13

என் அம்மா பேரு சாரு சாரு மதி என்று தன் அன்னையின் கதையை கூற துவங்கினான் வித்யுத்

23 வருடங்களுக்கு முன்னாள்

அதே பிரம்மாண்டமான வீடு கதவிலிருந்து உள்ளே செல்லும் வழியின் இரண்டு பக்கமும் புல்வெளியுடன் கூடிய தோட்டம் அமைந்திருக்க அந்த காலை வேளையில் அந்த மரத்தில் இருந்த குயில்களின் சத்தமும் சூரியனின் செங்கதிர்களும் ஜன்னலின் வழி அவ்வறையின் உள் நுழைய மெல்ல துயில் களைந்து எழுந்தாள் 23 வயதான சாருமதி.

எழுந்தவள் தனக்கு நேர் எதிரே இருந்த தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்து "குட் மார்னிங் மா " என்றவள் குளித்து முடித்து சுடிதார் அணிந்து கொண்டு கீழே இறங்கி வர அங்கே இருந்த சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தார் அவரின் தந்தை விஜயராகவர்.நேரே வந்தவர் அவரின் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு "குட் மோர்னிங் பா "என்க

அவரும் புன்னகைத்து கொண்டே " குட் மோர்னிங் டா சாரு.இன்னைக்கு meetingku ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணிட்டியா டா "என்று கேட்டு கொண்டே இருக்க அவருக்கு எதிர் இருக்கையில்

அமர்ந்தவள்" அதெல்லாம் முடுச்சுட்டேன்பா இன்னைக்கு ஆர்டர் நமக்கு தான் "என்றால் .இவர்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் சாருமதி விஜயராகவர் சாரதாவின் ஒரே புதல்வி சாரதா பிரசவத்தில் இறந்து விட தன் வாழ்க்கைக்கு வேறு துணையை தேடாமல் தன் வாழ்வே தனது மகளுக்கு என்று வாழ்பவர் விஜயராகவன் .சாருமதி பொறியியல் முடித்து விட்டு இப்பொழுது 2 வருடங்களாக தன் தந்தையின் தொழில்களை அவருடன் இணைந்து பார்த்து வருகிறார்.குணத்தில் குறும்புத்தனமும்,சிறுபிள்ளை தனமும் இருந்தாலும் வேலை நேரத்தில் பெண் சிங்கம் போன்றதொரு தோரணை இருக்கும் .அனைத்தையும் மிகவும் சாமர்தியமாகவும் சாதூர்யமாகவும் ஒரு ஆண் பிள்ளைக்கு இணையாய் தொழிலை நடத்தும் திறமை உடையவர் .மகளை நினைத்து அவருக்கு என்றும் ஒரு பெருமை இருந்தாலும் அவளை இதே போல் என்றும் கண் கலங்காமல் பார்த்து கொள்ளும் ஒரு மருமகனை வேண்டியது அந்த தந்தையின் உள்ளம் .

அங்கே சாருமதியோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் வாயில் ஒரு திரைப்பட பாடலை முணுமுணுத்தவாறே மேஜையில் தாளம் தட்டி கொண்டிருந்தவர் உள்ளே "லட்சுமிகா breakfast எப்போ கா தருவீங்க சீக்கரம்மம்ம்ம்ம்"என்று கூற உள்ளே இருந்து வந்த 35 வயது மதிக்க தக்க

லட்சுமி அக்கா (லட்சுமி அம்மாள் ) "இதோ உங்களுக்கு புடுச்ச சப்பாத்தி கொண்டு வந்துட்டேன் பாப்பா ."என்று அவள் முன் தட்டை வைத்து பரிமாற

சாருவோ"ஏன்கா எனக்கு 23 வயசாச்சு என்ன போய் பாப்பா பாப்பானு கூப்பிடுறீங்களேகா "என்க

