38

இப்போ நாம சண்டையை பாப்போமா

ஸ்வஸ்திகா "போஸ்டுஹ் மரம் மாறி வளந்துருகியே கொஞ்சமாச்சும் அறிவு வேணாம் இப்டி தான் தட்டி விடுவியா "என்க

அவனோ "ஹே குட்ட கத்திரிக்கா திடீர்னு நீ நா கைய ஆட்டேல எங்க இருந்தோ மொளச்சு வந்தா நா என்ன பண்றது"என்க

அவளோ "என் உயரத்த வச்சு கலாய்க்காதன்னு பல தடவ சொல்லிட்டேன்டா தடிமாடு கண்ணை முன்னாடி தான வச்சுருக்க பொடதிலயா வச்சிருந்த நா உன் முன்னாடி தான ஒரு கைல தட்டுல குங்குமமும் இன்னொரு கைல தட்டுல மஞ்சளும் எடுத்துட்டு வந்துட்டு இருந்தேன் கொரங்கு மாறி ஒரு எடத்துல நிக்காம கையையும் காலையும் ஆட்டிகிட்டு தட்டி விட்டுட்டு வியாக்யானம் வேற பேசுறியா.ஏன் ட்ரெஸ்ஸுஹ் பாரு எப்படி ஆய்ருச்சுனு "என்று தனது சுடிதார் வீணாகிவிட்டதே என்று புலம்ப

அவனோ "ஹே குட்டகத்திரிகா இப்போ தாண்டி மஞ்சளா மங்களகரமா இருக்க "

அவளோ "என் வைட் சுடியை மஞ்சளாகிட்டு எவ்ளோ தைரியம் இருந்தா இப்போ தான் நல்லாருக்குனு சொல்லுவ"என்க

அவனோ "இப்போ என்ன தாண்டி பண்ண சொல்ற காண்டேத்திகிட்டு"என்க

அவளோ "எனக்கு ஒரு வழி சொல்லிட்டு போ "என்று குங்குமத்தை கையில் வைத்து கொண்டு கேட்க அவனோ வழிதானே என்று அருகில் வந்தவன் வேண்டுமென்றே குங்குமம் இருந்த தட்டை தட்டி விட அது அவள் உச்சியில் மொத்தமாய் கொட்டியது .

அதிர்ந்தவள் நெற்றி வகுட்டில் முழுதும் குங்குமம் இருக்க அதை பார்த்து அரண்டவள் "யு யு ....."என்று வார்த்தை தந்தி அடிக்க அவனுக்கும் அது சற்று சங்கடமாய் போனது அவன் சாரி என்று கூற திரும்ப அவளோ அதற்குள் அதிதியின் அறைக்குள் சென்று கதவை சாற்றி விட்டால் .

இவன் இங்கேயே உறைந்து நிற்க அங்கே அறைக்குள் சென்றவள் கண்ணாடியில் நேர்வகுட்டில் மொத்தமாய் பதிந்திருந்த அந்த அழுத்தமான சிகப்பு நிறத்தை வருடியவள் பின் சமன் செய்து விட்டு குளியலறைக்குள் சென்று விட்டால் .

ஸ்வஸ்திகாவும் சரணும் அன்று முதல் இன்று வரை எலியும் பூனையும் தான் ஸ்வஸ்திகாவும் தற்போது மருத்துவம் முடித்திருந்தவள் அடுத்து பிஜி தேர்விற்கு பரீட்சை எழுதி இருந்தால் .கூடுதல் இணைப்பாக காதல் திருமணம் செய்திருந்த சரணின் அம்மாவையும் அப்பாவையும் அவர்களின் சகோதரன் நீண்ட நெடு நாட்களுக்கு பின் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணைய அந்த சகோதரனின் சீமந்த புதல்வியோ ஸ்வஸ்திகாவே தான் .

மாமன் மகளானதால் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகள் அதிகமாக அமைய இந்த பூனையும் எலியும் சண்டை எனும் போர்வைக்குள் ரகசியமாய் ஒருவர் மற்றொருவரை ரசித்து கொண்டிருந்தனர் .

