27
செல்லும் வழியில் பருந்து தன் குஞ்சை பாதுகாக்க ஆங்காங்கே கண்காணித்து கொண்டே வருவதை போல் யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று நோட்டமிட்டு கொண்டே வர அதிதியோ ஏனோ இன்று பேச பிடிக்காமல் அவனுடனான முதல் பைக் பயணத்தை மனதில் பதிவிட்டு கொண்டே வந்தால் .
அதே போல் 2 நாட்கள் செல்ல அன்று மாலையில் ஹரி கண்காணித்து கொண்டே வருவதை பார்த்துவிட்ட அதிதி அவனிடம் "என்னடா ஏதோ தேடிட்டே வர "என்க
அவனோ "ஒன்னும் இல்லடா அதி சும்மா தான் "என்க
அவளோ "வண்டிய நிறுத்துடா "என்றாள்
அவன் "ஏன் ஏன் "என்க
அவளோ "இப்போ நிறுத்த போறியா இல்லையா ?"என்று அவள் கோபமாய் கூற அவனும் நிறுத்தி விட்டான் .
அங்கே இவர்கள் இருவரையும் தவிர்த்து யாரும் இல்லை .அவன் முன் சென்று நின்றவள் அவன் கண்ணை நேராய் பார்த்து "நீ ஏன் என்கிட்ட எல்லாத்தையும் மறைக்குற ??அன்னைக்கு உன் drawing notela என்ன வச்சுருக்கன்னு கேட்டா அதுக்கும் எதுவும் சொல்லல இப்போ என்ன தேடிட்டே வரன்னு கேட்டா அதுக்கும் எதுவும் சொல்ல மாட்டேங்குற.எனக்கு எதுவும் தெரியாதுன்னு பாக்குறியா ."என்க அவன் திகைத்து விழிக்க
அவளோ "என்ன அந்த முழி முழிக்குற நீ drawing notela வரைஞ்சு வரஞ்சுருந்ததை நா பாத்துட்டேன் ."என்றவள் முகத்தில் சற்று செம்மை குடியேற
அவளது அம்முகத்தை ரசித்தவன் "என்ன வரைஞ்சுருந்தேன் அதி??"என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க
அவளோ "அது அது....."என்று இழுக்க அவனோ மௌனமாய் சிரித்துக்கொண்டே அவளை பார்த்துக்கொண்டிருக்க
சற்று நேரம் யோசித்தவள் பின் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து "ஸ்ட்ரெயிட்டாஹ் சொல்லிருறேன் ஐ லவ் யு "என்க அவனோ இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை பேய் முழி முழித்தவனை பார்த்தவளுக்கு சிரிப்பு வர அவன் அருகில் குனிந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் "இப்போ சொல்ல வேணாம் நல்லா யோசிச்சு நாளைக்கு சொல்லு அதுக்கு மேல உனக்கு டைம் கெடயாது ஏன்னா எனக்கு பொறுமை இல்ல "என்று கண்ணடித்தவள் அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டால்
அவனுக்கோ "என்னடா இது நியாயப்படி நா தான இதை எல்லாம் பண்ணனும் அவ பண்ணிட்டு போறா ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு என்று நினைத்தவன் "நன்றாக சிரித்து கொண்டு வேகமாக வீடு வந்து சேர்ந்தான் .
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அனைவரும் அர்ஜுன் ,கார்த்திக் வீட்டிற்கு செல்ல தயாராயினர் .
இங்கே மிகவும் நேர்த்தியான போர்மல் உடையில் தயாரான ஹரி கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டவன் "செல்லக்குட்டி அதி இன்னைக்கு முடிவை சொல்லனுமா உண்ட ஏண்டி என்னையே மெரட்டுற நீ....உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன் இன்னைக்கு "என்று நினைத்தவன் சிரித்து கொண்டே தலை சீவினான் .
