13
பதினோரு மணி ஆன பிறகு வீட்டிற்கு வந்த ஜான்வி தனது மெத்தையில் விழுந்தவள் இன்று நிகழ்ந்த நினைவுகள் அனைத்தையும் ஒன்றொன்றாய் புரட்டி பார்த்தாள்.அவனுடன் பேசிய அந்த 5 நிமிட பேச்சு ஏனோ அவளின் முகத்தில் இன்றும் புன்னகையை கொடுக்க அங்கிருந்த நாட்காட்டியை பார்த்தவள் இரண்டு வாரம் விரைவாக செல்ல வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
அடுத்த நாள் வழக்கத்தை விட சற்று வேகமாய் எழுந்தவள் போனினை பார்க்க அதில் குட் மோர்னிங் என்று வந்திருந்தது கௌதமின் எண்ணிலிருந்து.
அதை பார்த்து புன்னகைத்தவள் தானும் குட் மோர்னிங் என்று அனுப்பி வைத்தால் .அதன் பின் தனது அன்றாட வேலைகளை பார்க்க சென்றாள்.
அவனோ உடற்பயிற்சி செய்து வந்தவன் அவளின் குட் மோர்னிங்க்கை பார்த்து புன்னகைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் .காலை ஒன்பது மணி போல் அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வந்தவனிற்கு அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது "என்ன பண்ற சாப்டியா" என்று
அவனிர்கு ஏனோ அந்த சாப்டியா என்ற விசாரிப்பு சற்று இதத்தை தந்தது .அவனிற்கு இதுவரை நண்பர்களும் அவ்வளவாக இல்லாமல் இருக்க தந்தையும் சாப்பிட்டாயா என்றெல்லாம் கேட்க மாட்டார் சாப்பிடுகிறானா என்று பார்ப்பதோடு சரி .
இன்று அவள் கேட்டது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க எனில் நன்றாக தான் இருந்தது "ம்ம் சாப்பிட்டேன் நீ" என்க
அவளோ "இப்போ தான் சாப்ட்டேன். என்ன பண்ற ?"என்க
அவனோ அவனது r 1 5 பைக் அருகில் வந்தவன் "wife கிட்ட நிக்குறேன் "என்று கூறியபடி நேரத்தை பார்க்க அதுவோ இன்னும் அரை மணி நேரத்தில் நீ அலுவலகத்தில் இருக்க வேண்டுமடா மடையா என்று கூறியது .
ஓ ஷிட் இவ கிட்ட பேசுனா நேரத்தையே மறந்துருறேனே என்று நினைத்தவாறு அதை ஸ்டார்ட் செய்து சிட்டாய் பறந்து விட்டான் .இங்கோ அவன் கூறிய wife என்றதில் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தபடி அவனிடம் பேசியவாளிற்கோ புரை ஏறி விட்டது .
ஆதி அவள் தலையிலேயே தட்டியவன் "தண்ணி குடிக்கேல என்ன போன் வேண்டி கெடக்கு அப்டி போடுடி "
என்று கூறிவிட்டு அவள் போனினை பிடுங்கி அங்கிருந்த sofaavil போட்டவன் அவள் தலையில் தட்டி விட்டு தனது காலை உணவை உண்ண சென்றான் .
அவன் சென்ற பின் போனிடம் சென்றவள் வேகவேகமாய் "என்னது wifeaah ?என்று கேட்க
அவள் போதாத காலமோ என்னவோ அவன் offline சென்றிருந்தான். அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான் போல இனி இரவு தான் ஆன்லைன் வருவான் சுத்தம் என்று நினைத்தவள் அதையே யோசித்தபடி அமர்ந்திருந்தாள் .
அரை மணி நேரமாய் shinchanனை ஓட விட்டு விட்டு ஏதோ ஓர் யோசனையில் இருந்த தனது அக்காவை பார்த்து அவள் அருகில் வந்தவன் "என்ன மினியன் யோசனைலாம் பலமா இருக்கு ?"என்க
அவளோ "ஆங் அதெல்லாம் ஒன்னும் இல்லடா நீ காலேஜ் போ "என்க
அவனோ அவளை குழப்பமாய் பார்த்தவன் "என்னவோ சொல்ற இல்லாத மூளையை வச்சு ரொம்ப யோசிக்காத"என்று கூறியவன் அவள் தலையை களைத்து விட்டு சென்றுவிட்டான் .
