23

ஜான்வி ஜீவிதாவிடம் பேசி முடித்து விட்டு கீழ் இறங்க அவளின் தம்பியோ அவள் வெளியே செல்வதற்கு தயாராகி இருப்பதை பார்த்தவன் கேள்வியுடன் "மீனின் எங்க வெளிய போற மாறி இருக்கு "என்க

அவளோ "அது ஜீவியும் நானும் ஷாப்பிங் போறோம் டா "என்க

அவனோ கேள்வியுடன் "ரெண்டு வாரம் முன்னாடி தான ஷாப்பிங் போன மறுபடி என்ன ?"என்க

அவளோ "ஜீவிக்கு பர்த்டே வருதுல அந்த ஷாப்பிங் "என்க

அவனோ "ஒஹோ எப்போ வருவ ?"என்க

அவளோ "ஒரு அஞ்சு மணி ஆகும் "என்க

அவனோ "அஞ்சு மணி வரைக்கும் என்ன ஷாப்பிங் போற? "என்க

அவளோ கோபத்துடன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் "இங்க நா அக்காவா நீ அண்ணனா டா? எப்போ பாரு கேள்வி கேட்டுகிட்டே இருக்க "என்க

அவனோ அவள் தலையிலேயே கொட்டியவன்"உன் safetyக்காக தான கேக்கறேன் கேள்விக்கு பதில் சொன்னா என்ன உனக்கு ?ஏய்ய் ஏதும் திருட்டு தனம் பண்றியா ?"என்க

அவளோ ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி இல்லை என்று வேகவேகமாய் தலை ஆடியவள் "சா சா நா அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டேன்டா "என்று விழித்தபடி கூற

அவனோ அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மார்க்கமாய் பார்த்தவன் "என்னவோ தெரிலடி கொஞ்ச நாளா உன் நடவடிக்கைளாம் ஒரு மார்க்கமா இருக்கு .மாட்டுவேல அன்னைக்கு இருக்கு "என்க

அவளோ அவனை குனிய சொன்னவள் காதில் "முதல்ல நீ போட்டுருக்குற டீ shirtla இருக்குற லிப்ஸ்டிக் மர்கஹ் துவைச்சு clean பானு அப்ரோம் என்ன மெரட்டு "என்று கூற

அவனோ பதட்டமாய்"அன்னைக்கே துவச்சுட்டேனே "என்று கூறியவாறு மார்புப்பகுதியில் பார்க்க அங்கு துவைத்தாலும் லேசாய் லிப்ஸ்டிக் கரை இருக்க உன்னித்து பார்த்தால் மட்டுமே தெரியும் .

அதை பார்த்து அவன் அசடு வழிய சிரிக்க அவளோ அவன் காதை எக்கி நின்று திருகியவள் "பண்றதுலாம் fraadu தனம் இதுல வந்துட்டான் என்னைய கேள்வி கேக்க போடா "என்று கூறியபடி தன் அன்னையிடம் சென்றவள் அவனிடம் கூறிய அதே காரணத்தை கூற அவரும் ஜீவிதா தானே என்று ஒத்துக்கொண்டார் .

சரியாக மணி பதினொன்றை தொட ஜீவிதா அங்கு ஜான்வியின் வீடு வாசலில் வந்து இறங்கினாள்.சிறிது நேரம் அங்கிருப்பவர்களோடு பேசிவிட்டு இருவரும் கிளம்பினார்கள் .

ஜான்வியின் வீட்டிலிருந்து காந்தி பார்க் முப்பது நிமிடங்கள் தான் .ஆதலால் தோழிகள் இருவரும் கிளம்ப ஜீவிதா "ஹே இன்னைக்கு சர்ச் போகணும் டி காலைல போகல பதினொன்றை பூஜைக்கு போலாமா ?"என்க

ஜான்வியோ "ம்ம் ஓகே டி போலாம் "என்று தேவாலயத்திற்கு சென்றார்கள் .இருவரும் தாங்கள் அணிந்திருந்த துப்பட்டாவை முக்காடு போல் அணிந்து கொண்டவர்கள் உள்ளே சென்று அமர்ந்து வழிபாடு முழுவதையும் முடித்துவிட்டு கிளம்ப மணி ஒன்றாகி இருந்தது .

