4
அடுத்த நாள் காலை சைந்தவியின் ஸ்பெஷல் ஸ்பாட்டான விநாயகர் சிலையின் அருகே அவளின் நண்பர்கள் அனைவரும் அவளின் வருகைக்காக காத்திருந்தனர் அவள் ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்று கூறியதால் .சரண் "ஏண்டா இவ்ளோ நேரமாச்சு இந்த பூசணி என்னடா பண்ணிக்கிட்ருக்க என்னைக்கும் இல்லாத திருநாளாமுக்கியமான விஷயம் பேசணும்னு வேற சொல்லிருக்கா என்னவா இருக்கும் ?"எங்க அங்கே ஷ்ரவனோ வினீஷாவிடம் பேச விடாமல் படுத்துகிறான் என்ற கடுப்பில் அவன் தலையில் கொட்டியவன்"அவசரக்குடுக்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி தொலையேன் இதோட 20 தடவ கேட்டுட்டே 10 நிமிஷத்துல என்று கத்திக்கொண்டிருந்தவன் அவன் கண்டா காட்சியில் வாயை பிளக்க சரனோ இவன் என்ன அனகோண்டா ஏப்பம் விட்ரமாரி வாய பொளக்குறான் என்று திரும்பி பார்க்க அங்கே அவன் கண்டா காட்சியில் கண்கள் தெறித்து விழுமளவு பார்த்துக்கொண்டிருந்தான் அங்கே வித்யுத்தும் சைந்தவியும் சிரித்தபடி பேசிக்கொண்டு வந்திருந்தனர் .
அவன் சிரித்து கொண்டே வருவதை பார்த்த ஷ்ரவனும் ,சரணும் இதெப்புடி என்று விழிவிரித்து பார்க்க அவள் அவர்கள் அருகில் வந்தவள் "hida நல்லவனுங்களா இது வித்யுத் என்னோட friend இனிமே நம்மளோட friend "என்றவள் அவர்களை இவனுக்கு அறிமுகப்படுத்தினாள் .
பின் அவனும் "sorry guys எனக்கு கிளாஸ் நடக்கேல பேசுனா காதுல விழாது அண்ட் நா கொஞ்சம் reserved type நாஇவ்ளோ நாள்behave பண்ணது ஹர்ட் பண்ணிருந்தா மன்னிச்சுருங்க "என்று கூற அதை மொத்தமாய் மறந்தவர்கள் அவனிடம் சினேக புன்னகையை சிந்திவிட்டு அவன் இரு தோள்களிலும் கையை போட்டு கொண்டனர்.
சரண் "விடு மச்சான் அதெல்லாம் ஒரு matteraah இந்த 3 godzillasku நடுவுல நாங்க 2 பேரு பாவப்பட்ட ஜீவன்களா இருந்தோம் நீ வந்ததால இப்போ எங்க sideம் equal ஸ்ட்ரென்த் ஆயிருச்சு இனி சேர்ந்து சமாளிப்போம் வெல்கம் டு our samalification சங்கம் "என்று கூற ஷ்ரவநோஹ் அவனுக்கு பின் கண்ணை காட்டினான் அங்கோ மூன்று பெண்களும் முறைத்து கொண்டு நின்றிருந்தனர் .அதை கண்ட இருவரும் சற்றே வழிய
பூஜாவோ "எங்க இன்னொரு முறை சொல்லுங்க"என்று ராகமாய் இழுக்க
சரணின் காதில் குனிந்த ஷ்ரவன் "mr .சரண் அந்த ஆபத்தான புயல்கள் நம்மள நோக்கி தான் வந்துட்டு இருக்கு ரெடி ஸ்டெடி jootdda மவனே" என்று கூறி இருவரும் ஓட அவர்களை துரத்தி கொண்டே வினீஷாவும் பூஜாவும் ஓடினர் .
அவர்களில் சரண் "சிலுவண்டு சிக்கும் சிறுத்த சிக்காதுலே "என்று கூறி கொண்டே ஓடியவன் ஒருவர் மீது மோதி நின்றான் .
எவன் அவன் என்று நிமிர்ந்து பார்த்தால் அங்கே நின்றிருந்தார் கல்லூரி முதல்வர் .ஆத்தாடி என்று 5 அடி பின்னால் சென்றான் சரண் .
