12

அடுத்த நாள் காலையில் சூரியன் தனது வரவை உணர்த்தி கிழக்கில் உதிக்க வழக்கம் போல் தனது அன்னையின் அர்ச்சனைகளுக்கு பின் தான் துயில் களைந்து எழுந்தாள் ஜான்வி .எழுந்ததும் மணியை பார்க்க அதுவோ எட்டு என்றது அவசர அவசரமாய் தனது போனினை எடுத்தவள் என்ன பதில் அவனிடமிருந்து வந்திருக்கின்றது என்று பார்க்க கௌதமோ "who are you ?"என்று கேட்டிருந்தான்

அதை பார்த்ததும் கோபம் சுறுசுறுவென்று ஏற நா யாருன்னா கேக்குற போடா பாடி பில்டர் என்று திட்டி விட்டு பதில் அனுப்பினாள் "கண்டுபுடி என்று " .

பின் அவளின் அன்னை கீழிருந்து வசை பாடுவது மேல் வரை கேட்க உள்ளே குளிக்க சென்றுவிட்டாள் ஜான்வி .கௌதமோ உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு தனது அறைக்கு உள்ளே வந்தவன் தனது போனினை பார்க்க அதிலோ அவன் யாரென்று தெரியாமல் "who are you ?" என்று கேட்ட எண்ணிலிருந்து கண்டுபுடி என்று வந்திருந்தது.

கௌதமிற்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது .வாட்ஸப் user name எதுவும் இல்லை, முகப்பு படத்தில் ஒரு குழந்தை அழகாய் தூங்கிக்கொண்டிருக்கும் படம் இருந்தது .இதை வைத்து எப்படி ஒருவன் கண்டுபிடிப்பான் என்று நினைத்தவன் பதிலிற்கு " நீ யாரா வேணா இருந்துட்டு போ தேவை இல்லாம என் timeah வேஸ்ட் பண்ணாத "என்று அனுப்பி விட்டு தனது அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமாகி விட்டான் .

குளித்து முடித்து தனது சுடி டாப் பேண்டுடன் வெளியில் வந்தவள் கீழே தனது போனுடன் அமர்ந்து காபீ குடித்தபடி அவன் என்ன அனுப்பி இருக்கிறான் என்று பார்த்தாள்.

அவன் அனுப்பி இருந்த பதிலை பார்த்தவள் மனம் சுருங்க "அதுக்குள்ள என்ன மறந்துட்டியா ?"என்று அனுப்பினாள்

கௌதமோ அலுவலகத்திற்கு கிளம்பி விட்டு சிறிது நேரம் போன் பார்த்துக்கொண்டிருந்தவன் "ஒழுங்கா யாருனு சொல்லு இல்ல பிளாக் பண்ணிருவேன் "என்று கூற

அவளோ செய்தாலும் செய்து விடுவான் என்று எண்ணி "ஜான்வி "என்க

அவனிற்கோ முகத்தில் அது வரை இருந்த இறுக்கம் எங்கு தான் சென்றதோ முகம் லேசாய் மலர "ஹே ஜானு நீ தானா "என்று கேட்க ஜான்விக்கு இரண்டு வாரங்களுக்கு பின் கிடைக்கும் ஜானு என்ற அழைப்பில் உடலில் அணைத்து நரம்புகளும் எழுந்து நிற்பதை போன்று சில்லென்ற உணர்வு உடலை ஆக்கிரமிக்க இதழ்களோ ஒரு குருநகையில் விரிந்தது .

