14
ஒரு வாரம் அப்படியே செல்ல கௌதமிற்கு உண்மையிலேயே அடுத்த வாரம் வியாழனன்று ஒரு மீட்டிங் இருந்தது கோயம்பத்தூரில் .அடுத்த நாள் வெள்ளியன்று அவளை சந்தித்து பேசலாம் என்று முடிவெடுத்து அதை ஜான்வியிடமும் கூறி விட்டான் .இருவரும் அங்கிருந்த ஒரு பிரபலமான மாலில் சந்திப்பதாக திட்டமிட்டுக்கொண்டனர்.நாட்கள் அதன் போக்கில் செல்ல ஜான்விக்கு அவனிற்காக ஏதாவது வாங்க வேண்டும் பரிசாக என்று தோன்றியது .
ஆனால் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை.அன்று சனிக்கிழமை ஆதிக்கு அன்று கல்லூரி இருந்ததால் அவன் சென்று விட அவளின் தந்தை அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார் .அப்பொழுது ஜான்வி தொலைக்காட்சியில் ஜாக்கி சான் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென அவள் அருகில் வந்தார் ."ஜான்வி "என்க
அவளோ "ம்ம் சொல்லுங்க "என்றாள்
அவர் "ஏதாச்சு வாங்கிட்டு வரட்டுமாடா வரேல ?"என்க
அவளோ பட்டும்படாமல் மண்டையை ஆட்டினாள் "இல்ல எனக்கு வேணாம் "என்று கூற அவர் வழக்கம் போல் சென்று விட அவளோ மீண்டும் தனது தொலைகாட்சி பெட்டியில் மூழ்கினால் .அவளின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு தான் மனது சற்று பாரமாக போனது .பின் மணி ஆக தனது வேலைக்கு கிளம்பியவள் அலுவலகத்திற்கு சென்று தனது வேளைகளில் மூழ்கி போனாள் .
அன்று கௌதமோ அலுவலகத்திற்கு வந்தவன் எப்பொழுதும் போல் கடுமை இருந்தாலும் அதில் சிறிது புன்னகையும் இருந்தது .அங்கே சென்றவன் வேலைகளை பார்க்க அவனின் அஸ்சிஸ்டான்டை அழைத்தான் .ரோகினி என்று அவளோ நடுங்கியபடி வந்தவள் "என்ன சார் ?"என்க
அவனோ "reports கேட்ருந்தேனே எங்க ?"என்க
அவளோ சுத்தமாக மறந்திருந்தாள் .அவள் திருதிருவென்று முழிக்க அவனோ சிறிது குரல் உயர்த்தியவர் "எங்க ?"என்று கேட்க
அவளோ "அது.... சார் சாரி சார் மறந்துட்டேன் "என்க
அடுத்து அவனிடம் இருந்து திட்டு பயங்கரமாய் விழும் என்று நினைத்தவள் கண்களை மூட அவனோ திட்ட நினைத்தவன் அதன் பின் ஜான்வி கூறிய குணமா சொல்லலாம்ல என்ற வாக்கியம் நினைவில் வர தன் பின் கழுத்தை அழுத்தி தேய்த்து கோபத்தை கட்டுப்படுத்தியவன் "இன்னும் அரை மணி நேரத்துல reportah கொண்டு வாங்க இப்போ போங்க "என்று விட்டு நகர
ரோகினி ஒரு நிமிடம் இது தனது chief தானா என்று கண்களை வெட்டி வெட்டி அவனை பார்த்தவள் அதன் பின் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் .அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் அவனின் கடுமை குறைந்திருந்தது அன்று .
அங்கு வேலைப்பார்க்கும் மேஸ்திரி ஒருவர் கேட்டே விட்டார் "என்ன சார் எப்போவும் கடு கடுன்னு பேசுவீங்களே இன்னைக்கு முகத்துல கொஞ்சம் சிரிப்பு இருக்கு "என்க
அவனோ லேசாய் புன்னகைத்தவன் ஒன்றும் கூறாமல் சென்றுவிட்டான் .அதன் பின் அன்று இரவு என்றும் ஒன்பது மணிக்கு அழைப்பவன் அன்று ஒன்பதே கால் ஆகியும் அழைக்க வில்லை .பாதி உணவை உண்டுகொண்டிருந்தவள் கைக்கடிகாரத்தையும் தொலைபேசியையும் மாற்றி மாற்றி பார்த்தாள் "என்ன இவன் ஒரு பொறுப்பே இல்லாம கால் பண்ணாம இருக்கான் "என்று நினைத்தபடி அவள் இருக்க அடுத்த நிமிடம் அவளை அழைத்திருந்தான் அவன் .