இங்கோ அதிதி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு உடையாய் போட்டு போட்டு பார்த்து இது நல்லா இல்ல அது நல்லா இல்ல சுடி போடவா ,ஜீன் போடவா??பிரீ ஹேர் விடவா ?சட பின்னவா??பொட்டு வைக்கவா வேணாமா ??ஐயோ கடவுளே அதிதி இப்டி ஆய்ட்டயேடி"என்று தன்னையே நொந்தவள் பின் தன்னுடைய பிடித்தமான வெள்ளை நிற அனார்கலி சுடிதாரை அணிந்து கொண்டு முடியை திறந்து விட்டவள் வெள்ளை நிற ஜிமிக்கி அணிந்து கண்ணுக்கு மையிட்டு வந்தால்.
வித்யுத் "அதி எவ்ளோ நேரம்டா "என்றவன் நிமிர்ந்து தன் தங்கையை பார்த்தவன் மனதில் "என்ன இவ இந்த டிரஸ் போட்ருக்கா ஏதாச்சும் அவ நெனச்சது நடக்கணும்னா தான இதை போடுவா சம்திங் சம்திங் "என்று நினைத்தவன் அவளுடன் வெளியே வர எதிரே சைந்தவி சந்தன நிறத்தில் அனார்கலி அணிந்து வர அவளை பார்த்தவனுக்கு உலகம் மறந்து விட்டது .
அவளை பார்த்து கொண்டே அவன் வர அவனின் பார்வையை உணர்ந்த சைந்தவி வெட்கத்தில் தலையை தாழ்த்தி கொண்டால் .இங்கே இந்த காதல் ஜோடிகள் கண்களால் பேசி கொண்டிருக்க அதிதியின் விழிகளோ ஹரியை ஆர்வமுடன் தேடியது .
அவளை சற்று நேரம் தவிக்க விட்டவன் வெளியே வெள்ளை நிற சட்டையும் கருநீல jeansum அணிந்து தலையை கோதிக்கொண்டே வர அவளோ வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் அவனை
அதிதியின் மனசாட்சி "ஏண்டி ஒரு பையன இப்டி வெக்கமே இல்லாம சைட் அடிக்குற வெக்கமா இல்ல "என்க
அவளோ "என் ஆள நா சைட் அடிக்குறேன் உனக்கென்ன நீ உன் வாய மூடிட்டு போ "என்க
அவள் மனசாட்சியோ "ஆளா அது சேரி நீலாம் பொண்ணுன்னு சொல்லிக்காதடி அவ அவ பசங்கள அலையவிட்டு பாப்பா இங்க என்னனா நீ அவன் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்க "என்க
அவளோ "ஆங் எனக்கு புடுச்சுருக்கு நா சொன்னேன் பொண்ணா இருந்தா அலையவிடணுமா என்ன மனசுல இருந்ததை சொல்லிட்டேன் அவ்ளோ தான் நீ உன் ரேடியோவை ஆப் பண்ணு"என்று மனசாட்சியின் தலையில் தட்டி அதை மௌனிக்க செய்தவள் அவனை நோக்கி மீண்டும் தன் பார்வையை செலுத்த அவனும் அதை கண்டு கொண்டாலும் காட்டி கொள்ளவில்லை .
அதிதி மனதில் "என்ன இவன் பாக்க கூட மாட்டேங்குறான் நல்லா இல்லையோ "என்று நினைக்க
அவனோ "ஐயோ ஐயோ இவ்ளோ அழகா முன்னாடி வந்து நிக்கிறாளே அலையவிடணும்னு நெனைச்சேனே உஹும் கண்ட்ரோல் ஹரி கண்ட்ரோல்"என்று மனதில் நினைத்தவன் கெத்தாய் அவர்களிடம் சென்று "போலாமா "என்க சரி சரி என்று சைந்தவி வித்யுதின் பின்னால் அமர போக அதிதி அவன் பைக் அருகில் செல்ல
அவளை வெறுப்பேற்ற நினைத்த ஹரியோ "அக்கா எனக்கு புது வீட்டுக்கு வழி தெரியாதுள்ள நீ என் கூட வழி சொல்லு மாமா அதிதிய கூட்டிட்டு பின்னாடி வரட்டும்" என்க அதிதிக்கோ வடை போச்சே என்ற உணர்வு .
