29
நான் தான் என்று குரல் வர அங்கு திரும்பி பார்க்கவோ ரம்யா நின்றிருந்தாள் .அவளை பார்த்து வினய் விழிக்க விக்ரம் "இது ரம்யா இவங்க அதிதியோட அப்பாவோட செகண்ட் wife இவுங்க தான் நமக்கு ஹெல்ப் பண்ணிட்ருக்காங்க "என்க
அவளோ "விக்ரம் சொன்னான்ப்பா உன்ன பத்தி வித்யுத்......என்னையே ஒரு தடவ அடிக்க கை ஓங்கிருக்கான் அவனை சும்மா விட கூடாது .உனக்கும் நா ஹெல்ப் பண்றேன் "என்க
வினையோ "நீங்களா நீங்க எப்படி எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்" என்று அலட்சியமாய் கேட்க
ரம்யாவோ "உருவத்தை பார்த்து எடை போடாத வினய்.என்றவள் அவள் செய்த ஆள கால சாகசங்களை எல்லாம் கூறினால் .இவ்ளோ என் ஆதித்திய புடுச்சுருக்குனு விக்ரம் வந்து சொன்னப்போ விஷ்வாவை மிரட்ட சொன்னதும் அவன் பணியலென்ன ஒடனே ஆதித்திய accident பண்ண சொன்னதும் நான் தான் "என்றவள் அவன் முகத்தை பார்க்க அவனுக்கோ முகத்தில் ஈ ஆட வில்லை .
பின் அவளை பார்த்து சிரித்தவன் "அப்போ சரி டீல் ஆனா இதுனால உங்களுக்கு என்ன கிடைக்கும் ?"என்க
அவளோ சிரித்து விட்டு "சிம்பிள் சொத்து கிடைக்கும் .ஆதித்திய விக்ரம் கல்யாணம் பண்ணி கிட்டா அவ பங்கு சொத்தை எனக்கு மாற்றி தறதா விக்ரம் சொல்லிட்டான் .சைந்தவி மேல வித்யுத் உயிரையே வச்சிருக்கான் அவ இல்லாத lifeah அவனால நெனச்சு கூட பாக்க முடியாது .இப்போ அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனும் இறந்துருவான் obviously அந்த பங்கு சொத்தும் அதிதிக்கு வந்து சேரும் அது திரும்ப எனக்கு வந்து சேரும் .என்றவள் பின் மொத்த சொத்தும் என் கைக்கு வந்துட்டா அப்பறோம் "என்றவள் பயங்கரமாய் சிரிக்க வினையும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர் (அவ சிரிக்குறா அதுல ஒரு லாஜிக் இருக்கு நீங்க எதுக்குடா சிறிக்குறீங்க.வில்லனாமாம்)
அப்பொழுது விக்ரம் அனுப்பி வைத்த ஆள் வர விக்ரம் "ஹே வா வா வா உனக்காக தான் காத்துட்டு இருந்தேன் "என்றவன் அவன் தோளில் கை போட அவனோ "ச சார் அதிதி madammoda ஒரு பையன் ஹரி எப்போவும் சொல்லிருக்கேன்ல என்றவன் அடுத்து நடந்தவையையும் இன்று அவன் கண்ட காட்சியையும் கூறியவன் விக்ரமின் முகத்தை பார்க்க அதுவோ தீப் பிழம்பின் நிறத்தில் இருந்தது .
அவனின் தோற்றத்தை கண்டு பயம் கொண்டவன் அவன் கையிலிருந்து விடு பட முயற்சிக்க விக்ரமோ பிடியை இறுக்கியவன் "போட்டோஸ் எங்கே?"எங்கே
அவனோ "அ ... அது சார் அந்த பையன் மெமரி கார்டு எடுத்துட்டு போய்ட்டான் சார் நா என் போன்ல எடுத்த ஒரு போட்டோ தான் இருக்கு "என்று கூற அவன் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டவன் அவன் கையிலிருந்த போனில் உள்ள புகைப்படத்தை பார்க்க அதிலோ அதிதியின் நெற்றியிலிருந்து குங்குமத்தை ஹரி அவன் நெற்றியில் மாற்றும் புகை படம் இருக்க வெறிபிடித்தவன் போல் அந்த போனினை தூக்கி போட்டவன் சின்ன பையன்னு விட்டு வச்சது தப்பா போச்சு அவனை .........."என்று அவன் கீழே இருந்த charai தூக்கி வீச
வினையோ "ஹே மச்சி மச்சி கூல் கூல் டா இவ்ளோ கோவ படாத பொறுமையா பண்ணனும் டா "என்க
விக்ரமோ "பொறுமையா இருக்கனும் இருக்கணும்னு நா பொறுமையா இருந்து இப்போ இங்க வந்து நிக்குது இனிமேலும் பொறுமையா இருந்தா என்னோட அதிதி என்ன விட்டு போயிருவா போல நோ நோ இது கூடாது .என்று எண்ணியவன் நாளைக்கு அவனோட அழிவு என் கைல தாண்டா "என்றவன் எழுந்து சென்று விட்டான் .