ஜான்வி வெளியே வருகையில் கேட்டாள் "என் ஜீவி உனக்கு அம்மா christian அப்பா ஹிந்து இது வரைக்கும் எப்போவாச்சு ரெண்டு பேருக்கும் மதம் சார்ந்து பிரச்சன வந்துருக்கா ?"என்று கேட்க

ஜீவியோ சிரித்தவள் "எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் அவங்களோட குணத்தை தாண்டி காதலிச்சாங்க மதத்தை இல்ல .என்னைக்கும் அப்பா அம்மாவோட மதத்துலயோ அம்மா அப்பாவோட மதத்துலயோ தலை இட்டதே இல்ல .நா சர்ச் போகலேன்னா என்ன அம்மா திட்ட மாட்டாங்க அப்பா தான் திட்டுவாரு அதே மாறி கோவிலுக்கு வெள்ளிக்கிழமை நா போகலேன்னா அப்பா திட்டமாட்டாரு அம்மா தான் திட்டுவாங்க .ரெண்டு பேரும் சந்தோஷமா வாழறதுக்கு மனசு இணைஞ்சா போதும் மதம்லாம் ஒரு மேட்டர் இல்ல "என்று கூற

ஜான்வியோ"அப்பறோம் ஏன் டி அம்மா அப்பா எல்லாம் கல்யாணம்னு வரேல ஜாதி பாக்குறாங்க "என்று கேட்க

ஜீவிதா "சிம்பிள் சொசைட்டி தான் காரணம் .என் அம்மா கிருஸ்து என் அப்பா ஹிந்து அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் பிறக்கிற நான் எந்த மதத்தை சேர்ந்தவளா இருப்பேன் அப்டிங்குறது தான் இங்க கேள்விக்குறி .அந்த கேள்விக்கு பயந்துட்டு தான் பல parents காதல சேர்த்து வைக்கிறது இல்ல .என்னத்த சொல்லு இன்னும் இந்தியால ஜாதி வெறி புடுச்சவங்க இருக்க தான் செய்றாங்க .ஏன் நேத்து கூட newspaperla பார்த்தோமே காதலிச்சு கல்யாணம் பண்ண தன் சொந்த பொண்ண கற்பினினு கூட பார்க்காம வெட்டி கொன்ன அப்பாவை "என்று கூற ஜான்விக்கு லேசாய் வயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது தன தந்தைக்கு ஜாதி பற்றெல்லாம் இல்லை எனில் அவன் ??என்று நினைத்தாலே கலக்கம் கொண்டது மனது .

முயன்று அதை ஒதுக்கி வைத்தவள் பின் ஜீவிதாவுடன் ஒரு உணவகத்தில் உணவை முடித்துவிட்டு காந்தி பார்க்கை அடைகையில் சேரியை மணி இரண்டு .அவள் நுழைவாயிலில் நின்றவாறு கௌதமிற்கு அழைப்பு விடுத்து நிற்க திடீரென்று அவள் கையிலிருந்து போன் பறிக்கப்பட்டது.அதிர்ந்து விழித்தவள் பின்னே யாரது என்று திரும்ப அழகிய புன்னகையோடு அவளை பார்த்தபடி நின்றிருந்தான் கௌதம்.

அவள் அவனை பார்த்து புன்னகைக்க அருகில் இருந்த ஜீவிதா "எப்படி அண்ணா இருக்கீங்க ?"என்று கேட்க

அவனோ அவள் புறம் புன்னகையுடன் திரும்பியவன் "நல்லா இருக்கேன்மா நீங்க ?"என்க

அவளோ "fine அண்ணா" என்றவள் வராத அழைப்பை ஏற்று காதில் வைத்து "அண்ணா நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க நா கால் பேசிட்டு வந்து join ஆகிக்கிறேன் "என்று கூறி விடைபெற ஜான்வியும் கௌதமும் உள்ளே சென்றனர் .