கௌதம் "என்ன மேடம் என்ன பண்றீங்க ?"என்க
அவளோ "என்ன இன்னைக்கு lateuh கால் பண்றதுக்கு ஒரு பொறுப்பே இல்லடா உனக்கு "என்க
அவனோ "அடிப்பாவி இப்போ தான் டி அப்பா கைல gripband போட்டுட்டு போனாரு "என்று உளறியவன் அதன் பின்னே ஐயோ என்று கண்ணை மூடிக்கொண்டான் பதறுவாளே என்று அவன் நினைத்ததை போலவே
அவளோ "grip bandaa எதுக்கு டா? என்னாச்சு கீழ விழுந்தியா ?எப்படி அடிபட்டிச்சு?எங்கேல்லாம் அடிபட்டு இருக்கு ? "என்று படபடவென்று கேட்க
அவனிற்கு அவளின் பதட்டம் ஏனோ இதமான உணர்வை கொடுத்தது தனக்கென ஒருவள் துடிக்கிறாள் என்று அவன் சற்று புன்னகையுடன் அவள் கேட்கும் கேள்விகளை கேட்டபடி அமைதியாய் இருக்க
அவள் "நா கேட்டுட்டே இருக்கேன் என்னடா கனவு கண்டுட்டு இருக்க ?"என்க
அவனோ "நீ எங்கடி என்ன பேச விட்ட? பைக்ல வந்துட்டு இருந்தேன் நடுவுல நாய் வந்துருச்சி. டக்குனு பிரேக் புடிச்சதுல இடறிருச்சு .வேற ஒன்னும் இல்ல கைல லேசா பெசகிருச்சு அவ்ளோ தான் "என்க
அவளோ "பிரேக் புடுச்சா இடருற அளவுக்கு ஸ்பீடா போவியாடா ?"என்று மெள்ளமான குரலில் கேட்க
அவளின் குரலில் இருந்த பயம் அவனை என்னவோ செய்தது "எனக்கு பைக்ல வேகமா போறது ரொம்ப புடிக்கும் டி .சொல்லிருக்கேன்ல அது என்னோட முதல் பொண்டாட்டி மாறி ."எங்க
அவளோ "அவ்ளோ ....... புடிக்குமா "என்க
அவளை போலவே அவனும் "அவ்ளோ...... புடிக்கும் .எங்க அப்பாகிட்ட பைக் கேட்டேன் காலேஜ் படிக்கேல .அவரு கேம்பஸ்ல செலக்ட் ஆனா வாங்கி தரேன்னு சொன்னாரு .முதல் கம்பனிலேயே செலக்ட் ஆகி வாங்குன பைக் என்னது ."என்க
அவனின் குரலிலேயே அவனிற்கு பைக் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று உணர்ந்துகொண்டவள் பின் "சாப்பாடு எப்படி சாப்பிட்ட?"என்க
அவனோ"ஸ்பூன் தான் யார் இவ்ளோ பெரிய பையனுக்கு ஊட்டிலாம் விடுவா? "என்க
அவளோ ஒரு வேகத்தில் "ஏன் நான் ஊட்டி ...."என்று கூறியவள் அதன் பின்னே தான் என்ன கூறுகிறோம் என்பதை உணர்ந்து நாக்கை கடித்தாள்.எனில் கேட்க வேண்டியவனிற்கோ தெளிவாய் கெட்டுவிட்டது அவள் கூற வந்தது .முகம் பிரகாசிக்க உதட்டில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக்கொண்டது .