நாளைய ஒரு நாளில் தன வாழ்வே தலை கீழாய் மாற போவது தெரியாமல் கோபமாய் சென்றான் விக்ரம்.அவனை தொடர்ந்து சென்றான் வினய் .
இங்கே இது எதுவும் அறியாத இந்த நால்வர் குழு சாரி ஐவர் குழு தோட்டத்தில் கேம்ப் fire இட்டு அமர்ந்திருந்தனர் .
ஹரி "அப்பா நீங்களும் அம்மாவும் லவ் marriagenu எனக்கு தெரியும் ஆனா எப்படி லவ் marriagenu சொல்லுங்களேன்"என்க
அதிதியுடனும் வித்யுத்துடனுமே தன் பாதி நாட்களை கழித்த நவ்யாவால் அவர்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள முடிந்தது .
அதற்கு அவன் அப்பாவோ "டேய்ய் வேணாண்டா அதெல்லாம் "என்க
சைந்தவியோ "அப்பா முடியவே முடியாது எப்போவும் கேட்டா ஏதாச்சும் சொல்லி மழுப்பிருறீங்க இன்னைக்கு ஒழுங்கா சொல்லுங்க "என்க வித்யுதும் ஆதிதியும் சேர்ந்து சொல்லுங்க மாமா என்க
அவரோ"சரி சரி சரி சொல்றேன் சொல்றேன் அதற்காக பட்டது உன் அம்மாவோட அண்ணண் மணிகண்டனும் நானும் friendsuh ."என்க
ஹரி "ஆனா அப்பா மாமா உங்கள விட 2 வயசு பெரியவர் தான "என்க
அவரோ "டேய்ய் கத சொல்லேல குறுக்க பேசாத ஒழுங்கா கேளுடா "
என்க அவனும் வடிவேலு பாணியில் ஓகே என்று வாயை உப்பி கையை வைத்து மூடி கொண்டான் .
அவனை பார்த்த அதிதி "ஆங் இப்போ தான் ஆச்சு அசல் கொரங்கு குட்டி மாறியே இருக்கு"என்க
ஹரியோ "யாரு கொரங்கு அய்யா பெர்சனாலிடிய பாத்து டெய்லி பத்து பொண்ணுங்க லைன்ல நிக்குது "என்க
சைந்தவி "இந்த மூஞ்சிக்கு "என்க
வித்யுதோ"ஏன் என் மச்சானுக்கு என்ன ?"என்று சண்டைக்கு வர நவ்யா இவர்களின் சண்டையை ரசித்து கொண்டிருந்தாள் மெல்லிய கோடாய் அவள் இதழில் புண் முறுவல் பூத்தது .
இவர்கள் ஒருவரை ஒருவர் துரத்த எந்திரிக்க அவர்கள் அம்மா ராஜி வழக்கம் போல் அவன் தலையிலும் சைந்தவி தலையிலும் ஒரு போடு போட்டவர் "கதை கேட்டா ஒழுங்கா ஒக்காந்து கேளு கொரங்கு மாறி அங்கேயும் இங்கயும் குதிச்சுக்கிட்டு "என்றவர் தனபால் அப்பா அருகில் சென்று அமர்ந்தார் .
