30
வித்யுதிடம் சென்று அண்ணா என்ன ஆச்சுடா என்று கெட அதிதிக்கு எனோ கண்ணீர் நிற்காமல் கரை புரண்டோடியது அவளை பார்த்து நிமிர்ந்த வித்யுத் உணர்ச்சியற்ற முகத்தை காட்டியவன்"உன் சந்தோஷம் ஹாஸ்பிடல்ல இருக்கு என் சந்தோஷம் எங்க போச்சுன்னே தெரில"என்க
அதை கேட்ட அதிதி உணர்வுகள் மரத்து தரையில் கால் மடங்கி அமர்ந்து விட்டால்.அவளின் இந்த செய்கையை பார்த்த ஹரியின் அப்பாவிற்கு ஏதோ புரிவதை போல் இருக்க அனால் இந்த நேரத்தில் அதை ஆராய அவர் விரும்ப வில்லை.அவள் விழுந்ததை பார்த்த நவ்யா "அதிதி "என்று அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் முதுகை ஆதரவாய் நீவி விட்டு கொண்டிருக்க அதிதிக்கு கண்ணீர் நிற்காமல் கன்னத்தை நனைத்து கொண்டிருந்தது .
அடுத்த 5 நிமிடத்தில் கார் வர ஹரியின் அம்மாவும் அப்பாவும் கிளம்பி செல்ல தயாராக எழுந்த அதிதி "அத்தை நானும் வரலாமா ப்ளீஸ்"என்று கண்ணீருடன் கேட்க சற்று யோசித்தவர் அவளையும் அழைத்து சென்றார் .இங்கே வீட்டில் வித்யுதும் நவ்யாவுமே எஞ்சி இருக்க அவனின் இறுக்கமான தோற்றத்தை பார்த்த நவ்யா அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோளில் கை வைத்தவள் "பையா க்யா ஹுவா சையு திதி கஹா ஹெய்ன்?aur ஹரி பையா கோ கைஸே அச்சிடேன்ட் ....(அண்ணா என்ன ஆயிற்று சையு அக்கா எங்கே ஹரி அண்ணாவிற்கு எப்படி அச்சிடேன்ட்.....)என்க அவளை பார்த்து விட்டு ஏதோ சொல்ல விழைய அதற்குள் அங்கே அவன் அழைத்ததை போல் அர்ஜுனும் கார்திக்க்கும் படபடப்புடன் வந்தனர் .அவர்களுடன் விஸ்வ வும் வந்திருந்தார்
.உள்ளே வந்த அர்ஜுன் "ஹே வித்யுத் என்னாச்சு ஏதோ ரொம்ப அவசரம்னு கால் பண்ண இவரையும் கூட்டிட்டு வர சொன்ன என்னாச்சு எனி ப்ரோப்லேம் ?"என்க விஷுவாவிடம் சென்ற வித்யுத் "என் சது எங்கே?"என்க
அவருக்கோ ஒன்றும் விளங்கவில்லை "வித்யுத் எனக்கு எப்படிப்பா தெரியும் சைந்தவி காணாமா ?"என்க
அவனோ மீண்டும் நிதானமாய் "நடிக்காதீங்க என் சையு எங்கே?"என்க ,
மீண்டும் அவர் "எனக்கு அவ கானோம்னே இப்போ தான்பா தெரியும் எனக்கு எதுவும் தெரியாதுப்பா "என்க
அவனோ வீடே அதிருமாறு "பொய் பொய் பொய் என்று கத்தியவன் தன் mobileai எடுத்து வந்து இந்த கார் இந்த கார் உங்க பேருல தான் ரெஜிஸ்ட்டர் ஆய்ருக்கு உங்களுக்கு தெரியாம என் சையு எப்படி போயிருப்பா என்ன என்ன முட்டாளாக்க பாக்குறீங்களா?"என்று ஒரு காரின் நம்பரை வைத்து அவன் சேகரித்த தகவலை காட்ட அவருக்கோ இது எப்படி நடந்தது என்று குழப்பமாக இருக்க அவர் குழப்பத்தோடு அவனை ஏறிட்டு பார்க்க
இது வரை பார்வையாளர்களை இருந்த கார்த்திக் "ஹே வித்யுத் என்ன ஆச்சுன்னு ஒழுங்கா சொல்லுடா "என்க அவனும் கூற துவங்கினான் .இன்னைக்கு காலைல
அன்று காலை வழக்கம் போல் எழுந்த வித்யுதும் சைந்தவியும் ரெடி ஆகி தங்கள் கல்லூரிக்கு செல்ல தத்தம் வண்டியில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது ஒரு ஐஸ் கிரீம் கடை எதிரில் திறந்திருக்க சைந்தவி "ஹே விது ஐஸ் கிரீம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுடா போய் வாங்கிட்டு வரவா ?"என்க
அவனோ "அடியேய் காலைல எவனாச்சும் ஐஸ் கிரீம் சாப்பிடுவானா போடி சாயந்தரம் சாப்டுக்கலாம் "என்க
அவளோ "ஹே விது விது ப்ளீஸ் ஒண்ணே ஒன்னு வாங்கிக்குறேன் டா "என்க அவளை சற்று நேரம் கெஞ்ச விட்டவன் போய் வாங்கிட்டு வா நா வெயிட் பண்றேன் "என்று வண்டியை நிறுத்தி விட்டு நிற்க சைந்தவியும் துள்ளலுடன் எதிரே சென்று ஐஸ் கிரீம் வாங்கி கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு வெள்ளை நிற கார் வந்து அவளை அல்லி போட்டுகொண்டு மின்னல் வேகத்தில் சென்றது .