பின் அவள் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு "போடா நீ என்ன கண்டுபிடிக்கவே இல்ல "என்று கூற

கௌதமோ அவளின் குழந்தைத்தனத்தில் சிரித்தவன் "நீ தெரிஞ்சு தான் பண்றியா இல்ல தெரியாம பண்றியா ?user name இல்ல ,dpla உன் போட்டோ இல்ல அப்பறோம் எப்படி கண்டுபிடிப்பேன்?"என்று கேட்க

தனது புத்திசாலித்தனத்தை எண்ணி அசடு வழிந்த ஜான்வியோ சிரிக்கும் ஒரு குழந்தையின் ஸ்டிக்கரை அனுப்பி வைத்தாள்

"ஈ ஆமால்ல "என்க

அவனோ "ஆமா அறிவுக்கொழுந்து "என்றான் .அதன் பின் அலுவலகத்திற்கு நேரமாகிவிட கௌதம்"ஓகே ஜானு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன் "என்று கூறியவன் பின் என்ன நினைத்தானோ "உன் ஆபீஸ் timing என்ன ?"என்று கேட்க

அவளோ "ரெண்டு மணியில இருந்து பதினோரு மணி வரைக்கும் "என்க

அவனோ "ஓஒ பிரேக் எப்போ ?"என்க

அவளோ "அது ஒரு nine போல நா போவேன் எல்லாரும் ஒரே timela போக கூடாது "என்று கூற

அவனோ "ம்ம் ஓகே free ஆனா கால் பண்ணு பை"என்று விட்டு சென்று விட்டான்

அவளும் "ஓகே பை "என்று விட்டு போனினை அணைத்துவிட்டால் .மனம் ஏனோ லேசாய் இருந்தது .முகத்தில் இரண்டு வாரங்களாக காணாமல் போய் இருந்த புன்னகை ஒட்டிக்கொள்ள தொலைக்காட்சியில் பாடல்களை ஓட விட்டாள்.

அதில் முன் பனியா முதல் மழையா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது .கௌதமிற்குமே இன்று ஏனோ அவளிடம் பேசியபின் மனதின் ஓரத்தில் ஏதோ இதமாய் ஒரு உணர்வு பரவ என்றும் இல்லாத அதிசயமாய் லேசாய் உதட்டில் உறைந்த புன்னகையுடன் அலுவலகத்திற்கு தயாரானான் கௌதம் .

அவனை கண்ட அவனின் தந்தை "என்னடா மகனே எதையோ நெனச்சு சிரிக்குற மாறி இருக்கு ?"என்று கேட்க

அவனோ தோளை குலுக்கியவன் "ஒன்னும் இல்லப்பா"என்று விட்டு வெளியே சென்று விட்டான் .

அலுவலகத்திற்கு சென்றவன் தனது வேலைகளை பார்க்க இங்கு ஜான்வியும் இரண்டு மணி வரை பொழுதை நெட்டி தள்ளியவள் தனது அலுவலகத்திற்கு சென்றாள்.ஜீவிதாவும் ப்ரவீனும் தங்களது வேளையில் மூழ்கி இருப்பவர்கள் ஜான்வி உள் நுழையும் நேரம் தான் லஞ்ச் முடித்துவிட்டு வருபவர்கள் சிறிது நேரம் அவளுடன் அரட்டை அடித்து விட்டு அவரவர் பணியை கவனிக்க செல்வர் ,அன்று அவ்வாறே அவளை காண சென்றவர்களுக்கு முப்பத்தி இரன்டு பல்லும் தெரியுமாறு ஒரு புன்னகையை சிந்தினால் ஜான்வி .

பிரவீன் "ஜீவி என்ன இவ பால் விளம்பரத்துக்கு வர பசு மாடு மாறியே பல்ல காட்டுறா ?"என்க

ஜீவிதா "அதான்டா நானும் யோசிக்குறேன் ஏதாச்சு வில்லங்கம் பண்ணா தான இப்டி சிரிப்பா "என்று கூற

பிரவீன் "என்ன ஏழரையோ "என்று நினைத்தபடி அவள் அருகில் சென்றவர்கள் அவள் முகத்தையே குழப்பத்துடன் பார்க்க

ஜான்வி "இன்னைக்கு நா என்ன பண்ணேன் தெரியுமா ?"என்று கேட்க இருவருக்கும் மனதில் அபாய சங்கு ஊதியது .

