33
அவளை பார்த்த வித்யுத் "அ.... அதிதி.... "என்க
அவனை கை நிமிர்த்தி நிறுத்தியவள் "அவுங்க சொன்னது உண்மையா ?"என்க
அவன் "இல்லடா .."என்க
அவளோ"பொய் சொல்லாத எனக்காக என்னால தான் என் ஹரிக்கு accident ஆச்சா யாரவன் எத்தனை நாலா இது நடக்குது எனக்கு எல்லாம் இப்போவே தெரிஞ்சாகணும் "என்க இதற்கு மேல் மறைத்து பயனில்லை என்று உணர்ந்த வித்யுத் அவளை அமர வைத்து அனைத்தையும் சொல்ல அனைத்தையும் கேட்டவள் சற்று நேரம் அமைதியாய் இருந்து விட்டு பின் ஒரு முடிவெடுத்தவள் "அவன்ட நா பேசணும் "என்க
வினய் "அதிதி அதெல்லாம் வேணாண்டா "என்க
அவளோ "இல்ல வினய் அண்ணா நா அவன்ட பேசணும் அண்ணி சொன்ன மாறி பேசி solve ஆகாதா எந்த ப்ரோப்ளேமும் இல்ல ஏன் நீங்களே அண்ணா மேல செம கோவத்துல தான் இருந்தீங்க ஆனா அடுத்த நாளே சைந்தவி அண்ணி உங்க ரெண்டு பேரையும் மன்னிப்பு கேக்க வச்சு பேச வச்சதுல ரெண்டு பேரும் எவ்ளோ கிளோஸ் ஆன friendsaah இருக்கீங்க இப்போ .அவன்ட நா பேசுறேன் ."என்க அவளை இதற்கு மேல் தடுக்க முடியாது என்று புரிந்த வித்யுத் விக்ரமிடம் அதிதி பேச ஏற்பாடு செய்தான் .
இதோ கடற்கரையில் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தனர் விக்ரமும் அதிதியும்.தான் காதலித்த பெண் தனக்கருகில் அமர்ந்திருக்கிறாள் என்ற சந்தோஷம் அவன் முகமெங்கும் தாண்டவமாட அதிதி பேசிய பின் அவன் முகத்தில் இந்த சந்தோஷம் இருக்குமா??புரிந்து கொள்வானா விக்ரம் ??இல்லை வன்மம் மேலும் வளருமா ??அடுத்த பதிவில் காண்போம் ....
கடற்கரையில் அதிதியின் அருகில் விக்ரம் அமர்ந்திருக்க தான் காதலித்த பெண் அருகிலிருக்க என்ன பேசுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான் அவன் .
சிறிது நேர மௌனத்திற்கு பின் அதிதி "விக்ரம் காதல்னா என்ன?"என்று கேட்க நேரடியாய் அவள் கேள்வி கேட்டாலும் அதற்கான விடையாய் என்ன கூறுவது என்று அவனுக்கு பிடிபடவில்லை அவன் ஏதும் கூறாமல் இருக்க அவளே தொடர்ந்தால் "சொல்லுங்க விக்ரம் காதல்னா என்ன?"என்க
அவனோ "ஒருத்தருக்கு ஒருத்தர் அன்ப குடுத்துக்குறது ,ஒருத்தர் மனசுல இன்னொருத்தர் இருக்குறது அவுங்க நலனை மட்டுமே நெனைக்குறது ,அவுங்க எப்போவும் கூடவே இருக்கணும்னு நெனைக்குறது,அவுங்களுக்கு எதுவும் ஆகாம பாத்துக்குறது "என்க
அதிதியோ " அப்போ இது தான் காதல் அப்டினு நீங்க சொல்றீங்க "என்க
அவனோ "நா மட்டும் இல்ல எல்லாரும் சொல்றது இதை தான் "என்க
அவளோ "ஒருத்தர் நல்லா இருக்கணும்னு நெனைக்குறது காதல்னா அப்பறோம் ஏன் என்ன accident பண்ணீங்க ?"என்க
அவனோ "உங்கப்பாட்ட பேசுனேன் உன்ன கல்யாணம் பண்ணி தர சொல்லி அவரு தான் முடியாதுனு திட்டவட்டமான சொல்லிட்டாரு அதான் உன்ன எழந்துற கூடாதுனு அவரை மிரட்ட........"என்று அவன் இழுக்க
அவளோ "ஓஹ் நீங்க என்ன லவ் பண்ணீங்களா என் அப்பாவை லவ் பண்ணீங்களா?"என்க அவனோ விழித்தான்
அவள் "என்ன லவ் பன்னீருந்தா என்ட வந்து தான சொல்லிருக்கணும் என் அப்பாட்ட சொல்லிட்டு அவரு சம்மதிக்கலேன்னு அவரை பயமுறுத்த என்ன அச்சிடேன்ட் பண்ணேன்னு சொல்றீங்க ஒருவேளை அந்த அச்சிடேன்ட்ல கோமாக்கு போகாம ஒரேடியா போயிருந்தா என்ன பன்னீருப்பீங்க ?"என்க அவனுக்கோ அவளின் கேள்விகளிற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை .
