1

hipa எல்லாருக்கும் வணக்கம் .என்னடா இவ யாரு திடீர்னு நமக்கு வணக்கம் சொல்றாளேனு பாக்குறீங்களா ??என் பேரு சைந்தவி.என்ன பத்தி சொல்லனும்னா நா சரியான வாயாடி ,அப்பா ,அம்மா,தம்பி தான் என்னோட உலகம் என்ன தான் சண்டை போட்டுக்கிட்டாலும் எனக்கு அவன் மேலயும் அவனுக்கு என் மேலயும் பாசம் ரொம்ப அதிகம்.
அதை தாண்டி எனக்குன்னு இருக்குற ஒரு உலகம்னா அது என் friends தான் .என்னோட lifela என்னோட எல்லா நேரத்துலயும் என் கூட இருந்தவுங்க  என் friends அண்ட் என் பேமிலி தான். அழுகையோ சந்தோஷமோ எனக்குன்னு இருக்க இவுங்க கிட்ட தான் நான் ஷேர் பண்ணிக்குவேன் .இப்டி தெளிஞ்ச நீரோடை மாதிரி அமைதியா போய்டகிட்டு இருந்த என் வாழ்க்கைல எந்த கஷ்டமும் வந்ததில்லன்னு நா நெனச்சுட்டு இருந்தப்போ தான் என் வாழ்கையவே மாத்துற மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு .

நான் மருத்துவம் 4 ஆம் ஆண்டு படுச்சுட்டுருந்தேன் .

காலைல என் வீட்டுல :

"அம்மாஆஆ டைம் ஆச்சுமா இன்னும் எனக்கு டிபன் பண்ணாம அந்த தடியனுக்கு shirt ஐயன் பண்ணிட்டு இருக்க டிபன் கொண்டு வா மா "

என்று சைந்தவி உச்சஸ்தானியில் கத்த அவள் தம்பி ஹரி விக்னேஷ் அவள் தலையில் கொட்டியவன் "யாரு தடிமாடு நானா? ஹே பூசணிக்கா முதல்ல போய் கண்ணாடியை பாருடி நல்லா hospitallah வைக்குற oxygen சிலிண்டர் மாறி இருந்துட்டு நீ எல்லாம் பேசுறியா" என்று சிரிக்க

அவளோ அவனை முறைத்துவிட்டு செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருந்த தன் தந்தையிடம் திரும்பியவள் "அப்பா அவன் என்ன oxygen cylinderனு சொல்லிட்டு இருக்கான் நீங்க என்னனா ஹாயா ஒக்காந்து பேப்பர் படுச்சுட்டு இருக்கீங்க என்னனு கேளுங்கப்பா"என்க

அவரோ அதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் "ஏன்மா ராஜி இன்னைக்கு இடி மழையுடன் கூடிய மழை பெய்யும்னு பேப்பர்ல போட்ருக்காங்களே அறிகுறி நம்ம வீட்டிலேயே ஆரம்பிச்சுருச்சு போல "என்க

அதற்கு அவள் தம்பியோ "அப்பா நல்லா பாருங்க நிலநடுக்கமும் சேந்து வருதுன்னு போட்ருக்காங்களானு "என்று அவள் டங்கு டங்கென்று நடப்பதை பார்த்து கொண்டே கூற

அதில் மேலும் கோபமுற்று தன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் தன் தம்பியின் அருகில் சாந்தமாய் சென்றவள் "தம்பிமா அக்காவை கொஞ்சம் நிமிந்து பாரு பாப்போம் "என்று கூற அவனும் என்ன என்று பார்க்க அவளோ அவள் கையிலிருந்த தண்ணீர் குவளையை மொத்தமாக அவன் தலையில் கவிழ்த்து விட்டு நகைக்க அவனோ "ஏய்ய்ய் பூசணி......"என்று கத்தி கொண்டே அவளை துரத்தினான்.

