18
கீழே இருவரும் சிரித்துக்கொண்டே வந்தனர் பின் அதிதியின் அறைக்கு வந்தவள் அவள் கையை அழுத்தி விட்டு இனி டெய்லி உன்ன வந்து பாப்பேன்டா என்றவள் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவனுடன் புறப்பட்டாள்.அவன் தோளில் கை போட்டு அவள் உக்கார .
வீட்டை தாண்டி சிறிது தூரம் வந்தவன் வண்டியை நிறுத்தினான் .
அவள் "ஏன்டா வண்டியை நிறுத்தின ?"என்க
அவளை நோக்கி மெலிதாய் சிரித்தவன்"ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது"என்றவன்
அவள் "என்ன?" என்க தோளில் இருந்த அவள் கையை எடுத்து தன் இடையோடு சேர்த்து கொண்டு அவள் கையை பற்றி அவளை தனக்கு மேலும் நெருக்கமாக அமர்த்தி கொண்டவன் இப்போ சரி ஆயிருச்சு என்று அவளை பார்த்து கண்ணடித்தவன் அவளோடு அவள் வீட்டிற்கு வந்தான்.
இருவரும் மகிழ்ச்சியாய் இறங்கி கையோடு கை கோர்த்துக்கொண்டு வர அவர்களை கண்ட அவள் அம்மா ராஜி"வாங்கப்பா என்ன இவ்ளோ நேரம் ஆச்சு சாப்டீங்களா?"என்க
அவளோ "இல்ல மா..."என்க
அவனோ "என் ராஜீ டார்லிங் சாப்பாடை நா மிஸ் பண்ணுவேனா அதான் அவளை கூட்டிட்டு இங்கயே வந்துட்டேன் என்ன ஸ்பெஷல் டார்லிங்"என்க சிரித்த
அவள் அப்பா "பிரியாணி தான் மாப்ள வாங்க எல்லாரும் சேந்து சாப்பிடலாம் "என்க
அவனோ "மணி இவ்ளோ ஆச்சு இன்னுமா நீங்கல்லாம் சாப்பிடாம இருக்கீங்க ?"என்று வினவ
ஹரியோ "அந்த சோக கதையை ஏன் மாமா கேக்குறீங்க நீங்களும் இவளும் வந்தா தான் ஆச்சுன்னு என் அம்மா என் கண்ணுல சிக்கன் pieceah காட்டஹ் கூட இல்ல "என்று கூற
சைந்தவி "எது சிக்கென்னாஹ் ???"என்றவள் அவனையும் இழுத்து கொண்டு சாப்பாடு மேஜையில் அமர்ந்து விட்டால் அவளின் செயலை பார்த்தவர்களுக்கு சிரிப்பு வர
அவளோ "அம்மா பசிக்குதும்மா நீ என்னம்மா சிரிச்சுட்டு இருக்க வாமா சாப்பிடலாம் என்றவள் தட்டை எடுத்து வைத்து அனைவர்க்கும் பரிமாற ஆரம்பித்தாள்.அனைவரும் பேசிக்கொண்டே உண்டனர்.
அவள் அப்பா வித்யுதிடம் "அம்மா அப்போ அப்பா இருக்காரு ஆனா இல்லனு சொன்னீங்களே அதுக்கென்ன அர்த்தம் ?"என்க அவன் முகம் இறுகி "அது வந்து ........"என்று கூற வர
அவன் கையை அழுத்தி பிடித்த சைந்தவி "அது அப்பா அவுங்கப்பா செகண்ட் marriage பண்ணிகிட்டாரு போல அவுங்களோட செகண்ட் wifeku இவனையும் இவன் தங்கச்சியையும் ஏத்துக்க முடில சோ அதான் அப்டி சொல்றான்"என்றவள் அவனை நோக்க அவனோ ஏன் இப்படி கூறினால் என்று தெரியாமல் அவளை பார்த்தான் ..
அவள் கூறியபின் அவள் அம்மா அவள் தலையில் நங்கென கொட்ட அவள் தலையை தடவி கொண்டே "ஏன்மா கொட்டுன "என்க
அவள் அம்மாவோ "ஏண்டி என்ன தான் வாமா போமான்ன சரினு விட்டேன் இப்போ என்னனா கல்யாணம் பண்ணிக்க போறவரையும் மரியாதை இல்லாம பேசுற .ஒழுங்கா வாங்க போங்கன்னு பேசி பழகு" என்க
அவளோ "ஆனா அம்மா இது அநியாயம் எங்க ரெண்டு பேருக்குமே ஒரே வயசு தான அப்பறோம் என்னம்மா ?"என்க
அவள் அப்பாவோ "என்னனாலும் அந்தந்த உறவுக்குனு ஒரு மரியாதை இருக்குடா நீயே உன் husbandah மதிக்காம பேசுனா மத்தவுங்க எப்படி பேசுவாங்க சோ அம்மா சொல்றாமாரி பேசு இனிமே" என்க அவள் விழிப்பதை பார்த்த ஹரி சிரித்து விட்டு உண்ண அவளும் முனங்கிவிட்டு உண்டால் .
