27
கண்களில் துளிர்ந்த கண்ணீர் இப்பொழுதோ எப்பொழுதோ விழுந்து விடுவேன் என்று அச்சுறுத்த அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சென்று அமர்ந்தான் கெளதம் .தலை பாரமாக இருக்க தலையை கையில் தாங்கி அமர்ந்தவனை தோளில் யாரோ தட்டும் உணர்ச்சியே நினைவுக்கு கொண்டு வந்தது .
தோளில் யாரோ தட்ட நிமிர்ந்து பார்க்க திவ்ய நின்றிருந்தாள் .திவ்யா அவனை பார்த்து சிரித்தவள் "ஏய்ய் பக்கி ஆதி அண்ணா வந்ததுல இருந்து மேலயே வர மாட்டேங்குறானு அங்க திட்டிகிட்டு ஓருக்காரு நீ என்ன இங்க கவுந்து உக்காந்துருக்க ?"என்று கேட்க அவனோ மௌனத்தையே பரிசாய் கொடுத்தான் .
அவள் அவனின் தோரணையில் துணுக்குற்றவள் சற்று கடுமையான குரலில் "என்னாச்சுடா?ஏதும் பிரச்னையா ?"என்று கேட்க அவனோ உதட்டளவில் புன்னகைத்து இல்லை என்று தலை அசைத்தவன் அவளோடு மேடைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் .அதன் பின் அன்று ஜான்வி அவனிடம் பேச எத்தனையோ முறை முயற்சி செய்தும் அவன் அவளிற்கு பிடி கொடுக்க விலை அவளிடமிருந்து நழுவிக்கொண்டே சென்றான் .
திருமண வேலையில் பிஸியாக இருக்கிறான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள் அதன் பின் தோழிகள் கூட்டம் அவளை வேறு எதையும் சிந்திக்க விடாமல் எய்ய அவனின் கண்கள் அவளையே ஒரு வித ஏக்கத்துடன் தொடர்வதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ,எனில் அந்த ஏக்கப்பார்வையை இரு ஜோடி கண்கள் கண்டு கொண்டது .ஒரு ஜோடிக் கண்கள் குழப்பமாக மறு ஜோடி கண்களோ இன்பமாக . அன்று வரவேற்பு முடிந்து இரவு மொட்டைமாடியில் ஆதித்யாவும் மற்ற நண்பர்களும் கூடினர் bachelor பார்ட்டிக்காக .
அவனது கல்லூரி நண்பர்கள் ,வேலையில் இருந்த நண்பர்கள் பள்ளி நண்பர்கள் என அனைவரும் சுற்றி அமர்ந்து ஆளுக்கொரு போட்டேலுடன் குடித்து கும்மாளமிட்டபடி அமர்ந்திருக்க ஆதித்யாவோ நாளை காலை திருமணம் இருப்பதால் குடியை தொடாமல் cokeudan அமர்ந்து இருந்தான் .
ஆதித்யா அங்கே தானும் ஒரு கையில் பீருடன் அமர்ந்திருந்த பிரவீனை பார்த்தவன் "கெளதம் எங்க பிரவீன் ?"என்று கேட்க
அவனோ "தெரியல ப்ரோ சாப்பிட்டு ரூம்க்கு போய்ட்டாருனு நினைக்குறேன் "என்று கூற
அவனோ "இன்னைக்கு என்ன தூக்கம் வேண்டி கெடக்கு அவனுக்கு ?அவனை இழுத்துட்டு வாங்க "என்று கூற அவனும் சரி என்று எழுந்தவன் கெளதம் இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்ட அது தன்னாலே திறந்து கொண்டது .கட்டிலில் அமர்ந்திருந்தவர் தலையை கையால் தாங்கிப் பிடித்து அமர்ந்திருக்க பிரவீனோ அவன் முன் வந்தவன் "கெளதம் ப்ரோ "என்றழைக்க அவன் அழைப்பில் சுயநினைவடைந்தவன் என்ன என்பதை போல் பார்த்தான் கண்கள் ரத்த சிகப்பாய் இருந்து கலங்கி இருந்தது .
அவன் கலங்கிய கண்களை பார்த்து குழம்பியவன் "என்னாச்சு ப்ரோ கண்ணு கலங்கி இருக்கு ?"என்று கேட்க
அவனோ வேக வேகமாய் கண்ணை துடைத்தவன் "ஒண்ணுமில்ல பிரவீன் கண்ணுல dust விழுந்துருச்சு சொல்லுங்க எதுக்கு கூப்டீங்க ?"என்று கேட்க
அவனோ "ஆதி ப்ரோ மொட்டை மாடியில bachelors பார்ட்டி வைக்குறாரு ப்ரோ உங்கள கூப்பிட சொன்னாரு "என்று கூற அவனிற்கு இப்பொழுது தனியே இருப்பதை விட மற்றவர்களோடு சேர்ந்து இருப்பது நல்லதாக தோன்றிட பிரவீனை நோக்கி தலை அசைத்தவன் அவனோடு மேலே சென்றான் .