இங்கே இப்படி இருக்க கதையின் நாயகனோ பம்மி பம்மி யாரும் வருகிறார்களா என்று பார்த்து பார்த்து சைந்தவியின் அறைக்குள் செல்ல பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்(அது ஒண்ணுமில்லப்பா பந்தக்கால் நட்டதுகப்ரோம் மாப்பிள்ளையும் பொண்ணும் பாத்துக்க கூடாதுனு சொல்லி இதுங்கள கண்லயே காட்டாம வச்சுருக்கானுங்க அதான் siruh காண்டாயிட்டாரு ) .

வித்யுத் மனதில் "இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இப்டி என்னைய திருடன் மாறி ஒளிஞ்சு ஒளிஞ்சு என் பொண்டாட்டிய பாக்க வர வச்சுட்டானுங்களே படுபாவிங்க "என்று கரித்து கொட்டிக்கொண்டே அவள் இருக்கும் அறைக்குள் செல்ல போக

அதற்குள் அங்கே வந்த ஹரி "மாமா எங்கெல்லாம் உங்கள தேடுறது கிளம்புங்க மாமா டைம் ஆச்சு மண்டபத்துக்கு போக வேணாமா "என்க

அவனோ "டேய்ய் இன்னும் உங்க அக்காவே ரெடி ஆகல என்ன ஏன்டா மண்டபத்துக்கு இவ்ளோ சீக்கரம் கூட்டிட்டு போறீங்க "என்க

அவனோ "அது மாமா ஏதோ மாப்ள மட்டும் மொதல்ல சில சடங்குளாம் செய்யணுமாம் அதான் உங்கள கூட்டிட்டு சீக்கரம் போக சொன்னாங்க மாப்ள அழைப்புலாம் இருக்குல்ல "என்க

அவனுக்கோ மனதில் சடங்கை கண்டுபுடுச்சவன் செவுள்ளயே அறைய வேண்டும் போல் இருந்தது பல்லை கடித்தவன் அந்த அறை கதவை பார்த்து ஒரு பெருமூச்சை விட்டு விட்டு அவனுடன் சென்றான் .

இங்கே இவன் இப்படி இருக்க உள்ளே சைந்தவியோ balconyயிலிருந்து இறங்க முயற்சித்து கொண்டிருந்தாள்

அவள் அம்மா "ஹே சையு மானத்தை ஏண்டி வாங்குற இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்க தான போறீங்க அப்பறோம் என்னடி உள்ள வாடி "என்க

அவளோ "ஒரு வாரமா இதே தான் சொல்லிற்றுக மா நீ "என்க அ

வரோ "ஏண்டி இன்னும் ஏழு நாலுகப்ரோம் பாத்துட்டே தானடி இருக்க போறீங்க வாடி உள்ள சேலையெல்லாம் கசக்கிக்கிட்டு "என்று அவளை உள்ளே இழுத்து வந்தவர் beautician வைத்து மேலும் சற்று அலங்காரங்கள் செய்ய அவளோ முகத்தை உம்மென்று வைத்து கொண்டிருந்தாள் அதை பார்த்த அவள் அம்மா சிரித்து விட்டு "அவன் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்ட போல இன்னும் அர மணி நேரத்துல நிச்சயர்த்தார்த்தம் நடக்கேல அவன் கூடவே தான் இருக்க போற கொஞ்சம் சிரி"என்க அவளுக்கு வெட்கம் வர சிரித்தவள் நிச்சயத்திற்காக தயாராகினால் தன்னவனிற்காக கையில் சிவந்திருக்கும் மருதாணியில் அவர்களின் இணைந்த பெயர்களை பார்த்து கொண்டு.

நிச்சயத்திற்கு அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு செல்ல அப்பொழுதே வந்த வினீஷாவும் ஷ்ரவனும் நண்பர்களிடம் பற்பல அர்ச்சனைகளை வாங்கி கொண்டு அமர்ந்திருந்தனர் .