இவ்வாறே இருவரும் ஓடி பிடித்து விளையாட அங்கே வந்த அவர்கள் அம்மா ராஜி"ஹே ஹரி என்னடா இது அக்காவ துறத்திட்டு இருக்க ?ஏய் சையு அவன் தான் சின்ன பையன் துறத்துனான்னா நீயும் அவன் கூட சேர்ந்து ஓடிக்கிட்டு இருக்க .வயசு தான் 21 ஆச்சு இன்னும் ஏதோ ஸ்கூல் போகுற பொண்ணுன்னு நெனப்பு .இப்டியே சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டு கிட்டே இருப்பியா?" என்க அவனும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அவர்கள் அம்மாவை பாவம் போன்ற முகத்துடன் நோக்க

அதில் அவருக்கு சிரிப்பு வந்தாலும் வெளியில் காட்டினாள் தலையில் ஏறி மிளகாய் பொடி அரைத்து விடுவார்கள் என்பதால் முகத்தை கடுமையாக வைத்து கொண்டவர் "அப்படி பார்த்தாள் தப்பிச்சுரலாம்னு பாக்குறீங்களா "என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க

சைந்தவியோ அவள் அப்பாவை பார்த்து "அப்பா அப்பா ப்ளீஸ்￰ அப்பா காப்பாத்துங்கப்பா ராஜி ருத்ரதாண்டவம் ஆடிக்கிட்டு இருக்கு "என்று மெதுவாக கூற

அவரோ " ராஜி பாவம் புள்ளைங்க .ஏன் இப்டி வறுத்தெடுக்குற?"என்று கேட்க

அடுத்து அவர் புறம் திரும்பியவர் "எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் "என்று அவரை வறுத்தெடுக்க துவங்க இதை பயன்படுத்திக்கொண்ட சைந்தவி தன் கைப்பையையும் வாகனத்தின் சாவியையும் எடுத்துக்கொண்டு ஓடியே விட்டாள்.

இதை கவனித்த ராஜி அம்மா அவளை நோக்கி "ஹே சாப்பாட மறந்துட்டு போரடி.." என்று கத்த

ஹரியோ "அம்மா நீ கொஞ்சம் tableஅஹ் பாத்தா நல்லாருக்கும் அவ புஸ்தகத்தை மறந்தாலும் மறப்பாளே தவிர சாப்பாட மறக்கமாட்டா அதெல்லாம் விவரமா எடுத்துட்டு போயிருச்சு அந்த லூசு "என்க

அவன் காதை திருகியவர் "அக்காக்கு மரியாதை குடுத்து பேசு போ போய் டிரஸ் மாத்திட்டு கெளம்பு collegeku டைம் ஆச்சு "என்று அவன் முதுகில் தட்டி அனுப்பி விட்டார் .

பின் கணவரிடம் திரும்பியவர் "உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா என்ன என்னையே பாத்துட்டு இருக்கீங்க கிளம்புங்க courtக்கு என்க "

அவரோ "ராஜீமா நீ கோவ படேல கூட இன்னும் அழகா தான் டா இருக்க கல்யாணத்தப்போ மாதிரியே "என்க அவர் கூறியதில் சற்று வெட்கப்பட்டவர்

"போதும் போதும் நீங்க ஐஸ் வச்சது கிளம்புங்க"என்று கூறி அனுப்பி வைத்தார் .

இங்கு சைந்தவி கல்லூரிக்கு வந்தவள் தன் scootyai பார்க் செய்தவள் அங்கு அவர்கள் கல்லூரியில் வாசலில் இருக்கும் அவளது இஷ்ட தெய்வமான பிள்ளையார் சிலை முன் நின்றவள் கண்மூடி "கணேஷா குட் மார்னிங் ஒன்னும் புதுசாலாம் கேக்க போறதில்ல எப்போவும் கேக்குறதுதான் எப்பவும் போல இதே மாதிரி என் குடும்பத்துல இருக்குற எல்லாரும் நல்லா இருக்கனும் அண்ட் கணேஷா உன்ன கும்புடுறதுனாலயோ என்னவோ எனக்கும் உன் சைஸ் இல்லேன்னாலும் மினி sizeல ஒரு தொப்பை வந்துருச்சு அத வச்சு இந்த ஹரி  என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டுறான்
நீ என்ன பண்ணு ற six பேக் வைக்கணும்னு நெனைக்குற அவனுக்கு நல்லா உன்ன மாறி ஒரு பேமிலி பேக்கா குடுதுரு "என்று வேண்டியவள் .

