22
அதிதி எங்கோ பார்ப்பதை கவனித்த சைந்தவி திரும்ப அங்கு ஹரி நின்றுகொண்டிருந்தான் மனதில் "இவன் என் மந்திருச்சு விட்ட கோழி மாறியே நிக்கிறான் இவளை பாத்து என்று நினைத்தவள் பின் அவனிடம் "ஹரி யாருனு பாக்கறியா இது தான் விது தங்கச்சி அதிதி.அதிதி இது என் தம்பி ஹரி விக்னேஷ் "என்க
அவனும் அவள் குரலில் கலைந்தவன் அவளை நோக்கி "ஹாய் "என்க
அவளும் மெலிதாய் சிரித்து கொண்டே "ஹாய் ."என்றவள் பின் அவனிடம் "ஹே நா உன்ன எங்கயோ பாத்துருக்கேன்" என்று சற்று நேரம் யோசித்தவள் பின் " ஹான் அந்த"NIT workshopla என்ன பாத்து திட்னவன் தான நீ?"என்க
சைந்தவியிடம் அவன் ஏற்கனவே இந்த சம்பவத்தை கூறியிருந்ததால் அவள் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவள் "இவ தான் அந்த ராங்கியா நல்லா தான் பேரு வச்சிருக்கான் நம்ம தம்பி "என்று நினைத்தவள் அவனை பார்த்து விஷமமாய் சிரிக்க
அவனோ அவளை பார்த்து சொல்லாதே என்று கண்ணைகாட்டியவன் பின் அதிதியிடம் "ஆமா நானே தான்
என்றவன் புருவம் தூக்கி " இப்போவாச்சும் பேர சொல்லலாமே ?"என்க
அவளோ சிரித்தவள் "நீ இன்னும் அதை மரக்கலயா ஓகே ஐ அம் அதிதி "என்றுகையைநீட்ட
அவனும் சிரித்தவாறு அவள் கையை பற்றி குலுக்கினான் "ஹரிவிக்னேஷ் "என்று
அங்கு வாசலிற்கு வந்த வித்யுத் சைந்தவியை கண்களாலேயே அழைக்க அவளும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்து விட்டு அவன் பின்னோடே சென்றால் .
அவனிடம் பேசி கொண்டே இருந்தவள் திடீரென்று"உன் voiceah மறுபடி எப்போவோ கேட்டமாறி இருக்கு பட் எப்போன்னு தான்........"என்க
அவனுக்கோ பேச்சு சடன் brake இட்டு நின்று கொண்டது பின் அவன் "அதிதி அது எனக்கு கொஞ்சம் வரைய வேண்டியது பாக்கி இருக்கு நா அதை வரைஞ்சுட்டு வரவா " என்றுஎன்றுகேட்க
அதிதியோஆர்வமிகுதியில் "ஹே ஹரி என்ன draw பண்ணனும் இப்போ உங்களுக்கு என்ன ப்ராஜெக்ட் போய்கிட்டு இருக்கு ?"என்க
அவனோ "5 ஸ்டார்ட் ஹோட்டல் டிசைன் பண்ணிக்கிட்டு இருக்கோம் .ஆட்டோகேட்ல பண்ணியாச்சு அதை ஹாண்ட் draftingum பண்ணனும் அண்ட் moreover நா third இயர் endla MIT போறதுக்காகடிசைன் tropheela ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன் .செலக்ட் ஆய்ருச்சுனா அங்க போயிருவேன்"என்க
அவளுக்கோ அவன் இத்தனை திறமை வாய்ந்தவனா என்ற வியப்போடு அவன் மூலமாக நிறைய கத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் வர "ஹரி நானும் வந்து பார்க்கவா எப்படி பண்றீங்கன்னு பாக்குறேன் ப்ளீஸ்.?"என்று அவள் கண்களை சுருக்கி கேட்க அவனோ அந்த மையிட்ட மான்விழியின் மந்திரத்தில் கட்டுண்டு "சரி வா அதி "என்று கூட்டிக்கொண்டு சென்றான் அவன் அங்கு செய்து வைத்திருக்கும் வேலை மறந்து (என்ன வேலை பண்ணி வச்சுருப்பான்னு யோசிச்சுட்டே இருங்க நா இந்த லவ் birdsah பாத்துட்டு வரேன் .எதுக்கும் கண்ணை கிளோஸ் பண்ணிக்க ரெடியாவே வாங்கப்பா )
அங்கே சைந்தவியை கண்ணாலேயே அழைத்தவன் முன்னே செல்ல அவளும் இவர்களை கண்காணித்து விட்டு அவன் ஓண்ணே சென்றால்.அவன் மாடிக்கு செல்வதை கவனித்தவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு மேலே செல்ல அங்கோ 3 அறைகளும் நடுவில் பெரிய ஹாலும் இருக்க எங்கே சென்றான் என்று யோசித்து கொண்டே அவள் ஒவ்வொரு அறையாய் செல்ல மூன்றாவது அறையில் அனைத்து குப்பைகளுக்கு (பொருட்கள் அந்த நிலைமையில் இருந்தது ) மத்தியில் அமர்ந்திருந்தான் வித்யுத் ஒன்றை பிரிப்பதும் அதை மீண்டும் மூடுவதும் பின் ஒன்றை ஒரு இடத்தில வைப்பதும் அதை மீண்டும் எடுத்து கீழே போடுவதுமாய் இருந்தவனை பார்த்தவள் சிரித்து விட அவளை பார்த்து முறைத்தவன் "ஏண்டி நா இங்க எதை எங்க வைக்கண்ணு தெரியாம திண்டாடிற்றுகேன் நீ என்னனா சிரிக்குற ?"என்க