அவன் வரவை கண்டதும் சிரித்த ஆதி "எருமை வந்ததும் ஏன் பக்கத்துல நிப்பானு பார்த்த எங்கடா போன நீ ? வா வந்து உக்காரு "என்று கூற அவன் அருகில் அமர்ந்தான் கெளதம் .
ஆதி அவனிடம் ஒரு கோக்கை நீட்டியவன் "இந்தாடா பிடி நீ தான் குடிக்க மாட்டியே "என்று கூற அவனோ கோக்கை தவிர்த்து அங்கிருந்த மற்றொரு மதுபான bottelai எடுத்தவன் சர சரவென்று உள்ளே சரித்துக் கொண்டிருந்தான் .
அவன் குடிப்பதை விழி விரித்து அவனின் கல்லூரி நண்பர்கள் பார்க்க ஆதித்யாவோ உச்சக் கட்ட அதிர்ச்சியில் இருந்தான் .அவனிடம் வேக வேகமாய் பிடுங்கியவன் "டேய்ய் என்னடா ஆச்சு உனக்கு எப்போவும் குடிக்க மாட்ட இப்போ என்னனா full பாட்டில் வோட்காவை எடுத்து குடுச்சுட்டு இருக்க ?"என்று கேட்க அவனோ அவனை நோக்கி வலி நிறைந்த சிரிப்பை சிந்தியவன் மீண்டும் அவனிடமிருந்து அந்த bottelai பிடிங்கி மொத்த மதுபானத்தையும் வாயில் சரித்துவிட்டே நிமிர்ந்தான்.
ஆதி அவன் தோளை தொட்டவன் "என்னடா ?"அவனோ அவனை கட்டிப்பிடித்து அழத் துவங்கி விட்டான் .அவனின் அழுகையின் அர்த்தம் புரியாமல் குழம்பியவன் அவனின் முதுகை நீவிவிட்டபடி இருக்க அவனோ அழுதபடி அவன் தோளிலேயே ஏதோ பிதற்றியபடி தூங்க துவங்கினான் .
அவனை கேள்வியோடு பார்த்தவன் மனதில் ஏராளமான குழப்பங்கள் ."மாலை வந்தபொழுது கூட நன்றாக தானே இருந்தான் திடீரென்று ஏன் இந்த அழுகை ?நான் குடித்தாலே திட்டுபவன் இன்று மடமடவென்று மதுபானத்தை சரித்திருக்கிறானே எதனால் ?"என்று நினைத்தவன் அவன் நன்றாக உறங்க அவனை அறையில் விட்டு விட எழுந்தான் .அங்கே சாப்பிட்டு விட்டு கடைசியாய் ஆதிசேஷன் வந்து சேர அவனை அழைத்தான் ஆதித்யா .
ஆதித்த "சேஷா இங்க வாயேன் "என்றழைக்க சேஷன் என்ன என்று வந்து பார்க்க கெளதம் முழு போதையில் அலறியபடி ஆதியின் தோளில் உறங்கி இருந்தான் .
ஆதித்யா "இவன் செம போதை ஆகிட்டான் இவன ரூம்ல விடணும் ஹெல்ப் பண்ணுறியா ?"என்று கேட்க
சேஷனோ "ஓகே மாமா என் ரூம்ல படுக்க வச்சுக்குறேன் "என்று கூறியவன் ஆதி ஒரு பக்கம் பிடித்துக்கொள்ள தான் ஒரு பக்கம் கௌதமை பிடித்தபடி அறைக்கு அழைத்து சென்றான் .அவன் ஏதோ பிதற்றியபடி வர இருவரும் அவனை இழுத்து வந்து மெத்தையில் போட்டனர் .
ஆதித்யா "கொஞ்சம் பாத்துக்கோ சேஷா முதல் தடவை குடிச்சுருக்கான் எதுக்கு குடுச்சான்னே தெரியல "என்று கூற ஆதிசேஷனும் சிரிப்புடன் "நா பாத்துக்குறேன் மாமா நீங்க போங்க "என்று கூறி அனுப்பி வைத்தான் .