ஷ்ரவனிடம் சென்றவன் "ஏன்டா இன்னைக்கு நாம பேய் மூஞ்சில முழிச்சுருக்கோமோ ?எல்லாமே தப்பு தப்பா நடக்குதே டா "என்று கேட்க
ஷ்ரவனோ "தெரியலையேடா "என்று கூற
சரண் "இப்போ எப்படி சமாளிக்கிறேன் பாரு என்றவன் ஸ்டைலாக முதல்வர் முன் சென்றவன் தன் ஆள்காட்டி விரலை காட்ட
அவரோ "வாட் "என்றார் கறாராக அதில் பயம் கொண்டவன் ஆள்காட்டி விரலை மடக்கி சுண்டு விரலை உயர்த்தியவன் "சார் சு சு"என்றவன் ஓடியே விட்டான் .
அதை தொடர்ந்து ஷ்ரவனும் அட பாவி என்று ஓடி விட அவர்களை கண்ட முதல்வரோ "சில்லி பாய்ஸ் "என்று விட்டு சென்று விட்டார் .
இதை கண்ட பூஜா,வினீஷா ,சைந்தவி ,வித்யுத் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க சைந்தவியின் கண்களும் வித்யுதின் கண்களும் ஒரு முறை சந்தித்து அங்கே சில மணித்துளிகளுக்கு உறைந்தது .
அவர்கள் இருவர் விழிகளும் சில மணித்துளிகள் உறைந்து பின் விலகி கொண்டது .என்றும் இல்லாத இதத்தை உணர்ந்தான் வித்யுத்.பின் உள்ளே சென்றவர்கள் பாடத்தில் மூழ்கிப்போனார்கள்.உணவு நேரம் வித்யுதும் சைந்தவியும் மட்டுமே சேர்ந்து கழிப்பது வாடிக்கையாகி போக மற்ற நேரங்களில் அந்த நண்பர்களின் குழுவுடன் சேர்ந்து அவர்கள் குறும்புகளை கள்ளம்கபடமற்ற நடப்பையும் ரசித்து அனுபவித்து வந்திருந்தான் வித்யுத் .அவன் மனம் கவலைகள் மறந்து குழந்தையெனவே மாறியது அவர்களுடன் இருக்கையில் குறிப்பாக சைந்தவியுடன் இருக்கையில் அவன் கவலைகள் அனைத்தும் அவனை விட்டு விலகி கைகட்டி நின்றது .நாட்களும் பறந்தது .
அன்று ஒருநாள் நண்பர்கள் குழு அனைவரும் விளையாட்டு மைதானம் நோக்கி சென்றனர் .அங்கே சில 5ஆம் ஆண்டு மாணவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர் .அவர்கள் விளையாடி கொண்டிருந்த பந்து சரியாக வித்யுத்தின் தலையை தாக்கியது .
அவன் என்ன என்று பார்க்க அங்கே ஒருவன்" ஹலோ அதான் பந்து பற்றுச்சுல்ல என்ன lookuh விட்டுட்டு மசமசன்னு நிக்கிற பந்த எடுத்து போடுடா .விளையாடுறோம்னு தெரியுதுல" என்க
இன்னொருவன் "மச்சான் அவனை பாத்தாலே தெரில விளையாட்டுக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லனு அமுல் பேபி மாறி இருக்கான் அவன்ட போய் கத்தி பேசுற அழுதுற போரான்டா ஹலோ மிஸ்டர் அமுல் பேபி ballah இங்க போடுங்க "என்க சட்டென கோவம் கொள்ளும் குணமுடைய வித்யுத்திற்கு அவனது திமிரான பேச்சு கோவத்தை தர,
பந்தை காலிற்கு அடியில் வைத்தவன் "எது எனக்கு விளையாட தெரியாதா சரி இங்க மொத்தம் 11 பெரு இருக்கீங்கள்ள இப்போல இருந்து 3 நிமிஷம் time தரேன் யாராச்சும் என்கிட்ட இருந்து இந்த பால்ல வாங்கிருங்க நா ஒத்துக்குறேன் நீங்க சாம்பியன்ஸ்னு" என்றவன் அடுத்து முன்னே செல்ல. சைந்தவி அவன் கையை பிடிக்க அவள் புறம் திரும்பியவன் "என்ன பிரச்னை வேணாம்னு சொல்ல போறியா" என்க
அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் "ஆல் தி பெஸ்ட் நீ யாருனு prove பண்ணு "என்று கூறி சிரிக்க அவளை பார்த்து சிரித்தவன் அடுத்து களத்தில் இறங்கினான் .