அனைத்தும் ஒரு நொடியில் நடந்து விட முதலில் திகைத்த வித்யுத் பின் அவ்வண்டியை follow செய்ய முயற்சிக்க அவனால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது சட்டென்று அந்த வண்டியின் நம்பரை பார்த்து வைத்து கொண்டவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் மூலையில் உரைக்காமல் சோர்ந்து பொய் அங்கிருந்த மரத்தடியில் வண்டியை நிறுத்தி அங்கேயே தொப்பென்று அமர்ந்து விட்டான்.சற்று நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவன் அந்த வண்டியின் எண்ணை கொடுத்து அதன் தகவலை சேகரிக்க அதுவோ விஷவாவின் பெயரில் பதியப்பட்டிருந்தது அதை கண்டு சற்று அவன் மேல் திளைத்திருந்த நம்பிக்கையும் வித்யுதிற்கு சுத்தமாய் வடிந்து விட ருத்ரமாய் மாறியவன் தன் மொத்த கோபத்தையும் காட்டி அங்கே செல்ல முற்படுகையில் அவனுக்கு சைந்தவியின் அப்பாவின் என்னிலிருந்து கால் வந்தது .என்னவோ என்று அட்டென்ட் செய்தவன் அவர் கூறிய செய்தியில் மேலும் உறைந்தான்.
தேர்விற்காக படிக்க வேண்டி தன் நண்பனின் வீட்டிற்கு சென்று திரும்பிய ஹரிக்கு accident ஆனது என்றும் அவனை தற்போது hospitalil சேர்திரிற்கிறார்கள் என்றும் கூற வித்யுதிற்கு என்ன செய்வது என்று புலப்பட வில்லை நேராய் சைந்தவியின் வீட்டிற்கு சென்றவன் அர்ஜுனையும் கார்த்திக்கயும் விஷவாவையும் வர சொல்லி விட்டு நிதானமாய் செய்ய வேண்டியதை யோசிக்க துவங்கினான் .
இதை மொத்தமாய் கேட்ட அர்ஜுன் ஓகே ஓகே வித்யுத் பதறாத டென்ஷன் ஆகாத சரி பண்ணிரலாம் சைந்தவி கண்டு புடுச்சுரலாம் .என்றவன் வித்யுதிடம் அந்த காரை பற்றிய தகவல்களையும் அந்த நேரத்தையும் வாங்கியவன் தன் அலுவலக நண்பர்களை கொண்டு அந்த அரியாவிலிருந்த அனைத்து cctv footagegalayum சேகரித்து அதை ஆராய துவங்கினான்.அங்கே நவ்யா நடந்த சம்பவங்களால் அரண்டு போய் நிற்க அவளை இயல்பாக வேண்டி அவளிடம் வந்த கார்த்திக் அவளை தங்கள் வீட்டில் சென்று விட்டு வந்தான்.
வித்யுத் கூறிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த விஷ்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை தன் பெயரில் பதிவு செய்ய பட்ட கார் எப்படி என்று யோசித்தவனுக்கு அப்பொழுதே ரம்யாவின் ஞாபகம் வர கோபமாய் தன் வீடு நோக்கி சென்றான் .
