20
அடுத்த நாள் எழுந்த ஹரியின் கண்கள் இரண்டும் இரவு தூங்காததால் முழுதும் சிவந்திருந்தது .அவன் எழுந்து வருவதை பார்த்த அவன் அப்பா "ஹே என்னடா நைட் தூங்கலையா கண்ணு இப்டி செவந்துருக்கு "என்க
அவனோ என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாதவன் "அது வந்து அப்பா அது படிச்சேன்ப்பா"என்க
அவன் பின் வந்த சைந்தவி "எது நீ நேத்து தூங்காம படிச்ச இதை நாங்க நம்பனும் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்டா தம்பி என்ன பண்ண ?"என்று அவள் கேட்க
எரிச்சலுற்றவன் "அதான் படிச்சேன்னு சொல்றேன்ல ஏண்டி நை நைன்னு எரிச்சல் படுத்துற போ "என்று கத்திவிட்டு உள்ளே சென்று கதவை சாற்றிக்கொண்டான் .அவனின் விசித்திர நடவடிக்கையால் அவள் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் குழப்பமாய் பார்த்து கொள்ள சைந்தவியோ சிரித்து கொண்டிருந்தாள் .
அவளிடம் திரும்பிய அவள் அம்மா "ஹே சையு அவன் என்னைக்கும் இல்லாம இப்டி பண்ணிட்டு போறான்னு நாங்க குழப்பமா பாத்துட்டு இருந்தா நீ என்னடி சிரிச்சுட்டு இருக்க nutuh கழண்டுருச்சா ?"என்று கேட்க
அவளோ "ஒன்னும் இல்லம்மா நா பாத்துக்குறேன்.நீ ஒன்னும் பீல் பண்ணாம பொய் தோஷ சுடு இதோ வந்துருறேன் "என்று அவன் அறைக்குள் சென்றால் சைந்தவி அங்கோ படுக்கையில் அமர்ந்திருந்தவன் கையை பிணைத்து அவன் விரல்களை பாடாய் படுத்தி கொண்டிருந்தான் .
அவன் அருகில் சென்று அமர்ந்தவள் "ஹரி உனக்கு ஏதாச்சும் இந்த பேய் ஒற்றவுங்கள தெரியுமா ?"என்க
அவனோ "எதுக்குடி ?"என்க
அவளோ "இல்ல விது வீட்டுக்கு போயிடு வந்ததுல இருந்து ஏதோ பேய் அரஞ்ச மாறியே இருக்கியா அதான் எதுவும் பேய பாத்து பயந்துட்டியானு நெனச்சேன் "என்க
அவன் "லூசு லூசு மாறி பேசாம போய் படிக்கிற வேலைய பாருடி அவன் அவன் இருக்குற நெலமைல நீ வேற எரிச்சல் படுத்தாத "என்க அவன் கையை பற்றி தன் புறம் திரும்பியவள் அவனை கூர்மையாய் பார்க்க எங்கே அவள் கண்ணை பார்த்தல் உளறி விடுவோமோ என்று பயந்தவன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான் அவன் வாயிலிருந்து தானாக "சாரி அக்கா "என்ற வார்த்தை வெளி வர
அவள் அவன் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தவள் "இதோ பாரு ஹரி மனசுல ஏதாச்சும் ஒரு விஷயம் அருச்சுக்கிட்டே இருந்துச்சுனு வையேன் ,அதபத்தி மேலும் மேலும் யோசிச்சு மனச உளட்டிக்காத. எல்லா விஷயங்களும் ஒரு காரணத்தோட தான் நடக்கும்.ஆனா சில விஷயத்துக்கான காரணத்தை தெருஞ்சுக்காம இருக்குறதே நல்லதா இருக்கும்.lifeah ரொம்ப யோசிச்சு காம்ப்ளிகேட் ஆக்காத அது போக்குல விடு அதுவே உனக்கான டெஸ்டினிக்கு கூட்டிட்டு போகும். அதுக்கெல்லாம் மதிப்பு குடுத்து யோசிக்க ஆரம்பிச்சன்னு வை யோசிச்சு யோசிச்சே நேரம் போய்டும் .சோ.....பிரீயாஹ் விடு "என்று அவள் எதை நினைத்து கூறினாலோ ஆனால் அவனுக்கு அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பெரும் தெளிவை கொடுத்தது .
