தீயாய் சுடும் என் நிலவு 8

"வா தி" என்றான் ஒரு வீட்டினுள் நுழைந்து.

"யார் வீடு இது?" என்று கேட்டுக்கொண்டே வேட்டை சுற்றி முற்றி பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் மிருதி.

"ஹ்ம்ம் இது என் பிரென்ட் வீடு." என்றான் கையில் இருந்த பையை கீழே வைத்து.

"எங்க அவங்க?" மிருதி

"இதோ வந்துட்டேன்." என்று கையில் நீருடன் நின்றாள்.

"ஹாய்" என்றாள் மிருதி.

"ஹாய். நீங்க அமுதனோட பிரென்ட்னா என்னைவிட பெரியவங்களா தான் இருப்பிங்க. சோ உங்களை நான் அக்கான்னு கூப்பிடறேன்" என்று க்ளாஸை நீட்டினாள்.

"எப்படி வேணா கூப்பிடு." என்று சிரித்தாள் மிருதி.

"தி. இது ஸ்ரீஷா. இங்க தனியா தான் இருக்கா. இனி இங்கயே நீ தங்கிக்கோ." என்றான் அமுதன்.

"வேணாம் அமுதா. என்னால அவங்களுக்கு தொல்லை எதுக்கு?" என்றாள் மிருதி.

"அட நீங்க வேற அக்கா. எனக்கு இங்க தனியா இருக்க எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா? இப்போ நீங்க வந்துட்டீங்கன்னு நிம்மதியா இருந்தா அதுக்குள்ள இப்படி சொல்லடிங்க?" என்றாள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

"என்னை இப்போ தான் பார்க்குற. அதுக்குள்ள ..?" என்று ஸ்ரீஷாவை பார்க்க,

"எப்போ பார்த்தா என்ன? அமுதன் கூட்டிட்டு வந்துருக்காரு. அது ஒண்ணே போதும்." என்றாள்.

"அயோ! தி. சும்மா இரு. நீ இங்க தான் இருக்க போற. இது ஸ்ரீஷாவோட சொந்தவீடு." என்றான் அமுதன்.

"அப்போ மாச மாசம் வாடகை கொடுத்திடறேன்" என்றாள் மிருதி.

"சரி. அதைபத்தி அப்புறம் பேசிக்கலாம். உனக்கு உடம்பு சரி இல்லை. நீ முதல்ல ரெஸ்ட் எடு. ஸ்ரீ பார்த்துக்க. நான் அப்புறம் வரேன்" என்று கிளம்பிவிட்டான்.

மறுநாள் மாலை ஸ்ரீஷாவிற்கு போன் செய்தான் அமுதன்.

"ஹலோ!" அமுதன்.

"ஹலோ! " ஸ்ரீ.

"என்ன பண்ற? சாப்பிட்டியா?" என்றான் அமுதன்.

"இல்லப்பா. பசிக்கலை" என்றாள் ஸ்ரீ.

"ஸ்ரீ. மிருதி எப்படி இருக்கா? ஏதாவது சாப்பிட்டாளா?" என்றான் கவலையாய்.

"இல்ல அமுதா. நேத்து கொஞ்சம் வற்புறுத்தி சாப்பிட வச்சேன். அழுதுகிட்டே இருக்காங்க. எவ்ளோ சொன்னாலும் சாப்பிட மாட்டேன்னு அந்த ரூம்குள்ளயே தான் இருக்காங்க. வெளிய வரலை. சாப்பிடவும் இல்லை. அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னும் தெரியலை." என்றாள் ஸ்ரீஷா.

"அவ மனசுல வலி அதிகமா இருக்கு. அவ எப்பவும் இப்படி தான். கஷ்டமா இருந்தா யார்கிட்டயும் பேசமாட்டா. தன்னையர் தனிமை படுத்திப்பா. என்ன செஞ்சுருக்க?" என்றான்.

"டிபன் இட்லி தான்" என்றால் ஸ்ரீஷா.

"சரி நான் வரேன்." என்று சிறிது நேரத்தில் வந்தவன் சாப்பாட்டு தட்டுடன் மிருதியின் அறைக்குள் நுழைந்தான்.

"தி" என்றான் மெதுவாய்.

விட்டத்தை விழிநீர் வழிய எந்த உணர்ச்சியும் காட்டாமல் படுத்திருந்தாள்.

"தி. எழுந்திரு முதல்ல. கொஞ்சமா சாப்பிடு" என்று தட்டுடன் மிருதியின் அருகில் அமர்ந்தான்.