அவளோ யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் நாம கேட்ட வரைக்கும் இந்த angry birdக்கு யாரும் பொண்ணுங்க சவகாசமே இல்லையே அப்பறோம் யாரை wifenu சொன்னான் ?திவ்யாவா இருக்குமோ "என்று
நினைத்தவள் ஒருமுறை இருவரையும் மனத்திரையில் இணைத்து பார்க்க அவளால் மூன்று நொடிக்கு மேல் இணைத்து யோசிக்க முடியவில்லை "அட செய்ய் அவளா இருக்காது அப்போ யாரா இருக்கும்"என்று
நினைக்க மனசாட்சியோ "ஏன்டி யாரா இருந்தா உனக்கென்ன? ஏன் இப்டி லூசு மாறி யோசுச்சுகிட்டே இருக்க ?"என்க
அவளோ "உங்கிட்ட இப்போ கேட்டேனா அமைதியா உக்காரு "என்று மீண்டும் அதே யோசனையில் இருந்தாள்.
அப்படியே இருந்தவள் அவளின் அன்னை அழைத்ததும் மதிய உணவை உண்ண சென்றாள் .பின் அலுவலகத்திற்கு வந்தவள் அதே யோசனையில் இருக்க ப்ரவீனும் ஜீவிதாவுமோ அவளை காண வழக்கம் போல் வந்தவர்கள் அவளின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் கண்டு குழம்பினர்.
பிரவீன் அவள் அருகில் வந்தவன் "என்னடி இப்டி யோசனைல இருக்க ?"என்க
அவளோ "யார்டா அவனோட wifeaah இருப்பா ?"என்க
பிரவீனிற்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை
ஜீவிதா "என்னடி உளறுற ?"என்க
ஜான்வியோ காலையில் நடந்த உரையாடலை கூறியவள் "யாரடா அப்டி சொல்லிருப்பான் ?"என்க இருவருக்கும் சிரிப்பதா அழுவதா என்றாகிவிட்டது .
ஜீவிதா கிண்டலாக "ஏன் அவர்கிட்டயே போன் பண்ணி கேளேன் "என்க
ஜான்வியோ "செம ஐடியா இந்தா கேக்குறேன் "என்று போனினை எடுத்தவள் அவனிற்கு அழைப்பு விடுக்க துவங்கிட இருவரும் நடப்பதை பார்க்க துவங்கினர் .
அப்பொழுது கௌதமோ ஏதோ தவறாக செய்து வைத்தார்கள் என்று தனது ஜூனியரை கத்திக்கொண்டிருந்தவன் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தான் .
அது வரை கத்திக்கொண்டிருந்தவன் முகம் சட்டென்று எப்படி தான் அத்தனை கூலாக மாறியதோ எடுத்தவன் "சொல்லு ஜானு "என்க
அவளோ "அது,..... நீ freeயா ?"என்க
அவனோ "வேலைல தான் இருக்கேன் என்னனு சொல்லு "என்க
அவளோ "ஓ அப்போ அப்பறோம் பேசுறேன் "என்க
அவனோ "அதெல்லாம் ஒன்னும் வேணாம் .அதான் கேட்க வந்துட்டேள என்னனு கேளு "என்க
அவளோ "அது....காலைல wifeனு சொன்னியே யாரை சொன்ன ?உனக்கு தான் லவ்வர் இல்லையே அப்போ யாரை சொன்ன "என்க
அவனிற்கோ லேசாய் இருந்த கடுமையும் போய் புன்னகை பூத்துவிட்டது .புன்னகையுடன் அந்த போனினை எடுத்து தன் தலையிலேயே தட்டிக்கொண்டவன் "அது என் பைக் ."என்க
அவளோ அது வரை யாரென்று தெரியாமல் தனது கைக்குட்டையை கசக்கி கொண்டிருந்தவள் அதன் பின்னே கையை விரித்தாள் .