அவளே தொடர்ந்தால் "சரி இதெல்லாம் விட்ருவோம் என்றவள் கண்களில் அனல் தெறிக்க ஏன் என்னோட ஹரிக்கு அச்சிடேன்ட் ஆக வச்சீங்க ?"என்க
அவளின் "என்னோட ஹரி" என்ற கூற்றில் கோபமுற்றவன்" இதோ நீ சொன்னியே என்னோட ஹரினு அந்த வார்த்தை அந்த வார்த்தைக்காக தான் அவனை தூக்க நெனச்சேன் ."என்க
சிரித்தவள் "ஓஹ் அவன் செத்துட்டா அடுத்து உடனே நீங்க approach பண்ணா உங்கள ஏத்துப்பேன்னு நெனைசீங்களா இது என்ன exchange offeraah ஒன்னு போனா அதுக்கு பதிலா இன்னொன்ன accept பண்ணிக்குறதுக்கு மனசு ,ஒருத்தன் ட பறிகொடுத்துடா அதுல இன்னொருத்தர நெனைக்க முடியாது.மத்தவுங்களுக்கு எப்டியோ ஆனா உண்மையா சொல்றேன் ஹரி இறந்துருந்தா கண்டிப்பா நா ....."
என்று அவள் கூறி முடிக்குமுன் பதற்றமாய் நிமிர்ந்தவன் "இறந்துருப்பேன்னு மட்டும் சொல்லிராத "என்க
அவளோ சிரித்தவள் "காதலிச்சவுங்க இறந்துட்டாங்கனு இறந்து போற அளவுக்கு நா கோழை இல்ல மிஸ்டர் விக்ரம் ஆனா என் lifela அவனோட இடத்தை யாருக்கும் குடுத்துருக்க மாட்டேன் காலம் முழுக்க அவனோட நினைவுகளே எனக்கு போதும் "என்க
விக்ரம் "இந்த வயசுல இப்டிலாம் பேச நல்லாதான் இருக்கும் அதிதி practicallaa இதெல்லாம் செட் ஆகாது "என்க
அவள் அடுத்த கேள்வியை தொடுத்தால் "ஓஹ் practicalலாஹ் வாரீங்களா ஓகே நானும் practicallave பேசுறேன் எப்டியோ என்ன அடைஞ்சுருந்தா மட்டும் உங்களுக்கு நா பாசத்தையோ காதலயோ குடுத்துருப்பேன்னு நெனைக்குறீங்களா .நெவெர் "என்க
அவனோ "வர வச்சிருப்பேன் "என்க
சிரித்தவள் "வர வைக்க இது என்ன நீங்க ஆர்டர் பண்ண foodaah மனசு சார் கம்பெல் பண்ணிலாம் காதல் வராது.அப்டியே என்ன கம்பெல் பண்ணி நீங்க கல்யாணம் பண்ணிருந்தாலும் பச்சயா சொல்றேன் நீங்க ஒவ்வொரு தடவ என்ன மனைவியை நெனச்சு நடந்துக்கிளையும் எனக்கு அவன் என்ட அப்டி நடந்துக்குற மாறி தான் இருக்கும் "என்க
அவளின் இந்த கூற்றில் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட அவன் உர்ரென்று கடலை பார்க்க சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் "ஒரு உண்மையா சொல்லட்டா நீங்க என் மேல வச்சுருக்குறதுக்கு பேரு காதலே இல்ல விக்ரம் obsession "என்க
அவன் புரியாமல் பார்க்க அவளே தொடர்ந்தான் "அதெப்படி விக்ரம் என்ன எத்தனை நாள் பார்த்திருப்பீங்க?எவ்ளோ தெரியும் உங்களுக்கு என்ன பத்தி favourite கலர்,பெர்சன்லாம் என்னோட டைரிய படுச்ச எவனாலயும் சொல்ல முடியும் அதில்ல நா என்ன பண்ணுவேன் ,எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவேன் ,என் சந்தோஷம் எது இது ஏதாச்சும் நீங்க யோசிச்சுருக்கீங்களா இல்லை உங்களுக்கு தெரியுமா?"என்க
