28
இங்கே இவர்கள் யாரை ஒழிக்க திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்களோ அவனோ மிகவும் கூலாக விசில் அடித்து கொண்டே ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு அவன் மொபைலில் உள்ள அதிதியின் முகத்தை பார்த்தவன் நிலவை பார்த்து விட்டு "அந்த வானத்துல இருக்குற நிலவ விட நீ தான் அது என் மனசுல அணையாம ஜொலிக்குற உனக்கு ஞாபகம் இருக்கானு தெரில ஆனா எனக்கு ஞாபகம் இருக்கு நான் எப்போ உன்ன பாத்தேன்னு
(பிளஷ்பக் ஈஈஈஈ)
4 மாதங்களுக்கு முன்
இரவு 8 மணி
ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது அதன் வெளியே நான்கு இளவயது ஆண்கள் கையில் பாட்டிலுடன் நின்று கொண்டு ஏதோ உரையாடி கொண்டே போதையில் உழன்று கொண்டிருந்தனர்
அதில் ஒருவன் "டேய்ய் விக்ரம் செம டா காலேஜ் முடுச்சு கொஞ்ச நாள்லயே கம்பெனி எடுத்து நடத்த ஆரம்பிச்சுட்டியே என்ஜோய் பண்ண மாட்டியோ ற்றேஅட் குடுக்க மாட்டியோன்னு நெனச்சேன் எண்ஜோயோஹ் என்ஜோய்மேன்ட் மச்சான் "என்க
இன்னொருவன் "ஆனா ஒரே ஒரு கொர மச்சான்"என்க
விக்ரம் "என்னோட treatla கொறையா இருக்கவே கூடாதே என்னடா கொறையுது" என்று குளறி கொண்டே கேட்க அங்கே அவர்களை நோக்கி இரு பெண்கள் வந்து கொண்டிருந்ததை
பார்த்தவன் "கைல புட்டி இருக்கு ஒரு குட்டியும் இருந்தா நல்லா நச்சுனு இருக்கும்டா அதோ அந்த மாறி என்று அந்த இருவரில் ஒரு பெண்ணை நோக்கி கை காட்ட அங்கே பார்த்தவன் உண்மையிலேயே அசந்து தான் விட்டான் சாந்த சொரூபிணியாய் சிறிது பேசிக்கொண்டே இரு பெண்கள் வர அவனுக்கோ தன் நண்பன் காட்டிய பெண்ணுடன் வந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் மீதே கண்கள் இருந்தது .அவர்கள் அருகில் வந்ததும் ஒருவன் காரில் இருந்து இறங்கி அந்த இன்னொரு பெண்ணிடம் சென்று அவள் கையை பிடிக்க அது வரை கண்கள் எடுக்காமல் அந்த பெண்ணை பார்த்து கொண்டிருந்த விக்ரம் ஒரு அடி சத்தத்தில் தான் சுய நிலைக்கே வந்தான் .
அவள் கையை பிடித்தவன் தரையில் வயிற்றை பிடித்து கொண்டு கீழே கிடந்தான் .அவன் சாந்த சொரூபிணி என்று நினைத்த அப்பெண் தான் ஆறடி இருந்த அவன் நண்பனை அடி வயிற்றை பிடித்து கொண்டு விழ வைத்திருந்தால் .
அடுத்தடுத்து அவனின் 4 நண்பர்களும் "என்ன திமிரடி உனக்கு என்று அவளை நெருங்க அவள் அருகில் இருந்த பெண் "அதிதி சோடோ னா உசே உன் லோகோன் னே ஷராஃ பீயா தா ஜெகடா மத் கரோ "(அதிதி அவர்களை விட்டு விடு அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள் சண்டை இடாதே ) என்க
அதிதியோ "கிதனா சாஹஸ் ஹேய் இன் லோகோன் கோ மேரி ஹாத் கோ பகட் னே கோ மெய்ன் இசே நெஹி சொடுங்கி.து சுப் சாப் ரஹோ"(எத்தனை தைரியம் இவர்களுக்கு என் கையை பிடிக்க இன்று இவர்களை நா விட போவதில்லை .நீ அமைதியாய் இரு )என்று அவள் தோழியிடம் கூறியவள் அருகில் வந்தவர்களை 5 அடிகளிலேயே வீழ்த்தினால் அனைத்து ஆண்களும் கீழே விழுந்து கிடக்க அவள் கையை பிடித்தவன் அருகில் முட்டியிட்டவள் "பொண்ணு தானேனு நெனச்சு தான கைய புடுச்ச முடுஞ்சா எந்திருச்சு ஒக்காருடா பாப்போம் தொலைச்சுருவேன் ஒழுங்கா ஊரு போய் சேரு "என்று விட்டு அவளையே பார்த்து கொண்டிருந்த விக்ரமை ஒரு முறை முறைத்து விட்டு சென்று விட்டால் .