அப்புறம் அவன் சிரிக்கும் சத்தத்தை கெட்டவள் போனிற்கு வைத்து தன் தலையிலேயே தட்டிக்கொண்டாள்" கடவுளே இப்டி ஒளறிகொட்றியே ஜான்வி "என்று
அவன் பேச்சை மாற்றுவதற்காக "ஆமா ஜானு நைட் சாப்பாடு என்ன? நீ சமச்சியா ?"என்க
அவளோ "சமயலா நானா சுடு தண்ணிய கூட ஒழுங்கா வைக்க மாட்டேன் "என்க
அவனோ "ஓஹ் நீ அந்த dad 's little பிரின்சஸ் caseaah " என்க
அவளோ முகம் சுருங்கிவிட "mom 's little princess " என்றாள் மெல்லிய குரலில் .
அவள் குரலின் பாகுபாட்டை உணர்ந்தவன் "ஹே ஜானு என்னாச்சும்மா ?"என்க
அவளுக்கு ஏனோ சொல்ல வேண்டுமென்று தோன்றியதோ என்னமோ "என் அப்பாவை எனக்கு புடிக்காது கவுதம் .அம்மா தான் எனக்கு கிளோஸ் .அப்பாக்கும் அம்மாக்கும் ஆறு வருஷமா குழந்தை இல்ல .ஆரம்பத்துல எங்கம்மாவை நல்ல பார்த்துக்கிட்ட எங்க அப்பா ரெண்டு வருஷம் கழுச்சும் குழந்த இல்லாம போகவும் எங்கம்மாவை விட்டு ஒதுங்குனார் .அவரும் அவர் அம்மாவும் சேர்ந்து என் அம்மாவுக்கு கொடுக்காத tortureh இல்ல .உடல் ரீதியாவும் மன ரீதியாவும் படுத்தி எடுத்துட்டாங்க .எங்கப்பா அஞ்சாவது வருஷ முடிவுல ரெண்டாவது கல்யாணம் பண்ண போய்ட்டாரு .அப்போ தான் நா என் அம்மாவோட வயித்துல உருவானேன் .அதுனால எங்கம்மா வாழ்க்கை அவங்க கைய விட்டு போகல .ஆனா ஒருவேளை அவங்க கல்யாணத்துக்கப்ரோம் நா உருவானது தெருஞ்சுருந்தா ?இல்ல நா உருவாகாமையே போயிருந்தா ?என் அம்மாவோட நெலமை ?அப்போ எங்க அப்பா எவ்ளோ சுயநலமா இருந்துருக்காரு ? அதுனாலயே அவர்கிட்ட எனக்கு ஒட்டுதல் இல்ல அம்மா கிட்ட தான் தூங்குவேன் அம்மா கூட தான் எதுனாலும் பகிர்ந்துக்குவேன் .அவரும் பேசுவாரு நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுவேன் அவ்ளோ தான் .இதெல்லாம் என் அம்மா என்கிட்டே சொல்லல தெரியுமா என் பாட்டியும் அம்மாவும் எனக்கு எட்டு வயசு இருக்கேல பேசிகிட்டு இருந்ததை கேட்டது தான் "என்க அவனிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை .
அவள் "ஆமா நீ யாரோட கிளோஸ் ?"என்க
அவனோ "ம்ம் கிட்ட தட்ட உன்ன மாறி தான் ஆனா உல்டா அப்பா கூட தான் கிளோஸ் அம்மாவை புடிக்காது "என்க
அவளோ புரியாமல் குழம்பினாள் யாரிடமும் தனது குடும்ப நிலையை கூற கூடாது என்று நினைத்தவன் ஏனோ முதல் முதலாய் ஒரு பெண்ணிடம் கூறினான் "அம்மாவுக்கு என்ன புடிக்காது அக்காவை மட்டும் தான் நல்லா பார்த்துப்பாங்க .நா சம்பளம் குடுக்குற ஏ டி எம் கார்ட் மட்டும் தான் இப்போதைக்கு .சொன்னியே ஊட்டி விட சொல்லலாம்னு .நா ஒரு கிளாஸ் தண்ணி கேட்டாலும் எனக்கு என் சம்பள நாள் அன்னைக்கு தான் என் அம்மா கையாள அது கிடைக்கும்.முதல்ல என் இப்டி பண்றங்கனு யோசிச்சுருக்கேன் அப்பறோம் பழகிருச்சு "என்க அவளிற்கு பாவமாய் போனது .