பின் வித்யுத் "அப்பறோம் என்னாச்சு மாமா "என்க
அவரோ "அவன் என்ன விட 2 வயசு மூத்தவன் அப்போ எல்லாம் எங்க வீட்டுல வசதி இல்ல .அப்பா tailor .எங்களுக்கு சாப்பாடு குடுக்குறதே அவருக்கு பெரும் பாடா இருந்துச்சு .ராத்திரி விளக்கை போட விட மாட்டாங்க.அதுனால நாங்க தெரு விளக்குக்கு அடில தான் படிப்போம் .அவன் வீட்டுலயும் அதே நெலம தான் அவனும் நானும் அங்க ஒன்னா படிச்சதால ஏற்பட்ட நட்பு தான் .அப்பறோம் வீட்டுக்கு போய்ட்டு வரதுனு எங்க நட்பும் வளந்துச்சு .அவனுக்கு தங்கச்சி இருக்குனு தெரியும் ஆனா எந்த வயசு எதுவும் எனக்கு தெரியாது .ஒரு நாள் என் அம்மா அவன் ஏதோ புத்தகம் குடுத்தனுப்பி இருக்குறதா சொன்னாங்க .நானும் போனேன் அங்க அவன் இல்ல பாவாடை தாவணி போட்டுட்டு ரெட்டை பின்னல்ல உன் அம்மா தான் இருந்தா "என்க
சைந்தவி "அப்போ அப்டியே கட் பண்ணா பின்னாடி backgroundla பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது சோங் கேற்றுக்குமே "என்க
அவள் அம்மாவோ "ஆமா அப்டியே உங்க அப்பாக்கு கேட்டுட்டாலும் வந்தாரு அவன் அனுப்சு விட்டானாம்மா குடும்மா குடும்மா அப்டின்னவரு புத்தகத்தை தான் பாத்தாரே ஒழிய என்ன நிமிந்து கூட பாக்கல "என்க
ஹரி "பாக்குற மாறி இருந்தா பாத்துருப்பாருல்ல மா "என்க அதற்கும் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டான் .
பின் ராஜி "ஆனா உங்கப்பா கிட்ட என்ன ஈர்த்ததே அந்த கண்ணியமான பார்வை தான் .ஒவ்வொரு தடவ பார்க்கேலையும் எப்படி இருக்கன்னு கேப்பாரு படிப்பை பத்தி கேப்பாரு இந்த இந்த படிப்புலாம் இருக்குனு சொல்லுவாரு .என் அண்ணன் மிலிட்ரில சேந்ததுக்கப்ரோம் எனக்கு ஒரு friendaah எல்லாமுமா உங்க அப்பா ஆயிட்டாரு .என் அப்பாவும் அம்மாவும் இவரோடன்னா எங்கனாலும் தைரியமா அனுப்புவாங்க .என்ன இன்டெர்வியூஸ்க்கு கூட்டிட்டு போறதும் அவரு தான் .எங்கனாலும் என்னனாலும் எனக்கு பண்றது எல்லாமே உங்க அப்பா தான் .அப்டியே 5 வருஷம் போச்சு .உங்க அப்பாக்கு சென்னைல கோர்ட்ல practice பண்றதுக்கு சான்ஸ் கெடச்சுது .அந்த நாள் ரொம்ப அழுதேன் .என் அண்ணன் மிலிட்டரி போனப்போ கூட நா அழுகலை ஆனா அன்னைக்கு ரொம்ப அழுதேன் ஏன்னே தெரில ."என்றார்
பின் தனபால் தொடர்ந்தார் "எனக்குமே அன்னைக்கு என்னனே தெரியல அவளோட அழுத முகம் என் மனசையே பெசஞ்சுச்சு .அங்க போய் நிம்மதியா வேல பாக்க முடில caseku வந்தவுங்கட்ட போய் அப்பறோம் ராஜீனு ஒளறிட்டு இருந்தேன் .அப்பறோம் யோசிச்சேன் அப்போ தான் புரிஞ்சுது உன் அம்மா தான் எனக்கு எல்லாமேனு "என்க
ராஜீயோ "எனக்கும் அது புரிஞ்சது அவரு எப்போ வருவாரு வருவாருனு யோசிச்சுட்டே இருந்தேன் .ஒரு நாள் வாசல் தண்ணி தெளிச்சுட்டு இருக்கேல வீட்டுக்கு முன்னாடி பெட்டியோட வந்து நின்னாரு .எனக்கு கனவா நெனவானே யூகிக்க முடில ஓடி போய் அவரை கட்டி புடுச்சுக்கிட்டேன் ."