கெளதம் ஏதோ பிதற்றியபடி இருந்தவன் திடீரென்று "ஜானு நா போ....."என்று கூற ஜானு என்று ஜான்வியை தான் கூறுகிறான் என்று உணர்ந்தவன் என்னவாய் இருக்கும் என்று யோசித்தபடி உறங்கி போனான் .அடுத்த நாள் காலையும் அழகாக விடிந்தது
.சூரிய ஒளி கண்ணில் பட்டு தெறிக்க தன்னை யாரோ உலுக்குவதில் கண்களை கஷ்டப்பட்டு திறந்தான் கெளதம் .ஆதி தான் அவனை உலுக்கிக்கொண்டிருந்தான் .அவன் முகத்தை பார்த்ததில் எழுந்தவன் தலை பாரமாய் இருக்க தலையை பிடித்துக் கொண்டான் .ஆதி சேஷன் அவனிடம் ஒரு கோப்பையை நீட்ட அவன் என்ன இது என்பதை போல் பார்த்தான் .
ஆதிசேஷன் "லெமன் ஜூஸ் hangover போய்டும் .இதை குடுச்சுட்டு இந்த டேப்லெட் போட்டுருங்க இப்போ ரெடி ஆகுங்க தடவை ஆச்சு "என்று கூற
அவனும் சிறு தலை அசைப்புடன் "தேங்க்ஸ்" என்றான் .ஆதியும் ஒரு தலை அசைப்புடன் அதை ஏற்றவன் குளித்து வந்து தான் எடுத்து வந்த சந்தன நிற சட்டையையும் நீல நிற ஜங்சயும் அணிந்து கொண்டு வெளி வந்தான் .ஜீவிதா மற்றும் ஆதித்யாவின் திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்க அவனின் கவடனத்தை ஈர்த்தது அவனவளின் கொலுசொலியும் சிரிப்பொலியும் .
அவன் அணிந்த அதே சந்தன நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து அதிக கற்கள் பதித்த புடவையில் , கூந்தலை பின்னி அதில் இருபுறம் தவழும் மல்லிகை பூவுடன் இயற்கையிலேயே ஜொலிக்கும் முகம் கொஞ்சம் செயற்கை அழகையும் சேர்த்து பேரழகாய் ஜொலிக்க அவளை வலி நிறைந்த கண்களோடு பார்த்த கெளதம் சட்டென்று தன் கண்களை திருப்பி கொண்டான் .
அவளும் அவனை கண்டவள் அவனின் முகவாட்டத்தை கண்டு அருகில் வந்தாள் .அவன் முன் வந்து நின்றவள் "என்னாச்சு அத்து உடம்பு முடியலையா முகம் வாட்டமா இருக்கு ?என்று கேட்க
அவனோ அவள் கண்களை தவிர்த்தபடி "ஒண்ணுமில்ல ஜானு... ஜஸ்ட் tiredness தான் "என்று கூற
அவளோ சமாதானம் அடையாமல் "coffee குடிக்குறியா அத்து ?"என்று கேட்க
அவனோ "வேண்டாம் என்று கூறிவிட்டான் .
பின் சடங்குகள் அனைத்தும் நடந்து முடிய மங்கலநாணை தன்னவளின் கழுத்தில் கட்டிய ஆதி ஜீவிதாவை தனது ஜீவனின் ஒரு பாதியாய் ஏற்றுக் கொண்டான் .
அந்த நிகழ்வை மேடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜான்விக்கு அதே இடத்தில் கௌதமும் தானும் இருந்தால் எப்படி இருக்கும் என்று இருவரையும் மணக்கோலத்தில் நினைத்து பார்த்தவள் விழிகள் அடுத்த நிமிடம் கௌதமின் விழிகளை தேடி அதனுடன் கலக்க கௌதமும் அதை தான் நினைத்தான் போலும் எனில் இவள் நினைவிலோ மகிழ்ச்சி அவன் நினைவிலோ வலி .
பின் புகைப்படம் எடுக்க துவங்க சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டவன் ஆதியிடம் "அண்ணா பஸ்ஸுக்கு நேரமாச்சு அண்ணா நா கிளம்புறேன் நாளைக்கு வேளைக்கு போகணும் "என்க
அதியோ "என்னடா சொல்ற சாப்பிட்டாவது போ "என்க
அவனோ "இல்லன்னா தடவை ஆச்சு இன்னும் அரை மணி நேரத்துல பஸ்ஸ்டாண்ட்ல இருக்கணும் "என்று கூற
ஆதியோ முறைத்தவன் "மேடைல இருக்குறேனேன்னு பாக்குறேன் போய் தொலை "என்று கூற கெளதம் தன் பரிசை கொடுத்துவிட்டு வேகவேகமாய் அறைக்கு சென்றவன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டான் .
