15

அந்த வாரத்தை ஒரு வழியாய் செல்போன் அழைப்புகளிலும் பேச்சுக்களிலும் இருவரும் நெட்டி தள்ள அன்று புதன் இரவு கௌதம் கிளம்பிவிட்டான் சென்னையிலிருந்து கோயம்பத்தூரிற்கு .பதினைந்து மணி நேர பயணம். சென்று தான் புக் செய்த சீட்டில் அமர்ந்தவனிற்கு நினைவுகள் அனைத்தும் அவனின் ஜானுவை பார்க்க போகும் குதூகலம் நிறைந்திருந்தது .

அவளிற்காக ஏதாவது வாங்க வேண்டுமென்று நினைத்தான் ஆனால் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை .குறும்புத்தனம் செய்திடும் குழந்தை பெண்ணவளிற்கு கொடுக்க எதுவும் அவனிற்கு தோன்றவில்லை அவளின் கைகுட்டையையே பார்த்துக் கொண்டிருந்தான் .

அவனிற்கு ஏனோ இந்த ஜான்வி புதிதாய் இருந்தாள் .அவள் மேல் தோன்றும் உணர்வுகளும் அவ்விதமே .யோசித்தாலோ அது புரியாத புதிரெனவே தோன்றுகிறது அவனிற்கு .எனவே அவர்களுக்கு மத்தியில் என்ன இருக்கிறது என்று யோசிப்பதையே விட்டு விட்டான் .

நன்றாக தூங்கியவன் அடுத்த நாள் மீட்டிங்கை சிறப்பாக கோயம்பத்தூரில் முடித்தான் .அன்று ஜான்வியோ அலுவலகத்திற்கு சென்றவள் இந்நேரம் வந்திருப்பானா? ஏன் இன்னும் அழைக்கவில்லை ?இன்றும் வழக்கம் போல் தான் அழைப்பானா ?என்று எண்ணிக்கொண்டிருந்தவள் அப்படியே அலுவலகத்திற்குள் செல்ல ஜீவிதாவும் ப்ரவீனுமோ இவள் என்ன செய்கிறாள் என்றே புரியாமல் சுற்றிக்கொண்டிருந்தனர் .

ஜான்வி அவ்விருவரிடம் கூட சொல்லவில்லை இன்று சொல்லி விடலாம் என்று நினைத்தவள் தன்னையே குறுகுறுவென்று பார்க்கும் தனது நண்பர் பட்டாளத்தை அழைத்தாள் .

ஜான்வி"ஹே வானரங்களா இங்க வாங்க "என்க

அவர்கள் முகத்திலோ மரண பீதி தெரிந்தது என்ன செய்ய காத்திருக்கோ குட்டி சாத்தான் என்று நினைத்தபடி அருகில் வந்தவர்கள் நிற்க ஜான்வியோ "அது.... டேய்ய் ஒரு விஷயம் சொல்லுவேன் என்ன திட்ட கூடாது "என்று கூற

அப்பொழுதே தெரிந்து விட்டது விபரீதமான தான் எதையோ சொல்ல போகிறாள் என்று .

பிரவீன் "அது நீ சொல்ற விஷயத்தை பொறுத்து சொல்லு "என்க

அவளோ "அது வந்து கௌதம் இங்க கோயம்புத்தூருக்கு வந்துருக்கானாம் டா "என்க

ஜீவிதா "வந்துட்டு போகட்டும் "என்க

ஜான்வி "அது.... நாளைக்கு மீட் பண்ண போறோம் .வீட்ல காலைலயே ஆபீஸ் வர சொல்லிட்டாங்கனு சொல்லிட்டு வந்துருவேன் நீங்களும் அப்டியே மெய்ண்டைன் பண்ணுங்க ஒருவேளை கேட்டா "என்க

பிரவீனிற்கும் ஜீவிதாவிற்கும் ஐந்து பேதி மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டதை போல் வயிறு கலக்கியது .

ஜீவிதா "அட நாயே இதை முதல்லயே சொல்ல கூடாதா ஒரு வாரம் லீவ போட்டு ஊருக்கு போய்ருப்பேனே.உன் தொம்பிக்கு மட்டும் தெரிஞ்சா எங்க நிலமைய யோசிச்சியா?"என்க

ஜான்வியோ ஈ என்று இளித்தவள் "சொன்னா இந்த பயத்துல நீ என் தம்பி கிட்ட ஒளரிருவேல அதான் சொல்லல "என்க ப்ரவீனும் ஜீவிதாவும் மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டனர் .

பின் ஜான்வி "சரிடா வேலைய பாருங்க மசமசன்னு நின்னுகிட்டு "என்க இருவரும் நம்மள ஒரு வழி ஆக்கிருவா போலயே என்று நினைத்தபடி வேலையே பார்க்க சென்றனர் .

கௌதம் அங்கே மீட்டிங்கை நல்லவிதமாக முடித்திருந்தவன் என்னவோ இப்பொழுதே ஜான்வியை பார்க்க வேண்டும் போல் இருக்க அவளின் இரவு உணவு நேரம் வரும் வரை காத்திருந்தவன் ஒன்பது மணி ஆனதும் அவளிற்கு அழைத்துவிட்டான் .