அனைவரும் சாப்பிட்டதும் கை கழுவி விட்டு வர அவள் அறைக்குள் செல்ல அவள் பின்னால் வந்த வித்யுத் யாரும் இல்லை என்று கவனித்தவன் அவளை பின்னிருந்து அணைத்தான் .பின் அவன் அங்கிருந்த கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே "என்னாச்சு என் செல்லம் இவ்ளோ சோகமாயிட்ட?"எங்க
அவளோ "ஒன்னும் இல்ல நீ....ங்க போங்க நா வரேன் "என்க அவள் கஷ்டப்பட்டு மரியாதை கொடுக்க முயற்சி செய்வதை பார்த்தவனுக்கு சிரிப்பு வர அவளை மேலும் இறுக்கியவன் "என்னடா வாங்க போங்கன்னு கூப்பிட ஒரு மாறி இருக்கா ?"என்க
அவளோ "எனக்கு வா போனு கூப்டா தான் ஒரு உரிமையா இருக்குற மாறி பீல் வரும் விது .எல்லாருக்கும் மரியாதை குடுத்து தான் பேசுவேன் ஆனா என் கிளோஸ் பிரிஎண்ட்ஸ் அம்மா அப்பா இவுங்கள மட்டும் தான் வா போனு கூப்பிடுவேன் எனக்கு உரிமையா இருக்குறவுங்கள அப்டி கூப்டா தான் எனக்கு கிளோஸ்ஆஹ் இருக்குற மாறி தோணும்.வாங்க போங்கன்னு கூப்பிட்டா ஏதோ கொஞ்சம் தூரமாயிட்ட மாறி இருக்கு" என்க
அவளை கண்டு சிரித்தவன் "அவுங்க சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கு நீ சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கு வேணா இப்டி பண்ணலாமா "என்று அவன் கேட்க
அவள் என்ன என்று பார்க்க "வெளிய இருக்கேல டாவ மட்டும் சுட் பண்ணிட்டு பேர் சொல்லியே கொஞ்சம் மரியாதையா கூப்டு நம்ம தனியா இருக்கேல எப்போவும் போல கூப்டு "என்க அவளும் முகம் பொலிவுற "super டா "என்க
அவளை தன் புறம் திரும்பியவன் "ஏன் சது மாமாட்ட உண்மையை மறச்ச?" என்க
அவளோ "என் விது பத்தி எனக்கு முழுசா தெரிஞ்சா போதும்.எந்த சொல்லேலையே உன் கண்ணுல அவ்ளோ வலி இருந்துச்சுடா அது மட்டுமில்லாம என் அப்பவாவே இருந்தாலும் உன் அப்பாவை பத்தி இவ்ளோ கீழ்தரமா சொல்றது எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும் .அதான் பொய்யும் சொல்லாம என்ன தேவையோ அதை மட்டும் சொன்னேன் .நீ யார்ட்டயும் பேசேல தல குனிஞ்சு பேச கூடாதுடா அதான் அப்டி சொன்னேன் "என்க
அவளது கன்னத்தை கையில் ஏந்தியவன் "i லவ் யு "என்றவன்அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டி அவள் முகம் நோக்கி குனிய
"ஐயோ விது அம்மா"என்று அவள் கத்த அவன் பதட்டமாய் கதவை பார்க்க அந்த இடைவெளியில் அவன் கையில் இருந்து தப்பியவள் கதவிர்க்கருகில் ஓடி விட்டால்.