பின் அவள் முகம் அவன் நினைவை விட்டு அகல மறுக்க நாளை அவளிடம் மன்னிப்பு கோர நினைத்தவன் அதே இடத்திற்கு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு வந்தான்.அப்பொழுது அவள் ஒரு அனாதை ஆஸ்ரமத்திற்கு செல்வதை பார்த்தவன் "இவை என்ன இங்க போறா "என்று நினைத்து உள்ளே செல்ல அவளோ அங்கே உள்ள குழந்தைகளை எல்லாம் சுற்றி அமர வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் கதை கூறி கொண்டிருந்தாள் .அவள் கண்ணை விரித்து கையை ஆட்டி கூற அவ்வப்போது அவள் கூறிய நகைச்சுவையில் அந்த குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் சிரிக்க அவளின் கண்ணா குழியில் தன் மனதை புதைத்தான் அவன் .பின் அவள் அறியாது வெளியில் வந்தவன் மனதில் அவள் அவள் அவள் மட்டுமே
(பிளாஷ் பாக் ஓவர்)
அப்போ விழுந்தவன் தாண்டி உன்ட உன்ன யாருக்கும் விட்டு தர மாட்டேன் நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் .என்று நினைத்து கொண்டே அவள் சென்றிருக்கும் அதே கோவிலுக்கு வந்தவன் அவளை தேடி கொண்டே இருக்க குளக்கரையில் அவள் இருப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கொண்டே நின்றான் .அப்பொழுது எதேர்ச்சியாய் திரும்பியவன் கண்ணில் அவர்களையே பார்த்து கொண்டிருந்த இன்னொரு ஆடவன் பட அங்கே செல்ல நினைத்தவன் பின் இன்னும் சற்று நேரம் பார்க்கலாம் என்று நிற்க அங்கிருந்த அனைவரும் கிளம்பி பிரகாரத்திற்குள் செல்ல அவர்களை தொடர்ந்தபடியே அந்த இன்னொருவனும் செல்ல கோவம் கண்களை மறைக்க அவர்களை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தவன் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தவன் அவன் கழுத்தினை மரத்தில் சாற்றி அவன் கழுத்தில் அழுத்தம் கூட்டி கொண்டே "யார்டா நீ எதுக்கு டா நீ என் அதிதியை follow பண்ற "என்க
அவன் கையை தட்டி விட்டவன் "நா ஒன்னும் அதிதிய போலோவ் பண்ணல விக்ரம் "என்க
அவனோ"என் பேரு என் பேரு எப்படி உனக்கு தெரியும் ?"என்க
அவனோ "உன் பேரும் தெரியும் உன் தேவையும் தெரியும் .உன் உதவியும் வேணும்"என்க
விக்ரம் "உனக்கென்ன வேணும்?"என்க
அவனோ "உன் தேவ அதிதி என் தேவ சைந்தவி ........"என்று கூறினான்
விக்ரம் "சைந்தவினா யு மீன் அதிதியோட அண்ணன் லவ் பண்ற பொண்ணா??"என்க
அவனும் "ஆமாம் "என்றான்
பின் தன் பாக்கெட்டிலிருந்து சிகெரெட் ஒன்றை எடுத்த விக்ரம் அதை பற்ற வைத்து ஒரு இழு இழுத்து புகையை வெளி விட்டவன் சிரித்து கொண்டே "ஓகே நா உனக்கு ஹெல்ப் பண்ண தயார் ."என்றவன் தோளை குலுக்கி விட்டு "உன் பேரு என்ன ?"என்று கேட்க
அவன் பாக்கெட்டிலிருந்து இன்னொரு சிகெரெட்டை எடுத்தவன் அதை பற்ற வைத்து "வினய் ...."என்றான் .பின் இருவரும் கை குலுக்கி கொள்ள முழுமதியினை மேகக்கூடங்கள் முடி கொண்டன .
