31

அர்ஜுன் cctv footageai பார்த்தவன் .இந்த வரேல இருந்து 3 கிலோமீட்டர் வரைக்கும் அவுங்களோட வண்டி எல்லா இடத்துலயும் பதிவாயிருக்கு ஆனா அடுத்ததா அந்த வழில இருக்குற 4 கேமரா வேல செய்யாததால் அந்த 1 கிலோமீட்டர்க்கு அந்த வண்டி என்ன ஆச்சுன்னு தெரில அடுத்த அடுத்த காமெராஸ்ல அந்த வண்டி பதிவாகள.என்க கார்த்திக் "அப்போ அந்த 1 கிலோமீட்டர்கு உட்பட்ட பகுதில ஏதோ ஒரு எடத்துல தான் அவுங்க இருப்பாங்கன்னு சொல்றியா "என்க

அர்ஜுன் "இருக்கலாம் இல்லாமலும் போகலாம் ."என்றவன் நாம உடனே கெளம்பி இப்போ அந்த இடத்துல இருக்குற கோடௌன், ஹோட்டேல்ஸ்,ஆளில்லாத வீடு எல்லாத்துலயும் செக் பண்ணனும் அப்பறோம் இதுக்கு காரணமானவுங்கள கண்டுபுடிக்கணும் என்க

ஹரிக்கு நேற்று விக்ரம் அனுப்பிய ஆளுடன் நடந்த வாக்குவாதம் ஞாபகம் வர அவன் "அண்ணா எனக்கு விக்ரம் மேல சந்தேகமா இருக்கு "என்றவன் அடுத்து நேற்று நடந்தவைகளை கூற

அதை கேட்ட அர்ஜுன் "ஆனா அவனுக்கும் சைந்தவிக்கும் என்ன சம்மந்தம் ?"என்க

வித்யுத் "அவனுக்கும் சைந்தவிக்கும் சம்மந்தம் இல்ல ஆனா எனக்கும் சைந்தவிக்கும் சம்மந்தம் இருக்குல்ல மே be சைந்தவி வச்சு என்ன பிளாக்மெயில் பண்ணி ஆதித்ய அடைய நெனச்சுருக்கலாம் "என்க

கார்த்திக் "மே be சோ சந்தேகம் வந்துட்டா அதை உடனே clear பண்ணிரனும் "என்றவன் விக்ரமின் வீட்டிற்கு சென்றான் .அங்கே நட்ட நாடு ஹாலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவனை பார்த்த அர்ஜுன் "மிஸ்டர் விக்ரம் hari அச்சிடேன்ட் பண்ண ட்ரை பன்னதுக்காகவும் சைந்தவி கடத்துனதுக்காகவும் சந்தேகத்தின் அடிப்படையில உங்கள விசாரிக்க வந்துருக்கோம் ."என்க

விக்ரமோ "சந்தேகத்தின் அடிப்படைலய அவுங்கள accident பண்ணணும்னோ கடத்தணும்னோ எனக்கு என்ன சார் முடிவே இருக்கு தேவை இல்லாம என் டிமேச் வேஸ்ட் பண்ணாதீங்க "என்க

வாசலில் "சந்தேகத்தின் அடிப்படையில விசாரிக்க ஆதாரம் இல்ல ஆனா சந்தேகமே இல்லாம நீ தான் அதை செஞ்சன்னு சொல்றதுக்கு என்ட ஆதாரம் இருக்கு என்ற குரல் கேட்க திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.உள்ளே மிடுக்காய் நேற்று இவனும் ரம்யாவும் பேசிய வீடியோ clipudan உள்ளே வந்தான் வினய் வித்யுதின் உயிர் நண்பனாய் மாறி போன வினய் .