இருபுறமும் புல்வெளி இருக்க நடுவில் கற்கள் பதித்த பாதை .புல்வெளியில் நடுவே ஆங்காங்கே போடப்பட்டிருந்த கல் மேடைகள் அமர்வதற்கு ஏதுவாய் இருக்க அங்கே ஆங்காங்கே காதலர்களும் ,அன்னை தந்தையருடன் வந்த சிறு குழந்தைகளும் குடும்பங்களுமாய் அமர்ந்து இருந்தனர் .இருவரும் உள்ளே நடந்து சென்றவர்கள் ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தனர்.இதற்கு முன்பு வரை எப்படியோ அவன் மேல் இருந்த காதலை உணர்ந்த நொடியிலிருந்து ஜான்விக்கு அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் புதியதாய் தோன்ற அவனுடன் நடக்கும் பாதை இன்னும் நீளாதா என்று மனம் ஏங்கியது .

கௌதம் அவள் புறம் திரும்ப ஜான்வியோ அவனின் முகத்தை அப்பொழுதே அருகாமையில் பார்த்தவள் அவளை என்றும் ஈர்த்து இழுக்கும் அந்த

கண்களின் கீழ் அழுத்தமாய் பதிந்திருந்த கருவளையத்தை கண்டு பதறினாள் ."என்ன அத்து இது இவ்ளோ கருவளையம் "என்க

அவனோ "அது ... சொன்னேன்ல டி overtime பாக்குறேன்னு அதான் சரியான தூக்கமில்லாம "என்று கூற

அவளோ அவனை கனிவாய் பார்த்தவள் அவன் பார்வையை நேராய் சிந்தித்தபடி மெதுவாய் தனது விரல் கொண்டு அந்த கருவளையத்தில் வருடியபடி"இவ்ளோ கஷ்டப்படணுமாடா "என்று சிறிய குரலில் கேட்க

அவனோ புன்னகைத்தபடி அவள் விரல்களை பிடித்து "நா என்ன IT companylayaa வேலை பாக்குறேன் நிறைய சம்பளம் வாங்க .field ஒர்க் அப்டி தான் "என்றவன் ஒரு பெருமூச்சை விட்டு தொடர்ந்தான் "எனக்கு கூட அப்பப்போ தோணுது டி பேசாம IT ஒர்க் போய்டலாமா சம்பளம் நெறைய வருமேனு. ஆனா கம்மியான salary கிடைச்சாலும் இதுல கிடைக்குற சந்தோஷம் ஒரு இடத்துல உக்காந்து keyboardah தட்டுறதுல கிடைக்குமான்னு தெரியல "என்க

அவளும் உணர்ந்து இருந்தாளே அவனிற்கு அவனது துறையில் இருந்த காதலை .அவளோ அவன் கையை பிடித்தவள் "ரிலாக்ஸ் டா இருக்குறது ஒரு வாழ்க்கை தான் உனக்கு புடுச்சி மாறி இரு .இப்போ என்ன உனக்கு பல்லு கொட்டுற வயசா ஆயிருச்சு ?இருபத்தி நாலு தான .government எக்ஸாம் வேற எழுதிருக்க கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் "என்க

அவனோ சிரித்தவன் "எனக்கு வயசு அவ்ளோ ஆகல தான் ஆனா என்னோட ஆசையை சொன்னா நீ சிரிப்ப "என்க அவளோ என்ன என்பதை போல் பார்க்க அவனே தொடர்ந்தான் "எனக்கு இருபத்தி அஞ்சு வயசுலயே கல்யாணம் பண்ணிரனும்னு ஆசை "என்க

அவளோ விழிவிரித்து "ஏன்டா அவளோ சீக்ரம் கல்யாணம் பண்ணி என்னடா பண்ண போற ?"என்று கேட்க

அவனோ ஒரு பெருமூச்சு விட்டவன் அவர்கள் முன் அமர்ந்து இருந்த ஒரு தம்பதியினரை காட்டினான் "அவங்கள பாரேன் "என்க அவள் பார்க்க அங்கே கணவனின் கையை கோர்த்தபடி ஏதோ பேசி சிரித்தபடி வந்து கொண்டிருந்தார் நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்தே அவரின் மனைவி .இருவரின் கண்களை பார்க்கும் எவரிற்கும் தெரியும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலை .

