19

அடுத்த நாள் காலை விரைவாகவே எழுந்த ஜான்வி குளித்து முடித்து வெளியே வர அப்பொழுது தான் ஆவலுடன் தங்கி இருந்த அவளின் சகோதரி முறையுள்ள பெண்கள் அனைவரும் எழுந்தனர் .பின் வெளியே வந்தவள் தனது அன்னையை தேடி செல்ல அவரோ பின் கட்டில் நின்று இரண்டு மூன்று பேரை வேலை ஏவிக்கொண்டிருந்தார் .

அவரின் தோளில் சுரண்டியவள் "அம்மா "என்க

அவரோ "என்ன ஜான்வி "என்று கேட்க

அவளோ "பசிக்குதும்மா "என்க

அவரோ சுற்றி முற்றி பார்த்தவர் "காலைல அவங்க அஸ்தியை கரைச்சுட்டு வர வரைக்கும் சாப்பிட கூடாது டி "என்க

அவளோ அழுவதை போல் முகத்தை வைத்தவள் "நேத்து காலைல இருந்து ஒழுங்கா சாப்பிடல பசிக்குது "என்று கூற அவரிற்கு எதுவும் செய்ய முடியாத சூழல் .மகள் பசி பொறுக்க மாட்டாள் தான் ஆனால் அனைவரும் பசியோடு இருக்க அவளிற்கு மட்டும் எப்படி உணவை வாங்கி தருவது? என்று அவர் விழி பிதுங்கி நிற்க ஜான்வியி பின் இருந்து ரேவதியின் குரல் கேட்டது "வதினா குழந்தை எவ்வளோ நேரம் சாப்பிடாம இருப்பா ?"என்க

ஜாங்வியோ ஒரு வித சங்கடத்துடன் திரும்பினாள் அவர் புறம் .தவறாக நினைத்துவிடுவாரோ என்று .ரேவதி "வதினா அபி இப்போ தான் சாப்பாடு சின்ன பிள்ளைங்களுக்கெல்லாம் வாங்க போறான் ஜான்வியை அவன் கூட வேணா போய் சாப்டுட்டு வர சொல்லுங்களேன் "என்க

ஜான்விக்கு தெளிவாய் புரிந்துவிட்டது தனது அத்தையின் எண்ணம் .ஜான்வி "இல்ல அத்தய்யா எனக்கு பசிக்கல "என்க

அவரோ"அட சும்மா இரு ஜான்வி "என்றவர் அப்புறமாய் சென்று கொண்டிருந்த அபிஷேக்கை அழைத்தார் "அபி இக்கட ரா (இங்க வா )"என்க

அபியோ அவர்கள் அருகில் வந்தவன் ஜான்வி அங்கு நிற்க கண்டு அவள் புறம் பார்வையை திருப்பாத கவனமாய் தவிர்த்தவன் தன் அன்னையிடம் "என்ன அம்மா ?"என்க

அவரோ "அபி ஜான்விக்கு பசிக்குதாம் நீ சாப்பாடு வாங்க தான போற. அப்டியே அவளை அழைச்சுட்டு போய் சாப்பிட வச்சுட்டு கூட்டிட்டு வா "என்க

அபியோ அசௌகரியமான உணர்ந்தான் .அவன் அன்னை கூறிய ஆசை வார்த்தைகளால் ஜான்வியின் மேல் ஒரு சிறு விருப்பம் வந்திருக்க அவள் வேண்டாம் என்று கூறியது முதலில் சற்று வருத்தமாய் இருந்தாலும் அதன் பின் அவளை கடந்து சென்றிருந்தான் .இப்பொழுது தன் அன்னை மீண்டும் அவளை தன்னோடு இணைக்க அதுவும் இந்த சூழலை பயன்படுத்திக்கொள்வது அவனிற்கு எரிச்சலை தான் கொடுத்தது .ஆத்திரத்தை அடக்கியவன் அழுத்தமாய் "அம்மா நா சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்துருவேன் அப்பறோம் அவ சாப்பிடட்டும் ."என்க

அவரோ வேக வேகமாய் "அதெல்லாம் ஒன்னும் வேணாம் அபி நேத்துல இருந்து குழந்தை ஒழுங்காவே சாப்பிடல.அதுமட்டுமில்லாம நீ வாங்கிட்டு வரது பத்துமானும் தெரில கம்மியா இருந்தா அவ கொஞ்சமா தான் சாப்பிடுவா .நீ கூட்டிட்டு போய் சாப்பிட வைச்சு கூட்டிட்டு வா "என்க

ஜான்வி ஏதோ கூற வர அப்பொழுது அவளின் தந்தை சேகரன் அங்கே வந்தவர் "ஜான்வி அபி கூட போயிட்டு வாமா .தனியா போய் அத்தனை பேருக்கும் சாப்பாடு அவனால வாங்கிட்டு வர முடியாது "என்க