உள்ளே வந்த வினய் அந்த விடியோவை போட்டு காட்ட அர்ஜுன் "இப்போ இதுக்கு என்ன சொல்ல போறீங்க மிஸ்டர் விக்ரம் ?"என்க அவனோ வினையை பார்த்து "துரோகி நம்ப வச்சு ஏமாத்தீட்டல"என்க வினையோ எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் இருக்க விக்ரம் "அம்மா நான் தான் ஹரியை அச்சிடேன்ட் பண்ணேன் இப்போ என்ன அர்ரெஸ்ட் பண்ண போறீங்களா பண்ணிக்கோங்க "என்க அர்ஜுன் "ஹரி அச்சிடேன்ட் இருக்கட்டும் சைந்தவி எங்கே?"எங்கே நக்கலாய் சிரித்த விக்ரம் "அவளை கடத்தி நா என்ன பண்ண போறேன் அவள் என்ன ஆனானு எனக்கு தெரியாது "எங்கே சைந்தவியின் இருப்பிடம் புதிரானது .

நேரே வீட்டிற்கு உள்ளே சென்ற விஷ்வா coolaai சாப்பிட்டு கொண்டிருந்த ரம்யாவை பார்த்ததும் கோபம் தலைக்கேற அவள் கையை பிடித்து இழுத்தவன் இடியென தன் கரத்தை அவள் கன்னத்தில் இறக்கினான் .

அவன் அடித்த அடியில் சித்தம் கலங்கி விட 2 அடி தள்ளி சென்று விழுந்தால் ரம்யா கோபமாய் எழுந்தவள் "யு...."என்று அருகில் வர மீண்டும் மீண்டும் அவனிடம் இருந்து மாறி மாறி ௨ கண்ணனலிலும் அடிகளை பெற்றால் .

அவள் நிமிர்ந்து பார்க்க கோபமாய் துவங்கிய விஷ்வா"என்னடி என்ன இந்த அடிய அன்னைக்கே குடுத்துருந்தா என் புள்ளைங்களையும் இழந்துருக்க மாட்டேன் என் சாருவையும் எழுந்துருக்க மாட்டேன் ."என்றவன்

அவளை பிடித்திருந்த கையை உதறியவன் "சைந்தவி எங்கே ?எதுக்காக அவளை கடத்துன ?"என்க

ரம்யாவோ "நா எதுக்கு அவளை கடத்த போறேன் "என்று திமிராய் பதில் கூற மீண்டும் அவளை அறைந்தவன் என் பேருல கார் ரெஜிஸ்ட்டர் ஆய்ருக்கு உன்ன தவிர்த்து இந்த வேலைய யாரும் பண்ணிருக்க முடியாது எங்கே அவளை வச்சுருக்க சொல்லு "என்று அவளை பிடித்து உலுக்க

அவன் கையை உதறியவள் "ஹே அதான் சொல்றேன்ல நா கடத்தலன்னு அவளை கடத்தி எனக்கு என்ன ஆக போது அவளை கடத்துற நேரத்துக்கு நா உன் பையனையே டிரெக்டாக போட்டு தள்ளிருவேன் .அவளை நா ஒன்னும் கடத்தலை "என்க

அவள் அருகில் வந்த விஷ்வா "அப்போ இந்த வண்டி?"என்க

அவளோ அலட்சியமாய் பார்த்தவள் "இதுவா வாங்குனேன் நீ தான் ட்ரீட் தரத்துக்கு காசு தர மாட்டேன்னு சொல்லிட்டியே அதான் ஒருத்தனுக்கு வித்துட்டேன் அவன் ஏதோ reasonக்காக அவன் பேருல மாத்த வேணான்னு சொல்லிட்டான்.இதோ மாத்துறப்போ குடுத்த டாக்குமெண்ட் கூட இருக்கு "என்க அவளை ஓர் வெத்து பார்வை பார்த்தவன் அவன் டீடைல்ஸயாச்சும் சொல்லு என்க

அவளோ "அதெல்லாம் எனக்கு தெரியாது பணம் தரேன்னு சொன்னான் ஒரு இடத்துக்கு வர சொன்னான் போனேன் கார குடுத்தேன் டாக்குமெண்டஹ் வாங்குனேன் வந்தேன் அவ்ளோ தான் "என்று விட்டு செல்ல நிர்கதியாய் அவளை பார்த்தவன் அர்ஜுனிற்கு கால் செய்து இதை அனைத்தையும் கூற இங்கு அந்த பகுதியில் எல்லா இடத்திலும் தேடி அவள் கிடைக்காமல் போக ஓய்ந்திருந்த அர்ஜுனிற்கு இது மேலும் கவலையை தந்தது .என்ன செய்வதென்று தெரியாமல் அவன் வித்யுத்தை பார்க்க அவனோ நிலவை பார்த்து "எங்கடி போன என்ன விட்டு போக மாட்டேன்னு சொன்னேல இப்போ எங்கே போன எங்கே இருந்தாலும் என்ட வந்துருடி நீயில்லாம என்னால வாழ முடியாது "என்று மானசீகமாய் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான் .