ஜான்வியே தொடர்ந்தாள்"கௌதம் கிட்ட பேசினேன் "என்று கூற

இருவருக்கும் மைல்டு அட்டாக் வராத குறை தான் வேதாளம் விடாமல் முருங்கை மரம் ஏறுகிறதே என்று .ஜீவிதா "அவங்க ரிப்ளை பண்ணாங்களா ?"என்க

அவளோ "ஹான் பண்ணானே ஆபிஸ் timing கேட்டான் free timela கால் பண்ண சொல்லிருக்கான் "என்க இருவருக்குமே அதிர்ச்சி தான் .

இருவருமே ஜான்வியின் போக்கில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து திவ்யாவிடம் கௌதமை பற்றி விசாரித்தனர் .கௌதம் அவ்வளவு எளிதில் தனது நம்பரை யாருக்கும் தர மாட்டான்.முகநூலில் அவன் நம்பர் இருந்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமாய் நினைக்கும் நபர்களை தவிர்த்து எவருடனும் பேச மாட்டான் .அப்படி இருப்பவன் அவளிடம் கால் செய்து பேசு என்று கூறுவது எட்டாவது அதிசயம் தான் .

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மனதில் இது நல்லதில்லை என்று வாக்கியம் தோன்றியது .பின் அவளின் முகத்தை திரும்பி பார்க்க அதுவோ ஆயிரம் வாட்ஸ் புல்புஹ் போட்டதை போல் இருந்தது .அதையும் பார்த்தவர்கள் எங்க கொண்டு போய் விட போகுதோ என்று நினைத்தபடி தனது இருக்கைக்கு சென்றனர் .ஜீவிதாவிற்கு மனக்கண்ணில் அவளின் தம்பி ஜான்வியிடம் காலேஜ் படிக்கையில் ஒருவன் பின் தொடர்ந்ததுக்காக புரட்டி புரட்டி எடுத்தது நினைவில் வந்து பயத்தை கொடுத்தது .

எட்டு மணிக்கு shift முடிந்து ஜீவிதாவும் ப்ரவீனும் சென்று விட ஒன்பது மணி அளவில் தனது இரவுணவை உன்ன சென்றாள் ஜான்வி .அங்கு பெங்களூரில் இருப்பதை போல் அனைவரும் ஒரே நேரத்தில் இங்கு உணவிற்கு செல்ல முடியாது .ஆதலால் பெரும்பாலும் ஜான்வி தனிமையிலேயே உணவை உண்பாள்.

அவள் வெறுக்கும் ஒரு சில விஷயங்களில் இதுவும் ஒன்று சாப்பிட சென்றவள் ஏதோ தோன்ற அவன் onlineil இருக்கிறானா என்று பார்த்தாள் .அவன் onlineil இருக்கவும் என்ன தோன்றியதோ ஒரு வேகத்தில் அவனின் எண்ணை அமுக்கி அழைப்பு விடுத்தாள் .

ஒவ்வொரு ரிங்கும் போக அவளிற்கு மனதில் ஏதோ ஒரு வித உணர்வு எழுந்தது .சரியாக மூன்றாவது ரிங் முடியப்போகும் வேளையில் எடுத்தவன் "சொல்லு ஜானு "என்று கூற

அந்த குரலில் கேட்ட ஜானுவின் ஒரு நொடி உருகியவள் பின் தயங்கி "அது... கௌதம் நீ freeyaah ?"என்று கேட்க

அவனோ தன் laptoppil போட்டுக்கொண்டிருந்த planai அப்படியே shut down செய்தவன் balconykku வந்து நின்றான் "ம்ம் பிரீ தான் என்ன சொல்லு ?"என்க

அவளோ "ஒண்ணுமில்லப்பா இங்க நைட் டின்னெர்க்கு தனியா தான் சாப்பிடணும் .எனக்கு இந்த தனியா சாப்பிடுறது சுத்தமா புடிக்காது அதான் பேசிகிட்டு இருக்கலாம்னு கால் பண்ணேன் "என்க

அவனோ புன்னகைத்தவன் "ஒஹோ அப்போ என்கிட்டே பேசணும்னு கூப்பிடல ?"என்க

அவளோ "ஆமாமா அப்டியே sirukku என் ஞாபகம் இருந்து எப்போ பேசுவேன்னு காத்துகிட்டு இருக்குற மாறி தான் "என்க