அழைப்பை எடுத்த ஜான்வி "டேய்ய் என்னடா sharpபா ஒன்பது மணிக்கு கால் பண்ற ?"என்க

அவனோ "அது ஜானு இப்போ சுத்தி யாரும் இருக்க மாட்டாங்களா? "என்று கேட்க

அவளோ குழப்பமாய் சுற்றி பார்த்தவள் "ம்ம்ஹும் இல்லடா ஏன் கேக்குற ?"என்க

அவனோ "அது உன்ன பாக்கணும் போலயே இருக்குடி அதான் video கால் பண்ணவா? "என்க

அவளிற்கு உள்ளுள் சொல்ல முடியாத உணர்வு தாக்கியது பின் தான் எந்த நிலையில் இருக்கிறோமோ என்று நினைத்தவள் "டேய்ய் ரொம்ப tiredaa தெரிவேன் டா "என்க

அவனோ "பரவால்ல நானும் அப்டி தான் இருக்கேன் "என்று கூற அவளும் அரை மனதாய் சரி என்று வீடியோ கால்லாக மாற்றினாள்.

அடுத்த நொடியே அதை அவன் எடுக்க இருவர்க்கும் சிறிது நேரம் ஒருவரின் பார்வையை மற்றொருவர் நிலைகுத்தி நின்றனர்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே உறைய கண்களில் நீண்ட நாள் காணாது கண்டதைப்போல் ஒரு தவிப்பு .

பின் நிலைக்கு வந்த ஜான்வி "பார்த்தாச்சா ?"என்க

அவனும் நிலைக்கு வந்தவன் "ம்ம் இன்னும் கொஞ்ச நேரம் "என்க

அவளோ சிரித்தவள் "இன்னைக்கு என்னாச்சுடா உனக்கு ?"என்க

அவனோ "தெரிலடி ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு "என்க

அவளோ சீரியசாக மாறியவள் "என்னாச்சு ?"என்க

அவனோ ஒரு பெருமூச்சை விட்டவன் "என்னை ஏ. டி .எம் கார்டு மாதிரி யூஸ் பண்ணுறாங்க டி என் அம்மா .கஷ்டமா இருக்கு ....நேத்து கூட காயம்பதோர் போறேன்னு சொன்னேன் எதுவுமே கேக்கல .ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணணுமே nightuku சாப்பிட கொண்டு போறியா ?எப்படி போற எத்தனை நாள் போற ? எதுவுமே கேக்கல "என்று கூறுகையில் லேசாய் கண்களும் கலங்கியதோ அன்னைய் அன்பிற்கு ஏங்கும் சிறு குழந்தையாய் அவள் கண் முன் அவன் .

அவனின் கம்பீரத்தை மட்டுமே கண்டு பழகியவளிற்கு இந்த பக்கம் புதிது .நேரில் இருந்திருந்தாள் மடி சாய்த்து தலை கோதி விட்டிருப்பாள் எனில் முடியாதே என்று தன்னை எண்ணியே நொந்தவள் "கௌதம் வருத்தப் படாதடா கண்டிப்பா புருஞ்சுப்பாங்க "என்று கூற

அவனோ சிரித்தவன் "வாய்ப்பில்லடி. அதெல்லாம் பழகி போனது தான் ஆனா என்ன அப்பப்போ இப்டி திடீர் திடீர்னு ஆச வந்துருது கேக்க மாட்டாங்களானு "என்று கூற

அவளோ சகஜமாக்க எண்ணியவள்"ஆமா என்னடா ஊருக்கு போய் friendsஸோட செம சுத்தல் போல கொஞ்சம் கருத்த மாதிரி இருக்க? "என்க

அவனோ சிரித்தவன் "இங்க வந்து தான் original colour வந்துருக்கு. அது பெங்களூரு குளுருள வெளுத்து போனது "என்று கூற

அவளோ "ஒத்துக்க மாட்டியே "என்று கூற அப்படியே அவர்கள் அழைப்பு நீண்டது .

பின் அடுத்த நாள் சந்திப்பிற்காக ஆவலோடு இருவரும் எதிர்நோக்கி காத்திருக்க பொழுதும் புலர்ந்தது .ஒரு இளநீல நிற டீ ஷர்ட்டிலும் அடர் கருப்பு வண்ண ஜீன்ஸிலும் இறங்கியவள் ஒன்பது மணிக்கே கிளம்பி வந்தாள் .

