26
அடுத்த இரண்டு நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க கவுதம் அதன் பின் ஜான்வியை அழைக்கவே இல்லை .ஒவ்வொரு முறை அலை பேசி சிணுங்கும் பொழுதும் அவன் அழைத்திருப்பானோ என்று எண்ணி ஆர்வத்துடன் பார்ப்பவளிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் .அன்று இரவு வரவேற்பு என்றிருக்க அடுத்த நாள் காலையில் திருமணம் இருந்தது .
திருமணம் கோவையிலேயே வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்க.
ஜீவிதாவிற்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக பிரவீன் மற்றும் ஜான்வி ஆதித்யாவுடன் இணைந்து ஒரு சிறிய நடனம் ஆடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.ஆதவன் பகலெல்லாம் உலகெங்கும் தனது ஒளியை பரப்பி அயர்ந்து ஆழியவள் மடி சேர அங்கே இரவை பகளாக்க முயலும் வண்ண விளக்கொளியிலும் பௌர்ணமி நிலவொளியிலும் அந்த மண்டபமே மூழ்கியிருந்தது .
வேலை பளு காரணமாக மாலை ஆறு மணிக்கு கிட்ட தட்ட வரவேற்பு துவங்கும் நேரம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்த கெளதம் நேராய் மண்டபத்திற்கு செல்ல வாசலில் நின்றிருந்த பிரவீன் அவனை அடையாளம் கண்டு கொண்டவன் புன்னகையுடன் "வாங்க ப்ரோ என்ன இவ்ளோ லேட்டா ?"என்று கேட்க
அவனோ சிரிப்புடன் "கொஞ்சம் வேலை ஜாஸ்தி பிரவீன் அதான் "என்று கூற அவன் தோளில் பையுடன் களைப்பாக இருந்த முகத்தையும் மீறி அவன் கண்களில் இருந்த தேடலையும் கண்டு கொண்டான் .கெளதம் பேசுவது ப்ரவீனுடனாய் இருந்தாலும் கண்கள் என்னவோ அவனின் ஜானுவை காண தான் அலைந்து கொண்டிருந்தது.அவன் தவிப்பை உணர்ந்து சிரித்த பிரவீன் "வாங்க ப்ரோ ரூம் காட்டுறேன் அங்க fresh ஆகி சீக்கிரம் கீழ வாங்க "என்று கூறி மேலே அழைத்து சென்றான் .
அவன் அழைத்து செல்லுகையிலேயே யாரோ கீழே அவனை அழைக்க கௌதமிடம் திரும்பியவன் "ப்ரோ செகண்ட் ரூம்ல போய் change ஆகிக்கோங்க "என்று கூறி விட்டு சென்று விட இடது புறம் இருந்த இரண்டாவது அறையை திறக்க அங்கே அவன் முன் சட்டை இன்றி நின்றுகொண்டிருந்தான் ஆதி சேஷன்.
கௌதம் அவனை நோக்கி புன்னகைத்தவன் "இங்க change பண்ணிக்கவா ப்ரோ ?"என்று கேட்க
அவனோ முகம் நிறைந்த புன்னகையுடன் "பண்ணிக்கோங்க "என்று கூறினான் சட்டையை மாட்டியபடி .
அவனை கண்டு புன்னகைத்த கௌதம் கை நீட்டி "நான் கௌதம் ஆதித்யாவோட friend .நீங்க ?"என்று கேட்க
அவன் ஏதோ கூற வரும் முன் அங்கே கதவு முன்னறிவிப்பின்றி திறக்கப்பட குரல் மட்டும் வந்தது "எரும மாடு ஆதி எவ்ளோ நேரம் டா ரெடி ஆவ சீக்ரம் கீழ பொய் கவ...."என்று கூறிக்கொண்டே சென்றவள் அப்பொழுதே நிமிர்ந்து பார்க்க அங்கே கெளதம் அவளை பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான் கண்கள் அவளை மேலிருந்து கீழ் படம் பிடித்துக் கொண்டிருந்தது .