இது வெறும் ஈர்ப்பு தான் என்று எண்ணியவன் அவ்வெண்ணத்தை புறம் தள்ளி முகம் தெளிவாக அவளிடம் திரும்பியவன் "ஹே பூசணி நீ எதை மனசுல வச்சுட்டு சொன்னியே ஆனா thanksdi ."என்றவன் அவள் கன்னத்தை வலிக்குமாறு கிள்ளி செல்ல "பூசணி collegeக்கு கிளம்புறேன் அய்யா சோ you கெட் அவுட் ".என்று அவள் தலையிலேயே அவன் டீ-ஷர்டை கழட்டி எரிய அவளுக்கு இவன் பேசாம அந்த உம்முனா மூஞ்சியாவே இருந்துருக்கலாமோ கொரங்கு என்று அவனை மனதில் திட்டியவள் அதற்கு நேர் மாறாய் சிரித்து கொண்டு அவன் டீஷிர்டை கீழே போட்டவள் சென்று படிக்க ஆரம்பித்தாள்.
அதன் பின் வந்த நாட்களில் ஹரி தான் கொண்டது ஈர்ப்பு மாத்திரமே என்று தனக்குள்ளே எண்ணியவன் அவ்வெண்ணத்திற்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைக்க கடவுள் அவன் வைத்த முற்றுப்புள்ளியை கீழே இழுத்து கமா ஆக்கியதை அவன் அறியவில்லை .
1 வாரம் முடிந்து அன்று தேர்வுகள் துவங்கியது சைந்தவிக்கு .அந்த ஒரு வாரமும் அவள் மாலையில் வித்யுத் வீட்டிற்கு அரை மணி நேரம் அதிதியை பார்க்க சென்று வருவதோடு சரி அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.கால் செய்தாலும் அவனிடம் பாடம் சம்மந்தமான சந்தேகம் கேட்க மட்டுமே கூப்பிடுவாள் அவளே மறந்து வேறு ஏதாவது பற்றி பேச ஆரம்பித்தாள் வித்யுத் அவளை நிறுத்திவிடுவான் படிக்கேல வேற எதை பதியும் யோசிக்க கூடாது என்று.
அன்று தேர்விற்கு செல்வதால் பிள்ளயார்க்கு எக்ஸாம் offeraaga இன்று இரு விளக்கையும் ஏற்றி கும்பிட்டுவிட்டு சென்றால்.வண்டியை நிறுத்தியவள் வித்யுத்தைத் தேட அவள் காதிர்கருகில் வந்து யாரோ கத்த அரண்டவள் விலகி பார்க்க வித்யுதோ அவள் அரண்ட முகத்தை பார்த்து சிரித்து கொண்டிருக்க அவளிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டான் .
பின்அவள் "லூசு எரும பயந்துட்டேன்டா ஏன் இப்டி பண்ண"என்க
அவனோ "சும்மா......"என்க
அவன் தலையை தட்டியவள் அவனிடம் "சரி குனி"என்க
அவன் "எது குனியவா பப்ளிக் placedi "என்க
அவன் புத்தி போகும் போக்கை பார்த்து அவள் தலையில் அடித்தவள் "புத்தி இப்டி தான் போகுமாடா எரும விபூதி வச்சு விட தான் குனிஞ்சு தொலை"என்க அவனும் குனிந்தான் .
