2

அவன் மீண்டும் பாடத்தில் ஒன்றி போக நேரம் யாருக்கும் நிற்காமல் செல்ல இதோ பாடவேளை முடிந்து உணவுண்ணும் நேரமும் வந்தது .அவன் யாரிடமும் ஒன்றும் பேசவும் இல்லை அவளை மீண்டும் பார்க்கவுமில்லை .தன் பையை எடுத்தவன் கேன்டீனை நோக்கி புறப்பட்டான் .அவன் சென்றபின் சைந்தவி,பூஜா,வினிஷா அருகில் வந்தனர் ஷ்ரவனும்,சரணும்.

சரண் "செம திமிரடி அவனுக்கு .சரி புதுசா வந்துருக்கானே பேரென்னனு கேட்டா பதில் சொல்லல அடுத்து எந்த காலேஜ்ல இருந்து வந்துருக்கான்னு கேட்டா அதுக்கும் பதிலில்லை அப்பறோம் நானும் செர்தான் போடான்னு விட்டுட்டேன்"

என்க ஷ்ரவன்"ஆமாடி நானும் பார்த்தேன் pen கீழ விழுந்துருச்சுன்னு எடுத்து தாணு சொன்ன எடுத்து தந்தான் அப்பறோம் தேங்க்ஸ் சொன்னா ஒண்ணுமே ரிப்ளை பண்ணல சிரிச்சுட்டு திரும்பிட்டான்.ஒருவேளை ஊமையோ ?"

என்க பூஜா "அட மங்குனி அமைச்சர்களா கிளாஸ் நடந்துதிருக்கேல நம்ம நான்ஸ்டாப் வாயாடி சையுவே பேச மாட்டா இதுல அவனை பாத்தாலே reserved type மாறி இருக்கு இது போதாதுன்னு படிப்ஸ் வேற எப்பிடிடா ரிப்ளை பண்ணுவான்?"

என்க வினீஷா "என்ன பேபி ட்ராக் மாறுது போல rith என்கின்ற rithwikta போட்டு குடுத்துருவேன் பாத்துக்கோ .என்ன நாம இவ்ளோ டயலாக் பேசிட்டோம் நம்ம சையுவை ஆள காணோம் "என்று தேட

ஷ்ரவனோ"அவளும் பொறுத்து பொறுத்து பாத்தா நீங்க முடிக்குற மாறி இல்ல அதான் அவ சோறு தான் முக்கியம்னு கான்டீன் பக்கம் போய்ட்டா" என்றான் பின் அனைவரும் கிளம்பி தத்தம் காதலர்களை சந்திக்க சென்றனர்.எப்போதும் ஒன்றாக இருக்கும் இந்த நண்பர்கள் குழு உணவுண்ணும் வேளையில் மட்டும் தத்தம் காதலை சந்திக்க சென்று விடும்.

சைந்தவியுடன் அமர்ந்து உண்ண பலரும் தயாராக இருப்பதால் தினம் ஒரு குழுவினருடன் தன் உணவு நேரத்தை செலவிட்டு அவ்விடத்தையே கலகலப்பாக மாற்றி விடுவாள் .அன்றும் அவள் உள்ளே காண்டீனிற்குள் செல்ல அனைத்து இடங்களும் நிறைந்திருந்தது ஒரு இருக்கையை தவிர .அங்கே சென்று அமர்ந்தவள் எதிரில் அமர்ந்திருந்தான் அவன் .எதிரில் அமர்ந்திருந்தவள் அவனிடம் "ஹாய் " என்க அவனோ வேறு ஏதோ சிந்தனையில் இருந்தான்.பின் அவள் மீண்டும் "ஹலோ பாஸ் " என்க திடுக்கிட்டு சிந்தனையில் இருந்து விடு பட்டவன் என்னவென்று நோக்க அவள் "ஹாய் என்ன செம திங்கிங்க்ல இருக்க போல .என்ன லஞ்ச் கான்டீன் சாப்பாடு தானா" என்க

அவனோ இத்தனை இலகுவாய் பழகும் குணம் இல்லாததால் சற்று தயங்கி பொதுப்படையாக "ஆமா சாரி ." என்று சுருக்கமாய் பதிலளிக்க சுருக்கத்தின் பொருள் என்னவென்பதே அறியாத

சைந்தவி "இதுக்கெல்லாம் எதுக்கு சாரி .அதை விடு உன் பேரென்ன?"என்று கேட்டுக்கொண்டே உண்ண ஆரம்பித்தாள் .