அவள் அப்பாவோ "ஆமாமா லட்சுமி பீப்பாவ போய் பாப்பாங்குற"என்க

அவரை முறைத்தவள்"யு டூ அப்பா"என்றவள்

அவளுக்கு முன் இருந்த சப்பாத்தி என்னை கவனி என்று கூற அவள் தந்தையை பார்த்தவள் "என்ன இப்போ என் டார்லிங் கூப்பிடுது அத வாய்க்குள்ள போட்டுட்டு உங்கள வச்சுக்குறேன் .ஆனா நா உங்க மேல கோவமா தான் இருக்கேன் "என்றவள் உதட்டை சுழுத்தி பழிப்பு காட்டி விட்டு மீண்டும் உண்ண அவளை பார்த்த அவள் அப்பாவும் லட்சுமி அம்மாவும் சிரித்து விட்டு "இந்த வீடு கலையா இருக்குறத உங்களால தான் பாப்பா ."

என்றவர் அவர் உண்டு முடித்த தட்டை எடுக்க போக அவரை தடுத்த சாரு "அக்கா நா சாப்பிடத கூட நா கழுவ மாட்டேனா போங்கக்கா ஆமா நேரம் இவ்ளோ ஆச்சு நீங்க சாப்டீங்களா?" என்க

அவரோ "இல்ல பாப்பா வேலைல .... "என்று கூற

அவரது கையை பிடித்து "என்னக்கா நீங்க எத்தனை தடவ சொல்லிருக்கேன் நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு "என்றவள் தட்டை எடுத்து வைத்து பரிமாற போக பதறி எழுந்தார்

லட்சுமி "என்ன பாப்பா நீங்க நீங்க போய் எனக்கு பரிமாறிக்கிட்டு "என்று எழ

அவரை மீண்டும் அமர வைத்த சாரு"ஏன் நீங்க எனக்கு எல்லாம் பாக்கேல நா உங்களுக்கு சாப்பாடு பரிமாற கூட கூடாதா .அப்போ என்ன முதலாளின்னு தான் பாக்குறீங்க நா அக்கானு நெனைக்குற மாறி என்ன உங்க தங்கச்சியா நெனைக்கலேல "என்க

அவரோ "ஐயோ அப்டிலாம் இல்ல பாப்பா என்ன இருந்தாலும் ..."என்று கூற வர அவள் அப்பாவிடம் திரும்பியவள் "ஏன்பா நா இப்போ பண்றதுல ஏதாவது தப்பிருக்கா இவுங்களுக்கு நா சாப்பாடு எடுத்து வைக்க கூடாதா "என்க

அவள் அப்பாவோ "தப்பே இல்லடா .என்ன லட்சுமி நானும் உன்ன என் பொண்ணா தான்மா பாக்குறேன் 2 வருஷம் ஆச்சு நீ இங்க சேந்து இன்னும் எங்களை அந்நியமா பாக்குறியேமா "என்றார்

பின் அவர் "புருஷன இழந்து நிர்கதியா இருந்தவளுக்கு வேலையும் குடுத்து உறவையும் குடுத்துருக்கீங்களேயா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் போதாதுயா "என்றவர் சாரு பரிமாற்ற உண்டார் .பின் தந்தையும் மகளும் அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கே சாரு உள்ளே நுழைய அங்கே அனைவரும் அவளுக்கும் அவள் தந்தைக்கும் மரியாதை தர தனக்கு தர பட்ட கேபினிற்குள் சென்றால் சாரு .

பின் அன்றைய ப்ரெசென்ட்டேஷனிற்காக அனைத்தையும் சரி பார்த்தவள் தன் தந்தையிடம் கூறிவிட்டு கிளம்பினாள் .பல கம்பெனிகள் வந்திருக்க இவளும் இவளது PA வும் தங்களுக்கு கொடுக்க பட்ட இடத்தில சென்று அமர்ந்தனர் .அனைவரும் வந்து விட அங்கே அந்த orderai கொடுக்கவிருக்கும் அமெரிக்க நிறுவனத்திலிருந்து இருவர் நடுவில் அமைந்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவர்கள் "hello everyone.this is nicole and janson and we are representatives from cedar fair and as you all know we are looking for a best design of an amusement park which we plan to be set up near besent nagar.so proceed on with your presentation guys. "

என்க ஒவ்வொருவராக தங்கள் ப்ரெசென்ட்டேஷனை கொடுத்தனர் .அதன் பின் சாருவின் முறை வர எழுந்து சென்றவள் மிகவும் சிறப்பாக ப்ரெசென்ட்டேஷனைசெய்து முடிக்க அந்த அமெரிக்க நிறுவனத்திலிருந்து வந்தவர்களின் முகத்தில் ஒரு திருப்தி அறிகுறி தெரிந்தது .

