தீயாய் சுடும் என் நிலவு 7
அவளின் நினைவுக்கு உடனே வந்தது பெங்களூரில் இருக்கும் தன் சிறுவயது முதல் நெருங்கிய நண்பனான அமுதன் தான்.
'இப்போ அமுதனை ஹெல்ப் கேட்டா நல்லா இருக்குமா?' என்று யோசித்தாள்.
"யோசிக்காத. நீ ஒன்னும் அமுதன் கூட தங்க போறதில்லை. அங்கயே நல்ல வேலை தேடிட்டு விமென்ஸ் ஹாஸ்டெல்ல தங்கிகலாம். என்ன ஆனாலும் இவங்க யார்கிட்டயும் போக மாட்டேன்' என்று நினைத்தவள் அமுதனுக்கு போன் செய்தாள்.
"ஹெலோ" என்ற அமுதனின் குரலை கேட்டதும் தொண்டைக்குழியில் அடைக்க பேச திணறினாள்.
"ஹலோ! " என்றான் அமுதன் மறுபடியும்.
"ஹ...லோ!" என்றாள் மிருதி திணறியபடி.
"மிருதி... என்னம்மா இந்நேரத்துக்கு போன் பண்ணிருக்க?" என்றான் பதட்டமாய் அரைதூக்கத்தில் இருந்து எழுந்தவன்.
"எனக்கு உடனே உன்னை பார்க்கணும்" என்றாள் கண்ணீரை அடக்கி.
"என்ன தி? உன் வாய்ஸ் ஏன் ரொம்ப டல்லா இருக்கு? உடம்பு சரி இல்லையா?" என்றான் அமுதன்.
"ஆமா" என்றாள் மிருதி ஒற்றை வார்த்தையில்.
"தி... இப்போ மணி நயிட் 3.00மணி" என்றான்.
"எனக்கு மணி பார்க்க தெரியாம தான் போன் பண்ணேனா? " என்றாள் கோபமாக.
"இல்லடா. நீ இந்த டைமக்கு போன் பண்ணமாட்டியே? அதான்..." என்றான் அமுதன்.
"அமு. இப்போ உன்னால வர முடியுமா முடியாதா?" என்றாள் மிருதி.
"ஏய்! சண்டைக்கோழி வரேண்டி. எங்க வரணும்?" என்றான் அமுதன்.
"சொல்றேன்" என்று தான் இருக்கும் இடத்தை கூறி உடனே வர சொன்னாள்.
"ஹாஸ்பீட்டல்ல ஏன் இருக்க? உனக்கு உடம்புக்கு என்ன? உன் வீட்டுக்காரர் எங்க? " என்று அமுதன் கேள்விகளை பதற்றமாய் அடுக்கி கொண்டே போனான்.
"ஒரு நிமிஷம் அமு. டென்ஷன் ஆகாத. எனக்கு ஒண்ணும் இல்லை. நீ இங்க வா. எல்லாம் சொல்றேன்." என்றாள் மிருதி.
"இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்." என்றான் அமுதன்.
"என்ன அமு? எப்படி அரைமணி நேரத்துல இங்க இருப்ப? பெங்களூர்ல இருந்து அவ்ளோ சீக்கிரத்துல வந்துட முடியுமா?" என்றாள் குழப்பமாக மிருதி.
"முடியும் தி. ஏன்னா நான் இங்க தான் இருக்கேன்." என்று சிரித்தான் அமுதன்.
" ஓஹ் அப்போ இங்க வந்துட்டு என்னை பார்க்காம இருக்க?" என்றாள் கோபமாக.
"ஹிம்.. அப்படி இல்ல தி. என் ஃப்ரெண்ட் கல்யாணதுக்கு வந்தேன். நைட் பத்து மணிக்கு தான். மார்னிங் கல்யாணம் முடிச்சிட்டு என் லவரை வந்து பார்க்கலாம்னு இருந்தேன்" என்றான் அமுதன்.
"என்னது லவரா? யாருடா அது சொல்லவே இல்ல?" என்றாள் மிருதி ஆச்சர்யமாய்.
கலகலவென சிரித்த அமுதன் "என் டார்லிங்.. என் லவர் எல்லாமே நீ தானே உன் இடத்தை யாரல நிரப்ப முடியும் தி." என்றான் அப்பாவியாய்.
"என்னது நான் உன் லவ்வரா ? எடு அந்த செருப்ப? " என்றாள் மிருதி.
"ஏன் தீ? செருப்பு கீழ விழுந்துடுச்சா?" என்றான் அமுதன் சிரிப்பை அடக்கி.
"உன்னை அடிக்க தான்டா எருமை மாடு, குரங்கு, பண்ணி ..." என்று திட்டிக்கொண்டே போக.
"ஏய் போதும்டி நிறுத்து. என்னை ஓவேரா டேமேஜ் பண்ற... சரி சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சர்ப்ரைஸ்சா நாளைக்கு உன்னை வீட்ல வந்து பார்த்துட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்ட" என்றான் அமுதன்.
"சரி. என்கூட பேசிட்டு இருந்தா எப்போ கிளம்பி வரது." என்றாள் மிருதி.
"தி. நீ ஏதோ பெரிய பிரச்சனைல இருக்கன்னு மட்டும் தெரியுது. என்கூட பேசினா ஒரு பத்து நிமிஷம் அந்த கவலைல இருந்து மனசு லேசாகும்னு தான் பேசிட்டு இருந்தேன். நான் ஏற்கனவே கிளம்பிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன். அதுவரைக்கும் எதை பத்தியும் நினைச்சு அழாம கண்ணை மூடி இரு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். புரியுதா?" என்றான் அமுதன்.
