கும் நல்லது உனக்கும் நல்லது ."என்று கூற
அவனோ "உங்க பொண்ணால என்ன மறக்க முடியும்னு நெனைக்குறீங்களா uncle ?"என்று கேட்க
அவரோ சிரித்தவர் "நான் மறக்க வச்சுருவேன் அதை பத்தி நீ கவலைப்படாத இதையும் மீறி நீ என் பொண்ணு வாழ்க்கைல குறுக்கிட நெனச்சா ..... கௌரவத்துக்காக எதை வேணாலும் செய்வேன் என் மகளை கொலை கூட செய்வேன் புருஞ்சுருக்கும்னு நினைக்குறேன் "என்றவர் அவ்விடம் விட்டு நகர கௌதமோ தன மனதில் ஆசை ஆசையாய் அவன் கட்டி வைத்த காதல் கோட்டை சரிந்து விழுவதை உணர்ந்தவன் நிற்கவும் முடியாமல் அவ்விடத்தில் அமர்ந்து விட்டான் .
அவனிற்கு கத்தி அழவேண்டும் போல் இருந்தது ,அனைவரையும் எதிர்த்து அவனவளை திருமணம் செய்திருப்பான் ஆனால் அவர் அவளின் உயிரையும் பறிப்பேனே ஒழிய அவனிற்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்றல்லவா கூறுகிறார் .ஆவலுடன் அவனின் வாழ்வு என்றும் கானல் நீர் தானா என்று நினைத்து நினைத்து மருகியவன் ஒரு முடிவெடுத்தவனாய் கீழே வந்தான் .அவன் மனதில் உதித்ததெல்லாம் ஒரு எண்ணம் தான் சேர்ந்திருந்தால் தான் காதலா ?அவளை பிரிந்து அவள் இன்பத்தை கண்ணார கண்டாலே தன் வாழ்விற்கும் போதும் என்று நினைத்தவன் அவளிற்காக அவளையே இழக்க துணிந்தான் .ஆனால் ஏனோ அவளிற்காக அவளை பிரிந்தவன் அவனின்றி அவள் உயிரற்ற கூடென்று நினைக்க மறுத்தான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top