வித்யுதும் ஹரியும் மண்டபத்திலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் மாப்பிள்ளை அழைப்பிற்காக இறக்கி விடப்பட்டனர் .நிச்சயத்திற்கு சென்னையிலியேயே மிகவும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை பிடித்திருந்தனர்.இரவை பகலாக்க முயலும் மின் விளக்குகளும் அதற்கு போட்டியை பூஞ்சோலையை பூமிக்கு கொண்டு வந்ததை போல் வண்ண வண்ண பூக்களின் சுகந்த மனமும் அப்பூக்களின் நடுவே காதலனை கணவனாய் அடையப்போகும் பூரிப்பிலும் சுற்றத்தாரின் கிண்டலிலும் வெளுத்த தோலிற்கு எடுப்பாய் ஆரஞ்சு நிறத்தில் இளஞ்சிவப்பு பார்டரில் பட்டுசேலையும் அதற்கேற்ற அணிகலங்களிலும் புதியதோர் பூவாய் நண்பர்கள் சுற்றத்தார் சூழ தன் தந்தை தாய்க்கு முன் அமர்ந்திருந்தாள் சைந்தவி வித்யுதின் வருகைக்காக .

சிறிது நேரத்தில் பிள்ளையார் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அவனிற்கே உரிய கம்பீரத்தில் பட்டு வெட்டி சட்டையில் காந்த பார்வையோடு கழுத்தில் மாலையும் கண்ணில் தன்னவளுக்காக அளவில்லா காதலையும் சுமந்து வந்தவன் மேல தாளம் முழங்க உள்ளே அழைத்து வரப்பட்டு சைந்தவியின் எதிரே வாசுகி மற்றும் அவரின் கணவர் முன் அமரவைக்கப்பட்டான்.அவனின் பெற்றோர் இடத்தில அவர்கள் இருந்து சம்பிரதாயங்களை செய்தனர்.வித்யுதும் சைந்தவியும் ஒருவாரத்திற்கு பின் சந்தித்துக்கொள்ள இருவர் கண்களும் பிரியாமல் ஒன்றோடொன்று பேசிக்கொண்டிருந்தது .

அவள் புறம் அமர்ந்திருந்த பூஜா ,வினீஷா மற்றும் ஸ்வஸ்திகா போன்ற இளவல்கள் ஹரியுடன் இணைந்து அவளை கலாய்த்து தள்ள அப்புறம் அமர்ந்திருந்த ஆண் நண்பர்களான விக்ரம்,வினய்,சரண், மற்றும் ஷ்ரவன் அதிதியுடன் சேர்ந்து வித்யுதை ஓட்டி தள்ளினர் ஆனால் பிரதிபலிப்பு தான் இருவரிடமிருந்தும் ஒன்றும் இல்லை இருவர் காதிலும் எதுவும் விழவே இல்லையே .

பின் அங்கிருந்த ஐயர் அமைதியா இருங்கோ லக்கின பத்திரிகை வாசிக்க போறேன் என்க சுற்றத்தார் மற்றும் சொந்தத்தாரின் சலசலப்பு அடங்கியது (நாமளும் கொஞ்சம் சிலேண்டாஹ் இருப்போம் ஐயர் கோச்சுண்டு கல்யாண தேதியை தள்ளி வச்சுற போறாரு )

"திருமண லக்கின பத்திரிக்கை

சோபாக்ரிதி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் நாள் சுபயோக சுபதினத்தில் கன்னி லக்கினத்தில் தெய்வத்திரு விஜயராகவன் சாரதா தம்பதியினரின் மகள் வழி பேரனும் தெய்வத்திரு சாருமதி திரு விஷ்வா அவர்களின் மைந்தனுமான திருச்செல்வன் வித்யுத் விஹானிற்கும்

சங்கரன் மீனாக்ஷி தம்பதியினரின் மகன்வழி பேத்தியும் தனபாலன் ராஜேஸ்வரி அவர்களின் குமாரத்தியுமான செல்வி சைந்தவிக்கும் சுற்றம் சொந்தம் சூழ பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும் "என்று கூறி முடிக்க பின் தாம்பூலம் மாதிக்கோங்கோ என்க இருவீட்டாரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர் .