பின் வித்யுத் மனமே இல்லாமல் ஹ்ம்ம் என்க அதிதி ஹரியை திட்டி கொண்டே வித்யுதுடன் பின்னே வந்தால் .மனதில் என்னென்ன வார்த்தைகள் தெரியுமோ அனைத்தையும் வைத்து அவனை அர்ச்சித்து கொண்டே வந்தால் .
அங்கே அர்ஜுன் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று கதவை தட்ட ப்ரியாவே கதவை திறந்தாள் .ஹரியையும் சைந்தவியையும் பார்த்தவள் குஷியாகி" ஹே என்னடா திடீர்னு எவ்ளோ நாள் ஆச்சு.ரொம்ப மிஸ் பண்ணோம்டா உங்கள" என்க
அவர்கள் இருவரும் உள்ளே சென்று அவளை கட்டி பிடித்து கொண்டவர்கள் "missed யு டூ அண்ணி எங்க மத்தவுங்களாம்?"என்க
அவளோ "உள்ள தான் இருக்காங்க வா வா ஆமா இது யாரு ?"என்க
சைந்தவி "இது வித்யுத் என்னோட fiancee இது அவனோட தங்கச்சி அதிதி "என்க
அவள் "fianceeyaa சொல்லவே இல்ல என்றவள் வாங்கப்பா ரெண்டு பேரும் "என்றவள் திரும்பி "அர்ஜுன் சைந்தவியும் ஹரியும் வந்துருக்காங்க பாருங்க "என்று உள்ளே அழைத்து சென்றால் .
அங்கே அர்ஜுன் பிள்ளைகளுடனும் ஷிவதேவ்வர்மர்,சித்தாராதேவியார்(ப்ரியாவின் பெற்றோர் ) மற்றும் மணிமேகலையார் (அர்ஜுனின் தாய் ) மூவருடனும் அமர்ந்திருக்க கார்த்திக்கயும் மித்ராவையும் மட்டும் காணவில்லை .
அனைவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருக்க ஹரி "என்னக்கா கார்த்தி அண்ணாவையும் மித்ரா அண்ணியையும் ஆளையே காணோம் ?"என்க
அவளோ "ஆமால்ல தோட்டத்து பக்கம் மித்ரா போனா இவன் அங்க தான் இருப்பான் போல நா கூட்டிட்டு வரேன் இரு "என்று அவள் எழ போக அவனும் சைந்தவியும் "அண்ணி வேணாம் இருங்க நாங்களே டீல் பண்ணிக்கிறோம் "என்றவர்கள் மெதுவாய் பூனை நடையிட்டு தோட்டத்து பக்கம் செல்ல
மித்ராவோ செடியை சீராக வெட்டிக்கொண்டிருக்க அங்கே வந்த கார்த்திக் "மித்து என்னடி பண்ற "என்க
அவளோ திரும்பாமையே "பாத்தா எப்படி தெரியுது "என்க
அவனோ "நல்லா இருக்குற செடியை நாசமாக்குற மாறி இருக்கு "என்க
ஹரி "3 2 1 "என்க
சரியாக மித்ரா கார்த்திக்கின் தலையில் கொட்டியவள்"என்ன ஓவராக பேசுற எங்க இவ்ளோ பேசுறவன் நீ வெட்ட வேண்டி தான "என்க
கார்த்திக் "வெட்டவா நானா நோ நோ எப்பவும் ப்ருஷும் கையுமா திரியுற archeologistaana உனக்கு தான் இது சரி வரும் துப்பாக்கி பிடித்த கை கத்தியை பிடிக்காது "என்று கூற
அவளோ"மொதல்ல ஒழுங்கா தோசையை சுடு அப்பறோம் துப்பாக்கிய வச்சு சுடலாம் "என்க அவனும் அவளும் எப்பொழுதையும் போல் வாக்கு வாதம் செய்ய மித்ரா அருகிலிருந்த தண்ணீர் pipeai எடுத்து அவன் மேல் அடிக்க
கார்த்திக் "ஹே வேணாண்டி வேணாம் "என்க
அவளோ "எனக்கு வேணும்டா "என்று அடிக்க அவள் அருகில் ஒரே எட்டில் வந்தவன் அவள் கையை பிடித்து மரத்தில் அவளை தள்ளி இரு கையால் ஆணை போட அவளுக்கு இத்தனை நேரம் போட்ட சத்தம் அனைத்தும் உள்ளே போய் விட
"கா கார்த்திக் என்ன பண்ற வி விடு "என்க
அவள் அருகில் குனிந்தவன் "குடுத்ததுக்கு திருப்பி குடுக்க வேணாம் "என்று
அவள் இதழை நோக்கி குனிய சைந்தவியும் ஹரியும் "ஐயோ மம்மி "என்று கண்ணை பொத்திக்கொண்டு கத்த அவர்கள் சத்தத்தில் பட்டென கார்த்திக் விலகிட இதை பயன்படுத்திய மித்ரா உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடிவிட
ஹரி "அண்ணா அடி பலமோ "என்க
அவனோ "போடா போடா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா "என்றவன் அவர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்.பின் உடை மாற்றி விட்டு வந்தனர் இருவரும்.