அவனிடம் விடை இல்லை அவளே தொடர்ந்தால் "என்னோட ஒவ்வொரு தேவையையும் தெரிஞ்சுக்கிட்டு நா எப்பபோ என்னென்ன பண்ணுவேன்னு புரிஞ்சுகிட்டு எனக்கே தெரியாம எனக்காக உங்களுக்கெதிரா மோதிருக்கானே அவன் என் மேல வச்சுருக்குறது லவ் .என்னோட மனசுல என்ன இருக்குறத அதப்பத்தி கவலை படாம இவ்ளோ ஏன் இப்டி ஒருத்தர் இந்த ideala இருக்கீங்கனே தெரியாம இருந்த எனக்கு நீங்க குடுத்த தண்டனை 3 மாசம் கோமா அப்ரோமும் என் முன்னாடி வராம இருந்துட்டு ஹரி இருக்கறதுனால நா உங்களுக்கு கிடைக்க மாட்டேன்னு நீங்களா முடிவு பண்ணீட்டு அவனை கொல்ல ட்ரை பன்னீருக்கீங்க எப்போவுமே கேள்வி இல்லாம பதில் இருக்காது விக்ரம்.எப்போ என்ன கஷ்டப்படுத்தியாச்சும் என்ன அடையணும்னு உங்களுக்கு thought வந்துச்சோ அப்போவே உங்கட்ட இருக்குறது காதல் இல்ல obsessionnu புரிஞ்சுக்கிட்டேன் .இந்த obsession நால உங்க lifeayum பாழாகி என் lifeayum பாழாக்கிராதீங்க.இப்போன்னு இல்ல இந்த ஜென்மம் முழுசுக்கும் உங்களோட எண்ணத்துக்கு என்னோட பதில் இல்லங்குறது தான்.உங்களுக்கு பாசம் குடுக்க நா உங்க காதலியா இருக்கணும்னு அவசியம் இல்ல விக்ரம் உங்களுக்கு நல்ல தோழியா கூட இருக்கலாம்.இப்போவும் உங்களுக்கு தோழியா இருக்க நா தயார்"என்றவள்
அவன் மௌனித்திருக்க சற்று நேரம் பொறுத்து "முடிவு உங்க கைல தான் இருக்கு "என்க
அவனோ வறட்டு புன்னகை செய்தவன் "எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அதிதி "என்க
அவள் "டேக் யுவர் own டைம் ஆனா ஒன்னு மறுபடியும் தெளிவா சொல்றேன் விக்ரம் பாசத்தை குடுக்க காதலியா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல.நா ஒன்னும் இந்த உலகத்தோடு கடைசி பொண்ணு இல்ல விக்ரம் உங்களுக்கு நீங்க விரும்புற காதல குடுக்க கண்டிப்பா ஒருத்தி உங்களுக்காகவே பொறந்தவ வருவா .நீங்க மனசுல வச்சுருக்குற காதல அவள்ட காட்டுங்க ஆனா அந்த பொண்ணு நா இல்ல விக்ரம் இது தான் உண்மை "என்க
சிரித்தவன் "சின்ன பொண்ணு நீ நீ புத்தி சொல்ற நெலமைல இருக்கேன் பாத்தியா நா."என்க
அவளோ "நல்லத சொன்ன அவுங்க சின்னவுங்களா இருந்தாலும் ஏத்துக்கலாம் விக்ரம் தப்பில்ல .நல்லா யோசிங்க ஒரு நல்ல முடிவுக்கு வாங்க நா வெயிட் பண்றேன் "என்றவள் அவனுக்கு தனிமை கொடுத்து கடல் அலை காலை நனைக்க கடலின் அருகில் சென்று நின்றாள்.