அவன் நிலவை பார்த்து மானசீகமாய் பேசி கொண்டிருக்க அவன் தோளில் கை வாய்த்த அர்ஜுன் "இதோட முடுஞ்சுர போறதில்லடா வித்யுத் நம்பிக்கையை விட்றாத வேற விதத்துல விசாரிச்சு பார்க்கலாம் "என்க

வித்யுத் "அண்ணா அவளுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன் அண்ணா என் உயிர் இருக்குற வரைக்கும் அவளுக்கு எதுவும் ஆகாது .இங்க இந்த வரேல பொண்ணுங்கள கடத்தி விக்குறவுங்க பத்தி ஏதாகிவதும் விசாரிச்சு பாருங்க அண்ணா லைக் ஆர்கன் ட்ரான்ஸ்பிளண்டஷன் ,ஹியூமன் டிராஃபிக்கிங் "என்க

அர்ஜுன் "அந்த விதத்துல விசாரிச்சுட்டேன்டா ஒரு 10 பேரோட டீடெயில்ஸ் கெடச்சுருக்கு "என்று ஒரு கோப்பை அவன் கையில் கொடுக்க அதை பிரித்து பார்த்த வித்யுத் அவர்களை பற்றி மொத்தமாய் வாசித்தான் .

வித்யுத்"அண்ணா ரம்யாட்ட கார் வாங்குனவுங்க ***** இந்த எடத்துல தான் அந்த கார மாத்தி வாங்கிருக்காங்க அந்த எடத்துல இருக்குற cctv footageah பார்ப்போமா "என்க

அர்ஜுனும் "நல்ல ஐடியா தான் டா இதோ உடனே பாப்போம் "என்று அங்கிருந்த cctv footaageai வாங்கி பார்க்க அதிலோ ஒரு முரட்டு தோற்றம் உடையவன் தனியே காரின் அருகே நின்றுகொண்டிருந்த ரம்யாவின் அருகே வந்து பணத்தை வாங்கி கொண்டு செல்வது பதிந்திருக்க அவனது முகத்தை closeuppil பார்த்த அர்ஜுன் அவனது புகைப்படத்தை எடுத்து இங்கிருக்கும் எந்த ரௌடிகளின் கும்பலில் ஒருவன் அவன் என்று ஆராய அவன் பெண்களை கடத்தி மும்பையில் விலைமாதர்களாய் விற்பதை தொழிலாய் கொண்ட பாண்டி என்பவனின் கும்பலில் ஒருவன் என்று தெரிய அவனை பற்றிய தற்போதய தகவல்களை நுன்னிப்பாய் விசாரிக்க ஆரம்பித்தனர் .

அந்த வண்டியை பற்றி அங்கிருந்த ஒவ்வொரு கடையிலும் விசாரித்து கொண்டே வர நடுராத்திரி 12 மணி ஆகியும் அவர்கள் தேடுதல் முடிந்தபாடாய் இல்லை .ஒவ்வொரு இடத்திலும் கேட்டு கேட்டு இல்லை என்ற பதிலை கேட்க சோர்ந்தவர்கள் ஒரு தேநீர் கடையில் கடைசியாய் கேட்க அவர் இல்லை என்று கூற உள்ளிருந்து வந்த அந்த கடையில் வேலை செய்யும் ஒரு சிறுவன் "அண்ணன் இந்த வண்டியா இந்த பக்கமா தான் வந்து டீ குடுச்சுட்டு அந்தா தெரியுது பாருங்க அந்த ஒத்த அடி காட்டு பாதைவழியா உள்ள போனாங்க என்று கூற ஏதோ கிடைக்காத பொக்கிஷம் கிடைத்ததாய் உணர்ந்த வித்யுத் கோடி நன்றிகளை அவனுக்கு கூறிவிட்டு அந்த காட்டு பாதை வழி அர்ஜூனுடன் பிற போலீஸ் படைகளுடன் சென்றான் .