அதற்கு மேல் அவளால் என்ன கூற முடியும் வேண்டா வெறுப்பாய் சரி என்றவள் அபியிடம் "கார் சாவி அப்பாகிட்ட வாங்கிக்கங்க "என்க

ரேவதியோ "அது ஹோட்டல் சந்துல இருக்கும்மா கார்லாம் போகாது நீங்க பைக்ல போய்ட்டு வாங்க "என்க

அபினவவோ நறநறவென பல்லை கடித்தவன் வேண்டா வெறுப்பாய் ஜான்வியை கூட்டிக்கொண்டு வெளியே சென்றான் .அபி வண்டியை எடுக்க ஜான்வியோ திருதிருவென்று விழித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.அவள் அவஸ்த்தையை புரிந்த அபி "ஜான்வி அவங்க பேசறதை எல்லாம் மனசுல வச்சுக்காதம்மா .தைரியமா ஏறு"என்க

அவள் அப்பொழுதும் விழிக்க அவனோ சிரித்தவன் "கவலைப்படாத என் அம்மாவுக்கு இருக்குற எந்த intentionum எனக்கு இல்ல"என்க

அவளோ நிம்மதியுற்றவள் "தேங்க்ஸ் அபி புருஞ்சுக்கிட்டதுக்கு "என்று கூறி ஒரு பக்கம் காலை போட்டவாறு அமர்ந்துகொண்டாள் .சிறிது நேரத்திலேயே இருவரும் நன்றாக பேச ஜான்வி அங்கிருந்த ஒரு உணவகத்தில் சென்று நன்றாக உண்டவள் அனைவருக்கும் ஆர்டர் சொல்லி விட்டு இளையவர்களுக்கு மட்டும் பார்சல் வாங்கி விட்டு வந்தாள்.

அபி "ஜான்வி எங்கம்மா முன்னாடி மட்டும் இப்டி சிரிச்சு பேசிறாதடா அவங்க வேற ஏதாச்சு நெனச்சுக்க போறாங்க "என்க

அவளோ புரிந்ததாய் தலையாட்டியவள் "சரி" என்றாள்

பின் அவன் சற்று தயங்கி "ஏன் ஜான்வி நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே ?"என்க

அவளோ வண்டியில் எறியபடி "என்னனு கேளுங்க "என்க

அவனோ "அது... வேற யாரையாச்சு லவ் பண்றியா ?"என்க

அவளோ ஒரு நொடி கௌதமின் முகம் கண்முன் வந்து போனதில் திடுக்கிட்டவள் பின் தன்னை சமாளித்துக்கொண்டு "சா சா அதெல்லாம் ஒன்னும் இல்ல அபி "என்க

அவனோ குழப்பத்துடன்"சரி"என்றான் .பின் இருவரும் வந்து இறங்க அபியுடன் ஜான்வி வந்து இறங்குவதை பார்த்து கோபமுற்ற ஆதிசேஷன் அவர்கள் முன் சென்று நின்றான். .

ஜான்வி குழப்பமாய் பார்க்க அவனோ அவளை முறைத்தவன் "உள்ள போ "என்றான்

அவளோ அவன் கோபத்தின் காரணத்தை யூகித்தவள் "ஆதி ..."என்று கூற

அவனோ "உள்ள போக சொன்னேன் அக்கா உன்ன "என்க

அவளோ மனதில் அபிக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொண்டு செல்ல ஆதியோ அபியின் முன் நேருக்கு நேராய் நின்றவன் "அதான் புடிக்கலைனு சொல்லிட்டாளா அதுக்கப்புறம் என்னத்துக்கு அவளை பைக்ல கூட்டிட்டு போறீங்க ?"என்க

அபியோ நிதானமாய் அவனை தானும் பார்த்தவன் "சாப்பாடு வாங்க போனேன் அவ பசிக்குதுனு சொன்னா கூட்டிட்டு போய் சாப்பிட வச்சு அப்டியே பார்சல் வாங்கிட்டு வந்தேன் மத்தவங்களுக்கு "என்க

ஆதியோ ஏளனமாய் சிரித்தவன் "ஏன் இங்க துணைக்கு ஆம்பளைங்க யாரும் இல்லையா ?"என்க

அவனோ சிரித்தவன் அவன் தோளில் கையை வைத்து "டேய்ய் நீ imagine பண்ற அளவுக்குலாம் ஒன்னும் இல்லடா அவ முடியாதுனு சொன்னப்பயே எனக்கு இருந்த ஆச எல்லாம் போயிருச்சு .மாவய்யா சொன்னாரு அதான் கூட்டிட்டு போனேன் .வேற எந்த நோக்கமும் இல்ல "என்க