திரும்பி தன் கல்லூரியை நோக்கி நடந்து தன் வகுப்பறையை அடைந்தாள். அங்கே அவளது வானர படை அவளுக்காக காத்து கொண்டிருந்தது .அவள் உள்ளே நுழைந்ததும் அவளது வானர படையினர் "ஹாய் சையு "என்று கோரஸாக கூற

இவளோ "ஹாய் gays chi chi guys " என்று கூற

"வந்ததும் ஆரம்பிச்சிட்டியா வாரும் வந்து தொலையும்" என்ற பூஜா அவளுக்கு இடைவெளி விட்டு அமர அவளும் அங்கு வந்து அமர்ந்து கொண்டால் பின் வழக்கம் போல் இவர்கள் தங்கள் சொந்த கதை சோக கதையை பற்றி பேச ஆரம்பிக்க நாம் இவர்களை பற்றி பார்த்து விட்டு வருவோம் .

அவளுக்கு மொத்தம் 1 ,2 ,3 .....அய்யயோ ரொம்ப பெரிய லிஸ்டுங்க மொத்த காலெஜ் கிட்டயும் பேசுவா இவளை தெரியாதவனுங்க அந்த ப்ளாக்ல ஒருத்தனும் இருக்க மாட்டான் அவ்ளோ பெரிய வாயாடி.காலேஜ் deantaye போயி நீங்க வெறும் தாஸாஹ் இல்ல லாடு லபக்கு தாஸாஹ்ன்னு கேட்டுட்டு வந்தவ . ஆனா இவளுக்குனு இருக்குற பெஸ்ட் friends gang  ஒரு ஐவர் அணி 2 பசங்க 2 பொண்ணுங்க பூஜா,வினீஷா ,ஷ்ரவன் ,சரண்.

அப்பறோம் அந்த ganglaye இவ மட்டும் தான் சிங்கிள் மத்ததெல்லாம் ஆளாளுக்கு ஒரு ஆள வச்சுட்டு சுத்திட்டு இருக்குங்க.பூஜாவுக்கு அவுங்க அப்பாவோட buisness பார்ட்னரோட மகனான ரித்விக்கோட எங்கேஜ்மெண்ட் ஆயிருச்சு .சரணுக்கு அங்க அவன் காலேஜ்ல அவனோட ஜூனியர் நேஹாவை பிடுச்சு போய் ரெண்டு பெரும் காதல் கடலுல மூழ்கி இருக்க அந்த gangla ஷ்ரவனும் வினீஷாவும் நண்பர்களா பழக ஆரம்பிச்சு டீனேஜ் வரும் பொழுது காதல் வயப்பட்டு அஞ்சு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்களோட அப்பா அம்மாவோட சம்மதத்தோட .லவ் வேணாம்னு சொல்றதுக்கு எத்தனையோ reason கேட்டிருப்பீங்க ஆனா இவ சொல்ற reasonah கேளுங்களேன்

அன்று ஒருநாள் நண்பர்கள் அனைவரும் truth or dare விளையாண்டு கொண்டிருக்க இவளிடம் வந்து நின்றது அந்த பேனா சரண். "மாட்டிக்கிட்டாடா சைந்தவி truth or dare ??என்று அவன் வினவ

அவளோ "truth "என்றால்.

பின் அவன் "எல்லாரும் கமிட்டடாஹ் இருக்கோம் ஆனா நீ singleaah இருக்க.அம்மா அப்பா பிரச்னைனு பாத்தா உங்க அப்பா அம்மாவே லவ் marriage தான் சோ அதுவும் இல்ல. நீ ஏன் லவ் வேணாம்னு சொல்றன்னு எனக்கு reason சொல்லு "என்க