அவளோ மீண்டும் அவன் கோலம் கண்டு சிரித்தவள் அவன் அருகில் வந்து அவன் தலையில் இருந்த நியூஸ் பேப்பரை கீழே தட்டி விட்டு அவன் தலையை கோதி விட அவனுக்கு முறைப்பு போய் புன் முறுவல் ஒட்டிக்கொள்ள
அவள் "என்ன பண்ணிட்ருக்கீங்க siruh எடுக்குறதும் போடுறதுமா "என்க
அவனோ "எதை எதை எங்க வைக்குறதுனே தெரிலடி குழப்பமா இருக்கு "என்க
அவளோ "ஏன்டா உன் ரூம் அவ்ளோ நீட்டாக இருந்துச்சே நா பாக்கேல இப்போ என்னனா ஒதுங்க வைக்க தெரிலங்குற "என்க
அதற்கு அசடு வழிய சிரித்தவன் "என் ரூமஹ் லட்சுமி அம்மா தான் டெய்லி கிளீன் பண்ணுவாங்க .எடுத்ததை களைச்சு களைச்சு அந்தந்த இடத்துலயே போட்டுருவேன் அதுமட்டுமில்லாம எடுத்து வைக்குறதுலயும் weakuh தாறு மாறாக arrange பண்ணுவேன் "என்க
அவள் "அப்போ டெல்லில என்ன பண்ண ?"என்க
அவனோ "அதிதிக்கு வீடு குப்பையா இருந்தா சுத்தமா புடிக்காது என்ன கேவலமா திட்டிட்டே வாரம் ஒரு தடவ மொத்தமா கிளீன் பண்ணுவா"என்க
தலையில் அடித்தவள் "நா ஹெல்ப் பண்ணுறேன் வா செய்யலாம் "என்று ஒவ்வொரு பொருளாய் பிரித்து அதை அதனுடன் சேர்ந்த பொருட்களுடன் தரம் பிரித்தால்.
பின் அதை ஒவ்வொரு இடமாக அடுக்கினால் .மேலே உள்ள cupboardilum பொருட்கள் அடுக்கப்பட்ட வேண்டி இருக்க நாற்காலியை இழுத்து போட்டவள் அதன் மேல் ஏறி "ஒவ்வொரு பொருளா கேக்குறேன் எடுத்து குடுடா "என்றவள் சேலையை இழுத்து சொருக அவனும் "ஆங் சரிடி என்றவன் திரும்பி அவள் கேட்ட பெட்டியை எடுத்து நிமிர அவன் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து விட்டான் ,கண்கள் இமைக்கவும் மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தது .பச்சை வண்ண சேலை அவள் உடலோடு ஒட்டி இருக்க ,ஆங்காங்கே துளிர்ந்த வேர்வை அவள் நெற்றியிலிருந்து வழிய அதை துடைத்து விட்டவள் எம்பி அந்த cupboardil உள்ளே செய்தி தாளை விரித்து கொண்டிருக்க அவள் எம்பியதில் அவள் இடையிலிருந்து சேலை விலக இவனுக்கோ இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது .அவள் மூன்று முறை அவன் பெயரை அழைத்தும் அவன் திரும்பாமல் இருக்க கடைசியாய் ஒரு முறை அவள் "விது........."என்க அதில் நடப்புக்கு வந்தவன் அவளிடம் அந்த பெட்டியை கொடுத்தவன் "சது நீ நீ போ நா நானே பாத்துக்குறேன் "என்று அவன் தரையை பார்த்து கொண்டே கூற
அவன் முகத்தை இன்னும் பார்க்காதவள்"ஹே லூஸாஹ் டா நீ அதெலாம் ஒன்னும் எனக்கு பிரச்னை இல்ல அடுக்கி கொடுத்துட்டே போறேன் அடுத்த பெட்டியை எடுத்து குடு "என்க
அவனோ மனதில் "உனக்கு பிரச்னை இல்ல ஆனா நா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தேன் எனக்கு தான் பிரச்னை "என்று நினைத்தவன்
அவளிடம் "சொன்னா புருஞ்சுக்கோ டி இதுக்கு மேல இங்க இருக்காத நா பாத்துக்குறேன்.உனக்கு தான் பிரச்னை "என்று பல் இடுக்கில் அவன் பதில் சொல்ல
கீழே இறங்கியவள் "என்ன என்ன பிரச்னை எனக்கு உடம்பு வலிக்கும்னு நெனைக்குறியா .நா எவ்ளோ ஸ்ட்ரோங் தெரியுமா என்று அவள் பேசி கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் அவன் பொறுமை காற்றில் பறக்க அவள் இடையில் கையை வைத்து அருகில் இழுத்தவன் அவள் கன்னத்தை பற்றி அவள் இதழில் தன் இதழை பொறுத்தினான்.