அங்கே பிரியா அர்ஜுனின் இரட்டை குழந்தைகள் அர்வினிற்கும்,அவந்திகாவிற்கும் 8aavadhu பிறந்தநாளிற்காக கேக் வருவிக்கப் பட்டிருந்தது .சைந்தவி வித்யுதின் அருகில் சென்று நிற்க அதிதி ஹரியை தேட அவனோ அந்த ஓரத்தில் நின்று கொண்டான் .கோபமானவள் டங்கு டங்கென்று நடந்து அவன் அருகில் நின்று கொள்ள ஹரிக்கு சிரிப்பை கட்டு படுத்த பெறும் பாடாகி போனது.
பின் அவர்கள் கேக் வெட்ட முதலில் ப்ரியாவிற்கும் அர்ஜுனிற்கும் cakeai தந்த குழந்தைகள் பின் அடுத்தடுத்தாய் அனைவரிடமும் தர அவந்திகா சமத்தாய் கார்த்திக் மித்ராவின் 10 வயது மூத்த புதல்வன் அஸ்வினிற்கு ஊட்டிவிட அவனும் அவளுக்கு அதே துண்டை ஊட்டி விட்டு அவளுக்கு அவன் தன் கரத்தால் செய்த ஒரு ஜோடி கம்மலை தர "தேங்க்ஸ் அஸ்வின் "என்று அவனை கட்டி பிடித்து வாங்கி கொண்டால் அவள் .
குறும்புக்கார அர்வின் கார்த்திக் மித்ராவின் 7 வயது புதல்வி அஸ்வதியிடம் வந்ததும் அவள் வாய் அருகில் கொண்டு சென்று பின் அவனே அதை சாப்பிட்டு விட ஏமாந்த அஸ்வதி கேக்கிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவன் முகத்தில் அப்பி விட அவன் அவள் முகத்தில் அப்பி விட அந்த சிறு குழந்தைகளை செய்கையை பார்த்த வளர்ந்த குழந்தைகளும் கையில் cakeai எடுத்து கொண்டு தத்தம் துணையை துறத்த ஆரம்பித்தனர் .
சைந்தவியின் பின் வந்து கொண்டிருந்த வித்யுத் "ஹே சது நின்னு ஒழுங்கா வாங்கிக்கோ இல்லேனா முழு முகத்துலயும் அப்பி விட்ருவேன்" என்க
அவளோ "முடுஞ்சத பண்ணிக்கோ போடா" என்று விட்டு ஓட அவனோ அவள் கையை பிடித்து இழுக்க அவள் நிலை தடுமாறி அவன் மார்பின் மீதே வந்து விழ அவன் கையிலிருந்த கிரீம் அவள் கன்னத்தில் பட்டுவிட சிணுங்கியவள் "போடா கன்னத்துல கிரீம் ஆயிருச்சு உன்னால தள்ளு தொடைக்கணும்"என்று விலக போக அவள் இடையை சுற்றி கை போட்டவன் "இப்டியே தொடைக்கலாமே "என்று ஹஸ்கி voiceil அவன் கூற
அவனின் பார்வையின் வீச்சில் தடுமாறியவள் "எ....... எப்படி "என்க குனிந்தவன் அவள் கன்னத்தில் இருந்த கிரீமை தன் இதழால் துடைக்க கூச்சட்டத்தில் நெளிந்தவள் போடா என்று விட்டு ஓடி விட்டால் .