முகத்தில் புன்னகை தோன்ற மூச்சு அப்பொழுது தான் சீராக வெளி வந்தது "லூசு ஒழுங்கா சொல்ல மாட்டியாடா காலைல இருந்து டென்ஷனாவே இருந்தேன் "என்று கூற
அவனோ "நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற ?"என்று கேட்க
அதையும் அவனிடமே கேட்டாள் "ஆமால்ல எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறேன் "என்று கேட்க அவனிற்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
அவன் முகத்தில் இருந்த புன்னகையோ விரிந்து கொண்டே சென்றது "ம்ம் மூளைல ஒன்னும் இல்லனா இப்டி தான் யோசிக்க தோணுமாம் "என்று கூற
அவளோ "அப்டியா .."என்றவள் அதன் பின்னே அவன் கூறியதன் பொருள் உணர்ந்து "அடிங்குஹ்"என்று கூற
அவனோ அங்கு மீண்டும் யாரோ வேலை செய்யாமல் ஓ பீ அடிப்பதை பார்த்தவன் போனில் இருப்பதை மறந்து "அறிவுகெட்டவங்களா நா என்ன சொன்னா நீங்க என்ன பண்றீங்க ?"என்று உச்சஸ்தானியில் கத்த ஒரு நிமிடம் ஜான்விக்கு இங்கு அவன் கத்திய கத்தலில் உடல் தூக்கி போட்டு விட்டது .லேசாய் அழுகை எட்டி பார்க்க துவங்கி விட்டது .
அப்பொழுதே அவள் போனில் இருப்பதை உணர்ந்தவன் "ஹே சாரி ஜானு இங்க வேலை ஜாஸ்தி அப்பறோம் பேசுறேன்மா "என்று கூறி வைத்துவிட்டான்.
அவளோ கிட்ட தட்ட அழும் நிலைக்கு சென்றவள் அதன் பின் அவனின் இதமான பேச்சிலேயே சற்று அமைதியாகி வைத்தாள்.ப்ரவீனும் ஜீவிதாவும் அவளின் பாவனைகளை பார்த்தபடியே தான் இருந்தனர் .
அவர்களை பார்த்ததும் அசடு வழிய சிரித்தவள் "ஈ அது அவனோட பைக் ஆம் டி "என்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் பின் ஒரு சேர அவள் முன் "தூ "என்று துப்பினர்.
அவளோ துப்புனா தொடச்சுக்குவேன் என்று கூறியவள் பின் "வேல வெட்டி இல்லையாடா உங்களுக்கு என்னையே பாத்துகிட்டு போய் வேலைய பாத்து புள்ளகுட்டிய படிக்கச் வைங்கடா "என்க
அவர்களோ "friend ஏதோ பீலிங்க்ல இருக்காளேன்னு பேச வந்தோம் பாத்தியா எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என்று நினைத்துக்கொண்டவர்கள் தலையில் அடித்தபடி தங்கள் வேலைகளை காண சென்றனர் .
இங்கு கௌதமோ சிரித்தபடி போனினை வைத்தவன் திரும்ப அவனின் ஜூனியரோ அவனை ஏதோ விசித்திர ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்தாள்.
அவள் பார்வையில் குழம்பியவன் சற்று கடுமையோடு "வாட் எதுக்கு என்னையே பாக்குறீங்க ?"என்க
அவளோ "அது,,,, வந்து சார் நீங்க சிரிச்சு முதல் தடவி பார்த்தேனா அதான்.... அப்பப்போ இப்டி சிரிக்கலாமே"என்று கூற
அவனோ ஒற்றை புருவத்தை தூக்கியவன் "நா என்ன இங்க பல்பொடி விளம்பரமா நடத்துறேன் எப்பப்பாரு ஈ னு இருக்க ?போய் வேலைய பாருங்க"என்று கத்த
அவளோ" அப்போவே போயிருக்கலாம் இவன்கிட்ட போய் வாய குடுத்தேன் பாரு சரியான முசுடு" என்று நினைத்து தன்னையே நொந்தவள் வேலைகளை பார்க்க செல்ல .
அவனோ மணியை பார்த்தவன் இரண்டு இருபது என்று காட்ட அவளை அழைத்தான் "ரோகிணி "என்று
அவள் "அய்யயோ அடுத்து என்ன சொல்லப் போறானோ" என்று நினைத்து திரும்ப
அவனோ "நேரமாச்சு எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க இன்னும் அரை மணி நேரத்துக்கு யாரும் வேலை பாக்க கூடாது எல்லாரும் சாப்ட்ருக்கனும் புரியுதா "என்க
அவளோ புரிந்தவாறு தலை ஆடியவள் இவன் நல்லவனா இல்ல கெட்டவனா என்று குழம்பியவாறு அனைவரையும் உண்ண சொல்ல சென்று விட்டாள்.