முதல் முத்தம் மங்கையவளிற்கு அதிர்ச்சியை தந்தாலும் மன்னவனவனின் அருகாமை அவளை கிறங்கவைக்க கண்களைமூடி தன் பாதியானவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள் சைந்தவி.
சற்று நேரம் கழித்து விலகியவன் அவள் கண்ணை பார்த்து
"கவிதைகளை ரசித்திருந்தேன்
காரிகை உன்னை காணும் வரை "
என்றவன் அவள் கன்னத்தை வருடிக்கொண்டே
"மலர்களே மேன்மையென்றிருந்தேன்
உன் வெண்கன்னம் தீண்டும் வரை "
என்று அவள் கையோடு கோர்த்திருந்த தன் கையை பார்த்தவன்
"கைகள் கோர்த்து தினமும்
உன் கைதியாகி விடவா
உன் கணவனாய்
காலம் முழுதும் நான் வரவா?"
என்று அவன் கூறி முடிக்க அவளோ உணர்வுகள் மறந்து முகம் சிவந்து நின்றிருந்தாள் .
அவள் முகத்தை நிமிர்த்தியவன் "இனிமே நா ஏதாச்சும் சொன்னேனா அத ஒழுங்கா கேள்வி கேக்காம செய் .இல்லேனா உனக்கு தான் danger ."என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து அவளை விட்டு விலக அவளோ விட்டால் போதும் சிரித்து கொண்டே என்று தலை தெறிக்க ஓடியே விட்டால் .
அங்கே அதிதியை தன் அறைக்கு அழைத்து வந்திருந்தான் ஹரி விக்னேஷ் .அங்கே அவன் அரை முழுவதும் அவன் வரைந்த ஓவியங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்க இந்தியாவிலும் இதரபல இடங்களிலும் இருக்கும் கட்டிடங்களை அவன் கையால் செய்த மாதிரிகளும்அவன் குடும்பத்தினர்அனைவரும் சேர்ந்து இருப்பதை போன்ற ஒரு சிலைசெதுக்கமும் என்று முழுதும் அவனின் கையால் உருவான கலைப்பொருட்களுடன் கண்ணை கவரும் விதமாய் இருந்தது.அவை அனைத்தையும் ரசனையோடு அவள் பார்க்க அவனோ அவளை ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான் .
பின் அவனிடம் திரும்பியவள் "உங்க drawingslaam சூப்பராக இருக்கு ஹரி வேற எதுவும் வச்சுருக்கீங்களா அண்ட் எனக்கு கொஞ்சம் எப்படி செகண்ட்பேப்பர் jeeku எப்படிprepare பண்ணீங்கங்கன்னு சொல்லுங்களேன் "என்றவள் அவனை நோக்க
அவள் முன் வந்து அமர்ந்தவன் "jee paper 2mains பேப்பர்லரெண்டு sections இருக்கும்பிரஸ்ட் maths அண்ட் aptitude நெஸ்ட் drawing .maths கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அதுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ட்ரைனிங் எடுக்கவேண்டி இருக்கும் .drawing உனக்கு பிரச்னை இல்லனு நினைக்குறேன் spa ல படிச்சுறுக்கியே .mains clear பண்ணதும் அட்வான்ஸ் அதுகப்புறோம் ஜாம்(இன்டெர்வியூ)இதெல்லாம் clear பண்ணி குட் ராக்கிங் வந்தேனா ஐஐடி சென்னை கிடைக்கும்(ரொம்ப கஷ்டம்பா)."\என்க
அவளோ " maths ஹீஹீ நா ரொம்ப வீக் பா கொஞ்சம் அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க ."என்றவள்
அங்கே மேஜையில் ஒரு drawing புக் இருக்க அதை எடுத்தவள்" இது நீங்க வரஞ்சதா ?"என்று கேட்க அவனும் அவன் செய்ததை மறந்து ஆம் என்று கூறி விட அவள் அதை ஒவ்வொன்றாய் பார்க்க ஆரம்பித்தாள் .