இது எதுவும் அறியாத அதிதியும் இப்பொழுது முளைத்திருக்கும் புது அபாயத்தை அறியாத சைந்தவியும் மற்றவர்களுடன் பேசி கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
பின் இரவு நேரமும் ஆனதால் வித்யுதும் ஹரியும் அதிதி மற்றும் சைந்தவியுடன் கிளம்பினர்.வெளியில் வந்ததும் சைந்தவி "தம்பி இப்போவாச்சும் வழி தெரியுமா இல்ல நா உன் கூட வரணுமா ?"என்று குறும்பாய் கேட்க
அவனோ "அதெல்லாம் தெரியும் தெரியும் நீ போ மாமா கூட "என்று துரத்தாத குறையாய் கூற
அவளோ "நா நல்லா பன்றேனோ இல்லையோ நீ நல்லா பண்ணுடா "என்று விட்டு வித்யுதுடன் வீட்டிற்கு வந்தால் .முதலில் வித்யுத் வேகமாக வந்துவிட இறங்கி செல்ல போன சைந்தவியின் கையை பற்றி அருகிழுக்க அவளோ "டேய்ய் என்னடா பண்ற ஹரி வந்துர போறான் விடுடா "என்க
அவனோ "காலைல இருந்து என்ன பக்கத்துலயே விட மாற்ற அதுவும் இவ்ளோ அழகா டிரஸ் பண்ணிட்டு ஒழுங்கா லஞ்சத்தை குடுத்துட்டு உள்ள போ "என்க
அவளோ "டேய் அம்மா அப்பா யாராச்சும் பாத்துர போறாங்க விடு டா "என்க
அவளை மேலும் அருகிழுதவன் "அப்போ ஓகே நானே எடுத்துக்குறேன் "என்று அவள் இதழ் நோக்கி குனிய அவசரமாய் அவன் வாயை தன் கை கொண்டு மூடியவள் அவன் முகத்தை திருப்பி கன்னத்தில் இதழ் பதித்து விட்டு ஓடினாள் . அவள் செல்வதை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் வண்டியை அவன் வீட்டிற்குள் விட்டு உள்ளே சென்றான் .
இங்கே வேண்டும் என்றே பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளை நிற சுடிதாரில் வானத்து நிலவாய் ஜொலித்தவளை கண்ணாடியில் பார்த்து கொண்டே பயணத்தை நீளமாக்கி கொண்டிருந்தான் ஹரி.அவன் சென்ற வேகத்தை பார்த்த அதிதி "ஹரி பேசாம வேண்டிய நிறுத்திட்டு உருட்டீட்டே வா நாம நடந்து போனா கூட சீக்கிரமா போயிரலாம் போல "என்க அவனோ காதில் விழுகாதது போலவே ஓட்டி(உருட்டி) கொண்டே வீடு வந்து சேர்ந்தான் .
இறங்கியவள் "டேய்ய் அங்கேயே கொடுக்கணும்னு நெனச்சேன்டா மறந்துட்டேன் சாமி பிரசாதம் இந்தா "என்று அவன் நெற்றியில் குங்குமத்தை வைக்க போக அவள் கையை பிடித்தவன் "வேண்டாம் "என்க
அவளோ "அடி சாமி பிரசாதம் வேண்டாம்னுலாம் சொல்ல கூடாது "என்று வைக்க போக
அவள் கையை மேலும் இறுக்கமாய் பிடித்தவன் "இப்போ என்ன குங்குமத்தை நெத்தில வைக்கணும் அவ்ளோ தான "என்றவன் அவள் கையிலிருந்த கையை அவள் தலையின் பின்புறம் வைத்து அருகிழுதவன் அவள் நெற்றியிலிருந்து பாதி குங்குமத்தை தன் நெற்றியில் இடம் மாற்றிக்கொண்டான் .அவன் செய்கையில் அக்குங்கும நிறத்திலேயே சிவந்தவள் அவனை தள்ளி விட்டு விட்டு ஓடினாள்.