அவன் கிளம்புவதை பார்த்த ஜான்வி கேள்வியாய் அவன் முன் வந்து நின்றவள் "என்னடா இவ்ளோ சீக்ரம் கெளம்புற ?"
அவனோ "ப்ச் நாளைக்கு வேலைக்கு போகணும் ஜான்வி அதான் கிளம்புறேன்"என்று கூற
அவனின் ஜான்வியில் திகைத்தவள் "என்னடா என் மேல ஏதும் கோவமா ஜான்வினு கூப்டுற ?"என்று கேட்க
அவனோ எரிச்சலாய் "ப்ச் அது தான உன் பேரு இப்போ என்ன பிரச்னை உனக்கு நகரு நேரம் ஆச்சு "
அவளோ அவனை முறைத்தவள் அவனின் கையில் ஒரு பையை கொடுத்தாள்"இதுல தயிர் சாதம் இருக்கு அப்பறோம் ரெண்டு பாக்கெட் பிஸ்கட் இருக்கு ஒழுங்கா சாப்டுரு போய்ட்டு கால் பண்ணு "என்று கூற அவனோ அவளின் அக்கரையில் கண்கள் கரிக்க சரி என்று தலை அசைத்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான் .
நாட்கள் செல்ல ஜீவிதா ஆதித்யாவுடன் சென்னைக்கு சென்றிருக்க பிரவீனிற்கும் ஜான்விக்கும் அவள் இல்லாமல் அலுவலகத்தில் பொழுதை ஓட்டுவது சிரமமாக இருந்தது .ஜீவிதா சென்றது ஒரு புறம் இருந்தால் கௌதமோ ஜான்வியின் அழைப்புகளை மொத்தமாக புறக்கணித்தான்.அவள் ஒரு நாள் அழைக்க வில்லை என்றாலும் கோபம் வந்து திட்டுபவன் இப்பொழுதெல்லாம் அவள் அழைத்தாள் வேலை இருக்கிறது ,இந்த அரசாங்க பரிட்சையில் தேர்ச்சி பெறவில்லை அடுத்த அரசாங்க தேர்விற்கு படிக்கிறேன் என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி அவளை தவிர்த்துக் கொண்டிருந்தான் .
ஒரு மாதம் சென்றிருக்க அன்று ஞாயிறு வீட்டில் இருந்த ஜான்வியின் முன் அவளின் தந்தை நான்கு புகைப்படத்தை வைத்தார் .அவள் கேள்வியாக பார்க்க அவரோ "நல்ல குடும்பம் ஜான்வி இந்த நாலு வரன்ல எது புடுச்சுருக்குனு சொல்லு "என்று கூற
அவளோ "அப்பா இப்போ எதுக்கு நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேனே "என்க
அவரோ "இன்னும் எத்தனை நாள் ஜான்வி ?உன் friend ஜீவிதா கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டா உனக்கும் இருபத்தி ரெண்டு ஆயிருச்சு "என்று கூற
அவளோ இனியும் விட்டு வைக்க கூடாது கௌதமிடம் பேச வேண்டும் என்று நினைத்தவள் அவரிடம் "எனக்கு ரெண்டு நாள் time தாங்க அப்பா "என்று கூறியவள் அறைக்கு சென்று உடனே கௌதமிற்கு அழைத்தாள் .
கௌதமோ அங்கு ஆளே மாறி இருந்தான் .கண்ணை சுற்றி கருவளையம் ,தாடி ,ஒளியிழந்து முகம் என்று இருந்தவன் ஜான்வியின் அழைப்பை பார்த்து எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் பின் காதில் வைக்க ஜான்வியோ "அத்து நீ உடனே வீட்ல வந்து பேசு ட "என்க
அவனோ குழப்பமாய் "என்னனு பேசணும் ?"என்று கேட்க
ஜான்வியோ தலையில் அடித்தவள் "மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க டா இந்த தடவை கண்டிப்பா time தர முடியாதுனு சொல்லிட்டாங்க "
கெளதம் "அதுக்கு நான் என்ன பேசணும் ?"என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க ஜான்வியோ ஒரு நொடி ஸ்தம்பித்தாள் .
ஜான்வி சற்று தடுமாறிய குரலில் "நம்ம லவ் பத்தி தான் கெளதம் "என்று கூற
அவனோ பெரும் குரலில் சிரித்தவன் "நம்ம லவ் ஆ என்ன ஜான்வி உளறுற நீயும் நானும் எப்போ லவ் பண்ணோம் ?"என்று கேட்க ஜான்வி தன் தலையில் இடியே இறங்கியதை போன்று சிலையென சமைந்தாள் .கண்களில் அனுமதியின்றி கண்ணீர் வழிய என்ன சொல்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள் ஜான்வி .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top