21
சிரித்துக்கொண்டே வந்த சைந்தவியோடு பைக்கில் அமர்ந்தவன் அவள் அமறும் முன் அவள் கையை பிடித்து தன் முன் இழுத்தவன் அவள் முகத்தை பார்த்து "சாரி சது"என்க
அவளோ புரியாது முழிக்க தலையை தொங்கப் போட்டவன் "நா ......நா.....அவ......வருவான்னு expect பண்ணல இப்டி நீ யார்ட்டயும் பேச்சு வாங்கியிருக்க மாட்ட என்னால தான ............"என்று அவன் குரல் கறகறக்க
அவன் முகத்தை சிறு சிரிப்போடு நிமிர்த்தியவள் "அவங்க சொன்னா அது உண்மை ஆயிடுமா ?லூசு இதுக்கெல்லாமா வருத்தப்படுவ ?.நா உன் சது எனக்கு தெரியும் நா யாரு அவுங்க யாருனு .கண்டவங்க பேசுறதுக்கெல்லாம் நீ சாரி கேக்காத என் விது தல எப்போவுமே நிமிர்ந்து தான் இருக்கணும் .என்னைக்கும் அது குனிய கூடாது ."என்று அவன் மீசையை பிடித்து அவள் இழுக்க லேசாய் முனகியவனின் உதடுகள் தானாய் விரிந்தது தன்னை புரிந்துகொண்டு தன் சோகத்தையும் புன்னகையாக மாற்றும் துணை கிடைத்ததில் .
பின் அவளோடு வீடு வரை வந்தவன் அவளை இறக்கி விட்டு விட்டு தன் வீட்டிற்கு வந்தான் .அங்கே விஷ்வாவிடம் நேரடியாய் சென்றவன் "இங்க பாருங்க மிஸ்டர் விஷ்வா என் தங்கச்சி இன்னையோட சரி ஆயிட்டா அவளை இனிமே தங்க வைக்குறதுக்கான எந்த காரணமும் இப்போ உங்க கிட்ட இல்ல .சோ உங்க வீட்டை நாங்க நாளைல இருந்து காலி பண்றோம் இதுகப்புறோம் எங்க lifela வராம இருக்குறது தான் உங்களுக்கும் நல்லது மத்தவங்களுக்கு நல்லது "என்றவன் ரம்யாவிடம் திரும்பி "என் சதுவ பாத்து அந்த மாறி பொண்ணான்னு கேக்குறதுக்கு உனக்கு எந்த யோக்கியதையும் இல்ல .காதலிச்சவன சொத்துக்காக அடுத்தவ புருஷனா ஆக்கிட்டு அவனோட வப்பாட்டியா வாழ்ந்துருக்கியே உன்ன எல்லாம் ......ச்சீ என்ன ஜென்மமோ "என்றவன் அவளை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டான் .
அதிதியைஅன்றிரவுமருத்துவர்கள் பரிசோதனை செய்து 1 வாரம் பிசியோதெரபி செய்ய கூறினர்.அதிதியின் அறையில் இரவில் அமர்ந்திருந்தவன் அவளிடம் பேசி கொண்டே உணவை ஊட்டிவிட்டு கொண்டிருந்தான் .
அதிதி "ஹையோ அண்ணா நா என்ன கொழந்தையாடா ஊட்டி விட்டுட்டு இருக்க குடுடா நானே சாப்ட்டுக்குறேன் "என்க
வித்யுத் "அதிதி நீ எவ்ளோ பெருசானாலும் என்னோட முதல் கொழந்த நீ தான் சோ நா தான் உனக்கு ஊட்டி விடுவேன் .3 மாசமா எவ்ளோ வேதனையா இருந்துச்சு தெரியுமா "என்றவன் அவளுக்கு ஊட்டி விட
அவளோ "ஷோபா அண்ணா ஆனாலும் அப்பப்போ நீ எனக்கு அண்ணனா இல்ல அப்பாவானே தெரிலடா"என்க
வித்யுத் "அது சரி அதிதி அவளை பத்தி என்ன நெனைக்குற "என்க
யாரை குறிப்பிடுகிறான் என்று புரிந்தும் விளையாட நினைத்த அதிதி "யாரை பத்தி அண்ணா "என்க
அவனோ "அதாண்டா சைந்தவி பத்தி "என்க
அதிதி "அவுங்கள பத்தி நா என்னென்ன நினைக்கணும் "என்க
கடுப்பானவன் "ஆங் சுரக்காய்க்கு உப்பில்லைனு நினைக்கணும் "என்க
சிரித்தவள் அவன் அருகில் சென்று என்றும் போல் அவன் தோளில் தலை வைத்து சாய்ந்து கொண்டவள் "எனக்கு நம்ம அம்மாவையே வேற உருவத்துல பார்த்த மாறி இருந்துச்சுடா .ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு ."என்க அவள் கூறியதில் அவன் முகம் 1௦௦௦ வாட்ஸ் பல்பு போல் ஆக அவனிடம் தன் கை குட்டையை நீட்டியவள் "அண்ணா ரொம்ப வழியுது தொடச்சுக்கோ "என்க