இங்கே அதிதியை துரத்தி கொண்டு சென்ற ஹரி "ஹே நில்லுடி" என்க
அவள் கீழே கள்ள இருப்பதை கவனிக்காமல் "நிக்கமாட்டேனே ...."என்று கூறி தடுக்கி விழ போக "அதி "என்று வேகமாய் சென்றவன் அவள் இடையை பிடித்து அவள் விழுவதை தடுத்தான்.
கண்கள் மூடி இருக்க அவள் கைகள் அவன் கழுத்தை சுற்றி இருக்க அவ்வெள்ளை அனார்கலியில் தேவதையாய் இருந்தவளை கண்டு சொக்கியவன் அவள் கண் விழிக்க அவள் காதருகில் குனிந்தவன் "லவ் யு அதி "என்றான்.அவள் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிறைந்து விட அவனை கழுத்தோடு சேர்த்து அணைத்து கொண்டால் .
லவ் யு அதி என்று அவள் காதருகே குனிந்து ஹரி கூற ஆனந்தத்தில் கண்கள் கலங்கிய அதிதி அவனை கழுத்தோடு அணைத்து கொண்டால் .தானும் அவளை அணைத்தவன் பின் அவள் முகத்தை நிமிர்த்தி "இதோ பாருடா அதி இது நமக்கு லவ் பண்றதுக்கான வயசு இல்ல புரியுதா.இந்த வயசுல இதெல்லாம் நம்ம படிப்பை கெடுத்துற கூடாது புரியுதா ?"என்க
அவளோ "அதெல்லாம் நான் நல்லா தான் படிப்பேன் "என்க
அவளை கேலியாய் பார்த்தவன் "நீ நீ தான ரெண்டு நாலா நீ படிக்குறத தான் நா பாத்தேனே பூகஹ் பாக்க சொன்ன என்னையே பாத்துட்டு இருக்க வேண்டியது "என்க
திடுக்கிட்டு அவனை முறைத்தவள் "அப்போ தெரிஞ்சே தான் அலைய விட்ருக்க frauduh "என்று
அவன் கையிலேயே நாலு போடு போட அவள் இருகைகளையும் ஒரே கையில் அடக்கியவன் "அடியேய் இந்த அடி அடிக்கிற கராத்தே கிளசஸ்ல காத்துக்கிட்டதை காதலன்ட காட்டாதடி. என்றவன் பின் மெதுவாய் அவளிடம் "இல்ல டி இது டிஸ்ட்ராக்ட் ஆக தான் செய்யும் சோ ப்ரோமிஸ் மீ இனி ஒழுங்கா படிக்கணும் "என்க
அவளோ தலையை ஆடியவள் சிரித்துக்கொண்டே "ஓகே ஓகே என்று அவனை விட்டு விலகியவள் அது மட்டுமில்லாம பட்டா போட்ட இடத்துக்கு எவனும் அலைய மாட்டான்டா "என்று விட்டு ஓடி விட
அவனோ "பட்டா போட்ட இடமா என் அக்காவோட சேர்ந்து சேர்ந்து இவளும் வர வர புரியுற மாறியே பேச மாட்டேங்குறா "என்று நினைத்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு வீட்டிற்குள் சென்றான் .