அவனோ அப்பொழுதே நிம்மதியுற்றவன் லேசாய் புன்னகைத்து "சாரி பாவா கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் நீங்களும் force பண்றீங்களோனு நெனச்சு "என்க

அவனோ சிரித்தவன் "எனக்கும் தங்கச்சி இருக்காடா எனக்கும் பொண்ணுங்களோட உணர்வு புரியும் "என்றவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு "என்ன ராகவி பின்னாடி சுத்தலையா ?"என்று கேட்க

ஆதிக்கோ பேரதிர்ச்சி இவனிற்கு எப்படி தெரியுமென்று .அவன் அதிர்ந்து விழிக்க அபியோ சிரித்தவன் "ரொம்ப ஷாக் ஆவாத எல்லார்ட்டையும் வீரப்ப வம்சம் மாறி மொறச்சுக்கிட்டு இருக்கறவன் என் தங்கச்சிய பாத்தா மட்டும் ஐஸ் கட்டியா உருகுவியே அதை வச்சே கண்டுபுடுச்சுட்டேன் "என்று கூற

அவனோ அசடு வழிய சிரித்தவன் கழுத்தை தேய்த்துக்கொண்டான் .அபி "டேய்ய் டேய்ய் என்ன வெக்கமா சகிக்கலடா "என்று கூறி அவன் தோளில் கையை போட

தானும் போட்டுக்கொண்டவன் "சரி விடு பாவா "என்று கூறி உள்ளே அழைத்து செல்ல ரேவதிக்கு இந்த காட்சி என்னவோ ஜான்வியை தனது மருமகளாக்குவதற்கு தான் கண்ட முதல் வெற்றியை தோன்றியது (பச்சை மண்ணா இருக்கியேமா ).

இங்கு இப்படி இருக்க கௌதமோ அலைபேசியை எப்பொழுதும் அவளிற்கு அழைக்கும் நேரமெல்லாம் பார்த்து சோர்ந்து போனான் .அவள் பேச முடியாது என்று கூறி விட்டு சென்றால் தான் எனில் மனம் சிறிது நேரமாவது அவளிடம் பேச வேண்டுமென்று விசித்திரமாய் ஏங்கியது .

வேலை முடித்து வந்தவனிற்கு என்றையும் விட இன்று அதிக சோர்வாய் தோன்ற அவள் வாங்கிக்கொடுத்த கெய்சானை வருடியபடியே இலக்கில்லா சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் கௌதம்.

அப்பொழுது அவனது அலைபேசி அலற ஜான்வியாக இருக்குமோ என்று எதிர்பார்ப்புடன் எடுத்தவன் திவ்யா என்றிருக்கவும் ஆர்வம் சுத்தமாய் வடிந்துவிட எடுத்து காதில் வைத்தவன் "சொல்லு திவி"என்க

அவளோ அவனை வாய்க்கு வந்த வார்த்தையை எல்லாம் வைத்து திட்ட துவங்கினாள் .

அவள் திட்டுவதில் அதிர்ந்தவன் "திவி திவி ஏன் இந்த திட்டு திட்டுற "என்க

திவ்யாவோ "மாடு மாடு இன்னைக்கு என்ன நாளுன்னு கூட ஞாபகம் இல்லையாடா "என்க

அவனோ நாட்காட்டியை பார்க்க அது அவளின் பிறந்த நாள் .ஐயோ என்று தன் தலையிலேயே தட்டிக்கொண்டவன்"சாரி சாரி திவி "என்க

அவளோ "என்ன பூரி திவி .first விஷ் இல்லேன்னாலும் atleast இருபதாவது விஷ் ஆவது பண்ணுவ இன்னைக்கு சுத்தமா மறந்துட்ட"என்க

அவனோ எரிச்சலானவன் "அதான் மறந்துட்டேன்னு சொல்றேன்ல புரிஞ்சுக்க மாட்டியா ?"என்று கத்த

ஏனோ இன்று வித்தியாசமாய் இருந்தது கௌதமின் கோபம் பின் திவ்ய சமாதானத்தில் இறங்கினால் "ஹலோ ஹலோ இங்க சீன் படி நான் தான் கோபப்படணும் "என்க

அவனோ "சரி சாரி ஹாப்பி பர்த்டே போதுமா "என்று சலிப்பாய் எரிச்சலுடன் கூற

திவ்யா குரல் சற்று கவலையாய் மாறியது "கௌதம் ஆர் யு alright "என்க

அவனோ "ஏன் எனக்கென்ன ?"என்க

அவளோ "இல்லடா நீ எதையாச்சு ரொம்ப மிஸ் பண்ணா தான் இப்டி சின்ன விஷயத்துக்கெல்லாம் irritate ஆகி என்ன கத்துவ .கடைசியா நீ காலேஜ் சேர்ந்து first yearla குடும்பத்தை மிஸ் பண்ணப்போ இப்டி இரிடேட் ஆகி பார்த்தது .இப்போ என்னாச்சு ?"என்க அவனோ அதிர்ந்தான் .