அவளோ குரலை சரி செய்து கொண்டவள் "அது ஒன்னும் பெரிய ரீசென்லாம் இல்ல. basically நா ஒரு சோம்பேறி நான் ஒரு பையன பார்த்து லவ் பண்ணி அவனை லவ் பண்ண வச்சு ப்ரொபோஸ் பண்ணி டெய்லி கடலை போட்டு அவனுக்கு புடுச்ச மாறி டிரஸ் பண்ணி அம்மா அப்பாக்கு தெரியாம மீட் பண்ணி அப்பறோம் அவன் வீட்ல சம்மதிச்சு என் வீட்ல சம்மதிச்சு கல்யாணம் பண்ணி ஷோபாஆ. இதுக்கெல்லாம் எனக்கு பொறுமையும் இல்ல ஈடுபாடும்  இல்ல இதை எல்லாம் பண்றதுக்கு பதில் அம்மா அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு போயிருவேன் எனக்கு வேலை இல்லாம இருக்கும் பாரு "என்று கூறி விட்டு அவள் நண்பர்களை பார்த்து "என்னடா இப்டி பாக்குறீங்க ?"என்று கேட்க

அவர்களோ சேர்ந்து அவளை பார்த்து "தூஊஊ "என்க

அவளோ அதற்கும் அசராமல் "ஆஹா face வாஷ் பண்ணனும் நடந்து வாஷ்ரூம் போனும்னு நெனச்சேன் நீங்களே அதுக்கும் வேலைய மிச்சம் பண்ணிடீங்க" என்று கூற

அவர்கள் நால்வரும் இது திருந்தாத கேஸுஹ் என்று சிரித்து கொண்டே தலையில் அடித்து கொண்டனர் .

இதுலயே தெருஞ்சுருக்கும் இவ எப்படி பட்ட டிப்பிக்கலான பிறவினு

(flashback ஓவர் )

இவர்கள் அனைவரும் இங்கே கதைத்து கொண்டிருக்க அங்கே வந்த

அவர்களது பேராசிரியர்"குட் மார்னிங் "என்று கூற அனைவரும் சமத்து பிள்ளைகளாக எழுந்து மரியாதை செலுத்தி விட்டு அமர

அவர் "சோ ஸ்டுடென்ட்ஸ் ஐ have சம்திங் டு இன்போர்ம் "என்று கூற

சைந்தவியின் காதில் குனிந்த வினீஷா "என்னடி anasthesiology எதுவும் புது அணு குண்ட போட போதா "என்று வினவ

அவளோ "எனக்கு மட்டும் என்ன ஜோசியமாடி தெரியும் கொஞ்சம் மூடிட்டு கேளு "என்று திரும்ப

அவரோ"we have a new student with us he is going to continue his studies thereafter in our காலேஜ் .he is a bright student with impeccable academic performance.he is also into research on discovering medicine for upcoming different types of cancers and is a proud young scientist .let us welcome him into our campus "என்று கூற .

அங்கு வாசலிலோ 5.11 அடி உயரமும் கட்டுமஸ்தான தேகமும் என்றும் முகத்தில் ஒரு கடுமையும் காற்றில் அசைந்தாடும் கேசமும் என இருந்தவன் உள்ளே கம்பீரமாய் நடந்து வர அந்த அறையில் இருந்த அத்தனை பெண்களின் கண்களும் அவனைஅளவிட தவற வில்லை நமது கதாநாயகியை தவிர்த்து.

உள்ளே வந்தவன் ஷ்ரவனிற்கு அருகில் வந்து excuse me மே i have அ seat என்க அவனும் தள்ளி அமர்ந்தான் .

அங்கிருந்த அத்தனை கண்களும் அவனை நோக்க அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் சர்வ சாதாரணமாக தன் பார்வையை சுழல விட்டான் .அப்பொழுது அவன் கண்களில் பட்டால் பாடத்தில் ஊன்றி போய் இருந்த சைந்தவி.எதார்த்தமாக திரும்பியவள் அவன் தன்னை பார்ப்பதை பார்த்தவள் சினேகமாக ஒரு புன்னகையை மட்டும் சிந்தினாள்.காரணமின்றி கடுமையை மட்டுமே கண்டிருந்தவனின் முகத்தில் அவனையுமறியாமல் ஒரு புன்னகை பூக்க அவளை நோக்கி  சிரித்தவன் பின் திரும்பி பாடத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டான்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top