இங்கே காட்டு பாதையில் ஒரு நிசப்தமான இடத்தில யார் கண்ணிற்கும் தெரியாதவாறு அமைந்திருந்த வீட்டின் உள்ளே 5 நபர்கள் இருந்தனர் .அவர்கள் தோற்றமே பயங்கரமாய் அவர்கள் ரவுடி என்று சொல்லாமல் சொன்னது .அவர்கள் அங்கே கூத்தடித்து கொண்டிருக்க அப்பொழுதே சுயநினைவு பெற்ற சைந்தவி மெல்லமாய் தன் கண்களை திறந்து பார்த்தாள்.

அவள் இருக்கும் இடம் அவளுக்கு விளங்கவில்லை பின்னே தான் கடத்தப்பட்டிருப்பது புரிய தன்னை சுற்றி இருந்தவர்களின் முகத்தை பயத்துடன் ஏறிட்டாள் .அதில் ஒருவன் "அண்ணன் பாப்பா முழுச்சுகிச்சுன்னே "என்க

இன்னொருவன் "அண்ணன் சும்மா வெள்ளையா தள தளன்னு இருக்கான்னே "என்க

இன்னொருவன் "ஆமாடா செம்மையா இருக்கா "என்க

இன்னொருவன் "ஏய் ஆக்கங்கெட்ட கூவைங்களா இப்டிலாம் பேசாதீங்களே அண்ணன் விக்க போறதுக்கு முன்னாடி எந்த பொண்ணையும் தொட கூடாதுனு நம்மட்ட சொல்லிருக்காருல்ல தெருஞ்சுச்சுனா பெண்டு நிமித்திருவாரு "என்க

இன்னொருவனோ "எப்படியும் விக்க தானண்ணே போறோம் அதுக்கு முன்னாடி கொஞ்சமா நாம நம்ம ஆசைக்கு பயன்படுத்திகிட்டா என்ன "என்க இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டவளுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்க கையையும் காலையும் திமிரிக் கொண்டு விடு பட முயற்சித்தால் அந்தோ பரிதாபம் அவள் கைகளும் கால்களும் கட்ட பட்டு இருந்தது .

அவள் திமிறுவதை பார்த்த ஒருவன் "ஒய் பாப்பா தப்பிக்கலாம்னு நினைக்காத இங்க இப்டி ஒரு இடம் இருக்குறதே நெறய பேருக்கு தெரியாது "என்று கோரமாய் சிறிது கொண்டே அவள் கன்னத்தை வருட அவளுக்கோ உடம்பெல்லாம் பற்றி எரிவதை போல் இருக்க வித்யுதின் அருகாமையை அவள் மனம் அதிகமாய் நாட கண்ணீர் கண்களில் இருந்து கன்னத்தை வஞ்சனை இன்றி நனைத்தது .

அவள் அழுவதை பார்த்தவன் "ஆஹா தொட்டதும் அழுகை வருதோ "என்றவன் அவள் வாயிலிருந்த கட்டை அவிழ்க்க "ப்ளீஸ் ப்ளீஸ் என்ன எதுவும் பன்னீராதீங்க ப்ளீஸ் நா அப்டி பட்ட பொண்ணு இல்ல என்ன விட்ருங்க ப்ளீஸ் என்ன உங்க தங்கச்சி மாறி நெனச்சு விட்ருங்க "என்று அவள் அழுக

அதை பார்த்து சிரித்த இன்னொருவன் "தங்கச்சி மாறி நெனைக்குறதுக்கு பதிலா பொண்டாட்டி மாறி நெனச்சுக்குறோம் குட்டி எப்படி வசதி "என்று கேட்க

