தீயாய் சுடும் என் நிலவு 9

"அப்போ உங்க தங்கச்சியோட கண்ணீருக்காக என்னை பலியாக்கிட்டிங்க?" என்றாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட.

"என்னடா மா இப்படி பேசுற? தங்கச்சி பையன் நல்லா படிச்சிருக்கான் நல்ல திறமை இருக்கு, சொந்ததுல கொடுத்தா உன்னை நல்லா பார்த்துப்பான். நீயும் என் பக்கத்துலையே இருப்பன்னு தானம்மா சரின்னு சொன்னேன். ஏன்மா உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வாடா" என்றார் கலக்கமாய்.

"அப்பா உங்க தங்கச்சிக்காக என்னை நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்திங்க. ஆனா, அவருக்கு நான் அவர் காதல்ல குறுக்கவந்த விரோதி" என்றாள்.

என்னதான் தீரன் தன்னை விரும்பாவிட்டாலும் தான் அவனை விரும்பியது உண்மைதான். தங்களுக்குள் நடந்தது தங்களுக்குள்ளாகவே இருக்கட்டும் என்று எண்ணியவள் எதையுமே விளக்கமாக கூறவில்லை.

"என்னம்மா சொல்ற?" என்றார் அவளின் அப்பா அதிர்ச்சியாய்.

"அப்பா உங்க எல்லோராலையும் என் வாழ்க்கை  பாழாகிடுச்சு. அதோட..." என்று தேம்பினாள் மிருதி.

"அம்மாடி ஏன்மா அழற? அப்பாகிட்ட வந்துடறா. நான் பார்த்துக்குறேன் உன்னை. நீ எங்கயும் போகவேணாம். அப்பா நானிருக்கேன்டா" என்றார் அவரும் அழுதபடி.

"அதோட என் குழந்தையும் போயிடுச்சு... எனக்கு நீங்க யாருமே வேணாம். என்னை தேடாதிங்க. எனக்கு மனசு சரியானப்புறம் கூப்பிடறேன். அதுவரைக்கும் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று அழுதுகொண்டே வைத்துவிட்டாள்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் ஒரு நாளும் எந்த விளக்கமும் கேட்டகவில்லை அமுதன்.

அன்று மாலை ஸ்ரீஷாவின் வீட்டில் இருந்தான் அமுதன்.

"ஸ்ரீ ரொம்ப தாங்க்ஸ் டா. எனக்காக மிருதியை உன் கூட தங்க வைக்க சம்மதிச்சு அவளையும் நல்லா பார்த்துகிற." என்றான் அமுதன்.

"நான் தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும் அமுதன். இங்க தனியா இருக்க எவ்ளோ கொடுமையா இருந்தது. அக்கா வந்ததுக்கப்புறம் எனக்கு ரொம்ப அதரவா இருக்காங்க தெரியுமா? உண்மையாவே அவங்க ரொம்ப நல்ல கேரக்டர் பா. அதுவும் இல்லாம நீ அவங்களுக்கு இவ்ளோ இம்பார்ட்னஸ் கொடுக்குறன்னா அவங்க எவ்ளோ முக்கியமானவங்கன்னு தெரியுது பா." என்றாள் ஸ்ரீஷா.

"உனக்கு அவகிட்ட ஜூவளசி இல்லையா?" என்றான் அமுதன்.

"பொறாமையா எதுக்கு?' என்றாள் ஸ்ரீ.

"இல்ல இந்நேரத்துக்கு உன் இடர்த்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்க ரெண்டு பேரையும் சந்தேக பட்ருப்பாங்க."என்றான் அமுதன்.

"என்ன அமுதன் இப்படி சொல்ற? எந்த ஒரு பெண்ணுக்கும் தனக்கு சொந்தமானவனோட பார்வை மத்த பொண்ணுங்க மேல எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் செய்வா. ஆனா அவன் பேசுற அக்கறை காட்ற எல்லோரையும் சந்தேகப்படறது தப்பு. அக்கறையான அன்பான பார்வைக்கும், எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு காதலா பார்க்கிற பார்வைக்கும் வித்யாசம் இருக்கு. என்னைக்கும் ரெண்டும் ஒண்ணாகமுடியாது. அந்த வித்யாசம் தெரியாம தான் பல காதல் காற்றிலே பறக்கும் புழுதியாய் பறக்கின்றன." என்றாள் ஸ்ரீஷா.

அவளின் விளக்கத்தை பிரம்மிப்பாய் பார்த்து கொண்டிருந்தான்.

"நான் ரொம்ப லக்கி ஸ்ரீ. நீ என் வாழ்கைல வீசும் வசந்தம்" என்றான்.

"ஹ்ம்ம் அப்படி இல்ல அமுதா. ஸ்நேகிதியே இவ்ளோ அக்கறையா பார்த்துக்குற நீ. என்னை எவ்ளோ நல்லா பார்த்துப்பேன்னு எனக்கு தெரியுது. உன்னை விரும்பினதுக்காக நான் ரொம்ப பெருமை போடறேன். கணவனா வரபோறவன் அழகாஇருந்தா மட்டும் போதாது. நல்ல மனசு இருக்கறவனாவும் இருக்கணும். அது உன்கிட்ட இருக்கு." என்றாள் ஸ்ரீஷா.

வாசலில் சத்தம் கேட்க இருவரும் திரும்பினர்.

சோர்வாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் மிருதி.

"தி என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பெதும் முடியலையா?" என்றான் கரிசனையுடன்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. வெளிய போய்ட்டு வந்த டயர்ட் தான்." என்று சோபாவில் அமர்ந்தாள்.

"அக்கா இந்தாங்க தண்ணி குடிங்க" என்று நீரை கொடுத்தவள், அமுதனிடம் திரும்பி "இல்ல ஒரு வாரமாவே இவங்க இப்படி தான் இருக்காங்க" என்றாள் ஸ்ரீ.

மிருதியின் அருகில் வந்தவன் நெற்றியில் தொட்டு பார்க்க, "ஜுரம் இல்ல அமுதா" என்றாள் மிருதி.

"சரி தி. எழுந்திரு முதலில் ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்." என்றான் அமுதன்.

"அதெல்லாம் வேண்டாம் அமுதா. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" என்றாள் மிருதி.

"அக்கா இப்படியே தான் ரெண்டு நாளா நான் கூப்பிட்டபவும் சொன்னிங்க. ஆனா இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்கிங்க. அதனால ஹாஸ்பிட்டல் போய்ட்டு  வந்துடுங்க." என்றாள் ஸ்ரீஷா.

" தி. இப்போ வரபோறியா இல்லையா? நீ வரலைன்னா வலுக்கட்டாயமாக தூக்கிட்டு போயிடுவேன்" என்றான் அமுதன்.

விழிகள் விரிய அவனை பார்த்தவள் "நீ செஞ்சாலும் செய்வடா. வரேன்" என்று அவர்களுடன் மருத்துவமனை சென்றாள்.

தேவையான டெஸ்ட்டுகளை எடுத்து பார்த்து விட்டு "இது உங்க ரெண்டாவது மாசமில்ல. லாஸ்ட்டா எப்போ செக் பண்ணிங்க? ரிபோர்ட்ஸ் எடுத்துட்டு வந்துருக்கிங்களா?" என்றார் டாக்டர்.

"என்ன?" என்றனர் மூவரும் அதிர்ச்சியாக.

hi friends. ithai short storyaa start pannen but ellaame elaborate panni write pandradhaala ippo inum 7 , 8 episode pogum nu ninaikiren. neenga enna soldringa continue panna vaa ila shorta mudichidavaa??~


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top