அவள் அவன் புறம் திரும்ப "அந்த மாதிரி வாழனும் ஜானு .வாழ்க்கை முழுக்க நெறஞ்ச காதலோட.அம்மாவோட அன்பு எனக்கு கிடைக்கல ,அப்பாவும் நண்பனை மாறி தான் இருப்பாரு ஆனாலும் என்ன ஒரு வளர்ந்த மனுஷனா தான் பாப்பாரே ஒழிய எனக்குள்ள இருக்குற கௌதமை பார்க்க மாட்டாரு .அந்த கௌதம்க்கு இந்த வயசுலயும் இருட்டுல தனியா தூங்க பயம் இருக்கு ,யாராச்சு ஊட்டி விட மாட்டாங்களானு ஏக்கம் இருக்கு ,அக்கறையா பேச மாடங்களானு ஏக்கம் இருக்கு ,மடில தல வச்சு படுக்க ஏக்கம் இருக்கு ,டிரஸ் செலக்ட் பண்ணி குடுக்க மாடங்களானு ஏக்கம் இருக்கு,தோள்ல சாஞ்சுக்க ஏக்கம் இருக்கு,புடுச்சத கேக்காமயே சமைச்சு குடுக்க மாடங்களானு ஏக்கம் இருக்கு "என்று கூற கூற அவனிற்கு கண்களில் மெல்லிதாய் நீர்ப்படலாம் திரண்டு விட குரல் கறகறக்க ஆரம்பித்தது.

அவன் பேச பேச அவளுக்கும் அவன் வழியை தனதாய் உணர்ந்ததை போல் உதடு நான் இருக்கிறேன் என்று கூற துடிக்க கண்கள் லேசாய் கண்ணீரை சுரக்க அவன் கைகளோடு கோர்த்திருந்த தனது கைகளில் அழுத்தத்தை கூட்டினாள் .அவனும் அவள் கைகளை நெருக்கமாய் பிடித்துக்கொண்டவன் தன்னிலை அடைய இரண்டு நிமிடமாவது பின் அவனே தொடர்ந்தான் "எனக்கு கிளோஸ் friends ரொம்ப கம்மி ஜானு.என்னோட இயலாமையே என்ன அதிகமா கோபப்பட வைக்கும் அந்த கோபமே என்ன எல்லார்கிட்டே இருந்தும் தள்ளி வச்சுரும் .அப்படி இருக்குற நண்பர்கள் கிட்டயும் இதை எல்லாம் சொல்ல தோணாது .எனக்கு பரிதாபம் புடிக்காது ."என்று மௌனித்தவன் "அதான் ஜானு இதை எல்லாம் வர போற என்னோட மனைவி மூலமா தீர்த்துக்கணும்னு நினைக்குறேன் .அவளை உயிருக்கு மேல காதலிக்கனும் சந்தோஷமா வாழனும் அவ்ளோ தான் "என்று கூற

ஜான்வி " இது வரைக்கும் அப்டி ஒரு பொண்ண பாத்துட்டியா கௌதம் ?அப்பா கண்டிப்பா லவ் marriage தான் "என்று ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க

அவனோ அவள் கேட்டதில் அவள் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து பார்த்தவன் "லவ் marriage பண்ண மாட்டேன் ஜானு.என்ன அனாதையா தூக்கி போடாம வளர்த்து ஆளாக்குனது என் அப்பா .அவர் எனக்கு பாக்குற பொண்ணு தான் என்னோட மனைவி.அது தான் அவருக்கு நா குடுக்குற மரியாதை "என்றான் தீர்க்கமான குரலில் .அவன் கூறியதில் அவளின் உள்ளே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மொத்தமாய் வடியத்தொடங்க அவள் கொண்ட காதலின் எதிர்காலமோ அவள் முன்னே கேள்விக்குறியாய் நின்றது .

