3
இப்படியே நாட்கள் செல்ல அவனோ என்றும் போல் வருவான் வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பான் செல்வான் .
சைந்தவிக்கு யாரையும் எத்தனிமையில் விடுவது எனது பிடிக்காத ஒன்று.தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று தனிமையை போக்க நினைப்பவள் அவனுடனே தனது மதிய உணவை பேசிக்கொண்டே செலவிட அவனிடத்தில் இருந்து ஒரு ம்ம் தவிர்த்து எந்த வித பிரதிபலிப்பும் இருக்காது .
நாட்கள் அதன் போக்கில் செல்ல கரைப்பார் கரைக்க கல்லும் கரைய வேண்டுமே இப்பொழுதெல்லாம் வித்யுத் சைந்தவி பேசுவதை அவள் முன் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையையும் தன தலைக்குள் ஏற்றிக்கொண்டு தான் இருந்தான் .அவளின் குறும்பு அவளின் சிரிப்பு என்று அவள் பார்க்கும் நேரம் அதை கவனியாததை போல் திரிபவன் அவள் இல்லாத சமயத்தில் அவளின் குறும்புகளையும் குழந்தை தனத்தையும் நினைத்து சிரித்துக்கொள்வான்.அவன் பேச நினைத்தாலும் அவனுள் இருக்கும் தயக்கமும் பெண்கள் மீது இயல்பிலேயே ஏற்பட்டிருந்த வெறுப்பும் அவனை பேச விடாமல் செய்துவிடும்.
வித்யுத் இந்த கல்லூரியில் சேர்ந்து 10 நாட்கள் முடிவுற்றிருந்தது .அன்று கல்லூரி முடிந்து சென்றுகொண்டிருந்தனர் அனைவரும்.அப்பொழுது சைந்தவி அவளின் நன்பர்களுக்கு விடை கொடுத்தவள் மரங்கள் நிறைந்த அந்த பாதை வழி நடந்து சென்று கொண்டிருந்தாள் தனது ஸ்கோஓட்டயை எடுக்க .அவள் பின்னே வந்து கொண்டிருந்தான் வித்யுத் தனது வண்டியை எடுப்பதற்காக .அப்பொழுது திடீரென ஒரு மரத்தின் கீழ் சற்று தாமதித்த சைந்தவி திடீரென கீழே குனிந்தாள் .அவள் எதற்காக திடீரென குனிகிறாள் என்று வித்யுத் கவனிக்க அவள் கையிலோ ஒரு சின்ன குருவி குஞ்சு இருந்தது .அது மேலிருந்த கூட்டிலிருந்து தவறி விழுந்திருக்கிறது என்று புரிந்துகொண்டவன் அடுத்து என நடக்கிறது என்று பார்க்க துவங்கினான்.
சைந்தவி அங்கிருந்த ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தவள் அந்த குருவி குஞ்சாய் கையில் வைத்து அரண்டு காத்துக்கொண்டிருந்த அந்த குருவிக்குஞ்சை வருடிக்கொண்டே "அச்சோ குட்டிமா கீழ விழுந்துடீங்களா ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல பயப்படாதீங்க குட்டிக்கு அடி பட்ருக்கானு பாப்போமா என்று அதை அமைதிப்படுத்தியவாறே அதன் காலில் சிறு kerchief தண்ணீரில்நனைத்து கட்டிவிட்டால் முறிவு ஏற்பட்டிருப்பதை போல் தோன்றியதால் .
பின் தான் வைத்திருந்த கடலைகளை சிறிதாய் உடைத்து உண்ணக்கொடுத்தவள் அந்த மரத்திலிருந்த கூட்டில் அதை வைப்பதற்காக மரத்தில் ஏறினாள்.அந்த கூட்டில் குஞ்சை வைத்தவளை பார்த்து அந்த குருவி குஞ்சு இறகை விரித்து அவள் மூக்கில் தன் சிறிய அலகால் செல்லமாய் முத்தம் கொடுப்பதை போல் வைக்க அவளும் அதன் நெற்றியில் பட்டும் படாமல் தனது இதழை பதித்தவள் பத்திரமா இரு பட்டு என்றுவிட்டு கீழே இறங்க முயற்சித்தால்
.இவை அனைத்தையும் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் வித்யுத் .அவள் அந்த குஞ்சை அந்த கூட்டில் விட்டவள் கீழே இறங்க முயற்சிக்க அந்த மரமோ இடறிவிட கீழே தொப்பென்று சத்தத்துடன் விழுந்தாள் சைந்தவி .முதலில் பதறி அவள் அருகில் வந்தவன் பின் யாரும் பார்க்கவில்லையே என்று அவள் திருட்டு முழியோடு அங்கும் இங்கும் பார்ப்பதை பார்த்து வாய் விட்டு சிரித்துவிட்டான் .