அவன் முகத்தை அருவருப்பாய் பார்த்தவள் "செய் இப்டி ஒரு பொண்ண கடத்தி பணத்துக்கு விக்க பாக்குறீங்களே வெக்கமா இல்ல "என்க அவள் பேசியதை காதில் வாங்காதவன் அவளை தொட வர தொட நினைத்த அவன் கையை அவள் கடித்து வைக்க கோவம் கொண்டவன் அவள் தலையை பிடித்து அங்கிருந்த மேஜையில் ஓங்கி அடிக்க முன் தலையில் பலமாய் அடிபட்டு கீழே விழுந்தவள் அடுத்து பின் மண்டையில் அடி பட மெல்ல மயக்கத்தின் பிடிக்கு செல்ல அவள் கண்ணில் கடைசியாய் அவளை இறை தேடும் நாயாய் அந்த ஆடவர்கள் நெருங்க "என்ன கொன்னுறு கணேஷா" என்று தனக்கு நடக்க போகும் அநீதியை நினைத்து சாவிற்காய் வேண்டி மயங்கினாள் சைந்தவி .

அந்த பையன் கூறியவாறு உள்ளே செல்ல அங்கோ ஒரு இடத்திற்கு மேல் வழி இல்லாமல் புதிராய் மண்டி இருக்க வித்யுத் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க சற்று யோசிக்கத்த அர்ஜுன் அந்த புதர்களுக்கு தீ வைக்க கூறினான் .திகைத்த வித்யுத் "அண்ணா ஏன் தீ வைக்க சொல்றீங்க ":என்க

சிரித்த அர்ஜுன் "பொறுத்திருந்து பார் புரியும்" என்றவன் தீ வைக்க கூற அந்த புதர்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து முடிய பின் அங்கே ஒரு பழைய வீடு ஒன்று இருப்பது தெரிய

அர்ஜுன் "இங்க தான் சைந்தவி இருப்பா "என்றவன் அங்கே முன் வாசலில் இருவர் இருக்க மெல்லமாய் அருகில் சென்று இருவரையும் வீழ்த்தியவர்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு செல்ல சைந்தவியை நோக்கி அந்த 5 ஆடவரும் நெருங்க ஒருவன் அவள் துப்பட்டாவை இழுப்பதை பார்த்த வித்யுத் கோபமாய் "ஏய்ய்ய் "என்று உள்ளே சென்றவன் அந்த ஐவரையும் புரட்டி எடுத்து விட்டான் .

அவள் துப்பட்டாவை இழுத்தவனை அவன் சரமாரியாக தாக்கி கொண்டிருக்க உள்ளே வந்த அர்ஜுன் "வித்யுத் சைந்தவி மொதல்ல பாரு இவனுங்கள விடு "என்று கஷ்டப்பட்டு அவனை அவர்களிடமிருந்து பிரிக்க சைந்தவியை நோக்கி சென்ற வித்யுத் அவள் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருக்க அவள் தலையை தன் மடியில் தாங்கியவன் அவள் கன்னத்தில் தட்டி "சது சது பாரு டி உன் விது வந்துட்டேன் பாருடி "என்க அவளிடமோ எந்த விதமான பதிலும் வராது போக அவளை கையில் ஏந்தியவன் வண்டியை நோக்கி வேகமாய் ஓடினான்.

அவளது தலையை தன் மடியில் தாங்கியவன் அவள் முன் தலையிலும் பின் தலையிலும் அடிபட்டு ரெத்தம் வந்து கொண்டே இருப்பதை பார்த்தவன் துடித்து அவள் துப்பட்டாவால் அவள் தலையை கட்ட அவள் வெள்ளை துப்பட்டா நொடியில் அவள் ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் மாறியது அர்ஜுன் வண்டியை அதி வேகமாய் செலுத்தினான் .மருத்துவமனை வரும் வரை சது சது சது என்று ஜபம் போல் ஜபித்து கொண்டே வந்தவன் உள்ளே அவளை தூக்கி சென்று அவசர பிரிவில் அனுமதித்தவன் அப்படியே ரெத்தம் படிந்த சட்டையுடன் சோர்ந்து ஒய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான் அவனை தேற்ற நினைத்த அர்ஜுனிற்கு தோல்வியே மிஞ்ச அவனை அப்படியே விட்டவன் சைந்தவியின் அப்பா அம்மாவிற்கு அழைத்து அவர்களை உடனே மருத்துவமனைக்கு வர சொல்ல அவர்கள் அடுத்த 10 நிமிடத்தில் வந்து விட