அவள் தலையில் தட்டி "லூசு "என்றவன் "அதிதி நாம இன்னைக்கே இந்த வீட்டை காலி பண்றோம் என்க
அவளோ "அதுக்குள்ள வீடுலாம் பாத்துட்டியாடா ?"என்க
அவனோ "ஆல்ரெடி வாங்கி வச்சுட்டேன் ."என்க
அவளோ "எது வாங்கி வச்சுட்டியா ?"என்க
அவன் "அம்மா நம்ம பராமரிப்புக்காகன்னு குடுத்த அமௌண்ட்ல 25 thousand தவிர்த்து மத்ததெல்லாம் சேந்துட்டே தான இருந்துச்சு அதுமட்டுமில்லாம 4 வருஷமா நா வாங்குற இன்டென்ஷிப் வேற சோ அதெல்லாம் சேத்து வீடு வாங்கிட்டேன் "என்க
அவளோ "அண்ணி வீடு பக்கத்துல தான "என்று குறும்பாய் கேட்க
அசடு வழிந்தவன் "அண்ணி வீடு பக்கத்துல இல்ல அடுத்த காம்பௌண்ட் வீடயே வாங்கிட்டேன் "என்க
அதிதியோ"நெனச்சேன்டா .அப்பறோம் அண்ணா எனக்கு இங்க college மாத்த எல்லா போர்மாலிட்டீஸும் முடுச்சுட்டியா"என்க
அவனோ "அம்மு இந்த வருஷம் உன்னால architecture continue பண்ண முடியாதுடா அட்டெண்டென்ஸ் சுத்தமா இல்லாததால .ஸோ as யூ know நீமறுபடியும் jee பேப்பர் 2 எழுதணும் .கோச்சிங் கிளாஸ்ஸஸ் விசாரிச்சுருக்கேன் அண்ட் சைந்தவி தம்பி ஹரி IIT சென்னைலதான் 2nd இயர்படிக்குறான்.அவன்கிட்ட guide பண்ண சொல்லிருக்கேன் நீ prepare பண்ணு எண்ட்ரன்ஸ்க்கு."என்க
அதிதியோ "போச்சுடா மறுபடியும் முதல்ல இருந்தா அந்த ACCIDENT பண்ண நாய் என் கைல கெடச்சான்....இட்ஸ் ஓகே அவங்க பேர் என்ன சொன்ன ?"என்க"
"ஹரி விக்னேஷ் "என்க அவளும் மனதில் அப்பெயரை உச்சரித்துக்கொண்டாள் .
பின் அனைத்தையும் பேக் செய்தவன்அதிகாலையிலேயே விஷ்வாவிடம் "போறேன் மிஸ்டர் விஷ்வா .இது நாள் வரைக்கும் என் மூஞ்சிலயே முழிக்காம இருந்து எனக்கு பெரிய உதவி பண்ணதுக்கு மிகவும் நன்றி "என்று கூறி அதிதியை வ்ஹீல் சாரில் வைத்து அழைத்து செல்ல செல்லும்முன் விஷ்வாவின் கண்களை பார்த்த அதிதிக்கு அதில் உண்மையான பாசம் இருப்பது போல் தோன்ற பின் தன்னையே குட்டிக்கொண்டவள் "ச்சீ இவருக்காச்சும் பாசமாச்சும் எந்த கடைல கிலோ எவ்ளோ விலைக்குனு கேப்பாரு "என்று நினைத்தவள் வித்யுதுடன் கிளம்பி சென்றால்.
சைந்தவியின் வீட்டில் முதலிலேயே அவர்கள் இங்கு மாறி வருவதை கூறி இருந்ததால் அவர்கள் அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க இங்கோ விடிந்து அத்தனை மணி நேரமாகியும் தூக்கத்தில் உழன்று கொண்டிருந்தான் ஹரி விக்னேஷ் (தூங்குடா தூங்கு நல்ல தூங்கு உன் தூக்கத்தையெல்லாம் எடுத்துக்க போறவ வந்துட்டே இருக்கா)
வித்யுத் அதிதியுடன் காரில் வந்து இறங்க அவனை வரவேற்றனர் சைந்தவியின் பெற்றோர்கள் .பின் அதிதியிடம் திரும்பிய அவள் அம்மா "எப்டிமா இருக்க நல்ல இருக்கியா ?ரொம்ப அழகா இருக்க "என்றவர் அவளுக்கு கன்னத்தில் முத்தமிட முதல் சந்திப்பிலேயே இத்தனை அன்பாய் பேசும் அவர்களின் பால் அதிதி இழுக்கப்பட்டால் .பின் அவர்களுடன் பேசி கொண்டே இருந்தால் .