இத்தனை நாளாய் யோசிக்காதவன் தன் மேல் உள்ள தவறை உணராதவன் இன்று அவள் கூறிய ஒவ்வொன்றையும் ஆசை போட துவங்கினான் .ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டு வந்தான்.தன் விருப்பத்தை அவளிடம் கூறாது அவளை தண்டித்தது எவ்வகையில் அவனிற்கு நியாயமாய் பட்டது ?எதனால் என் இதனையும் செய்தான் அவளை காதலிக்க நினைத்தானோ அவளை அடைய நினைத்தானோ??அவள் கோமாவிற்கு சென்ற செய்து அறிந்தாலும் அவளிர்காய் துடித்ததை விட அவள் தந்தை மிரன்றிருப்பார் என்று அந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கினானே அதில் எங்கிருந்து காதல் இருந்தது ??அவளிற்காக என்ன அவன் செய்தான் அவளின் காதலனை கொல்ல நினைத்ததை தவிர்த்து??என்று யோசித்தவனுக்கு அப்பொழுதே புரிய ஆரம்பித்தது அவள் மேல் அவன் கொண்டிருந்த சிறு ஈர்ப்பை அவனது கூடா நட்பு வட்டம் கூறிய உபதேசங்களை கேட்டு அதை காதலென நம்பி அவளுக்கு எதனை கொடுமைகளை தான் செய்திருக்கின்றோம் என்று .
அவன் எதிர்பார்த்தது பாசம் மட்டுமே காதல் இல்லை நட்பு மட்டுமே திருமணம் இல்லை என்று அவன் மனமே அவனிற்கு உரைக்க முதல் முதலாய் தான் செய்த செயல்களுக்கான வெட்கினான் .மனம் தெளிவுற அவள் அருகில் சென்று கடல் அலைகள் கால்களை வருடுமாறு நின்றவன் அவள் என்ன என்பதை போல் பார்க்க வாழ்வில் எவரிடமும் மன்னிப்பு வேண்டாதவன் முதல் முறையாய் "சாரி அதிதி "என்றான் .அவள் உண்மையா என்பதை போல் பார்க்க மேலும் அவன் தொடர்ந்தான் "அண்ட் தேங்க்ஸ் என்ன எனக்கே புரிய வச்சதுக்கு சம்மந்தமே இல்லாம உனக்கு நெறய கஷ்டத்தை கொடுத்துட்டேன் மன்னிச்சுரு என்றவன் சிறிது தயங்கி இதை கேட்க எனக்கு அருகதை இல்ல ஆனாலும் கேட்குறேன் என்ன உன் நண்பனா ஏத்துப்பியா ?உண்மையான நட்பா அனுபவிக்க நினைக்குறேன் "என்க அவள் அவனை சற்று தயக்கமாய் ஏறிட அவனோ "புரியுது அதிதி இவ்ளோ பன்னதுகப்ரோம் நம்பலாம்னு தான நெனைக்குற நானும் மனுஷன் தான் அதிதி திருந்த ஒரு சான்ஸ் தரலாமே ஐ swear உ ன் ட நட்பா தவிர்த்து எதையுமே எதிர் பார்க்கல நான் .என் மேல ப்ரோமிஸ் "என்க
அவளோ அவசரமாய் "ஹே எதுக்கு உங்க மேலெல்லாம் ப்ரோமிஸ் பண்றீங்க ஓகே பைன் friends "என்று அவள் கையை நீட்ட சந்தோஷமாய் சிரித்தவன் உண்மையான நட்புடன் அவள் கரத்தை பற்றி குலுக்கினான் புது மனிதனாய் .
பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் எதுவுமில்லை என்பதை இத்தனை நேரமாய் இவர்களின் உரையாடலை அதிதியின் கழுத்தில் இருக்கும் சங்கிலியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் பார்த்து கொண்டிருந்த வித்யுத்,கார்த்திக்,அர்ஜுன் ,ஹரி அனைவரும் உணர்ந்தனர் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top