பின் மீதம் ஒரே ஒரு நிறுவனம் இருக்க அது வரை நிமிர்ந்து பார்க்காது தன் வேலையில் கவனமாய் இருந்த சாரு அப்பொழுதே அந்த நிறுவனத்தின் பிரதியாக வந்திருந்த அந்நிறுவனத்தின் manager விஷ்வாவை கண்டால்.

மாநிறம் வசீகரிக்கும் பார்வை 5 .8 அடி உயரம் பகட்டான உடை என்று இருந்தவனை பார்த்தவளுக்கு ஏனோ மனது பட படவென அடிக்க துவங்கியது நிமிர் பார்வையுடன் இருப்பவள் அவன் அவளை நோக்கி பார்வையை செலுத்தியதும் தலையை தாழ்த்தி கொண்டால் .

பின் அவன் ப்ரெசென்ட்டேஷனை முடிக்க அனைத்து நிறுவனங்களும் யாருக்கு அந்த ஆர்டர் செல்ல போகின்றது என்று அறிய ஆவலாய் இருக்க அந்த அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரதிநிதி "so guys everyone did your presentation well but we are impressed with the presentations given by saratha group of companies and echinos group of companies so we have decided to given away the order to both the companies and they could work together to accomplish this task and both the companies would be paid equally ."

என்று கூற விஷ்வாவிற்கும் சாருவிற்கும் அளவில்லாத மகிழ்ச்சி .பின் இருவரும் orderai பெற்றுக்கொண்டு விடை பெரும் முன் இருவர் விழியும் சந்தித்து கொள்ள அனைவரும் களைந்து சென்றபின் சாரு தன் பையை எடுத்து கொண்டு செல்ல முற்பட அங்கே வந்த விஷ்வா அவள் முன் நிற்க இவள் படபடப்புடன் தலை குனிய

அவளை பார்த்து முறுவலித்தவன் "hi my name is vishwa manager of echinos group of companies .nice to meet you .

என்க சாருவின் குறும்புத்தனம் தலை தூக்க "உங்களுக்கு தமிழ் தெரியாத சார்?"என்க

அவனோ "வாட் ?"என்க

அவளோ "oh இல்லையா "என்க

அவனோ"இல்லை எனக்கு நல்லாவே தமிழ் தெரியும் "என்க

அவளோ "oh இவ்ளோ நேரமா இங்கிலீஷிலேயே பேசிட்டு இருந்தீர்களா அதான் தெரியாதோன்னு நெனச்சேன் என் பெரு சாரு நா சாரதா குரூப் of கொம்பனிஸோட m..... என்று கூற வந்தவள் தன் அடையாளத்தை ஏனோ கூற விரும்பாமல் மேனேஜர் என்றால் .தங்களை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்சி அடைகிறேன் "என்று கூற

அவனோ சிரித்து விட்டு "நல்லா பேசுறீங்க சோ நாளைல இருந்து ஒர்க் ஸ்டார்ட் பண்ணிரலாம் பேஸ்உங்க ஆபீஸ்ல வச்சுக்கலாமா இல்ல எங்க ஆபீஸ்ல வச்சுக்கலாமா ?"என்று வினவ

அவளோ "இந்த கன்ஸ்டருக்ஷன் ஆர்டெர்க்கு குடுத்துருக்குற siteல இருந்து எங்க ஆபீஸ் ரொம்ப பக்கமா இருக்கும் சோ எங்க ஆஃபீஸ்ச baseaah வச்சுக்கிட்டா உங்களுக்கும் convienientaah இருக்கும் "என்க அவனும் அதை ஆமோதித்தான் .சாருவிற்கு அவனின் மேல் இருந்த ஈர்ப்பு அவனது குணத்தால் காதலாக மாறியது .ஆனால் அவள் தனது அடையாளத்தை அவனிடம் கூறாமலே பழகி வந்தவள் ஒரு நாள் அவனிடம் தன் அடையாளத்தை கூற அவனோ அதை அத்தனை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை என்றும் அவளுடன் பழகுவதை போல் தான் நட்பாய் பழகினான் அவள் தப்பு செய்தால் சுட்டியும் காட்டினான் .