குனிந்தவனின் நெற்றியில் விபூதி வைத்து விட்டவள் அவனின் நெற்றியில் கை வைத்து ஊதி விட சிறுவயதில் சாரு அவனிற்கு செய்வது அவன் கண்முன் வந்து போனது.பின் இருவரும் தமக்கு கொடுக்க பட்டிருக்கும் தேர்வறைக்கு சென்று தேர்வை மிகவும் நன்றாக எழுதிவிட்டு வெளியே வந்தனர்.இருவரும் பேசிக்கொண்டே "எங்கே நம்ம வானர கூட்டத்தை காணோம்" என்று தேட அவர்களோ இவர்கள் இருவருக்குமாகவே அவர்களின் வண்டி நிறுத்துமிடத்தில் நின்றிருந்தனர்.
அனைவரும் இவர்களை முறைத்துக்கொண்டு நிற்க இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் மெல்லமாய் நடந்து வந்து இளிக்க இதற்காகவே காத்திருந்தவர்கள் வித்யுத்தை ஷ்ரவனும் சரணும் மொத்த வினீஷாவும் பூஜாவும் சைந்தவியை பிடித்து மொத்தினர்.
சைந்தவி "டேய்ய் இந்த பாவப்பட்ட ஜீவன போய் இந்த அடி அடிக்கிறீங்களே டா மீ பாவம்டா பச்சை கொழந்த டா " என்க அவள் முகத்தை நிமிர்த்திய பூஜாவும் வினீஷாவும்" எது நீ பச்சை கொழந்த" என்று அதற்கும் சேர்த்து மொத்தினர்.
பின் அடிப்பதை நிறுத்தியவர்கள் அவர்களை விளக்க சற்று நேரம் பேசாமல் இருந்த அனைவரும் அடுத்த நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர் .
பின் ஷ்ரவன் "ஆக மொத்தம் இந்த ரெண்டும் மாட்டிக்கிச்சு .இந்த முடிவுக்கு தான் வருவீங்கன்னு தெரியும் ஆனா நீ எங்கள்ட சொல்லேல சாத்தியமா நம்ப முடில ."என்க
சரணோ"அவளை கரெக்ட் பண்ணதுமில்லாம அவுங்கப்பாட்ட கல்யாணத்துக்கு பெர்மிஸ்ஸன் வரைக்கும் வாங்கிட்டியேடா செம போ "என்க
பூஜா "எப்படி எப்படி madamku சோம்பேறித்தனத்தால லவ் பண்ண மாடீங்களாமாம் .இப்போ எங்கடி போச்சு உன் சோம்பேறித்தனம் ?"என்க
வினீஷாவோ "அதெல்லாம் போக்க வேண்டியவுங்க போக்கிருப்பாங்கடி "என்று அவர்களை காலாய்த்தே ஒரு வழி ஆக்கிவிட்டனர்.பின் அனைவரும் ஒரு உணவகத்திற்கு சென்று உண்டு கொண்டே பேச ஆரம்பித்தனர் .
சரண் "ஏன் மச்சான் காதல் வந்தா கவிதைலாம் எழுதுவானுங்களே நீ எழுதுனியா ?"என்க
வித்யுத்"ஏதோ ஒன்னு ரெண்டு டா "என்க
பூஜா "வித்யுத் கேக்குறவன் FIRSTUH எழுதுநானான்னு கேளு ?"என்க
சரண் "நாலாம் எழுதாத கவிதையா .என் கவிதையெல்லாம் சினிமா படத்துக்கு கூட கேட்டாங்க நா தான் என் ஆளுக்கு மட்டும் தான் அது சொந்தம்னு தரமாட்டேன்னுட்டேன் "என்க
ஷ்ரவன் "அப்டியாடா மச்சான் எங்கே ஒன்னு எடுத்து விடு பாப்போம் "என்க
சரண் "ஓகே மச்சான் சொல்லுவேன் ஆனா எனக்கு எழுதி தா எழுதி தாணு சொல்ல கூடாது ஓகேவா"என்க
வினீஷா "அடேய் அடேய் கவிதையை சொல்லுடா "என்க
தொண்டையை சரி செய்தவன்
"ஏன் நீட்ட மூக்கி
உன் அழகுல சிக்கி
நா போனேன் சொக்கி
எனவே உனக்கு நா போட்டேன் கொக்கி "
என்று கூறி முடித்து அவன் கண்ணை திறக்க அவர்கள் அனைவரும் சேர்ந்து அவனை முறைக்க பூஜாவிடம் திரும்பியவன் "என்னாச்சு பூஜா ஏன் கவிதையை பார்த்து எல்லாம் வாயடைச்சு போய்ட்டிங்களா "என்க
பூஜாவோ "போடா ப......"என்க
அவனோ "நோ நோ நோ பேட் words "என்க அவள் "பக்கி"என்றால் .