எவன் அவன் சிரிக்கிறது என்று திரும்பியவள் தன்னை பார்த்து வித்யுத் சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து கோபம் கொண்டவள் "ஹலோ மிஸ்டர் ரோபோ இங்க ஒருத்தி விழுந்து இடுப்போடுஞ்சு கெடக்குறேன் நீ என்னனா ஏதோ ஷிஞ்சான் காமெடி பாத்த மாறி சிரிச்சுட்டு இருக்க கை குடு மேன்" என்க
அவனோ சற்று சிரிப்பை கட்டுப்படுத்தியவன் அவளுக்கு கையை கொடுத்தவன் பின் "அதான் குட்டையா இருக்கோம்னு தெரியுதுல்ல எதுக்கு monkey மாறி மரத்துல ஏறி கிட்டு இருக்க பக்கத்துல யாரையும் கூப்பிட கூடாதா?"என்க
அவளோ கண்ணை சுருக்கி முறைத்தவள் "ஹலோ ஐ அம் 5 .3 நீ பனைமரத்துல பாதி வளந்தா நா என்ன பண்றது ?"என்க அவனோ அவள் பேசுகையில் அவள் கண்களும் கைகளும் சேர்ந்து பேசிய பாஷயின் அழகில் லயித்திருந்தவன் தனது கொள்கைகளை மீறி அவளிடம் பேசினான்
அவளை நோக்கி சிரித்தவன் "நீ எப்போவும் இப்டி தானா ?"என்று கேட்க
அவளோ சீரியசாக "எப்போவும் இப்டி இல்ல இப்படி தான் எப்போவும் manufacture defectma ஒன்னும் பண்ண முடியாது "
என்று கூற அவன் நன்றாகவே சிரித்துவிட்டான் அவள் "நீ சிரிக்கேல நல்லா தான இருக்க அப்பறோம் ஏன் வீரப்பன் வம்சம் மாறி வெறச்சிட்டு இருக்க சிரிக்கலாம்ல "என்க
அவன் அதற்கும் மெலிதாய் சிரிக்கஅவளோ "போச்சுடா மறுபடியும் மொதல்ல இருந்தா மீ பாவம்ல "என்று பாவமாய் முகத்தை வைத்து கூற
அவனோ அவள் தலையில் லேசாக தட்டி "வாயாடி "என்றான் .
அதற்கு அவளோ "ஊருக்குள்ள அப்டி தான் பலபேரு சொல்லிக்குறாங்க புதுசா ஏதாச்சும் யோசித்து சொல்லு"என்று கூற மணி அடித்து உணவு வேளை முடிந்ததை உணர்த்தியது .
அவள்"சரி டைம் ஆச்சு கெளம்பலாமா" என்று கேட்டுக்கொண்டே முன்னேறி செல்ல அவனும் அவளோடு நடந்தபடியே தன் வண்டியை அடைந்திருந்தான்
ஏதோ கேட்க நினைத்து பின் கேட்காமல் விட்டவனை பார்த்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டிருந்தவள் "ஒய் ரோபோ என்ன கெளம்புற நேரத்துல பலத்த யோசனைல இருக்க ?"என்க அவனோ அவளை பார்த்தவன் பின் சற்று தயங்கி
அவனோ "ஹே ஒரு நிமிஷம் "என்றவன் சற்று தயங்கி விட்டு தன் வலக்கையை அவளிடம் நீட்டியவன் "friends ??" என்று புருவத்தை சுழித்து கேட்க
அவளும் சிரித்த முகமாய் "ஹப்பா இப்போவாச்சும் உனக்கு உன் பொன்வாய தெறந்து பேசணும்னு தோணுச்சே தாராளமா "என்றவள் கைகுலுக்கிவிட்டு அவன் கையை லேசாக தட்டியவள் தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட அவள் சென்ற திசை நோக்கி ஒரு இதழ்பிரியா புன்னகையை சிந்தியவன் என்றுமில்லாது சற்று லேசான மனதோடு மனதிற்கினிய பாட்டையும் முணுமுணுத்தபடி தன் வாகனத்தை கிளப்பினான்.அவன் அறியாமலே சிறு பொறியென இன்று அவனுள் நுழைந்தால் அவள்
.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top