அவனுடன் ஒரு நாள் beachil இருவரும் இருந்த நேரம் சாரு "ஹே விஷ்வா நீங்க எல்லாத்த பத்தியும் சொன்னீங்க ஆனா உங்க பேமிலி பத்தி சொல்லவே இல்லையே" என்று கேட்டு கொண்டே கடலை பார்க்க

அவனோ சிரித்து கொண்டே" இருந்தா சொல்லிருப்பேன்ல சாரு "என்க அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அவனை கூர்ந்து நோக்க

அவனோ "யாரும் இல்ல homela தான் வளர்ந்தேன் காலேஜ் முடுச்சதும் நா படுச்சதுக்கு மதிப்பிருந்தும் பணம் குடுக்காம எந்த வேலையும் கிடைக்கலஎன்னோட படிப்புக்கு சம்மந்தமே இல்லாத வேலைய பாத்துட்டு இருந்தேன் அப்பறோம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இந்த கம்பெனில சேந்து இந்த பொசிஷன்க்கு வரதுக்கே 28 வயசாயிருச்சு .இப்போ எல்லாம் இருக்கு ஆனா என் வீட்டுக்கு போனா வெறுமையை தவிர்த்து எதுவும் இருக்காது சாரு .lifeh meaninglessaah போது "என்று அவன் வருத்தமாய் கூறி முடிக்க

தன்னை மீறி அவள் வாயிலிருந்து வந்தது அவ்வார்த்தைகள் "உங்களுக்கு ஒரு குடும்பத்தை நா தரலாமா ?"என்றால்

அவள் கூறியதை புரிந்து கொள்ளவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவை பட "என்..... என்ன "என்று அவன் திணறியபடியே கேட்க

அவனுக்கு அருகில் சற்று நெருங்கி அமர்ந்தவள் "ஐ லவ் யு விஷ்வா கல்யாணம் பண்ணிக்கலாமா" என்க

அவனோ "சாரு நீ பெரிய கொம்பனிஸோட முதலாளியோட பொண்ணு நா ஒன்னும் இல்லாதவன் அனா...."என்று அவன் கூற போக

அவன் வாயை தன் கையால் மூடி அவன் கையோடு தன் கையை கோர்த்து கொண்டவள் "பணம் இப்போ வரும் நாளைக்கு போகும் விஷ்வா ஆனா அன்பு அப்டி இல்ல.என்ன friendaah பாக்கேல ஏன் ஸ்டேட்டஸ் உங்க கண்ணனுக்கு தேரிலேயே கல்யாணம்னு வரேல மட்டும் ஏன் பணத்தை பத்தி பேசுறீங்க .நா இப்டி யார்மேலயும் ஒரு உணர்வை உணர்ந்ததே இல்ல .உங்களோட வாழ்க்கை முழுசா கூட இருக்கணும்னு தோணுது .என்ன ஒரு கம்பெனியோட owner பொண்ணுன்னு பாக்காம நீங்க பழகுன சாருவா பாருங்க ப்ளீஸ் ."என்க அவன் மௌனமாய் இருக்க அவனுக்கு தன் மேல் எந்த எண்ணமும் இல்லை என்று நினைத்தவள் எழுந்து போக போக

அவள் கையை பிடித்தவன் "உங்கப்பாட்ட எப்போ பேசட்டும்" என்று கேட்க அவளுக்கு தான் ஆனந்தம் அளவில்லாமல் இருந்தது அவள் அப்பாவும் சம்மதிக்க இருவருக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.வாழ்வின் அனைத்து சந்தோஷங்களும் பெற்றுவிட்டதை போல் உணர்ந்தாள் சாருமதி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்ததும் .