(உங்களுக்கும் சேது தான்பா பத்திரிகை எல்லாரும் வந்துருங்க தேதி எப்போன்னு நா அப்ரோமா சொல்றேன் ஈஈ)

பின் இருவரையும் உடை மாற்றிவிட்டு வர கூற சற்று நேரத்தில் உடை மாற்றி விட்டு வந்து மீண்டும் சபையில் அமரவைக்க பட்டனர்.பின் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள கூற s v என்று வைரத்தில் இருவரின் முதல் எழுத்தும் பிணைக்கப்பட்டது போன்ற அமைப்பில் இருந்த மோதிரத்தை இருவரும் கையில் எடுத்தனர் .

சைந்தவி வித்யுதின் கரத்தை எடுத்து அவனின் தொடர் பார்வையில் தடுமாறியவாறே மெல்லிய நடுக்கத்துடன் விரலில் மோதிரத்தை அணிவித்து "ஐ லவ் யு விது"என்க

அவனோ சற்றும் எதிர்பாராதவாறு ஒரு காலில் மண்டி யிட்டவன் அவள் கையை தன் கரத்தில் ஏந்தி அவள் கண்களை பார்த்து கொண்டே "எனக்கு ப்ரொபோஸ்லாம் பண்ண தெரியாது இன்னையோட உன்ன பாத்து 7 வருஷம் ஆகுது ஆனா அதெல்லாம் ஏதோ 7 செகண்ட்ல முடுஞ்ச மாறி இருக்கு .நீ வர வரைக்கும் என் மனசுல வெறுமையை தவிர்த்து எதுவும் இல்ல நீ வந்ததுகப்புறோம் என் மனசுல இடமே இல்ல .அப்போவும் சரி இப்போவும் சரி எப்போவும் சரி உன்ன காதலிச்சுட்டே இருப்பேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி "என்க

அவளோ முகம் முழுதும் சந்தோஷத்துடன் சிரித்தவள் "தலையை ஆட்ட அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தவன் அவள் விரலில் மென்மையாய் முத்தமிட்டு எழ சுற்றி இருந்தவர்களின் சோ ஸ்வீட் couplesum ,இப்டியே கடைசி வர இருக்கனும் என்ற வாழ்த்தும் அனைவரின் மனதையும் நிறைத்தது .

பின் நாத்தனாரான அதிதியை மடி மாற்ற அழைக்க வித்யுதோ ஒரு நிமிடம் என்றவன் அங்கே அனைவருடனும் சேர்ந்து நின்றிருந்த நவ்யாவை பார்த்தவன் "நவிமா இங்க வாடா "என்க

அவளோ வந்தவள் "என்னண்ணா எதுக்கு கூப்டீங்க ?"என்க

அவனோ "என்ன மடி மாத்த நாத்தனார் எல்லாறையும் கூப்பிடுறாங்கல்ல நீ அங்க நின்னா என்ன அர்த்தம் ?"என்க

அவளோ "அது அண்ணா இல்ல "என்க

சைந்தவி "ஓய் என்னா நீ எனக்கு நாத்தனார் இல்லையா ?"என்க

அவளோ "அது அண்ணி அது வேற "என்க

அதிதியோ அவள் கையை பிடித்து அருகிழுதவள் "கொஞ்சம் விட்டா overஹ பண்ண வேண்டியது உனக்கும் அவன் அண்ணன் தான் ஒழுங்கா வந்து நில்லுடி"என்றவள் முதலில் தேங்காய் அரிசி போன்றவற்றை சேலை மடிப்பில் வாங்கி சைந்தவியின் மடியில் நிறைக்க அதை சைந்தவி நவ்யாவின் மடியில் நிறைக்க மடி நிறைக்கும் இந்த சடங்கு நவ்யாவின் ஆனந்த கண்ணீருடன் நிறைந்தது .