காலிற்கு அடியில் பந்தை வைத்தவன் அதை உதைத்து கொண்டே சென்றான் .11 பேரில் முதலில் இருந்த 3 பேர் ஒவ்வொருவராய் வந்தவர்கள் அவனிடம் இருந்து பந்தை வாங்க முற்பட அவர்களால் பந்தின் நுனியை கூட தொட முடியவில்லை அவன் கால்களுக்கு மத்தியில் அப்பந்து சுழன்று கொண்டே இருந்தது யாராலும் அப்பந்தை நெருங்க கூட முடியவில்லை .
இவ்வாறே 2 :30 நிமிடங்கள் கரைய அங்கு உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை சுற்றி வளைக்க சற்று நேரம் ஆட்டம் காட்டியவன் 2 நிமிடம் 50 நொடிகள் ஆக திடீரென பந்துடன் எம்பி குதித்தவன் bicycle கிக் செய்ய அப்பந்து நேராக கோல்போஸ்ட்டில் விழுந்தது .
அவன் அடித்த bicycle kickai பார்த்தவர்கள் வாயை பிளந்து நின்று விட்டனர் அந்த 11 பேர் உட்பட. எழுந்தவன் அவர்கள் அருகில் வந்து "don't ever judge a book by its கவர்.i am a national level footballer ."
என்றவன் அங்கிருந்து நகர்ந்து வர அந்த குழுவில் ஒருவன் வந்து "சாரி பாஸ் .இன்னும் 3 மாசத்துல ஸ்போர்ட்ஸ் மீட் வருது if யு don't mind எங்க டீம்ல join பண்ணிக்கிறீங்களா ?"என்க
அவனோ "இல்ல எனக்கு இப்போ இதுல interest இல்...."என்று கூறும் முன்
சைந்தவி "அண்ணா பேரு வித்யுத் விஹான் 4th இயர் பேர சேத்துக்கோங்க இப்போ கிளாஸ்க்கு time ஆச்சு நாங்க கெளம்புறோம் bye"என்றவள் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு அவனிற்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் இழுத்து வந்தால்.
பின்னோடே அவர்கள் நண்பர்கள் படையும் வந்தது .அவளுடன் சிறிது தூரம் வந்தவன் கையை உதறிவிட்டு "ஹே எதுக்கு என் பேர சேத்துக்க சொன்ன நான் தான் சொன்னேன்ல எனக்கு interest இல்லேனு .எல்லா முடிவும் நீயா எடுத்துப்பியா "என்று அவளிடம் எகிற
கோபம் கொண்ட சரண்"ஹே நீ என்....."என்று பேச துவங்கும் முன் கையை உயர்த்திய சைந்தவி" சரண் இரு நா பதில் சொல்லிக்கறேன் நீங்க கொஞ்சம் கிளாஸ்க்கு போங்க" என்க
ஷ்ரவனோ"ஹே சையு...." என்று ஏதோ கூற வர அவனை பார்வையாலேயே அடக்கியவள் அவர்களை செல்ல சொன்னால் .அவர்களும் செல்ல அவன் புறம் திரும்பியவள் "வித்யுத் நீ எப்படி பட்டவன் என்ன ஏது எதுவும் எனக்கு தெரியாது .ஆனா நீ AIIMSla இருந்து மாறி இங்க வந்துருக்குறது எந்நேரமும் ஒரு சிந்தனையாவே இருக்குறது இப்டினு பல விஷயம் இந்த 15 daysla நா நோட் பண்ணத வச்சே புரிஞ்சுக்கிட்டேன் நீ ஏதோ ப்ரோப்ளேம்ல இருக்கன்னு அண்ட் நீ ஷார்ட் tempernum புரிஞ்சுக்கிட்டேன்.நீ football வெளையாடேல உன்னோட முகத்துல இருந்த satisfactionah நா கண்கூட பார்த்தேன் அவுங்க உன்ன டீம்ல சேந்துக்க சொன்னப்போ உன் facela ஒரு நிமிஷம் பொலிவு வந்துச்சு ஆனா அடுத்த நிமிஷமே ஏதோ நீ வேணாம்னு சொல்லிட .நா வாயாடி தான் ஆனா மத்தவுங்களோட inner feelingsah முகத்தை வச்சே கண்டு புடுச்சுருவேன்.அதான் நானா உன்ட வந்து பேசுனேன் நானா உன்னோட friendaah உனக்கு புடுச்சதுக்கு பேர குடுத்துருக்கேன்.எனக்கு நா பண்ணது தப்பா தெரில "என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேச அவளின் விளையாட்டு தனத்தையே அவளின் குணமாக நினைத்தவன் அவளின் இந்த தெளிவான அதுவும் சரியாக ஒருவரை கணிக்கும் விதத்தை கண்டவன் இவளுக்கு எத்தனை முகம் என்று வியந்தவனின் மனதில் அவளின் மேல் இருந்த மதிப்பு கூடியது .