இது வரை jeansilo , சுடி toppilo ஒற்றைகுதிரை வாழ் குடும்பியில் பார்த்தவளை இன்று வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த கற்கள் பதித்த லெஹெங்காவில் சிகை அலங்காரம் நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்க அவளின் மான் விழிகள் இரண்டும் அவனை கண்டு மருண்டு விழிக்கும் வேளையில் காண தேவக்கன்னியாகவே தெரிய அவளை அள்ளி அணைக்க பரபரத்த கைகளை சிரமப்பட்டு அடக்கினான் அவன் .
ஆதி இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் "நை நைனு எப்போ பாரு கத்திகிட்டே இரு கிளம்புறேன் போ "என்று கூறி சென்றுவிட ஜான்வியோ அவனை பார்த்து சிலை ஆகி நின்றவள் அப்படியே தான் நின்றாள் .
அவனின் தொடர் பார்வை வேறு உடலில் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க ஆதி சென்றபின்னே உணர்வு வந்தவள் வேகவேகமாய் அவ்விடம் விட்டு ஓட பார்க்க முடியவில்லை .அவளின் லெஹெங்கா துப்பட்டா அங்கிருந்த ஆணி ஒன்றில் மாட்டி இருந்தது .அவஸ்த்தையாய் திரும்பியவள் பரபரவென்று அதை எடுக்க போக கௌதமோ நிதானமாய் அவள் அருகில் வந்து அந்த ஆணியில் இருந்த துப்பட்டாவை பிரித்து எடுத்தான் .
அவன் அருகில் வரும்பொழுதே ஏனோ வியர்த்து கொட்ட அவன் கண்களில் தெரிந்த பார்வை மாற்றம் வேறு வயிற்றில் பயப்பந்தை உருளைச் செய்தது .அருகில் மிக அருகில் நெருங்கி வந்தவனின் மூச்சுக் காற்று அவள் மேல் பட்டு தெறிக்க துப்பட்டாவை அவன் எடுத்து விடும் வரை அவளிடம் மூச்சு கூட வெளியேறவில்லை .தான் எடுத்துவிட்டபின்னும் அப்படியே மிரண்டு விழிப்பவளை அத்தனை அருகாமையில் கண்டு தடுமாறியவன் "சாரி ஜானு "என்று மெல்லமாய் கூற அவன் குரலில் தெளிந்தவள் பொய் கோபத்தை பூசிக்கொண்டு அவன் கையிலிருந்த துப்பட்டா முனியை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு சென்று விட்டாள்.
அவள் வெளியே வந்ததும் படிக்கட்டின் விளிம்பில் கை கட்டி ஆதி அவளை கேள்வியாய் பார்க்க அவளோ ஒரு நிமிடம் திகைத்தாள் என்று தான் கூற முடியும் .ஜான்வி "ஆ.... ஆதி ..நீ இன்னும் போகலையா ?"என்று கேட்க
அவனோ "யார் டி அது ?"என்று கேட்க அவளோ பேசாமல் தலை குனிந்து நின்றாள் .குரலில் சற்று இறுக்கம் கூட்டியவன் "யாருனு கேட்டேன் ?"என்ஹா அவளோ " frienduh ட"என்று கூற
அவனோ அதே குரலில் "friendaa நான் கூட பாவானு கூப்பிடலாம்னு நெனச்சேன் "என்று கூற அவன் கூறியதை இரண்டு நொடி கழித்தே உணர்ந்தவள் சிரிப்புடன் அவனை பார்க்க அவனோ அவள் தலையிலேயே கொட்டியவன் "நானும் அப்போ சொல்லுவா இப்போ சொல்லுவானு பாக்குறேன் ஒரே அடியா நாலு மாசமா சொல்லவே இல்ல "என்று கூற
அவளோ "அது வந்து டா நீ ஏதாச்சு பிரச்னை பண்ணுவியோன்னு தான் .வேற காஸ்ட் அப்பா அம்மா வேற இல்ல என்க ஏதாச்சு சொல்லுவியோன்னு..."என்று கூற
அவனோ "ம்ம் firstuh பாத்தப்போ சப்புன்னு ஒன்னு வைக்கலாமான்னு தான் தோணுச்சு ஆனா விசாரிச்சு பார்த்தேன் ஆல் பொசிட்டிவ்ஸ் அண்ட் moreover எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு."என்று கூற
அவளோ தன் தம்பியை அணைத்துக் கொண்டவள் "thank யூ டா பனைமரமே உன்ன நெனச்சு தான் ரொம்ப பயந்தேன் "என்று கூற
அவள் தலையிலேயே கொட்டியவன்"நான் என்ன அவ்ளோ வில்லனாடி ?