"போடா டேய்ய் "என்று அவள் வெளியே ஓட
அவனோ "எத்தனை நாளைக்கு தப்பிக்குறன்னு பாக்குறேண்டி "என்றவன் சிரித்து கொண்டே வெளியே வர அங்கோ ஹரி அவனை கேலியாய் பார்த்து கொண்டு நின்றிருந்தான்.அவனை எதிர்பார்காதவன் சற்று அசடு வழிய சிறிது "ஹரி நீ....."என்று இழுக்க
அவனோ "மாமா ஜஸ்ட் மிஸ் ஆய்ருச்சோ?" என்க வித்யுதோ என்ன சொல்வதென்று தெரியாமல் தலையை கை கொண்டு கோத
அவனை பார்த்து சிரித்த ஹரி "பயப்படாதீங்க ஒன்னும் சொல்ல மாட்டேன் ஆனா இப்டி ரொமான்ஸ் பண்றதுக்கு முன்னாடி இனிமே கொஞ்சம் கதவை சாத்திக்கிடீங்கன்னா என்ன மாறி சின்ன பசங்களோட கண்ணு நல்லாருக்கும் "என்க
சிரித்தவன் "சரிங்க மச்சான் அவர்களே "என்றவன் அவன் தோளை சுற்றி கை போட்டு கொண்டே கீழே வந்தவன் அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினான் சைந்தவியை தவிர்த்து .அதில் கோபமானவள் அவனை முறைத்துக்கொண்டு வாசல் வரை வர கண்ணாடியை அவள் முகம் நோக்கி திருப்பியவன் ஹொரணை அடிக்க அவள் அவன் முகத்தை பார்க்க அவனோ கண்ணடித்து கை ஆட்டிவிட்டு சென்றான்.சிரித்து கொண்டே உள்ளே சென்றவள் இன்று தன் காதல் கை கூடிய சந்தோஷத்தில் மனம் குதூகலமான மனநிலையில் இருக்க தேர்விற்கு படிக்கச் ஆரம்பித்தாள் .
இங்கே மும்பையில் விஷ்வாவிற்கும் ரம்யாவிற்கும் வாக்குவாதம் முற்றிக்கொண்டிருந்தது
விஷ்வா "பணத்தாசை புடுச்ச பேயே ஏண்டி அன்னைக்கு என் பொண்ண கொள்ள பாத்த?"என்க
அவளோ "என்னதான் உன் பேருல கொஞ்சம் சொத்து இருந்தாலும் அவனுங்க பேருல தான முக்காவாசி சொத்து இருக்கு வித்யுதஹ் சமாளிச்சு விடுதலை பத்திரத்துல கை எழுத்து வாங்கிறலாம் ஆனா உன் பொண்ணு எப்பா ஏமாத்தவே முடியாது அதான் அவளை போட்டு தல்லிரலாம்னு செஞ்சேன் ஏன் என்ன தப்பிருக்கு ?"என்க
அவளது கையை பிடித்து உலுக்கியவன் " ஏன் டி ஏன் என் சாரு செத்த அன்னைக்கே சொன்னேனே டி என் சாரு வ தவிர்த்து வேற யாரையும் நா இனி என் வாழ்க்கைல நெனைக்க முடியாதுனு .அவ இருந்த வரைக்கும் எனக்கு தெரிலயே அவ செத்ததுக்கப்புறோம் தான தெரிஞ்சுது என் மூச்சே அவ தான்னு .என்றவன் நினைவு அந்நாளை நோக்கி பயணித்தது
அன்று ..........
வித்யுத் கூறியதும் வீட்டிற்கு சென்றவனுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் என்று என்றோ கேட்ட பாடலின் வரிகளின் பொருளை பிசிறின்றி இன்று அவள் மறைவில் தான் மறைத்து வைத்த காதல் உணர்வை உணர்ந்தான் அவன் .