அவன் முகத்தில் இருந்த கடுமையும் மறைந்தது .தலை குனிந்தவன் "சாரி "என்றான்.
அவளோ "shobaa ஆரம்பிச்சுட்டியா எல்லாத்தையும் பேசிடவேண்டியது அப்பறோம் வந்து சாரி சொல்ல வேண்டியது எனக்கு இந்த sorryngura wordeh புடிக்காது friendsta இருந்து கேக்குறதுக்கு.நீ சாரி சொல்றதுக்கு பதில் உன் வாய தொறந்து சிரி அதுவே போதும் "என்க
அவன் இதழ் தானாகவே புன்னகையில் விரிந்தது பின் அவன் தலையை கலைத்தவள் "குட் பாய்" என்க
அவனோ "ஹே பைத்தியம் ஏன்டி முடிய கலச்ச "என்று வேக வேகமாய் சரி செய்ய
அவளோ மீண்டும் அவன் தலையை கலைத்தவள் "அப்டி தான்டா களைப்பேன் ரோபோ ."என்றவள் அவன் துரத்த ஆரம்பிக்குமுன்னே ஓட அவனோ அவளை 4 எட்டில் பிடித்தவன் அவள் தலையில் நான்கு கொட்டு கொட்டியவன் "விஷம் விஷம்" என்க அவளும் சிரித்து கொண்டே வாங்கி கொண்டால் .
பின் அவளை விடுவித்தவன் அவளுடன் வகுப்பறை நோக்கி நடக்க அவன் கேட்டான் "இவ்வளவு guess பண்ணியே என் ப்ரோப்லேம் என்னனு கேக்கலையே நீ "என்க அவளோ "சொல்லணும்னு தோணீர்ந்தா நீயே சொல்லிருப்பேல ஒருத்தவுங்க personallah அவுங்களே சொல்லாம தெரிஞ்சுக்க கூடாதுனு நெனைக்குறவ நான் எங்கப்பா அம்மாவுக்கும் அது பொருந்தும் "என்று சிரித்து கொண்டே கூற
அவனோ மனதிற்குள் "எத்தனை முகங்களடி உனக்கு " என்று நினைத்து கொண்டே அவளை கண்டு வியந்து கொண்டே உள்ளே சென்றான் .சரணும்,ஷ்ரவனும் அவன் மேல் கோபமாக இருப்பார்கள் என்று நினைத்து செல்ல
அவர்களோ "என்ன மச்சி இந்த லூசோட சேந்து நீயும் lateaah வந்தியா "என்று இலகுவாக கேட்க அவனுக்கு தான் ஏதோ புரியா புதிராக மாறினார்கள் இந்த நண்பர்கள் குழு .
"இல்ல அது." என்றவன் அவர்கள் மத்தியில் சென்று அமர்ந்து சிறிது நேரம் கழித்து "உங்களுக்கு என் மேல வருத்தம் இல்லையா உங்க friendah திட்டிட்டேன்னு ?"என்று கேட்க
ஷ்ரவனோ"இருந்துச்சு ஆனா எப்போ சையு உன் மேல நம்பிக்கை வச்சு எங்களுக்கு கூட உன் விஷயம் தெரிய கூடாதுனு எங்களை அனுப்புனாலோ அப்போவே புருஞ்சுகிட்டோம் உனக்கு ஏதோ பிரச்னை இருக்குறதால தான் நீ இப்டி நடந்துக்குறன்னு.அவ பாக்க வேணா வாயாடியா சின்ன பிள்ளை தனமா தெரியலாம் ஆனா அவ எடுக்குற முடிவு ஒரு நாளைக்கும் தப்புனதில்ல .அந்த நம்பிக்கைல தான் சொல்றோம் உன் மேல தப்பிருக்காதுனு .சோ நோ ப்ரோப்லேம் நீ ஜாலியா பழகு "என்க அவனோ சிரித்து விட்டு மனதில் "உங்கள முன்னாடியே சந்திருச்சுருந்தா என் லைப் வேற மாறி இருந்துருக்குமோ என்னவோ "என்று எண்ணமிட்டவன் அடுத்த பேராசிரியர் வர வகுப்பில் மூழ்கினான் .