வித்யுதிடம் வந்த ராஜி "மாப்ள என்னாச்சு மாப்ள அவளுக்கு என் பொண்ணுக்கு என்னாச்சு "என்று அழுது கொண்டே கேட்க அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அவசர பிரிவு அறையின் வாசலையே பார்த்து கொண்டிருந்தான் .உள்ளே இருந்த டாக்டர் வெளி வந்து "patientku ரெண்டு பக்க தலைலையும் பலமா அடி பற்றுக்கு operate பண்ணனும் sign பண்ணுங்க "என்க

சைந்தவியின் அப்பா "டாக்டர் என் பொண்ணுக்கு ..."என்க

doctoroh "இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது ஷி ஐஸ் இன் கிரிட்டிகள் ஸ்டேஜ் "என்க வைத்யுதின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது .சைந்தவியின் அப்பா வேகமாய் sign போட்டு தர 3 மணி நேரமாய் அவளுக்கு ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது.வித்யுதிற்கு ஒவ்வொரு நொடியும் தீயில் நடப்பதை போல் இருக்க டாக்டரின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தான் மனதில் என் சதுக்கு எதுவும் ஆக கூடாது நா அவளோட வாழனும் காலம் முழுக்க வாழனும் ப்ளீஸ் கடவுளே அவளையும் என் அம்மாவை பரிச்ச மாறி என்ட இருந்து பறிச்சுறாத என்று முதல் முதலாய் 11 வருடங்களுக்கு பின் கடவுளிடம் பிரார்த்தித்தான் .

3 மணி நேரம் 3 யுகமாய் கழிய வெளியே வந்த டாக்டரிடம் ஆவலாய் அனைவரும் சென்று விசாரிக்க தலையை தொங்க போட்டவர் "சாரி எங்களால எதுவும் பண்ண முடில ஷி ஐஸ் இன் ஹர் லாஸ்ட் மினிட்ஸ் "என்க அதை கேட்ட அவள் அம்மா கதறி அழ அவள் அப்பா உடைய ஹரி அக்கா என்று கத்த வித்யுதோ உடைந்து கீழே தொப்பென்று அமர்ந்தான் .

பின் ஒவ்வொருவராய் சென்று அவளை பார்த்து வர கூற அவன் அருகில் வந்த ஹரி அவன் தோளை தொட உணர்ச்சியற்று நிமிர்ந்தவன் "ம...... மாமா போயிடு வாங்க மாமா "என்று கூற அவன்தட்டு தடுமாறி எழுந்து உள்ளே சென்றான்.

உள்ளே தலையை சுற்றி கட்டு போடப்பட்டிருக்க மூச்சிற்காய் oxygen மாஸ்க் போடப்பட்டிருக்க இப்பொழுது நிற்கவே பின் நிற்கவா என்று இதய துடிப்பு குறைந்து கொண்டே இருக்க அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்த வித்யுத் "சது நீயும் ஏமாத்தீட்டல .என் கூட எப்போவும் இருப்பேன்னு சொன்னேல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன விட்டு போயிருவனு சொல்றாங்கடி போயிருவியா நீ இல்லாம நா எப்படி டி இருப்பேன் ?இந்த 6 மாச காதல்ல 60 வருஷம் உன்னோட வாழ்ந்த மாறி இருந்துச்சுடி இதே மாறி காலம் முழுக்க உன்னோட சந்தோஷமா வாழணும்னு ஆச பட்டேன் நா ஆச படுறது எதுவுமே கிடைக்க கூடாதுன்ற முடிவோட கடவுள் என்ன படச்சுருக்கார் போல .என்று அவன் பேசி கொண்டிருக்க அவள் இதய துடிப்பு இறங்கி கொண்டே இருக்க "நீ சாகுறத என் கண்ணால பாக்க முடியாது டி நா போறேண்டி என்றவன் இதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் அங்கிருந்து அவன் வெளியே செல்ல சைந்தவியின் இதய துடிப்பும் அடங்கியது

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top