"இல்ல அமுதா. எனக்கு வேணாம் பசிக்கலை." என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"இல்லம்மா அப்படி சொல்லக்கூடாது. உனக்கு எவ்ளோ மனசு கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டில காட்டக்கூடாது. அதுவும் இல்லாம இப்போ உனக்கு உடம்பு ருக்கிற கண்டிஷங்கய சாப்பிட்டே ஆகணும். அதனால ப்ளீஸ் உனக்காக இல்லன்னாலும் எங்க ரெண்டு பேருக்காகவும் சாப்பிடுப்பா. ஸ்ரீஷாவும் இன்னும் சாப்பிடாம இருக்கா."என்றான் அமுதன்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? நான் யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சதில்லையே" என்றாள் மனமுடைந்து.

"நல்லவங்களுக்கு தான் சோதனை அதிகமா வரும். இப்போ தான் உடைஞ்சு போகாம தைரியமா எழுந்து நிக்கணும். இருக்கிறது ஒரு வாழ்க்கை அதிலையும் நாம நூறு வருஷம் வாழப்போறதில்லை. அம்பது வருஷம் அதிகபட்சம் அதுக்குள்ள உன்னால என்ன முடியுமோ அதை நீ நினைச்ச மாதிரி மாத்திகனும்." என்றான் அமுதன்.

ஸ்ரீஷாவும் அருகில் வந்து நிற்க.

"நீ சொல்றது சரி தான் அமு. என்னை கஷ்டப்படுத்தினவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்போது நான் ஏன் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கப்பும்? நானும் வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்க போறேன்." என்று சிரித்தாள் மிருதி.

"இப்போ தான் என்னோட பிரென்ட் தி நீ" என்று சிரித்தான் அமுதன்.

ஸ்ரீஷாவின் கரத்தை பிடித்து அருகில் அமர வைத்தவள்.

"எனக்காக நீயும் சாப்பிடலையா?" என்றால் மிருதி.

"எப்படிக்கா ஒரே வீட்ல இருந்துகிட்டு நீங்க கஷ்டப்பட்டு சாப்பிடாம இருக்கும்போது என்னால சாப்பிடமுடியும்?" என்றாள் ஸ்ரீஷா.

"தாங்கஸ் டா. எனக்குன்னு யாரும் இல்லைனு நினைச்சேன். ஒரு தங்கச்சியை கொடுத்திட்ட." என்றாள் ஸ்ரீஷாவை அணைத்துக்கொண்டு.

"வா சாப்பிடலாம் " என்று மூவரும் சாப்பிட்டனர்.

முதலில் சில நாள் மனதின் வலி தாள முடியாமல் இரவுகளும் பகலாய் மாறி கண்ணீர் வடித்தாள் மிருதி.

இங்கு வந்த மூன்றாம் நாள் தன் பெற்றோருக்கு போன் செய்தாள்.

"ஹலோ" என்ற அம்மாவின் குரலில் உடைந்து போக மனதை திடப்படுத்திக்கொண்டு.

"நான் மிருதி பேசுறேன்." என்றாள் எந்த உணர்வும் காட்டாமல்.

"மிருதி எங்கடி போன? உன்னை எங்க எல்லாம் தேடறது? இப்படி சொல்லாம கொல்லாம எங்கடை போன? எதுக்கு போன?" என்ற அன்னையின் கதறலை சமாளித்து.

"நான் நல்லா இருக்கேன் எனக்கு ஒன்னும் இல்லை." என்றாள் மிருதி.

"ஏண்டி இப்படி பண்ண? மாப்பிள்ளை எவ்ளோ பதறி போய்ட்டார். உன்னை காணம்னு எல்லா இடமும் தேடி அலைஞ்சார்..  இன்னும் தேடறார்... அவர் சாப்பிடறதே இல்லை" என்ற அன்னையிடம் "நான் அப்பாகிட்ட பேசணும்" என்றாள் அந்த பேச்சை தவிர்க்க.

"இதோ கூப்பிடறேன்." என்ற சிறிது நேரத்தில் அவளின் அப்பாவின் குரல் கேட்டது.

"அம்மாடி... மிருதி.." என்ற உடைந்த குரல் மிருதியை மேலும் உடைய வைத்தது.

"அப்பா..." என்றாள் நா தழுதழுக்க.

"எங்கம்மா இருக்க? ஏன்டா இப்படி பண்ண? அப்பாகிட்ட சொல்லிருக்கலாம்ல டா ஏதாவது ப்ரச்னைன்னா." என்றார்.

"அப்பா நா கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க? கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் வேரா பொண்ணை விரும்புறார்னு உங்களுக்கு தெரியுமா?" மிகவும் நிதானமாக.

"அம்மா.." என்றார் மெதுவாக.

"சொல்லுங்க" என்றாள் மிருதி.

"தெரியும்டா. " என்றார் அவளின் அப்பா.

"தெரிஞ்சும் ஏன்பா அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிங்க?" என்றாள் மிருதி இயலாமையில்.

"இல்லம்மா... அத்தை வந்து ரொம்ப அழுதா... பாப்பாவை கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னா. நீங்க தான் என் பையனை காப்பாத்தனும்னு" என்றார் அவளின் தந்தை.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top