நான் இருக்கிறேன் என்று கூறி அவனை அணைத்து ஆறுதல் கூற மனம் துடித்தது .அவளின் போக்கு அவளிற்கே விசித்திரமாய் பட்டது .அதன் பின் கௌதம் "ரொம்ப அழுகாட்சியா போகுதுல்ல change the topic . வீட்ல சொல்லிட்டியா என்ன மீட் பண்ண வரேன்னு ?"என்க
அவளோ "வீட்ல ... உன்ன .... பாக்க போறேன்னு சொல்ல .... ஏன்டா நீ வேற ?என் அம்மாவே விட்டாலும் என் எட்டப்பன் தம்பி இருக்கானே அவன் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு போகாதன்னு சொல்லுவான் .வீட்ல வெளிய சுத்தவே விட மாட்டாங்க. பிரவீன் ,ஜீவிதா என்ன பாக்கணும்னாலே வீட்டுக்கு தான் வருவாங்க "என்க
அவனோ "அப்போ எப்படி டி வருவ ?"என்க
அவளோ "காலைலயே ஆபிஸ் வர சொன்னாங்கனு சொல்லிட்டு உன்ன பார்க்க வர வேண்டி தான் அப்பறோம் ஆபிஸ்க்கு போயிருவேன் "என்று கூற
அவனோ "அட கேடி பார்க்க தான் பச்சப்புள்ள மாறி இருக்க. பண்றதெல்லாம் fraudu வேலை "என்க
அவளோ "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா "என்று கூற கௌதம் சிரித்துவிட்டான் திருந்தாதது இது என்று .
பின் நேரமாக அவனும் அவளும் பை என்று கூறி போனிற்கு வைத்தனர் .பின் அவளின் shiftum முடிய ஜான்வி வீட்டிற்கு வந்தாள்.அவளிற்கு இருவரும் சந்திக்கும் பொழுது ஏதாவது வாங்கி தர வேண்டும் என்று தோன்றியது எனில் என்ன வாங்குவது என்று தெரியவில்லை .
கட்டிலில் படுத்தவள் அருகில் இருந்த டேட்டிபெயரை எடுத்து கட்டிக்கொண்டு அதனிடம் பேச துவங்கினால் "வீட்லயும் மாட்டிக்க கூடாது ,ஈஸியா மறைச்சு வைக்கணும் ,அவனுக்கும் புடிக்கணும் என்ன வாங்குறது?" என்று யோசித்தவள் யோசிக்க யோசிக்க நேரம் தான் போனது .
பன்னிரண்டு மணி ஆகிவிட்டதை உணர்த்த அவளின் அறையிலிருந்த கடிகாரத்திலிருந்த குருவி மூன்று முறை ஒலி எழுப்ப அவளோ அதனிடம் திரும்பியவள் "சரி சரி கத்தாத தூங்கிருறேன் "என்றுவிட்டு உறங்கிவிட்டாள்.
அடுத்த நாள் ஞாயிறு ஆதலால் அயர்வாகவே ஒன்பது மணிக்கு எழுந்து பொட்டு வைப்பதற்காக eyelinerai எடுத்தவள் அப்பொழுதே கவனித்தாள் அது முடிந்திருப்பதை .
இது வேறயா என்று நினைத்தவள் கீழே வந்து "அம்மா eyeliner முடுஞ்சுது போய் வாங்கிட்டு வரேன் "என்று கூறி scootyil ஒரு fancy கடைக்கு சென்றாள் .
அண்ணா ஒரு eyeliner என்று கேட்டவள் அங்கிருந்த பொருட்களை ஆராய அவளின் கண்ணில் மாட்டியது ஒரு keychain .
அதன் அருகில் சென்றவள் அதை பார்த்தாள் .ஒரு பைக் போன்ற வடிவத்தில் பாதுகாப்பாய் வண்டியை செலுத்து நீ எனக்கு வேண்டும் என்னுடன் இருக்க என்ற வாக்கியத்தை தாங்கி இருந்தது ஆங்கிலத்தில் .அதை பார்த்தவளிற்கு முதலில் தோன்றியது கௌதமின் முகம் தான் .அதை எடுத்தவள் அண்ணா இதை சேர்த்து பில் போட்டுருங்க .என்று கூறினாள்.புன்னகையுடன் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top