அவள் கூறுவதும் உண்மை தானே தவறிருந்தாள் கோபப்படுவானே ஒழிய இப்படி காரணமின்றி அவள் விளையாடுவதற்கெல்லாம் கோபப்பட மாட்டான் .தன் தவறை உணர்ந்தவன் "சாரி திவி ஏதோ டென்ஷன்ல "என்க

அவளோ "ஐயா உன் sorrylaam வேணாம் ஏதும் lovela சிக்கிக்கிட்டியா டா "என்று குறும்பாக கேட்க

அவனின் மனது ஒரு நொடி ஜான்வியின் முகத்தை கண்முன் நிறுத்த அதில் சற்று அதிர்ந்தவன் திவ்யாவிடம் "லூசு மாதிரி உலராத திவி டென்ஷனா இருக்கேன் அப்பறோம் பேசுறேன் "என்று வைத்தவன் அவனது தனது cupboardai திறந்து எதையோ தேடினான் .

அது ஒரு சிகரெட்டே டப்பா .கௌதமிற்கு புகைப்பழக்கம் இருந்தது எனில் மிகவும் அரிதாக புகைப்பிடிப்பான் .மிகவும் குழப்பமான சூழலிலோ அல்லது மிகவும் வருத்தமான சூழலிலோ தான் புகைப்பிடிப்பான் .அதை எடுத்துக்கொண்டு balconykku சென்றவன் புகைப்பிடித்தபடி தன்னை தானே திட்டிக்கொண்டான் .

"லூசு லூசு எனக்காச்சு லவ் ஆச்சு "என்று கேட்க

மனசாட்சியே "அப்போ உனக்கு ஜான்வி மேல லவ் இல்ல" என்று அவனை பார்த்து நக்கல் அடித்தது .

கௌதம் "ச்சீ loveaah அவ என் frienduh அவ மேல போய் "என்க

மனசாலாட்சியோ "ஓஓஓஓ friendukkaaga தான் kerchiefah குடுக்க இல்லாத வேலைய உருவாக்கிட்டு கோயம்பத்தூர் வரைக்கும் போனியோ ?"என்க

அவனோ "அது.... ஆமா அவளுக்கு சொந்தமான பொருள் எனக்கெதுக்கு அதான் குடுக்க போனேன் "என்க

அதுவோ "ஓஹோ அப்போ எதுக்கு டெய்லி அவளுக்கு கால் பண்ணி பேசுன ?அவ நேத்து கால் எடுக்கல அப்டினு அந்த குதி குதிச்ச?யார் சொல்லியும் மாறாதவன் அவ சொன்னதுக்காக எதுக்கு இப்போ கடுமையா பேசுறத குறைச்சு workers கிட்ட ஒழுங்கா பேசுற ?இன்னைக்கு ஏன் ஏதோ கப்பலே கவுந்து மாறி அவ குடுத்த keychainaye வச்சுக்கிட்டு உக்காந்துருந்த ?"என்று சரமாரியாக கேள்விகளை தொடுக்க அவனிற்கோ அது எதற்குமே பதிலில்லை.

மனசாட்சியோ அவனை நோக்கி நக்கலாய் சிரித்தது "என்னடா சொல்லு "என்க

அவனோ உள்ளிருந்த வைராக்கியம் மேலோங்க "ஹே நீ ஏதேதோ சொல்லி என்ன confuse பண்ணாத அது... என்னவோ அவளை எனக்கு புடிக்கும் அது ஏன் என்னனு தெரில. அவளை எனக்கு ரொம்ப புடிக்கும் .அவ சொன்னா கேக்கணும்னு தோணுது கேக்குறேன் அதுக்கு பேர் loveaa தான் இருக்கணும்னு இல்ல ."என்றவன் மனசாட்சியை அப்படியே தட்டி வைத்தான் .

ஒரு சிகரெட்டை ஊதி முடித்தவனின் மனதும் தெளிவாகி இருக்க தேவையில்லாமல் எண்ணங்களை வளர்க்கக்கூடாது முடிந்தவரை அவளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனின் அலைபேசி notification வந்ததன் அடையாளமாய் அவனின் கைகளில் மின்ன அதில் வந்திருந்த "குட் நைட் அத்து "

என்ற ஜான்வியின் குறுஞ்செய்தியை பார்த்து

சிரித்தவன் "குட் நைட் ஜானு "என்று கூறி வந்து உறங்கினான் .

தான் எடுத்த முடிவில் என்றும் உறுதியாய் இருப்பவன் அவள் குறித்து எடுத்த முடிவில் தன் உறுதி ஒரு நொடியில் தவிடுபொடியானதையும் உணராமல் .  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top