"ரொம்ப தாங்க்ஸ் அமு. அதுக்கு தான் என் ஃப்ரெண்ட் உனக்கு போன் பண்ணேன். நீ வா" என்றாள் கண்ணீர் வழிய.
"ஹிம்" என்று இணைப்பை தூண்டித்தான் அமுதன்.
சிறிது நேரத்தில் அவள் இருந்த கோலத்தை கண்டவன், "என்னாச்சு தி? எனக்கு ஒண்ணுமில்லைன்ன? உன் புருஷன் எங்க? உங்க அப்பா அம்மா எங்க? நீ இப்படி கிழஞ்ச நாராய் யாருமில்லாம இருக்க?" என்றான் கண்களில் கோபத்தோடு.
"அமுதா. இப்போ எதுவும் சொல்ற நிலைமைல நான் இல்லை. எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. எங்கயாவது போய்டலாம்னு தோனுனப்ப என் கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே ஆள் நீ மட்டும் தான். உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் பார்த்துக்குறேன்" என்றாள் மிருதி பிடிவாதமாய்.
"சரி தி. உனக்கு விருப்பமாகும் போது சொல்லு. ஆனா இப்போ எதுக்காக ஹாஸ்பிட்டல்ல இருக்க? அதை மட்டும் சொல்லு?" என்றான் அமுதனும் பிடிவாதமாக.
மிருதி எதுவும் சொல்லாமல் இருக்க, "அவளுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு தம்பி" என்றார் அகிலா.
"என்ன? எப்படி தி?' என்றான் மிகவும் வருத்தமாய்.
எதுவும் பேசாமல் மிருதி விழிகளில் நீரோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க அமுதன் பெருமூச்செறிந்து.
"போலாம் தி. என்கூட வந்துடு. நான் பார்த்துக்குறேன்." என்றான் அமுதன்.
அவனை பார்த்து ஸ்னேகமாய் சிரித்தவள்.
"இல்ல அமுதன். என்னால யாருக்கும் பாரமா இருக்க முடியாது." என்று சிரித்தாள் மிருதி.
"என்ன தி பேசுற? எனக்கு எப்படி பாரமா இருப்ப? சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் எனக்காக எவ்ளோ உதவி செஞ்சிருக்க நீ. எல்லாத்தையும் மறந்துடுவேனா நான்?" என்றான் அமுதன்.
"இல்ல அமு. உன்கூட என்னால தங்க முடியாது. அது சரி வராது. நான் உன்கூட வரேன். ஆனா, என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்துவிடு. நான் பார்த்துக்குறேன் " என்றாள் முடிவாக.
எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன். கண்ணில் சிந்திய நீரை சுண்டி விட்டு சிரித்தான்.
"நீ இன்னும் மாறவே இல்ல தி. அடுத்தவங்களுக்குன்னா என்ன உதவின்னாலும் செய்வ. ஆனா உனக்குன்னு வரும்போது உன் கால்ல மட்டும் தான் நிப்ப. நீ பெஸ்ட் தி. உன்னோட காண்பிடென்ஸ்ச நான் குறைக்க மாட்டேன். நீ சொன்ன மாதிரியே செய்றேன். போலாமா.?" என்றான் அவளை பார்த்து ஸ்னேகமாய்.
"ஹிம்.." என்றாள் மிருதி.
அகிலா அமைதியாய் இருவரையும் பார்க்க,
"ரொம்ப நன்றிக்கா. தி மத்த எல்லாரையும்விட உங்களை நம்பிருக்கா. நீங்க கவலையே படாதீங்க அவளை பத்திரமா பார்த்துக்குறேன். அவ அப்போலர்ந்து இப்போ வரைக்கும் எங்க வீட்ல ஒரு பொண்ணுக்கா." என்று சிரித்தான் அமுதன்.
"எனக்கு மனசுக்கு நெருடலா இருந்துது தம்பி. இந்த புள்ள எங்கயோ போகுறேன்னு சொல்லுதே எப்படி இருக்குமோன்னு. ஆனா உங்களை பார்த்த அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அவ நிறைய கஷ்ட்டபட்டுட்டா. பத்திரமா பார்த்துக்கோங்க பா." என்றார் அகிலா.
"மிருதி. உடம்ப பத்திரமா பார்த்துகோ. எப்படியும் உன் புருஷன் என்கிட்ட வந்து கேப்பார். உனக்காக நான் எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். ஆனா நீ அவங்க எல்லார்க்கிட்டயும் நீ என்ன முடிவு பண்ணிருக்கியோ அதை தெளிவா சொல்லிடு. அது தான் எல்லோருக்கும் நல்லது." என்றார் அகிலா.
"சரிக்கா. நான் பார்த்துக்குறேன்" என்று அமுதனுடன் கிளம்பினாள் மிருதி.
"அமுதா. கல்யாணம் ஏதோ அட்டென்ட் பண்ணனும்னு சொன்னியே? நீ வேணா போயி அட்டென்ட் பண்ணிட்டு வந்துடு. நாம அப்புறம் போகலாம்" என்றாள் மிருதி.
"இல்ல தி. நான் போகலை. அதை நான் பார்த்துக்குறேன். நாம போகலாம்" என்று மிருதியை தன் பொறுப்பில் ஒரு நல்ல நண்பனாய் அன்றில் இருந்து பாதுகாக்கிறான் அமுதன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top