இங்கு இவர்கள் இப்படி இருக்க அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தனது வண்டியை எடுத்த ஜீவிதாவின் அலைபேசியோ திடீரென்று சினுங்க துவங்கியது .

யாரென்று பார்க்க பிரவீன் தான் அழைத்திருந்தான் .இவன் என் இப்போ கூப்பிடுறேன் என்று நினைத்து காதில் வைத்தவள் "சொல்லுடா "என்க

அவனோ "உடனே உன் வீட்டுக்கு வா "என்று கூறி துண்டித்துவிட்டான் .இவன் ஏன் வீட்டுக்கு கூப்பிடுறான் என்று நினைத்தபடி இன்னும் நேரம் இருக்கிறது என்று வீட்டிற்கு அவள் அடுத்த அரை மணி நேரத்தில் வந்து சேர வரவேற்பறையில் அவள் தந்தையின் அருகில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான் பிரவீன் .அவள் வந்ததும் எழுந்தவன் "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மேல மொட்டை மாடில இருக்கேன் வந்துரு "என்று மாடிப்படி ஏறி சென்று விட அவளோ அவனின் விசித்திர நடவடிக்கையை குழப்பமாய் பார்த்தவள் பின் முகம் கழுவிவிட்டு மேலே சென்றாள்.

மாடியில் தடுப்பு சுவற்றை ப்ரவீன் பொறுமையின்றி தட்டிக்கொண்டிருக்க பின்னால் சிறு சிரிப்புடன் வந்த ஜீவிதா "என்னடா திடீர்னு வீட்டு...."என்று கூறி முடிக்கும்முன் தன் கையை அவளை அரைவதற்காக ஓங்கி இருந்தான் ப்ரவீன்.

தன்னை அதிர்ந்து கூட பேசிடாத தனது நண்பன் தன்னை அறைய காய் ஓங்கியதில் அவள் மிரண்டு விழிக்க அவனோ அவளின் மிரண்ட விழியில் தனது கையை இறக்கியவன் தன் கழுத்தை அழுந்த தேய்த்தபடி அவளை கனல் தெறிக்கும் பார்வையோடு பார்த்தான் .

பிரவீன் "ஜான்வியை எங்கடி கூட்டிட்டு போன ?"என்க

அவளோ அவனின் இந்த புதிய ரௌத்திர முகத்தில் பயத்தால் எச்சில் கூட்டி விழுங்கியவள் "அது.... அது..... கௌதம் அண்ணாவை பார்க்க "என்க

அவனோ பல்லிடுக்கில் "போன தடவ நா என்ன சொன்னேன் ?அவ நம்மளோட போனா பரவா இல்ல தனியா போய் கௌதம் அண்ணாவை பாக்குறத யாராச்சு பார்த்தா அவளுக்கு நெறைய பிரச்சன வரும்னு சொன்னேனா இல்லையா? "என்க அவளோ மிரண்டு விழித்தாள்.

அவளின் மிரண்ட பார்வையில் சற்று கோபம் தணிந்தவன் "சொல்லுடி "என்க

அவளோ "சொ... சொன்ன "என்க

அவனோ கையை கட்டிக்கொண்டு அவளை தீர்க்கமாய் பார்த்தவன் "அப்ரம் ஏன் இன்னைக்கு அவளை விட்டுட்டு வந்த காந்தி parkla "என்க

அவளோ உனக்கெப்படி தெரியும் என்பதை போல் பார்த்தான் .அவளது விழிமொழியின் அர்த்தம் உணர்ந்தவன் "அந்த பக்கம் ஒரு வேலையா போய் இருந்தேன் நீ அவளை தனியா விட்டுட்டு வரத பார்த்தேன் .சொல்லு எதுக்கு இப்டி பண்ண ?"என்க

அவளோ "அது.... அது... ஜான்வி கெளதம் அண்ணாவை லவ் பண்ரா.நேத்து தான் realise பண்ணா "என்று கூற

அவனோ உச்சக்கட்ட கோபத்தில் "அறிவுக்கெட்டவளே " என்றான் 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top