பின் அனைவரும் பக்கத்துக்கு வீட்டிற்கு அதாவது வித்யுத் வாங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று ஹோமத்தை வளர்க்க சைந்தவியிடம் வந்த அவள் அம்மா "ஏன்டி இன்னுமா அந்த ஹரிப்பய தூங்கிட்டு இருக்கான் போய் எழுப்பி விடுடி பால் காய்ச்சலுக்காச்சும் வர மாதிரி "என்க
அவள் "அந்த தடிமாடுட்ட நேத்தே சொன்னேன்மா சீக்கரம் எழுந்திரு எழுந்திரினு .இன்னும் இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்கான் "என்றவள் அவர்கள் வீட்டிற்கு சென்று அவன் தலையிலேயே ஒரு போடு போட்டவள் "எரும எவ்ளோ நேரம் தூங்குவ எழுந்திரு "என்க
அவனோ "ஹே பூசணி தூங்க விடுடி "என்க
அவளோ "நைட் பூராம் உக்காந்து உக்காந்து வரை அப்பறோம் காலைல பூராம் தூங்கு எந்திரி டா பக்கத்துக்கு வீட்டுல பால் காச்சுறாங்க.என்திரிசேனா ரசகுல்லா கிடைக்கும் இல்லேன்னா வெறும் கை தான் "என்க
ரசகுல்லா என்ற வார்த்தையிலே எழுந்தவன் "10 நிமிஷம் பத்தே நிமிஷத்துல பறந்து வரேன்" என்றவன் குளிக்க செல்ல
அவளோ "ரசகுள்ளனாவொடனே எப்படி ஓடுது பாரு சாப்பாடு ராமன் "என்று சிரித்தவள் வித்யுதின் வீட்டிற்கு சென்றால் .அங்கே கையை பிடித்து இழுத்த வித்யுத் சுவரோடு நிற்க வைக்க நெளிந்தவள்"டேய்ய் லூசு அம்மா அப்பாலாம் இருக்காங்கடா என்னடா பண்ற "என்க
அவனோ அவளை விட்டு சற்று தள்ளி நின்று அவளை ரசித்தவன் அவளை கண்டு "சாறி கட்டாதனு சொன்னேன்ல நொவ் யு ஆர் லூக்கிங் கார்ஜியஸ்.என்க
அவள் "அதற்கு "என்க அவனோ அவள் அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தம் பதிக்க
அங்கு வந்த அதிதி "ம்க்கும்"என்க
அவனும் அவளும் பட்டென விலக விஷமமாய் சிரித்தவள் "அண்ணா நா எதுவும் பாக்கல .உன்ன பால் காய்ச்சுறதுக்கு கூப்பிட்டாங்க வந்துரு "என்றவள் வ்ஹீல் சாறை தள்ளி கொண்டே உள்ளே செல்ல .அவனும் அவளும் அசடு வழிந்து கொண்டே உள்ளே சென்றனர் .
பின் பால் காய்ச்சி முடித்ததும் சைந்தவியும் அதிதியும் உள்ளே அறையில் சென்று பேசி கொண்டிருக்க அப்பொழுது கிளம்பி வந்தான் ஹரி .
உள்ளே வந்தவன் அவன் அப்பா அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்ள அங்கே வந்த வித்யுத் "அய்யய்ய விடுங்க மாமா கொஞ்சம் lateaah வந்துட்டான் அதுக்கு போய் இந்த திட்டு திட்டுறீங்க "என்றவன்
அவனிடம்" நீ வா மச்சான் " என்று அழைத்து செல்ல அவனும் அவன் அம்மாவிடம் நாக்கை துருத்தி விட்டு சென்றான்.
பின் அவன் வித்யுதுடன் உண்டு முடிக்க வித்யுதிற்கு ஏதோ கால் வர அவன் வெளியே சென்று விட்டான் .பின் ஹரிக்கு அங்கு ஏதோ ஒரு அறையில் சிரிப்பு சத்தம் வர ஏதோ ஒரு உந்துதலில் அந்த அறையின் வாசலிற்கு வந்தவன் அப்படியே நின்றான் அதிதியை கண்டு .பச்சை வண்ண சுடிதாரும் அதே வண்ணத்தில் அவள் அசைவிற்கு ஆடும் தொங்கட்டானும் உட்கார்ந்திருந்த போது அவள் இடை தொடும் கூந்தலும் .கன்னத்தில் விழும் சிறு குழியும் உதட்டிற்கு மேல் சிறிய அளவில் மச்சமும் அவளை அவனுக்கு தேவ கன்னியாகவே காட்ட அப்படியே அவளை பார்த்த படியே நின்றான் அவன்.முற்றுப்புள்ளி முடியா புள்ளி ஆனதோ? .(பசில கிடந்தவன் பிரியாணி பொட்டலத்தை பாத்த மாறியே பாக்குறான் பாரு .உன் அக்காவும் அங்க தாண்டா இருக்கா அடக்கி வாசிக்கவும் )
சைந்தவியுடன் பேசிக்கொண்டிருந்த அதிதி தன்னை யாரோ பார்ப்பதை போல் உணர திரும்பியவள் ஹரியின் காந்தம் போன்ற பார்வையில் சற்று நேரம் அவன் கண்ணோடு தன் கண்ணை இணைத்தால் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top