சிரித்தவன் சுற்றி பார்க்க அங்கிருந்த மரத்தின் மறைவில் யாரோ ஒளிவது போல் தெரிய மனதில் "ஷோபா இங்கயும் விட மாடீங்களாடா இவன"என்று நினைத்தவன் சத்தமில்லாமல் அம்மரத்தின் பின்னே சென்று அங்கிருந்தவனிடம் "யாரை சார் இவ்ளோ நேரமா கேமெராவும் கையுமா வேவு பாத்துட்ருக்கீங்க ?"என்க
அங்கிருந்தவனுக்கோ தூக்கி வாரி போட்டது திரும்பியவன் "நா நானா யா யாரையும் பா பாக்களையே "என்று வார்த்தைகள் தந்தி அடிக்க
சற்று அருகில் வந்தவன் "இல்லையே அப்டி தெரியலையே "என்று கூறி விட்டு அவன் சட்டையை கொத்தாக பிடித்து அருகிழுத்தவன்"இதோ பாரு நீ யாரு என்னத்துக்கு இங்க இருக்க எதுக்கு எங்களை follow பண்ற எல்லாம் எனக்கு தெரியும் .உன்ன அனுப்பி வச்சவன்ட்ட போய் சொல்லு அதிதியை தொடணும்னா அதுக்கு முதல்ல என்னையும் வித்யுதயும் அவன் தாண்டணும்னு "என்று மொத்த கோபத்தையும் குரலில் காட்டியவன் அடுத்து அவன் கையிலிருந்த கேமிராவை வாங்கி அதில் இருந்த படங்களை பார்த்தான் .
அதில் இவனும் அதிதியும் சேர்ந்து இருக்கும் பல படங்கள் இருந்தது அதை பார்த்து மெலிதாய் சிரித்தவன் "ப்பாஹ் எங்களோட நல்ல மொமெண்ட்ஸையேல்லாம் ரொம்ப நல்லாவே capture பண்ணிருக்கப்பா நீ.என்றவன் அடுத்த நிமிடமே கோபமாய் முறைத்து ஆனா இதெல்லாம் சேர கூடாதவன்ட போய் சேர கூடாது ."என்று அந்த கமெராவில் இருந்த மெமரி கார்டை எடுத்தவன் திரும்பி செல்ல
அங்கிருந்த விக்ரம் அனுப்பியவனோ "நீ யாருனு தெரியாம மோதிட்டு இருக்க பொடி பய மாறி இருந்துட்டு "என்க
அருகில் வேகமாய் வந்தவன் கையை ஒங்க எதிர் இருந்தவனோ கண்களை அடித்து விடுவானோ என்ற பயத்தில் கண்களை மூடி கொள்ள ஓங்கிய கையை அவன் தோளில் போட்டவன் "தம்பி நீங்க போய் அவன்ட மொதல்ல பேடி மாறி ஒளிஞ்சு இருந்து தாக்காம முன்னாடி ஆம்பளையா நேருக்கு நேர் மோத சொல்லுங்க அப்போ தெரியும் யாரு பொடி பயன்னு ."என்று அவனை ஒரு உலுக்கு குலுக்கிவிட்டு சென்றான் .விக்ரம் அனுப்பியவனோ அடி வாங்காத வரைக்கும் சந்தோஷம் என்று தப்பித்தோம் பிழைத்தோம் கதையாய் அங்கிருந்து ஓடியே விட்டான்.