முதலாவதாக ஆண் குழந்தை பிறக்க அவனுக்கு வித்யுத் விஹான் என்றும் 3 வருடங்கள் கழித்து பெண்குழந்தை பிறக்க அவளுக்கு அதிதி என்றும் பெயரிட்டனர்.குழந்தைகள் பிறந்ததும் அவர்களை வளர்ப்பதே தனக்கு முதல் வேலை என்று எண்ணிய சாரு கம்பெனி பொறுப்பு அனைத்தையும் விஷ்வவாயே கவனிக்க கூறினால் .அவ்வப்போது பார்த்து வருவதோடு சரி . .அதிதி பிறந்து 5 வருடத்தில் அவள் தந்தை இறந்துவிட மிகவும் ஒடிந்து போய் இருந்த சாருவை விஷ்வா தான் தேற்றினான் . அவள் திருமணம் முடிந்து 16 வருடங்கள் ஓடி விட்டது இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர் .

பின் அவனுக்கு பெரிய ஆர்டர் கிடைக்க அவன் வாரம் 3 நாட்கள் வெளியே தங்குமாறு சூழல் அமைய அன்று சாருவின் மடியில் படுத்திருந்தவன் அவளிடம் "சாரு 3 days ஒரு வாரத்துல உன்ன விட்டு இருக்கனும்டா போணுமா ?"என்று இதோடு 108 ஆவது முறையாக வினவ

சிரித்த சாரு அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் "ஏங்க 3 நாள் தாங்க அடுத்து 4 நாளைக்கு என்னோட தான இருப்பீங்க அப்பறோம் என்ன .போயிட்டு வாங்க "என்க

அவனோ முகத்தை தொங்க போட்டு கொண்டே சரி என்றவன் எழுந்து அவளை அணைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு கீழே இருந்த தன் பிள்ளைகளை அணைத்துவிட்டு அவளிடம் bye காட்டிவிட்டு விடை பெற்றான் அவன்.சிரித்தபடியே அவனுக்கு bye காட்டினாள் சாரு மதி அவள் அறிந்திருக்க வில்லை இனி அவள் வாழ்வில் சிரிப்பென்பதே இல்லை என்று.

பின் வித்யுத் "அம்மா இவ பாருமா என் T-ஷர்ட் fullah சேறாகிட்டா "என்க

அதிதியோ "அம்மா அண்ணா தான் மொதல்ல என் மேல கோல பொடியை போட்டான் "என்க

அவளோ "ஏன் அதிதி குட்டி இப்டி அப்புன என்றவள் கீழே இருந்த வாளியில் இருந்த தண்ணீரை அவன் மீது ஊத்திவிட்டு சிரிக்க அவளோடு சேர்ந்து குட்டி அதித்தியும் சிரிக்க அவனோ " சாரு.... " என்றவன் கீழே இருந்த தண்ணீர் tubeai எடுத்து அவர்கள் மீது அடிக்க

சாருவோ "விது போதும்டா போதும் "என்று ஓட இவ்வாறே மகிழ்ச்சியாக விளையாடியவர்கள் பின் உள்ளே வந்ததும் அவர்கள் இருவருக்கும் தலை துவட்டி உடை மாற்றி விட்டாள் பின் என்றும் போல் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவள் இரு மடியிலும் வித்யுதயும் அதிதியையும் படுக்க வைத்து கொண்டு கதைகள் கூறி நிலவை காட்டி மனம் விட்டு அவர்களின் மழலை சண்டைகளை ரசித்து பின் அவர்கள் கண் யாரும் நேரம் கீழே அழைத்து வந்தவள் இருவரையும் இருபுறமும் போட்டு அணைத்து கொண்டே உறங்கினால் .என்றும் அவள் இதழில் சிரிப்பு உறைந்திருக்கும் இன்று அதை பார்த்த கால தேவன் அவளை பார்த்து உன் சிரிப்பு பறிபோகும் தருணம் வந்துவிட்டது மகளே விதியை வெல்ல காலனான எந்நாளும் இயலாது என்று கண்ணீர் வடிக்க அது மழையாய் பொழிந்தது .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top