"என்றவன் பின் அவளை விலக்கி "சரி கீழ போலாம் வா "என்று அவளுடன் நடக்க பாவம் இருவரும் தாங்கள் பேசியதை ஒரு ஜோடி காதுகள் கேட்டுவிட்டு கோபம் கொண்டு சென்றதை அவர்கள் அறியவில்லை .
வரவேற்பு ஏழு மணி போல் துவங்க ஜீவிதாவும் ஆதித்யாவும் மேளங்கள் முழங்க மண்டபத்தினுள் கை கோர்த்தபடி கால் எடுத்து வைக்க மின்சாரம் தடை செய்யப்பட்டது .அங்கிருந்த விருந்தினர்கள் சலசலக்க ஜீவிதாவின் கையிலிருந்து ஆதித்யாவின் கை விலகியது .ஜீவிதா அவன் எங்கு சென்றான் என்று தெரியாமல்" ஆதி "என்று கூப்பிட திடீரென்று அன்பே அன்பே பாடலின் முதல் ஹம்மிங் போடப்பட மேடையில் ஆதித்யா இருக்க அவன் மேல் மட்டும் படும் படி ஸ்பாட் லைட் அடிக்க பட்டது .
பின் அவள் அருகில் வந்து அவள் முன் நின்றதும் அவள் மேலும் அவன் மேலும் மட்டும் ஒளி விழ நீயும் நானும் அன்பே பாடல் ஒலிக்கப்பட குழம்பியபடி நின்றவள் கைகளை தன்னோடு கோர்த்துக்கொண்டவன் அந்த இசைக்கேற்ப மெல்லிதாய் நடனமாட ஆனந்தத்தில் வார்த்தைகளின்றி நின்றவள் அவனோடு தானும் ஆடினாள் முகம் கொள்ளா புன்னகையுடன் .
பாடல் முடிந்ததும் இருவரும் மேடைக்கு சென்றுவிட விளக்கு எரிந்தது ஆதி ஜீவிதாவின் காதில் "எப்படி இருந்துச்சு பொண்டாட்டி ?"என்று கேட்க
அவளோ "சத்தியமா எதிர் பார்க்கல ஆதி சூப்பரா இருந்துச்சு "என்று கூறி புன்னகைக்க அவளை காதலோடு பார்த்தவனை சுயநினைவடைய செய்தது அனைவரின் கரதோஷம் .கௌதம் இதை எல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் கண்ணில் ஜான்வி அங்கும் இங்கும் செல்வது பட்டாலும் அவன் பார்வையை அவள் உணர்ந்தாலும் பொய்க்கோபம் பூசிக்கொண்டு முகம் திரும்பியபடி சென்றுக் கொண்டிருந்தாள் .ஒவ்வொருவராய் வந்து ஆடிச் செல்ல சில்லுனு ஒரு காதல் படத்திலிருந்து கும்மி அடி பாட்டு போடப்பட ஜீவிதாவையும் இழுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள் அனைவரும்.
அதில் ஜான்வி குதித்து குதித்து ஆடிக்கொண்டிருப்பதையே குறுநகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம் .மனம் தன்னவளை உச்சி முதல் பாதம் வரை அளந்தது .அவனை மேலும் ஒரு ஜோடி கண்கள் கவனித்தபடி இருப்பதை ஏனோ கவனியாமல் விட்டான் கௌதம்.கடைசியாய் துடக்கம் மாங்கல்யம் பாடல் போடப்பட அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் இழுத்து வந்து ஆட வைத்தனர் .
அதில் கௌதமும் உள்ளே இழுக்கப்பட ஆடியபடி ஜான்வியின் அருகில் சென்றவன் அவள் காதில் குனிந்து "இன்னும் எவ்ளோ நேரம் ஜானு பேசாம இருப்ப "என்க
அவள் அவனை முறைத்துவிட்டு மீண்டும் ஆடுவதில் பிஸியாக மனதில் அவளை வறுத்தெடுத்தவன் யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தவன் எல்லோரும் ஆடுவதில் மும்முரமாய் இருப்பதை பார்த்து விட்டு இருவரும் படிக்கட்டின் அருகில் ஆடிக்கொண்டிருந்ததால் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான் கௌதம் .