அப்படியே அன்றைய நாளும் கரைய கௌதமோ ஆறு மணி போல் வீட்டிற்கு வந்தவன் வழக்கம் போல் தன் அறையிலேயே அடைந்துகொண்டான் .
அரசாங்க வேலைக்காக வரும் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தவன் அதை எடுத்து வைக்க மணி ஒன்பது என்று காட்டியது .அவள் நேற்று தனியாய் சாப்பிட பிடிக்காது என்று கூறியது ஞாபகம் வர அவளின் எண்ணிற்கு அழைத்தான் .
ஜான்வி வழக்கம் போல் இரவுணவு உண்ணுவதற்காக அதை பிரித்து வைத்தவள் கௌதமிடம் இருந்து அழைப்பு வர உற்சாகத்தோடு எடுத்து காதில் வைத்தவள் உணவு பொட்டலத்தை பிரித்தவாறு பேசினாலள்.ஜான்வி "என்ன சார் வேலைலாம் முடுஞ்சுதா ?"என்க
அவனோ "அப்போவே முடுஞ்சுது இவ்ளோ நேரம் prepare பண்ணிக்கிட்டு இருந்தேன் "என்க
அவளோ "என்ன preparation ?'என்க
அவனோ "government வேலைக்காக எண்ட்ரன்ஸ் எக்ஸாம்க்கு prepare ஆகுறேன் எப்போ அனௌன்ஸ் பண்ணுவாங்கனு தெரியல "என்க
அவளோ "சூப்பர்பா ஏன் இந்த வேலை புடிக்கலயா ?"என்க
அவனோ "அதெல்லாம் ஒன்னும் இல்ல டி. எனக்கு salary பத்தலை அதான் எழுதுறேன் "என்க
அவளோ "அது சரி வாழ்த்துக்கள் அப்பறோம் வேலைலாம் எப்படி போச்சு ?"என்க
அவனோ "எங்க இவங்கள வச்சுக்கிட்டு வேலை வாங்குறதுக்குள்ள என் உயிர் போயிருது "என்க
அவளோ அவன் கத்தியது நினைவில் வர சற்று தயங்கியவள் "எதுக்கு அப்டி கத்துற குணமா சொல்லலாம்ல "என்க
அவனிற்கு ஒரு குழந்தை அதன் அப்பா அம்மாவிடம் அடிக்காம திட்டாம குணமா சொல்லணும் என்று கூறும் காட்சி நினைவில் வர அவள் அந்த குழந்தையின் செய்கைகளுடன் கூறுவதை போல் நினைத்துக்கொண்டவன் பக்கென்று சிரித்துவிட்டான்.சிரித்தபடி"இங்க அப்டி சொன்னாளாம் வேல நடக்காதுமா "என்று கூற
அவளோ "நீ சொல்லி பாரு கேப்பாங்க இப்டி கத்தாத பாவம்ல "என்று கூற
அவனோ"இது வரைக்கும் யாரும் சொன்னதில்லை ....நீ சொல்ற ட்ரை பண்றேன் "என்க
அவளோ புன்னகைத்தாள் "சாப்பிடலையா ?"என்க
அவனோ "இல்ல இனி தான் .நீ சாப்டியா ?"என்க
அவளோ "உன் புண்ணியத்துல சாப்பிட்டு முடுச்சுட்டேன் "என்க
அவனோ "ம்ம் அப்போ சரி பை குட் நைட் "என்க
அவளோ அவ்ளோதானா என்று மனதில் நினைத்தாலும் வெளியே "ஓகே பா குட் நைட் "என்று கூறி வைத்துவிட்டாள் .
போனினை வைத்தவனின் மூளையில் இருந்த அலுவலக சோர்வும் மனதில் இருந்த கவலைகளும் ஏதோ பறந்து போனதாய் ஒரு உணர்வு ஏற்பட அங்கு திரை அரங்கில் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை எடுத்து அதில் அவள் பிம்பத்தை பார்த்தவன் "வித்தியாசமானவை ஜானு நீ "என்று கூறிவிட்டு அதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் .பின் உணவுண்ண சென்றவன் அப்படியே உறங்கியும் போனான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top