இங்கே ஹாஸ்பிடலிற்கு வந்த அதிதியும் ஹரியின் அப்பா அம்மாவும் டாக்டரிடம் சென்று ஹரியை பற்றி விசாரிக்க அவரோ "பயப்புடுற மாறி ஒன்னும் இல்ல கால் மட்டும் hairline fracture ஆயருக்கு moderate speedla வந்ததாலயும் ரோட்டல தடுமாறி left சைடு மண்ணுல விழுந்ததாலயும் அங்கங்க செராய்ப்பு இருக்கு அவ்ளோ தான் நீங்க போய் பார்க்கலாம் "என்க அதிதிகொ "லார்ரி இடித்தது என்றதிலேயே இதயம் ஒரு முறை நின்றுவிட்டது .
பின் அவள் இடத்தை சுதாரித்து ஹரி இருக்கும் அறைக்கு வெளியே நின்றாள் .உள்ளே சைந்தவியின் அம்மாவும் அப்பாவும் சென்று விட்டு வரும் வரை வெளியே இருந்தவள் அவர்கள் வந்ததும் "நான் உள்ள போலாமா மாமா "என்க
அவரும் "பயப்புடுற மாறி ஒன்னும் இல்ல போடா "என்று கூற அவர் கூறி முடிக்கும் முன் உள்ளே கதவை சென்று திறந்தாள் அதிதி .அங்கே காலில் கட்டு போடப்பட்டு நெற்றியில் சிறு சிராய்புக்கு பன்டாஜ் போடு இருப்பவனை பார்த்தவள் ஓடி சென்று அவனை அணைத்து கொண்டால்.
திடீரென அவள் வந்து அணைத்ததும் திடுக்கிட்டவன் அவளை இலகுவாகும் பொருட்டு "ஆஹ் அடியேய் பார்க்க தாண்டி பஞ்சு மூட்டை மாறி இருக்க waituh சொர்ணாக்கா waitiruka "என்க அவன் நெஞ்சில் குத்தியவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது
அவள் அழுவதை உணர்ந்தவன் "ஹே அதி அதி என்னடா இதுக்கெல்லாம் போய் அழுதுகிட்டு சின்ன accident தான் நா பாத்து தான் போனேன் அந்த லார்ரி காரன் எக்கு தப்பா வந்ததுல லைட்டாக காயம் ஆயிருச்சு இதுக்கெல்லாம் போய் அழுதுட்டு "என்க
அவளோ "எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சுடா "என்றவள் அவன் காலில் இருந்த கட்டை மெதுவாய் வருடியவள் "ரொம்ப வலிக்குதா ?"என்க அவனோ மறுப்பாய் தலை அசைத்தவன் அவளை கட்டி பிடித்து கொண்டான் .
சற்று நேரம் அவன் கைகளுக்குள் அடங்கி இருந்தவள் பின் கலவரத்துடன் நிமிர்ந்து "ஹே ஹரி அண்ணிய காணோம்டா யாரோ கடத்திட்டு போய்ட்டாங்கனு அண்ணா சொல்லிட்டு இருந்தான் என்னாச்சுன்னு தெரிலடா எனக்கு ரொம்ப பயமா இருக்கு "என்க
அதை கேட்டு திடுக்கிட்ட ஹரி "என்னது அக்காவை காணோமா காலேஜ்க்கு மாமாவோட தான போனா என்னாச்சு "என்று எழ முற்பட ஆனால் அவன் காலோ ஒத்துழைக்க மறுத்தது
அவனை மீண்டும் அமர வைத்த அதிதி "ஹே எந்திரிக்க ட்ரை பண்ணாத .எனக்கும் எதுவும் தெரில அண்ணா சொன்ன தான் உண்டு.பயமா இருக்குடா அன்னிக்கு எதுவும் ஆகாதுள்ள "என்க
ஹரி "வித்யுத் மாமா இருக்குற வரைக்கும் அவளுக்கு எதுவும் ஆக விட்ர மாட்டாங்க ஆனா நா அதுக்காக இப்டி உக்காந்துட்டு இருக்க விரும்பல அப்பாவை கூப்டு நா அவரோட பேசணும் "என்க
அதிதி "ஹே doctor உன்ன ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்கடா "என்க
அவனோ "அதான் கட்டு போட்டாங்கல்ல ஒன்னும் ஆய்ராது அப்பாவை கூப்டு என்ன சீக்கரம் டிஸ்சார்ஜ் பண்ண சொல்லு "என்க அவளும் அரை மனதாய் வெளியே சென்று அவனின் அப்பாவை அழைத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் ஹரி வித்யுத்,அர்ஜுன் மற்றும் கார்திக்க்குடன் அவர்கள் வீட்டில் இருந்தான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top