இங்கே ஒரு 5நட்சத்திர ஹோட்டல்ல உள்ள பாரில் ஒரு மேஜையில் இருபக்கமும் அமர்ந்திருந்த விக்ரமும் வினையும் மாற்றி மாற்றி ஊற்றி ஊற்றி குடித்து கொண்டே பேசி கொண்டிருந்தனர் .போதையின் உச்சத்தில் வினய் "மச்சி எல்லாம் உண்ட இருக்கு அப்பறோம் என் மச்சி அதிதிக்காக போய் இவ்ளோ ரிஸ்க் எடுக்குற ?"என்க
விக்ரம் "மச்சி ....எனக்கு பணம் இருக்கு மச்சி ஆனா பாசம் துளிக்கு கூட இல்ல."என்க
வினையோ"ஏன்டா உனக்கு தான் அம்மா அப்பா ரெண்டு பெரும் இருக்காங்கள்ல "என்க
விக்ரமோ ஒரு வறட்டு புன்னகை செய்தவன் "இருக்காங்க ஆனா.... வேணாம் மச்சி எனக்கு அவ வேணும் அவ்ளோ தான் .என்றவன் பின் அவனிடம் திரும்பி ஆமா நீ ஏன் சைந்தவி லவ் பண்ற ?"என்க
வினையோ "லவ் அட் first சைட் மாறி லவ் அட் first humiliation மச்சி
என்றவன் அவன் புரியாமல் பார்க்கவும் அன்று வித்யுத்திற்கும் அவனுக்கும் நடந்த தகராறை கூறியவன் அவளுக்காக தான அவன் அதனை பெரு முன்னாடியும் என்ன அசிங்க படுத்தினான் அதுனால முதல்ல அவனை பழி வாங்குறதுக்காகவே அவளை தூக்கணும்னு நெனச்சேன் ஆனா அவளை பாத்ததுகப்ரோம் அவளை அடையணுங்கிறதுக்காகவே அவளை தூக்கணும்னு நெனைக்குறேன்"என்க
சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த விக்ரம் "அப்டி என்னடா ஸ்பெஷல் அவ கிட்ட ?"என்க
வினையோ போதையிலும் ஒளியிடும் கண்களுடன் "அதிதிட்ட என்ன ஸ்பேசியல்னு கேட்டா உன்னால சொல்ல முடியுமா அதே மாறி தான் இதுவும் அவ எனக்கு வேணும் "என்க
விக்ரம்"ஓகே டீல் இஸ் எ டீல் .நா உனக்கு ஹெல்ப் பண்றது உறுதி "என்க
வினய் "ஆமா மச்சி அதிதியை இவ்ளோ லவ் பண்ற நீ எப்படி அவளை accident பண்ண .ஒருவேளை அதுல அவளுக்கு ஏதாச்சும் ஆய்ருந்தா ?"என்க
கோபமாய் எழுந்த விக்ரம் "ஆய்ருக்காது அவளுக்கு எதுவும் ஆய்ருக்காது எனக்காகவே பொறந்தவ அவளுக்கு எதுவும் ஆய்ருக்காது .என்று உக்கிரமாய் கத்தியவன் பின் சமன் படுத்தி விட்டு அவளுக்கு உயிருக்கு ஆபத்து வராத மாறி ஸ்பீட்ல தான் அவளுக்கு minor accident பண்ண சொன்னேன் அவுங்க அப்பாவை மிரட்ட ஆனா அந்த ****** ஓவர் ஸ்பீட்ல போய் அவளை 3 மாசமா கோமால படுக்க வச்சுட்டான்.அதான் அவன் கால ஒடைச்சுட்டேன்.அப்பறோம் சொல்ல மறந்துட்டேன் நமக்கு ஹெல்ப் பண்ண இன்னொருத்தவுங்களும் இருக்காங்க "என்க
வினய் "இன்னொருத்தவுங்களா அது யாரு ?"என்க வாயிலிருந்து "நான் தான்" என்ற குரல் கேட்டது ....
இங்கே காலையில் "என் friendah போல யாரு மச்சான் "என்ற அவளது கலர் tuneil கண்ணை கசக்கி கொண்டு எழுந்தாள் அதிதி மணியை பார்க்க அதுவோ 4 :30 என்று காட்டியது "யாரு இந்த நேரத்துல போன் பண்ணிக்கிட்டு ?"என்று பார்க்க அதுவோ அவளது டெல்லி தோழி நவ்யாவின் எண்ணிலிருந்து வந்தது .