அவள் சீக்கிரமாய் கிளம்பி வருவதை கண்ட அவள் தம்பி ஆதி சேஷன் "ஹே மினியன் எத்தனை தடவ சொல்லிருக்கேன் இப்டி டிரஸ் போடாதன்னு"என்று திட்ட ஆரம்பித்தவன் அப்பொழுது தான் மணியை பார்த்தான் அது ஒன்பது என்று காட்டியது " ஆமா.... எதுக்கு இன்னைக்கு சீக்கிரமா போற?, "என்க

அவளோ சடன் பிரேக் இட்டு நின்றவள் "ஆபிஸ்ல காலைல வர சொன்னாங்கடா அதான் "என்க

அவனோ "ஓ ஆனா அதுக்கு முந்துன ஷிப்ட்டும் பதினோரு மணிக்கு தான நீ ஏன் இப்போவே போற ?"என்க

அவளோ மனதிலேயே தம்பியை வறுத்தெடுத்தால் கேள்விக்கு பொறந்தவனே என்று "அது,.... தெரியலடா சீக்கரம் வர சொன்னாங்க "என்க

அவனோ அவளை கேள்வியாய் பார்த்தவன் "சரி வா நானே ட்ராப் பண்றேன் எனக்கு இன்னைக்கு லீவு தான்"என்க

அவளோ முதலுக்கே மோசம் பண்ண பாக்குறானே என்ன பண்றது என்று நினைத்து யோசிக்க அவளிற்கு விடாமல் கௌதம் வேறு அழைத்துக்கொண்டிருந்தான் கிளம்பிவிட்டாயா என்று .

அவளை காப்பாற்றவே அங்கு ரேவதியுடன் வந்தாள் அவரின் புதல்வி ராகவி .ரேவதி "சின்னு எப்படி இருக்க ?"என்று கேட்டபடி வர

அவனோ " வாங்க அத்த .நான் நல்லா இருக்கேன்"என்றபடி பின்னே வந்திருந்த ராகவியை கள்ளத்தனமாக பார்க்க ஆரம்பித்துவிட்டான் .

அவளோ அவனை தவிர்த்து எல்லா இடத்திலும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இது தான் நேரம் என்று நினைத்த ஜான்வி "வாங்க அத்த மன்னிச்சுக்கோங்க எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு நா கிளம்புறேன் "என்று கூறி அவர் வாயை திறப்பதற்குள் ஓடி விட்டாள் தனது scootyil .

ஆதி சேஷனோ அதை எதையும் கவனியாமல் ராகவியை தான் பார்த்துக்கொண்டிருந்தான் .ரேவதி பின் சமையற்கட்டிற்குள் சென்றுவிட வரவேற்பறையில் அவனும் அவளும் தான் தனித்து விடப்பட்டனர் .

அவள் அருகில் வந்தவன் "கவி "என்க

அவளோ அவனை முறைத்தவள் "ராகவி ..."என்று கூற

அவனோ "இன்னும் எவ்ளோ நாளைக்கு தான்டி கோபமா இருப்ப உன் ஆதி பாவம்ல "என்க

அவளோ "எது நீயா ?ஆமா அன்னைக்கு என்னடா நா தப்பா சொன்னேன் ?உன் அக்காக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் நடந்தா நம்ம கல்யாணத்துக்கு ஈஸியா பச்சை கோடி காட்திருவாங்கனு தான சொன்னேன் .நீ என்னனா அப்டி என் அக்காவை கட்டாயப்படுத்துனா தான் நீ எனக்கு கிடைப்பதா இருந்தா நீயே எனக்கு வேணாம்னு சொல்லிட்டு போய்ட்ட. அவ்ளோ தான் என்ன புரிஞ்சு வச்சுருக்க இல்ல ."என்று கேட்கும் போதே கண்ணில் கண்ணீர் நிறைந்து விட்டது அவளிற்கு

அவனோ பதறியவன் "ஐயோ கவி "என்று அவள் அருகில் வந்தவன் அதன் பின்னே வரவேற்பறையில் இருப்பதை உணர்ந்து அவளை கையை பிடித்து மேலே அழைத்து சென்றான் .

அவன் அறைக்கு வந்ததும் அறையை தாழிட்டவன் கையை விடுவிக்க போராடியவளை இழுத்து அணைத்துக்கொண்டான் .முதலில் திமிறியவள் அவன் அவள் தலைமுடியை வருடியபடி இருக்க ஒரு கட்டத்தில் அடங்கி அவனை தானும் அணைத்துக்கொண்டாள் .

பின் மெல்லிய குரலில் அவள் காதில் குனிந்தவன் "சாரி டி அத்தை வேற ரொம்ப பிரஷர் பண்ணிகிட்டே இருந்தாங்க அதுகப்புறோம் நீ வேற அப்டி கேட்டியா அவங்க மேல இருந்த டென்ஷனஹ் உன்மேல காட்டிட்டேன் சாரி "என்க

அவளோ "நா சமாதானம் ஆக மாட்டேன் "என்று கூற

அவனோ அவர்கள் இருந்த நிலையை பார்த்து சிரித்தவன் "ம்ம் பரவால்ல செல்லம் மொத்தமா கோபத்தை சேர்த்து வை கல்யாணத்துக்கு அப்ரம் கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுக்குறேன் "என்று கூற

அவளோ அவனை தள்ளிவிட்டவள் "போடா பொருக்கி" என்று கூறியபடி கீழே ஓடிவிட்டாள் சிரிப்புடன் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top