அவன் இழுத்ததில் நிலை தடுமாறியவள் அவனை சரமாரியாக திட்டியபடி மேலே வந்தாள் "எரும விடு டா "என்று கத்த
அவனோ எதையும் கவனியாமல் அவளை இழுத்து மொட்டை மாடிக்கு வந்தவன் அவள் கையை பிடித்தவாறே பேச ஆரம்பித்தான் "ஓய் என்ன திமிரா ?"என்க
அவள் அவனை முறைக்க அவனோ சிரிப்பை கட்டுப்படுத்தியவன் "என்ன முறைப்பு ?அதான் சொல்றேன்ல சாரின்னு "என்று கூற
அவளோ கையை விளக்க போராடியவாறே "நீ சாரின்னு சொன்னா மன்னிச்சுரணுமா போடா "என்று உதற அவனோ விலகிச் செல்பவள் கையை பிடித்து இழுத்தவன் தாமதியாமல் அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டான் .
அவனின் முதல் அணைப்பில் திகைத்தவள் அவன் கரங்களுக்குள் நெளிய அவனோ தன் நெஞ்சளவு மட்டுமே இருந்த அவளின் மதி முகத்தை கண்டவனோ சிரிப்புடன் அவளின் இடையை சுற்றி வளைந்திருந்த தனது கரங்களில் மேலும் இறுக்கம் கூடியவாறு "ரொம்ப ட்ரை பண்ணாத நான் விட்டா தான் நீ போக முடியும் "என்க
அவளோ உள்ளே மகிழ்ந்தாலும் வெளியே சிடுசிடுத்தபடி "என்னடா பண்ண சொல்ற "என்க
அவனோ ஒற்றை புருவம் உயர்த்தியவன் "ஒழுங்கா பேசு என்கூட இப்போதைக்கு அத்து அப்டினு கூப்டு "என்று கூற அவளோ மெளனமாக நின்றாள் .அவள் முன்நெற்றியில் புரண்ட முடியை அவள் காதருகில் சொருகியவன் அவளின் கண் பார்த்தபடி அப்படியே நின்றான் .பூரண நிலவொளியில் மின்னும் தாரகையாய் அவளின் பால்முகம் அவனை ஈர்க்க அவள் விழியில் விழுந்து எழ விருப்பமின்றி அவன் உறைந்திருக்க அவளின் நிலையம் அதுவே .
அவன் அவள் கன்னத்தை மெல்லிதாய் வருட அவள் உதடுகள் தானாய் ஈன ஸ்வரத்தில் முணுமுணுத்தது "அத்து "என்று .அந்த வார்த்தையை அவள் உதடுகள் உச்சரித்ததில் அகம் மகிழ்ந்தவன் எத்தனை முயன்றும் முடியாமல் அவள் நெற்றியில் முதல் முதலாய் தனது முத்திரையை மென்மையாய் பதிக்க எதிர்பாரா முத்தத்தில் திகைத்தவள் பின் வெட்கம் பூசி அவன் கையிலிருந்து துள்ளி விலகி கீழே சென்று விட்டாள் அவனிடம் ஒரு புன்னகையை வீசி .
இருவருக்கும் ஏனோ இன்று மனம் நிறைந்திருந்தும் காதல் சொல்ல விருப்பமின்றி விலகிச் செல்ல .அவள் சென்ற திசையையே பார்த்து சிரித்தவன் படபடவென அடிக்கும் மனதை சமன் செய்ய அந்த மாடிச்சுவற்றை பிடித்து நிலாவை பார்த்தபடி நிற்க நிலவினை மேகக்கூட்டம் மூடிக்கொண்டு இருளை அள்ளி வழங்கியது .
அரை மணி நேரம் கழித்து கீழே வந்தவனின் முகம் அந்த வானத்தை போலெ இருள் படர்ந்து இருக்க கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் விழவா வேண்டாமா என்று அச்சுறுத்தியது .
we are nearing the end guys.just 5-6 chapters more
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top