நவ்யா இந்த நேரத்துல என்ன கால் பண்ரா??"என்று யோசித்து கொண்டே போனிற்கு எடுத்தவள் "ஹலோ "என்க அந்த புறமோ நவ்யாவின் அழுகுரல் கேட்டது அவள் அழுகுரலில் மொத்தமாய் தூக்கத்தை தொலைத்தவள் "நவ்யா க்யா ஹுவா கியூன் ரோ ரஹி ஹோ தும் (நவ்யா என்ன ஆயிற்று ஏன் நீ அழுகிறாய் )"என்று கேட்க
அவளோ "பப்பா அவுர் மா acci ......accident பே மர் சுகி அவுர் யெஹான் மேரி பப்பா கே rishthaavon மேரி ஷாதி ஏக் டான் கே சாதி கார்னே கி கோஷிஷ் கியா இஸ்லியே மெய்ன் உன் லோகோன் சே பச்கர் சென்னை egmore station மெய்ன் ஹூன் ப்ளீஸ் mujhe பிக் up கரோ நா (அப்பாவும் அம்மாவும் அச்சிடேன்டில் இறந்து விட்டார்கள் அப்பாவின் சொந்த காரர்கள் என்னை ஒரு டோனிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார்கள் நான் தப்பித்து இப்பொழுது egmore ஸ்டேஷனில் உள்ளேன் என்னை தயவு செய்து பிக் up செய்து கொள்)"என்று அழுது கொண்டே கூற
எழுந்த அதிதி வித்யுத்தை எழுப்பி கொண்டே "து பிகர் மத் கரோ மெய்ன் அபி ஆ ஜாவூங்கி(நீ பயப்படாதே நான் இப்பொழுது வந்துவிடுவேன் )என்றவள் வித்யுதுடன் அங்கே சென்றால் .அங்கே சென்றவள் நவ்யா நவ்யா என்று கத்தி கொண்டே வர ஒரு இடத்தில அவளை பார்த்தவள் நவ்யா என்று அவள் தோளை தொட ஒரு நிமிடம் மிரண்டவள் அடுத்த நிமிடம் அதிதியை கட்டி கொண்டால் .
அவளை கட்டி பிடித்து கொண்டே அவள் அழ அவளிடம் வந்த வித்யுத் "நவ்யா பயப்படாத நா இருக்கேன்ல அங்க போலிஸ்ட்ட complain கொடுத்துட்டேன் வாசுகி ஆண்ட்டி இப்போ டெல்லிக்கு வந்துட்டாங்கல்ல சோ அங்கிள் கேஸ் பைல் பண்றேன் சொல்லிட்டாரு நோ ப்ரோப்லேம் நீ இப்போ வீட்டுக்கு வா மத்தத அப்ரோமா பேசிக்கலாம் "என்று ஹிந்தியில் சொன்னவன் அவளையும் அதிதியையும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் .
அங்கே வந்த நவ்யா பிரம்மை பிடித்தவளை போல் அமர்ந்திருக்க அவளை சகஜமாக பொருட்டு சைந்தவியின் வீட்டிற்கு அழைத்து சென்றால் அதிதி .அங்கே சென்று சற்று நேரம் அவர்களுடன் பேசியதில் அவள் தெளிய இன்று அவளை விட்டு செல்ல முடியாததால் நான்கு பெரும் அன்று விடுப்பு எடுத்தனர் .நவ்யா தயங்கி தயங்கி பேச ஹரியோ "என்னடா நீ இவ friendaah இருந்துட்டு இப்டி திக்கி திக்கி பேசுற உனக்கும் சேத்து தான் இவ பேசுறாளோ"என்று ஹிந்தியில் அதிதியின் காலை வார
அவன் கிண்டலில் சற்று இயல்பானவள் "அப்டி இல்ல அண்ணா "என்றவள் மீண்டும் அமைதியாகி விட்டால் பின் அவளை சுற்றி அனைவரும் அமர்ந்து அவளை கலகலப்பாக்க முயற்சித்து கொண்டிருக்க அதற்குள் வித்யுதும் சைந்தவியின் அப்பாவும் அங்கிருக்கும் அவள் அப்பா அம்மாவின் சொத்துக்களை பாதுகாக்கவும் அவளிற்கு அவ்வூரிலிருந்த பள்ளியிலிருந்து tcyum வாங்கி விட்டனர் ஆனால் அவளுக்கு 18 வயதாகும் வரை கார்டியன் யாரேனும் இருக்க வேண்டும் என்பதால் யோசித்து கொண்டிருந்தவர்களிடம் வந்த நவ்யா வித்யுதிடம் "அண்ணா என்ன உங்க தங்கச்சியா நெனச்சு இந்த 1வருஷத்துக்கு உங்களால எனக்கு guardiannaah இருக்க முடியுமான்னா நா ஹாஸ்டெல்ல தங்கிக்கிறேன் அம்மா அப்பா என் அசவுண்ட்ல பணம் நிறையவே வச்சுருந்தாங்க எனக்கு காலேஜ் முடிக்குறதுக்கே அது போதும் .