அவனோ என்றும் தன்னோடு அவன் வைத்திருக்கும் அவளின் கைக்குட்டையை அந்த இரவு உடையின் பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் அதை பார்த்தபடி "எதுக்கு காத்திருக்கணும் "என்க

அவளோ "ஆமால்ல எதுக்கு காத்திருக்கணும் "என்று அவனிடமே திருப்பி கேட்க

கௌதமிற்கோ அவளின் இந்த செய்கைகளை கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை .பின் அவளிடம் "ஆமா காலைல இருந்து வேலைக்கு வர வரைக்கும் என்ன பண்ணுவ ?போர் அடிக்காதா ?"என்க

அவளோ "அது... சொல்லுவேன் ஆனா கலாய்க்க கூடாது "என்க

அவனோ "ஏன் அப்டி என்ன பண்ணுவ ?"என்க

அவளோ இளித்தவள் "அது டோரா புஜ்ஜி பாப்பேன் இல்ல shinchan பாப்பேன் "என்க

அவனோ அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் .அவன் சிரிப்பதில் குழம்பியவள் "எதுக்கு சிரிக்கிற ?"என்க

அவனோ "இல்ல உன் kerchief தான் அப்டி குழந்தைத்தனமா இருக்குமோனு பாத்தேன் ஆனா கடைசில நீ பாக்குற ப்ரோக்ராமும் அப்டி தான் இருக்கு "என்க

அவளோ "எது என் kercheifaah...அது எப்படி உன்கிட்ட ?"என்க

அவனோ "தியேட்டர்ல மிஸ் பண்ணிட்ட என்கிட்டே தான் இருக்கு "என்க

அவளோ "அச்சோ உன்கிட்ட இருக்கா அது .அது என்னோட favourite kerchief தெரியுமா? தேடிகிட்டே இருந்தேன் கடைசில உன்கிட்ட இருக்குதா "என்று கூற

அவனோ "அவ்ளோ favouriteaah அது ?"என்க

அவளோ "ம்ம் ஆமா அது கூட இருந்தா என்னவோ எல்லாமே நல்லா நடக்குற மாறி இருக்கும் ஒரு செண்டிமெண்ட் "என்க

அவனோ "ம்ம் ஓகே குடுத்துருறேன் "என்று கூற

அவளோ சிரித்தாள் "எப்படி parcellayaa ?"என்க

அவனோ புன்னகை புரிந்தவன் "ஏன் நேர்ல குடுத்தா வாங்கிக்க மாட்டியா ?"என்க

ஜான்விக்கோ விழுங்கிய உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது .சிரமப்பட்டு தன் உணவை விழுங்கியவள் "ஹே விளையாடாத "என்று கூற

அவனோ "நா ஏன் விளையாட போறேன் ?அங்க ஒரு வேலையா ரெண்டு வாரம் கழுச்சு வரேன் அப்டியே குடுத்துட்டு போறதுல எனக்கு எந்த பிரெச்சனையும் இல்ல உனக்கு ஏதாவது இருக்கா? "என்று அவன் கூற

அவளிற்கோ புஸ்சென்றாகி விட்டது வேலை இருக்குறதால வரானா என்று நினைக்க மனசாட்சி "அப்பறோம் உனக்காக பதினஞ்சு மணி நேரம் travel பண்ணியா வருவான் ?"என்று கிண்டலடிக்க அதன் தலையில் தட்டி அமைதிப்படுத்தியவள் "ம்ம் ஓகே எப்போன்னு சொல்லு வரேன் "என்று கூற

அவனும் "ஓகே confirm பண்ணிட்டு சொல்றேன் பை குட் நைட் ஜானு "என்று வைக்க அவளும் புன்னகையோடு வைத்தாள் மனதில் அம்மாவிடம் என்ன சொல்வதோ வெளியில் செல்வதற்கு என்று யோசனையோடு

அவனோ அப்புறம் போனினை வைத்தவன் எதை சொல்லி இல்லாத வேலையை உருவாக்குவது என்று யோசித்தான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top