பின் அனைவரும் உண்டு முடித்து விட்டு கிளம்ப சைந்தவி அன்று அவனுடன் அதிதியை பார்க்க போக அவளை வாசலில் இறக்கி விட்டவன் ஏதோ கால் வர எடுத்து பேசினான்.
அவனை உடனடியாக வரும்படி ஆராய்ச்சி மையத்திலிருந்து அழைத்தனர்.அவன் சைந்தவியை பார்க்க அவளோ "நீ போயிட்டு வாடா நா இருக்கேன் "என்க அவனும் சரி பாத்து இரு லேட்டா ஆச்சுன்னா தனியாளாம் போவேனாம் நா கூட வந்து விடுறேன் பை .என்றவன் செல்ல அவள் வீட்டிற்குள் நுழைந்தால்.
அன்று அவள் அதிதியிடம் சென்று பேசியில் என்றும் இல்லாத அளவிற்கு அவளிடம் முன்னேற்றம் தெரிந்தது.பின் பேசிக்கொண்டிருந்தவள் வெளியே பேச்சு சத்தம் கேட்க வித்யுத் வந்துவிட்டான் என்று நினைத்து வெளியே அறை வாசலிற்கு செல்ல அங்கோ விஷ்வாவும் ரம்யாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
அவளை பார்த்த ரம்யா"ஹே யாருடி நீ இங்க என்ன பண்ற?"என்று காட்டமாய் கேட்க
இத்தனை கறாரான குரலை இதுவரை கேட்டிராத சைந்தவிக்கு லேசாய் உதறல் எடுக்க அதை மறைத்தவள் "நா வித்யுத் friend அவனோட இங்க வந்தேன் ஏதோ வேலைன்னு சொல்லிட்டு வெளிய போனான் "என்க
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்த ரம்யா ஒரு மார்க்கமாய் சிரிக்க அவளிற்கு அவள் சிரிப்பது புரியவில்லை பின் விஷ்வாவிடம் திரும்பிய ரம்யா "என்னடா உன் புள்ள வித்யாசமா இருக்கானேனு பாத்தேன் .பரவால்ல அப்பனுக்கு தப்பாம தான் பொறந்துருக்கான் .நீ வேல பாக்கேல பொண்ணுங்கள வச்சுக்கிட்ட அவன் படிக்கேலையே ஆரம்பிச்சுட்டான் "என்க
சைந்தவிக்கு உடலெல்லாம் கூசியது கண்ணீர் திரையிட நிமிர்ந்தவள் "நா ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல நா அவன் friend தான் "என்க
ரம்யாவோ "friend which benefitsaah "என்க அவளுக்கு வார்த்தையே வரவில்லை கீழே குனிந்து கொண்டால் அவள் அருகில் வந்த ரம்யா "என்ன எவ்ளோ குடுக்குறான் monthlyaah dailyaah "என்று கேட்டு கொண்டே போக
அங்கு வாசலில் வந்த வித்யுதிற்கு அனைத்தும் கேட்டு விட அவன் அங்கு வந்து பேசுமுன் ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது "shut up " என்று யாரென்று பார்க்க அறையிலிருந்து சத்தம் வந்தது .