இந்த உதவி மட்டும் பண்ணுங்கன்னா "என்று அவள் கண்ணீருடன் கை கூப்ப
அவள் கையை பிடித்து கீழிறக்கியவன் "உன் நெலமைல தான்டா நானும் இருந்தேன் 6வருஷத்துக்கு முன்னாடி அதிதி என் தங்கச்சினா நீயும் என் தங்கச்சி தானடா நீ ஹோஸ்டேள்ளெலாம் தங்க வேணாம் நீ எங்களோடயே இரு .நானே உனக்கு guardiannaah sign பண்றேன் "என்றவன் அடுத்து அதற்கான வேலையில் இறங்கி அதை மாலைக்குள் செய்தும் விட்டான் இதோ நவ்யா அவர்களின் வாழ்க்கைக்குள் மேலும் ஒரு அங்கமாய் அவர்களுடன் தங்க வந்திருக்கிறாள் .வித்யுதிற்கு போன் செய்த்திருந்தார் வாசுகி .வாசுகி "வித்யுத் நவ்யா ரொம்ப பயந்து போயிருக்காடா அவ கண்ணு முன்னாடியே அவுங்க அப்பா அம்மா அச்சிடேன்ட்ல இறந்துருக்காங்க அவுங்களுக்கு 16 ஆம் நாள் செய்றதுக்குள்ள இந்த பொண்ண ஒரு மொரடனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாத்துருக்காங்க கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளந்த பொண்ணுடா பாவம்.அவளை நா இங்க வச்சுக்குறேன்னு சொன்ன நீ கேக்க மாட்டேன்னுட்ட அவளை பத்திரமா பாத்துக்கோ டா "என்க
அவனோ "ஹையோ வாசு ஆண்ட்டி போதும் போதும் அட்வைஸ் மழை அதிதி மாறி சின்னன வயசுல இருந்தே அவளும் எனக்கு இன்னொரு தங்கச்சி மாறி தான் அவளை நா பாத்துக்குறேன் அம்மா அந்த குட்டி சாத்தான் சினேகா என்ன பண்ணுது ?"என்க
வேகமாய் போனினை புடுங்கிய சினேகா "எது நா குட்டி சாத்தானா நீ தாண்டா அண்ணா பேய் ,பிசாசு, காட்ஜில்லா"என்க
அவனோ "நீ குட்டி சாத்தான் தான் பாப்பு ஏன் இந்த கத்து கத்துற "என்க அவளோ "உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணா atleast leavela வரேலயாச்சும் பாத்துட்டு இருந்தோம் நீ தான் சென்னை போய்ட்டியே அதான் பீலிங்ஸாஹ் இருக்கு "என்க
அவனோ "don 't worryda இந்த தடவ லீவ்க்கு நாங்க கண்டிப்பா அங்க வரோம் ஓகேவா ?"என்க
அவளோ "டபுள் ஓகே அண்ணா .அப்பறோம் அண்ணா நீ பேச்சுல ரொம்ப மாறிட அண்ணா எப்போவும் உர்ருனு பேசுவ இப்போ தான் கொஞ்சம் நல்லா பேசுற அம்மா சொன்னது கரெக்ட் தான் அண்ணி வந்ததும் ரொம்ப மாறிட்ட.சேரி பை லேவெல மீட் பண்ணுவோம்"என்று விட்டு வைக்க அவனும் சிரித்து விட்டு வைத்து விட்டான் எதிரில் மொட்டைமாடியில் தெரிந்தால் அவன் மாற்றத்தின் காரணமான சைந்தவி .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top