அவன் அமர்ந்திருப்பதை பார்த்து அவன் அருகில் அமர்ந்த
ரம்யா என்றும் போல் அவனை இழைந்து கொண்டே அமர அவள் தொடுகையில் எரிச்சலுற்றவன் அவளை உதறிவிட்டு எழுந்து "பெரிய தப்பு பண்ணிட்டேன் என் சாருவை நானே கொன்னுட்டேன் இல்ல இல்ல இனிமேலும் தப்பானவனா இருக்க மாட்டேன் என் புள்ளைங்களுக்காவது நல்ல தகப்பனா இருப்பேன்" .என்றவன் அவளிடம் க்ரோதமாய் திரும்பியவன் "எல்லாம் உன்னால உன்னால தான் நா பாவியாகி இப்போ என் சாருவை நானே கொன்னுட்டு இனிக்குறேன்" என்றவன் "இனி என் lifela வராத உனக்கு தேவ பணம் தான எவ்ளோ வேணா தரேன் போய்டு" என்க
அவளோ முதலில் திகைத்தவள் அவன் பேசி முடித்ததும் அவன் முன் ஏளனமாய் உதட்டை சுழித்து நின்றவள் "என்னடா ஏமாத்தபாக்குறியா இதோ பாரு இதை எனக்கு வயசிருக்கேலேயே சொல்லிருந்தா இன்னொருத்தன் பாத்துட்டு போயிருப்பேன் .இப்போ என்ட இளமையும் இல்ல அதுனால உனக்கு வேற வழியும் எனக்கு நீ வேணும் உண்ட இருக்குற பணம் உனக்கு புடிச்சாலும் புடிக்கலேனாலும் அப்பறோம் என்ன சொன்ன என்ன சொன்ன சாரு செத்துட்டாளா ஹப்பா நிம்மதி இனிமே மறைஞ்சு மறைஞ்சு வாழ வேண்டாம் "என்க
அவனோ "இல்ல இனிமே என்னால எவளையும் நெனச்சு கூட பாக்க முடியாது என்ன விட்று ப்ளீஸ் "என்க
அவளோ அலட்சியமாய் தோளை குலுக்கியவள் "என்ன புள்ள பாசமா என்ன திடீர்னு .என்ன என்ன கேனன்னு நெனச்சியா நீ இப்போ என்ன விட்டுட்டு போக நெனச்ச extramarital affair உனக்கு கல்யாணம் ஆனதையே என்ட இருந்து மறச்சு என்ன கல்யாணம் பண்ணி என்னோட வாழ்ந்துருக்கனு ஒரு complain குடுத்தேன்னு வை மவனே காளி தான் .அப்பறோம் உன் புள்ளைங்களையும் விட்டு வைக்க மாட்டேன் கொன்னுடுவேன் "என்க
அவனோ அதிர்ந்தான் பின் உணர்ந்தவன் "ஹே என்ன தைரியம் இருந்தா என்டயே என் புள்ளைங்கள கொன்றுவேன்னு சொல்லுவ உன்னால முடுஞ்சத பண்ணிக்கோ போடி " என்க
அவளோ "ஹெஹெ என்ன பத்தி தெரியும்ல எனக்கு ஒன்னு நடக்கணும்னா எத்தனை கொல பண்ணவும் தயங்க மாட்டேன் .உன் மாமனாருக்கு slow poison வாங்கி குடுத்தது நா தான அண்ட் உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் எனக்கு பல ரௌடின்களை தெரியும்னு .அண்ட் நீ பண்ண frauduh தனம் பித்தலாட்டம் 420 தனம் எல்லாத்தையும் போட்டு குடுத்தேன்னு வை ஆதாரத்தோடு நீ lifelong jaillaஹ் இருக்க வேண்டி தான்.நீ jailku போனதுக்கப்றோம் உன் புள்ளைங்கள எப்டிகாப்பாத்துவ?"என்க
அவனுக்கோ தான் நிர்கதியாய் விட்டது போல் இருந்தது பின் அவன் "என்னை என்ன தான் பண்ண சொல்ற என்னை பண்ணா என் புள்ளைங்கள ஒன்னும் பண்ண மாட்ட ?"என்க
அவளோ "ஒன்னும் இல்ல என்ன ஊரறிய கல்யாணம் பண்ணனும் உன் புள்ளைங்களோட எந்த தொடர்பும் இருக்கக்கூடாது "என்று கூற மனதை கல்லாக்கியவன் தான் செய்த பாவத்திற்கு தக்க தண்டனையை பெற அவள் சொன்னதிற்கு சம்மதித்தான் .ஆனால் திருமணம் மட்டும் தான் செய்தானே ஒழிய அவள் மேல் அவன் விரல் கூட பட்டதில்லை வேறு வேறு அறையில் தான் தங்கினார்கள்.இருக்கும்போது உணராத காதலை அவள் மறைவில் உணர்ந்தவன் அவள் நினைவுகளிலேயே மறுக துவங்கினான் .
ரம்யா "எனக்கு ஒன்னும் வேணாம் உன் புள்ளைங்கள 6 மாசத்துகப்ரோம் சந்திக்கவோ எதுவுமோ பண்ண கூடாது .எனக்கு அது போதும் "என்க
அவனோ வழக்கம் போல் "செஞ்சு தொலைக்குறேன் "என்றான் .
தன் அறைக்குள் சென்றவன் சாருவின் புகைப்படத்தை பார்த்து "ஏன் சாரு நா பண்ண பாவத்துக்கு எனக்கு வாழ்கையவே சாபக்கேடா மாத்திட்டியேடி .இப்போ உன்ன அளவுக்கதிகமா காதலிக்குறேண்டி என்னால முடில சாரு .பக்கத்துலயே புள்ளைகள வச்சுக்கிட்டு அவுங்க வெறுப்பை மட்டுமே பாக்க முடிலடி செத்துரலாம் போல இருக்கு "என்றவன் .அவள் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டான் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top