என்க
தனபாலோ "அத்தனை நாளா நானும் அவ இல்லாம ரொம்ப தவிச்சு போயிருந்தேன் இதுக்கு மேல முடியாதுனு அவளை பிரிச்சு வீட்டுக்குள்ள போனேன் அவுங்கப்பா கிட்ட நேரா போய் உங்க பொண்ண கட்டி தருவீங்களானு கேட்டேன் .எனக்கு உங்கள பாக்கேலா அப்டியே 25 வருஷத்துக்கு முன்னாடி என்னையே பாத்த மாறி தான் மாப்ள இருந்துச்சு ."என்க
சைந்தவியோ "அப்பறோம் என்னப்பா ஒத்துக்கிட்டாங்களா ?"என்க
ராஜியோ "நல்லா ஒத்துக்கிட்டாரு.... ஜாதி விட்டு ஜாதி கட்டிக்குடுக்குறதுலாம் எங்க வீட்ல வெட்டி போட்ருவாங்க .செம பிரச்னை உங்க அப்பா வீட்லயும் ஒத்துக்களை என்க வீட்லயும் ஒத்துக்களை.எங்க வீட்ல ஒரு படி மேல போய் எங்க அண்ணியோட ஒரு வீனா போன அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க .அடுத்த நாள் கல்யாணம் அழுதுட்டே படுத்திருந்தேன் .உங்க அப்பா வீட்டுக்குள்ள வந்தாரு என்ன நம்பினா என் கூட வானு கூப்டாரு .யோசிக்கல மாத்திக்க துணி ,அங்க எப்படி இருக்க போறோம் ,என்ன பண்ண போறோம் எதுவும் தோணல உங்க அப்பாவை நம்பி அவரு கைய புடுச்சு சென்னைக்கு வந்தேன் ."என்க
வித்யுத் "செம அத்த அப்பறோம் எப்படி அவுங்கள எல்லாம் சமாதானப் படுத்துனீங்க ?"
என்க
தனபாலன் "சைந்தவி பிறந்ததுக்கு அப்ரம் தான் "என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.
சைந்தவியோ "அப்பா அம்மா என்ன ரொமான்ஸாஹ் இல்ல ரொமான்ஸாங்குறேன் பச்சை புள்ளைங்கள வச்சுக்கிட்டு போப்பா போமா "என்க அவர்களோ அசடு வழிந்து விட்டு சீக்கரம் வந்து தூங்குங்கடா என்று விட்டு உள்ளே சென்று விட்டனர் .
பின் அனைவரும் சற்று நேரம் பேசி விட்டு உள்ளே சென்று படுத்தனர் .அடுத்த நாள் எழுந்த அதிதிக்கு ஏனோ மனம் நெருடலாகவே இருந்தது ஏதோ தவறு நிகழப் போவதை போல் .நவ்யாவை பார்க்க அவளோ நிர்ச்சலனமாய் உறங்கி கொண்டிருந்தாள் .
பின் எழுந்தவள் குளித்து முடித்து விட்டு அவளையும் எழுப்பி விட்டு வித்யுதயும் எழுப்பி விட்டவள் தயாராகி வர
அவள் முகம் கலவரமாகவே இருந்ததை பார்த்த நவ்யா "அதிதி க்யா ஹுவா?(என்ன ஆச்சு )"என்க
அவளோ "பதா நெஹி குச் அஜீப் லகிரி ஹெய்ன் (ஒன்றுமில்லை சற்று அசௌகரியமாக இருக்கின்றது )"என்க
நவ்யாவோ "குச் நெஹி ஹோகா(ஒன்றும் ஆகாது )என்று அவள் தோளில் அழுத்தம் கொடுத்தவள் .அவளை அழைத்து செல்ல ஹரிக்கு இன்றிலிருந்து 10 நாட்களில் இருந்து semester தேர்வு இருப்பதால் அவனிற்கு விடுமுறையாய் இருக்க அவன் வீட்டில் இருந்ததால் அதிதியும் நவ்யாவும் மிதிவண்டியில் கோயிலிற்கு கிளம்பினர்.அதிதிக்கு ஏதோ தவறாக நடக்க போவதை போலே தோன்ற வீடு வந்தவளுக்கு பூட்டிய வீடே காட்சி அளிக்க அவளும் நவ்யாவும் சைந்தவியின் வீட்டிற்கு செல்ல அங்கோ சைந்தவியின் அம்மா அழுது கொண்டே இருக்க அவள் அப்பாவும் வித்யுத்துமோ முகத்தில் கலவரத்துடன் இருந்தனர் .
வித்யுத் அருகில் சென்றவள் "அண்ணா என்னாச்சுடா?" என்று கேட்க தன்னிச்சையாய் அவள் கண்களில் கண்ணீர் கரை புரண்டியோடியது அவளை உணர்ச்சியற்ற முகத்தோடு பார்த்த வித்யுத் இரு அதிர்ச்சியான தகவல்கள் சொல்ல அங்கேயே கால்களை மடக்கி சரிந்தாள் அதிதி .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top