நிச்சயம் முடிய அனைவரும் பெண்ணுடனும் மாப்பிள்ளையுடனும் புகைப்படம் எடுத்து கொண்டு சாப்பிட செல்ல இங்கே வித்யுதும் சைந்தவியும் முகத்தில் சந்தோஷச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தனர் .

பின் அவனையும் அவளையும் பலப்பல போஸ்களில் தனியாக போட்டோ எடுக்க அவள் இடையில் கைவைத்து அருகிழுத்தபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தவன் அவளை ஏதேதோ கூறி சிரிக்கவும் சிவக்கவும் வைக்க அவளும் அவனிற்கு இணையாய் வாயாடிக்கொண்டிருந்தால்.

இதில் போட்டோக்ராபருக்கோ வேலையே மிஞ்ச வில்லை அவர்களே பல ரொமான்டிக்கான போஸ்களை கொடுக்க அதை மிகவும் சிறப்பான முறையில் கிளிக்கி தள்ளிக்கொண்டிருந்தார் .இங்கே இவர்கள் வெளிப்படையாய் சீண்டிக்கொள்ள ஹரியும் அதிதியும் பார்வை பரிமாற்றங்களாலேயே ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டிருந்தனர் .

விக்ரம் முக்கியமான வேலை இருப்பதாய் வெளியே செல்ல ப்ரயத்தனிக்க அங்கே ஸ்வஸ்திகாவும் நவ்யாவும் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தான் ஸ்வஸ்திகா "ஏதாச்சும் கம்பெனி கால் பன்னங்களாடி?"என்க

நவ்யாவோ "இல்லடி இன்னும் கால் பண்ணல ஒன்னு வீக் ஆகும் "என்க

ஸ்வஸ்திகா "ஹே நீ பர்சனல் அசிஸ்டன்ட் வேலைக்கு தான அப்ளை பண்ணிருக்க விக்ரம் அண்ணா கம்பெனில அப்ளை பண்ணலாம்ல ?"என்க விக்ரம் மனதிற்குள் "ஸ்வஸ்திகா உனக்கு கோவிலே கட்டலாம் "என்று நினைக்க

அவளோ "அதிதிட்ட கேட்டேண்டி already அவருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் இருக்காங்களாம் "என்க இவனுக்கோ புஸ்சென்று ஆகிவிட அடுத்த நிமிடம் ஏதோ ஞாபகம் வந்தவன் ஸ்விட்ச்சு போட பல்பாய் முகம் பொலிவடைய காரிற்குள் வந்தவன் முதல் வேலையாய் தன் பர்சனல் அசிஸ்டன்ட் கணேஷிற்கு போன் செய்தான் .

கணேஷ்"சார் என்ன சார் இந்த நேரத்துல "என்க

விக்ரம் "ஆங் கணேஷ் உங்கள பெங்களூக்கு transfer பண்ண சொல்லி கேட்டுட்டே இருந்தீங்கள்ல நாளைக்கு transfer லெட்டர் தரேன் இன்னும் 3 daysla அங்க போய் join பண்ணிக்கோங்க "என்க

அந்தப்புரம் கணேஷா மிகுந்த சந்தோஷத்துடன் "தேங்க்ஸ் சார் thank யு சொ மச் சார் எனக்கு நா கேட்டதுக்காக குடுத்ததுக்கு "என்க

அவனோ நவ்யாவின் முகத்தை நினைவில் நிறுத்தியவன் "நீங்க கேட்டு நா இல்லேனு சொல்லுவேனா வந்து நாளைக்கு வாங்கிட்டு போங்க என்றவன் போனிற்கு cut செய்து விட்டு அதை சுழற்றியவன் சிறு சிரிப்புடன் மண்டபத்தை நோக்கி ஓர் பார்வையை வீசி விட்டு அந்த புன்னகையோடே கிளம்பினான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top