பின் கல்லூரி முடிவுறும் நேரம் வர வெளியே வந்தவன் அவர்களுடன் வந்தவன் பை சொல்லிவிட்டு ஒரு நாளில் தன் வாழ்வில் எத்தனை மாற்றங்கள் என்று எண்ண அவன் நினைவில் சைந்தவியின் ஒவ்வொரு முகங்களும் நிழலாட தானாய் இதழில் புன்னகை பூக்க "வாயாடி .இன்னும் எத்தனை முகம் டி உனக்கு "என்று எண்ணியவன் முதல் முதலாய் தன் வாழ்விலேயே சிரித்து கொண்டே வீட்டிற்கு புறப்பட்டு சென்றான் .
வீட்டின் உள்ளே சென்ற சைந்தவி எப்பொழுதும் போல் "அம்மாஆஆ cofee குடுமா "என்றவள் டிவி பார்த்து கொண்டிருந்த அவள் தம்பியிடம் சென்றவள் அவன் தலையில் நங்கென கொட்டி "எக்ஸாம் டைம் தான இப்போ உனக்கு செமஸ்டர்ku படிக்கேல என்னடா டிவி" என்றுவிட்டு அவன் அருகில் அமர
அவனோ "ஆஅ ராட்சசி ஏன்டி கொட்டுன நீ semester timelaஎன்ன பண்ணணு எனக்கு தெரியாதா போடி எல்லாம் படுச்சுட்டு தான் உக்காந்துருக்கேன் "என்க
அவன் முகத்தை அப்படியும் இப்படியும் திரும்பியவள் "இந்த மூஞ்ச பாத்தா அவ்ளோ நல்லவனா தெரியலையேடா "என்க
அவனோ "பூசணி பூசணி எனக்கு சண்டை போட மூடில்ல போய்டு டி போய் கொட்டிக்கொ " என்று கூற
அவளும் "போடா தடியா" என்று கத்திகொண்டே tabeliekuசென்று அய்ய்ய்ய் ரசகுல்லா செஞ்சுருக்கியாமா என்று கேட்டுக்கொண்டே கையை வைக்க போக
உள்ளே இருந்து வந்த அவள் அம்மா கரண்டியாலேயே அவள் கையில் ஒரு போடு போட்டவர் "கைய கால கழுவாம நேரா சாப்பாட்டுல கைய வைக்காதான்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன் இதுல நீ doctorku வேற படிக்குற "என்று கூற
அவள் தம்பியோ "எனக்கும் அதே டவுட் தான்மா "என்க
அவளோ அதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் "அம்மா அம்மா என் செல்லம்ல ஒன்னே ஒன்னுமா"என்க அவரோ கையை இடுப்பில் வைத்து கொண்டு முறைக்க.
சிறு பிள்ளை போல் முகத்தை வைத்தவள்"சரி குளிச்சுட்டு வந்தே சாப்பிடுறேன் என்றவள் உள்ளே செல்ல திரும்ப அவள் அம்மாவும் அதை நம்பி திரும்ப அவளோ ரசகுல்லா டப்பாவையே எடுத்து கொண்டு அறைக்குள் ஒரே ஓட்டமாய் ஓடி விட்டால் .
அதை பார்த்த அவள் அம்மா"அடியேய் டப்பாவை வச்சுட்டு போடி "என்க
அவளோ"அந்த தடியன் காலி பண்ணிருவான்மா எதுக்கும் என்டயே இருக்கட்டும் குளிச்சுட்டு அத நானே கீழ கொண்டு வந்து வச்சு சாப்பிடுறேன்"என்க
ஹரி"ஏன்டி என்னை என்ன உன்ன மாறினு நெனச்சியா ?"என்க
அவளோ"தம்பி சொத்து விஷயத்துல கூட உன்ன நம்புவேன் ஆனா சோத்து விஷயத்துல நம்பவே மாட்டேன் நா வந்ததுகப்ரோமே தின்னு "என்றவள் கதவை அடைக்க அவள் அம்மாவோ சிரித்து கொண்டே திருந்தவே மாட்டாடா என்க அவனும் சிரித்துவிட்டான் .பின் கீழே வந்தவள் கூறியதை போலவே ஒரு ரசகுல்லாவை கூட தொடாமல் வைத்திருந்தால்.
பின் அவள் அப்பாவும் வந்து விட என்றும் போல் அன்று நடந்த அனைத்தையும் அக்காவும் தம்பியும் அவர்கள் அப்பா அம்மாவிடம் கூறியவர்கள் தத்தம் பாடத்தை முடித்து விட்டு உறங்கினர் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top