அவனோ "வித்யுத் விஹான்"என்றான்

அவள்"வித்யுத் விஹான் பேரு நல்லாருக்கே.ஹே உன் பேருல ஒரு ஆக்டர் இருகாருல வித்யுத் ஜம்வாள்னு எனக்கு ரொம்ப புடிக்கும் .ஆனா உன் பேரு கொஞ்சம் பெருசா இருக்கே வேணா உன்ன.....vv னு கூப்டுக்கவா ?"என்க அவனோ ஒன்றும் கூற வில்லை.

பின் அவள் "ஆமா எந்த காலேஜ்ல இருந்து வந்துருக்க ?" என்று கேட்டு கொண்டே தண்ணீரை குடிக்க

அவனோ "AIIMS டெல்லி "என்று கூற அவளுக்கோ புரையேறி விட்டது .

பின் அவன் "ஹே ஆர் யு ஓகே " என்க

அவள் "என்னது AIIMS ல இருந்தா ஹே அது இந்தியாலேயே medicalku no1 காலேஜ் ஆச்சே அதுல இருந்து ஏன் இந்த காலேஜ்க்கு மாறி வந்துருக்க ?"

என்று வினவ அவனோ "புடிச்சுது வந்தேன் "என்று ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்தான் .

பின் அவள் "நீ மணிரத்னம் fanoh ??"என்று கேட்க

அவனோ "இல்ல ஏன்?"என்று வினவ

அவளோ "இல்ல நான் paragraph paragraphaah questionah கேட்குறேன் ஆனா நீ mcq மாறி bituh bitaah answer பண்றியே அதான் மணிரத்னம் fanohnu கேட்டேன் "என்க அவனோ அதற்கும் சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்தான் .

பின் அவள் "சரி என் பேரு சைந்தவி .நான் ஒரு 4 வருஷமா இங்க ஸ்டுடென்ட்டா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் என்று ஆரம்பித்தவள் பேசிக்கொண்டே இருக்க அவனோ வெறும் "ம்ம்" மட்டும் கூறினான் .

சற்று நேரம் கழித்து அவள் "நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் " என்று மிகவும் வருத்தமாய் முகத்தை வைத்து கொண்டு கூற அவனோ என்ன என்பதை போல் புருவத்தை உயர்த்தினான் .

அவள் "உன்ன vvnu கூப்டுறேன்னு சொன்னேன்ல அதை விட உனக்கு ரோபோன்ற பேரு தான் கரெக்டாக இருக்கும் ரோபோ "என்று கூற

அவனோ கோபமாக "hey what do you think of yourself ?நீயா வந்து பேசுன சரின்னு பேசுனா என்ன ரோபோன்னு கூப்டுற do you think me to be mad ?திஸ் இஸ் யுவர் லிமிட்" என்று கூற அவளோ அதற்கு ஏதோ காணாத அதிசயத்தை காண்பது போல் பார்க்க அவனோ "என்ன அப்டி பாக்குற இங்க என்ன exhibitionaah நடக்குது " என்று கேட்க

அவளோ "ஹே ரோபோ நீ மொத்தமா 3௦ செகண்ட்ஸ் பேசிட்ட பா அதான் நா ஏதும் உண்மையா இங்க தான் இருக்கேனா இல்ல அப்பப்போ classesல இருக்குற மாறி முழுச்சுட்டே கனவு காணுறேனான்னு நெனச்சேன் இரு செக் பண்ணிக்குறேன் என்று அவன் கையை கிள்ள அவன் ஆஆ என்று கத்தினான் உடனே அவள் "ஹை உண்மை தான் "என்க

அவனுக்கோ கோபம் போய் சிரிப்பு வந்தது .எனில் அதை உடனே மறைத்தவன் மீண்டும்உணவினை நோக்கி தனது கவனத்தை செலுத்தியவன் உண்டு விட்டு எனக்கென்ன என்று எழுந்து செல்ல

அவன் எழுவதை கண்டதும் அவனை அழைத்த சைந்தவி "ஒய் என்ன நா பேசிட்டே இருக்கேன் நீ போய்கிட்டே இருக்க ?"என்க

அவனோ அவளை நோக்கி சிறு லட்சியத்தோடு திரும்பியவன் "நீ பேசுன பட் நா கேட்டுட்டு இல்லையே "என்று அலட்சியமாய் தோளை குலுக்கி விட்டு செல்ல அவள் ஆ என்று வாயை பிளந்துவிட்டு பின் சமாளித்துவிட்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு உண்பதை கள்ளத்தனமாக ஓரப்பார்வையில் பார்த்தவன் லேசாய் உதடு பிரிக்காமல் புன்னகைத்து விட்டு சென்றான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top