அங்கே சென்று அவன் அமர்ந்ததும் அர்ஜுனிற்கு கண் ஜாடை காட்ட அவனும் பிரியாவிற்கு கண்ஜாடை காட்ட பிரியா "சையு நம்ம பக்கத்துல எப்போவும் குளக்கரையோட இருக்குற சிவன் கோவிலுக்கு போவோம்ல இன்னைக்கு நெறஞ்ச பௌர்ணமி இன்னைக்கு அந்த கோவில் ரொம்ப நல்ல இருக்கும் போயிட்டு வரலாமா அதிதி நீயும் வாயேன் ரொம்ப நல்ல இருக்கும் "என்க
வித்யுத் ஏற்கனவே அர்ஜுன் கார்திக்க்குடன் தனியாய் பேச வேண்டும் என்று கூறி இருந்ததால் இது அவர்களின் திட்டம் என்று புரிந்து கொண்டவள் "ஆங் போயிட்டு வரலாம் அண்ணி அதிதி நீயும் வாடா சூப்பராக இருக்கும் " என்க
அதிதிக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதால் "ஓகே அண்ணி நானும் வரேன் போயிட்டு வரலாம் "என்றவள்
வித்யுதிடம் "அண்ணா நீயும் வரியா ?"என்க
அவனோ "நா என்னைக்கு சாமி கும்புட்டேன்? நீயே போயிட்டு வா "என்க
அவளோ "போடா அண்ணா "என்று விட்டு பிரியா ,மித்ரா மற்றும் அவர்களின் வாண்டுகள் மாமனார் மாமியார் அனைவருடனும் கிளம்பினாள் .ஆண்கள் நால்வரும் மட்டும் தனித்து விட பட்டிருந்தனர் .
கார்த்திக் "விக்ரம் பத்தி personallaah அவன் கேரக்டர் பத்தி விசாரிச்சு பாத்தோம் .பொண்ணுங்க விஷயத்துல அப்டி இப்டி தான் பணம் தண்ணியா செலவு பண்ணுவான் தண்ணிக்கு தான் அதிகமா செலவு பண்ணுவான் ,அப்பா அம்மா ரெண்டு பெரும் buisness buisnessnu அவனை கண்டுக்கவே இல்ல பணம் அவன் கேக்குற நேரத்துக்கு கேக்குற அளவுக்கு கெடைக்குறதால இவன் பணத்துக்காகவே இவன் பண்ற எல்லாத்துக்கும் ஆமான் சாமி போட்டுட்டு கூடவே சுத்துற வீனா போன நண்பர்கள் படை .22 வயசு தான் ஆகுது போன வருஷம் இன்ஜினியரிங் முடுச்சுருக்கான் .படிப்புல ஆனா செம talented யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் .இந்த ஒரு வருஷத்துல அவன் இந்தியன் கம்பெனி ப்ராஞ்சச எடுத்து நடத்த ஆரம்பிச்சதுக்கப்புறோம் இந்த கம்பெனி ரொம்ப நல்லாவே வளந்துருக்கு .இது வரைக்கும் எந்த கிரிமினல் கேசெஸ்லயும் மாட்டல அதிதி accident தவிர்த்து "என்க
அர்ஜுன் "பட் அதிதி விஷயத்துல ரொம்பவே seriousaah இருக்கான் அவளோட ஒவ்வொரு அசைவும் அவனுக்கு தெரியுது .டிடெக்ட்டிவ் ஏஜெண்ட்ஸச் hire பண்ணிருக்கான் "என்க
ஹரி "ஆமா மாமா நானும் அதிதியும் coaching classku போற வழிலையும் வர வழிலையும் ஒரு குறிப்பிட்ட ஆளு எங்களை எப்போவுமே follow பண்ணுவாரு அவ கூடவே இருக்குறதால என்னால எதுவுமே பண்ண முடில "என்க
வித்யுத் "சோ பணத்து மூலமாவும் அடக்க முடியாது பவர் மூலமாவும் அடக்க முடியாது இவனை அப்டி தான ?"என்க மூவரும் ஆமோதிக்க சிறிது நேரம் யோசித்தவன் கையில் இருந்த அவன் புரசை திறந்து பார்க்க அதில் சாரு சிரித்த முகமாய் இருந்தால் அதை பார்த்தவன் சிறிது நேரத்திற்கு பின் புன் முறுவலுடன் "என் அப்பா எனக்கு உருப்படியா எதுவும் கத்து குடுத்ததில்ல ஆனா அவர்ட்ட இருந்து கத்துகிட்ட ஒரு விஷயத்தை இவன் விஷயத்துல உபயோகிக்கலாம் "என்க மூவரும் விழிக்க அவன் தன் திட்டத்தை கூறினான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top