அங்கே அதிதி கொஞ்சம் கொஞ்சமாய் எந்திரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள் .அவள் கண்களில் கோபம் கொப்பளித்தது .
3 மாதம் கோமாவில் இருந்ததால் கைகள் ஒத்துழைக்க மறுத்தது அவள் அருகில் உடனே சென்ற சைந்தவியும் வித்யுதும் அவளை அமர வைக்க .வித்யுதின் கண்களில் நீர் வழிவதை பார்த்தவள் துடைத்துவிட்டு "ஓய் அண்ணா என்ன sentimentaa செட்டாகளடா உனக்கு " என்றவள் சைந்தவியிடம் திரும்பி "ஹை அண்ணி .இந்த doguh கோமால இருக்கேல என்ட மொதல் மொதல்ல பேசுனதே உங்கள பத்தி தான்."என்க
அவன் "எப்போல இருந்து உனக்கு நினைவு திரும்புச்சு அதிதி நா பேசுனதுலாம் உனக்கு கேட்டுட்ருந்துச்சா?"என்க
அவளோ "ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் எதுவும் கேக்கல ஆனா ஒரு வாரமா எனக்கு சுத்தி என்ன நடக்குது என்ன பேசறாங்கன்னு கேக்க முடுஞ்சுச்சு ஆனா என்னால அசையவோ அதுக்கு ரெஸ்பாண்டோஹ் பண்ண முடில ".என்றவளுக்கு அன்று யாரோ தன்னை முத்தமிட்டது ஞாபகம் வந்தது .அவள் யாராயிருக்கும் என்று யோசிக்க
சைந்தவி "எனக்கு தெரிஞ்சு உனக்கு நேத்து nighteh மொதல்ல முழிப்பு வந்து மறுபடி நினைவு தப்பிருக்கணுமே அதிதி "என்க
அவளோ "ஆமா அண்ணி நேத்து மிட்னயிட் லேசா கண்ணு முழிச்சு பாத்தேன் அப்பறோம் 5 மினு ட்ஸ்ல எல்லாம் பிளாங்க் அவுட் ஆயிருச்சு ."என்றால்
அவள் குணமடைந்ததில் உற்சாகமான விஷ்வா அவள் அருகில் வந்து "இப்போ எப்படி டா இருக்கு.அப்டியே பார்க்க உன் அம்மா மாறியே இருக்க டா " என்று அவள் தலையில் கை வைக்க போக
அவரை எரிக்கும் பார்வை பார்த்த அதிதி "ஓ அம்மா மாறி இருக்குறதால தான் அம்மாவை கொன்ன மாறி என்னையும் கொலை பண்ண பாத்தீங்களா சார்"என்க அவனுக்கு கைகள் இருந்த இடத்திலேயே நின்றுவிட்டது .
பின் ரம்யா "ஹே என்னடி ஆளாளுக்கு நாட்டாமை பண்ணிட்டு இருக்கீங்களா அவ என்னனா friendunguraa நீ என்னனா அன்னிங்குற என்ன நெனச்சுட்டு இருக்கீங்க "என்க
அவளோ"என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கபோறவுங்கள நா அண்ணின்னு கூப்டாம என்னனு கூப்பிடுவேன்.அண்ட் உங்கட்ட அவுங்க என் எல்லாத்தையும் சொல்லணும் .அது சரி உறவுகளை பத்தியோ கல்யாணத்த பத்தியோ தெரியாத உன்ன மாறி பன்னிக்கெல்லாம் எங்குடு புரிய பொது "என்று அவள் ஏகத்துக்கும் வருத்தப் படுவது போல் பாவனையில் கூற வித்யுத்திற்கும் சைந்தவிக்கும் சிரிப்பு வந்து விட்டது .