அவள் பார்க்க ஆரம்பித்ததும் தான் அவனுக்கு தான் வரைந்து வைத்த ஒன்று ஞாபகம் வர உடனே அவள் கையில் இருந்து அதை வாங்கினான் அவன் .அவன் திடீரென்று வாங்கவும் அவள் "என்னாச்சு ஹரி என் அதுல உங்க பர்சனல் drawings இருக்கா?"என்க
அவனோ "பெர்சனல்லாம் இல்ல அதிதி அது அங் அக்காக்கு இன்னும் கொஞ்ச நாள்ல பர்த்டே வருதுல்ல அவளுக்கு என்ன கிபிட் பண்ணனும்னு அதுல வரைஞ்சு வச்சுருக்கேன் அத first என் அக்கா தான் பாக்கணும்னு நினைக்குறேன் அதான்."என்று வாயில் வந்த ஏதோ ஒரு காரணத்தை கூறி அவன் சமாளிக்க அவளுக்கு அதில் ஏதோ இருப்பதாய் தோன்றினாலும் ஏதும் அவனிடம் மேற்கொண்டு கேட்க அவளுக்கு விருப்பம் இல்லை .
பின் அவனிடம் திரும்பியவள் "ஓகே ஹரி நா போயிட்டு வரேன் நீங்க continue பண்ணுங்க உங்க workah "என்க
அவனோ "அதுக்குள்ளயா "என்க அவளோ அவனை வினோதமான ஒரு முறை பார்க்க தான் கூறிய வார்த்தைக்காக தன்னையே நன்கு நங்கென்று தலையில் மனதில் கொட்டி கொண்டவன் சமாளிக்க "அது அதுக்குல்லன்னா எப்படியும் மத்தியான சாப்பாடுக்கு இங்க தான வருவாங்க அண்ட் உனக்கும் மேத்ஸ் கஷ்டம்னு சொன்னன்ல ஸோ இந்த bookla இருக்குற ப்ரோப்லேம்ஸ் போட்டு பார்த்துட்டு நீ எந்தெந்த portion doubtfullaah இருக்குனு சொன்னேனா ஹெல்ப் பண்ணலாம்னு "என்க
அவளும் "ஆங் சூப்பர் ஹரி "என்க அவனும் எடுத்து தர அவளுக்கு புரியாத கணக்குகளைஅவன் கற்று கொடுத்தான்.பின் அதிக நேரம் இப்படியே படித்தவர்கள் அவர்கள் அப்பா வந்து "சாப்டுட்டு வேலைய பாருங்கப்பா என்றதும் தான் எழுந்து மணியை பார்த்தனர் .
அதிதி " என் வாழ்க்கைலயே இன்னைக்கு தான் இவ்ளோ நேரம் maths படிச்சுருக்கேன் THANK யு சோ மச் ஹரி அண்ட் நா உங்கள வா போன்னு கூப்பிடலாமா வாங்க போங்கன்னு கூப்பிட ஒரு மாறி இருக்கு "என்க
அவனும் "நானே சொல்லணும்னு இருந்தேன் வா போனே கூப்டு "என்க
அவளும் "ஓகேடா .சாப்பிடலாமாடா "என்க அவனோ "எத்தனை டா "என்றவன் அவள் சிரிக்க அவளது வ்ஹீல் சாறை தள்ளி கொண்டே அவ்வீட்டிற்கு சென்றான் .அங்கு அனைத்தும் முடிந்து வீட்டிற்கு இரவில் வரையில் அவன் அறைக்குள் சென்றவன் அந்த drawing புக்கில் ஒரு பக்கத்தை எடுத்து பார்த்தவன் அதில் இருப்பதை பார்த்து மெலிதாய் சிரித்து "நல்லவேளை அவ பாக்கல பாத்துருந்தா மங்கம்மா மை போட்ட கண்ணாலேயே எருச்சுருப்பா என்ன " என்று நினைத்தவன் அவள் கண்கள் ஞாபகம் வர சிரித்து கொண்டே அதை மூடி வைத்தவன் சென்று உறங்கினான் .
.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top