அவர்கள் சிரிப்பதை பார்த்த ரம்யாவிற்கு மேலும் கோபம் வர "என்னடி கொழுப்பா நீ என் வீட்டுல இருக்க தெரியும்ல "என்க
அவள் "வாய ஒடைச்சுடுவேன் யார் வீட்டை யாரு உரிமை கொண்டாடுறது இது என் தாத்தா என் அம்மாக்காக வாங்குனது .என் அம்மா பொறந்து வளர்ந்த வீடு.என் அம்மா செத்த அன்னைக்கே எல்லாம் அந்து போச்சு இங்க என் அண்ணா இருக்க ஒரே கரணம் மனசாட்சி இல்லாத நீங்க மனிதாபிமான அடிப்படையில வாங்குன கோர்ட் ஆர்டர் தான் .அதுவும் இப்போ நா சரி ஆயிட்டேன் இனி என்ன இங்க இருக்க வைக்க உங்கட்ட ரீசன் இல்ல."என்க ரம்யா 17வயது பெண் இத்தனை தெளிவாய் பேசுகிறாளே என்று பார்க்க
அதிதி தொடர்ந்தால் "அண்ட் இந்த டி டா போடுற வேல எல்லாம் என்ட வேணாம் என் அண்ணனாச்சும் வயசுக்கு மரியாதை குடுப்பான் நா அப்டி இல்ல.என்று ஒரு முறை அவள் வாயை பார்த்தவள் வாய உடைக்கவும் தயங்க மாட்டேன் "என்க தலை தெறிக்க வெளியே சென்று விட்டால் ரம்யா .
விஷ்வாவிற்கு அதிதியை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாய் இருந்தது அவனால வித்யுதாலோ அடக்க முடியாத ரம்யாவையே ஓரிரு வார்த்தைகளில் அடக்கி விட்டாலே .அவன் மனதில் "சாரு நம்ம பொண்ண பாக்கேல அப்டியே உன் உருவத்தை பார்க்குற மாறியே இருக்குடி .நீ சாகல சாரு அவ உருவத்துல இன்னும் உயிரோட தான் இருக்க.அவ என்ன அப்பாவா ஏத்துக்கலேனாலும் பரவால்ல என்ன நெருங்க விடலேன்னாலும் பரவால்ல அவளையும் வித்யுதயும் தூரத்துல இருந்தாச்சும் பாத்து சந்தோஷப பட்டுக்கிறேன்"என்று நினைத்தவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான் .
அவளுடன் பேசி கொண்டிருந்தனர் சைந்தவியும் வித்யுதும்.சைந்தவியின் குறும்பு பேச்சு அதிதிக்கும் அதிதியின் நேர் பேச்சு சைந்தவிக்கும் மிகவும் பிடித்து போக சிறிது நேரத்திலேயே நன்றாக ஒட்டி கொண்டனர்.பின் நேரமாக சைந்தவி "பை அதிதி நாளைக்கு பாக்கலாம் "என்று கிளம்ப
அதிதி "அண்ணா ரொம்ப நேரமாச்சு நீ போய் விட்டுட்டு வா "என்க
அவள்"வேணாம் அதிதி நா போய்க்கிறேன்" என்க
அதிதி "ஐயோ அண்ணி ரொம்ப நேரமாச்சு மழை காலம் வேற அண்ணா வரட்டும் பக்கம் தான உங்க வீடு நா இருந்துபேன்"என்று அவர்களை அனுப்பி வைத்தவள் யோசிக்க துவங்கினால் .அண்ணா வாய்ஸ் தெரிஞ்சுச்சு அண்ணி வாய்ஸ் தெரிஞ்சுச்சு ஆனா அன்னைக்கு என்ன அதிதினு கூப்டு கிஸ் பண்ணது எங்கயோகேட்டகுரல்மாறிஇருக்கே.என்றவள் கை தன்னிச்சையாய் நெற்றியை வருட ஏனோ அவளுக்கு அந்த நபர் மேல் கோபம் வர வில்லை யாரென்று அறிந்து கொள்ளும் ஆவல் தான் பிறந்தது .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top