தீயாய் சுடும் என் நிலவு 48

"சாரி. இனி உங்களை விட்டு எங்கயுமே போக மாட்டேன். நீங்க நான் நம்ம பொண்ணு சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழனும்னு எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன். அதுக்கு இப்போ தான் நேரம் வந்துருக்க போல...

ஆனால் அப்படி இனி நாம சேரவே முடியாதுன்னு வெறுத்து போய் வாழ்க்கை மேல ஒரு பயம் வந்துருச்சு.. இங்கயே இருந்தா நான் பட்ற கஷ்டத்தை பார்த்து நீங்களும் பாப்பாவும் ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு தான் உங்க கண்ணுலயே படாம எங்கயாவது போன பிறகு என் உயிர் போனா பரவால்லன்னு தான் உங்க யாருக்கும் சொல்லாம போக நினைச்சேன்... ஆனாலும் உங்க அன்பால் என்னை காப்பாத்திட்டிங்க. என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.

எனக்கு தான் இப்போ உடம்பு சரியாகிடுச்சே. இனி என்னால உங்களைவிட்டு இருக்க முடியாது.. பிளீஸ் மாமா... நான் உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன்... உன்னை விட்டா வேற யாரு என்னை புரிஞ்சுக்க முடியும்?" என்றாள் விலகாமல் கண்ணீரோடு.

எரிமலையாய் கொதித்து கொண்டிருந்த உள்ளத்தை குளிர்வித்தது அவளின் வார்த்தைகள். இதற்கு தானே அவனும் காத்திருந்தான். இதோ அந்த நாளும் வந்துவிட்டது. அவனின் மிருதியும் அவனிடம் வந்துவிட்டாள். வேறென்ன வேண்டும் இனி வாழ்க்கையில். இறுக அணைத்து மிருதியின் நெற்றியில் இதழ் பதித்தான்.

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி. இனியும் என்னைவிட்டு எங்கயும் போகணும்னு கனவிலே கூட நினைக்காத" என்றான் எச்சரிக்கையாய் புன்னகைத்து.

"ஹக்கும்... எங்கயும் போக மாட்டேன்" என்றாள் மிருதி.

"உள்ள வரலாமா?" என்று குரல் கேட்க இருவரும் சட்டென்று விலகி நின்றனர்.

இருவரையும் பார்த்து புன்னகைத்து கொண்டே வந்தனர் அமுதன், ஸ்ரீ, தீரனின் அம்மா, மற்றும் திஷா.

"தீரன் என் தி யே சொல்லிட்டா... இனி நீங்க அவ இல்லாம எங்கயுமே போக கூடாதாம்..." என்று சிரித்தான்.

"என் பொண்டாட்டியை விட்டிட்டு நான் எங்க போக போறேன்." என்றான் மிருதியின் தோளில் கரம் போட்டுக்கொண்டே.

"என்னங்க எல்லோரும் பார்க்கிறாங்க கை எடுங்க" என்று முகம் சிவக்க வெட்கத்துடன் கிசுகிசுத்தாள்.

"அமுதன் என் பொண்டாட்டி மேல நான் கை போட்டா உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" என்றான் சீரியஸாக.

"சே.. சே.. எங்களுக்கு ஏன்  கஷ்டமா இருக்க போகுது. உங்க பொண்டாட்டி உங்க கை" என்றான் குறும்பாக.

"டேய் வர வர உனக்கு வாய் ரொம்ப ஓவராய்ட்டு... சரி கல்யாணத்துக்கு இன்னும் 20 நாள் தான் இருக்கு ஞாபகம் இருக்கா ரெண்டு பேருக்கும்" என்றாள் தன் இடையில் கரம் வைத்து முறைத்தபடி.

"எல்லாம் இருக்குங்க மேடம்..." என்றான் வாய்மேல் விரல் வைத்து பவ்யமாக.

"உன்னை..." என்று துரத்தி கொண்டு போனாள் மிருதி.

"தி... செல்லம் இப்போ எதுக்கு இவ்ளோ கோவம்... மீ பாவம் தானே?" என்று ஓடிக்கொண்டிருந்தான்.

"யாரு நீ பாவமா? அதை நான் நம்பனுமா." என்று முறைத்தாள்.

"என்ன தீ இப்படி சொல்லிட்ட... நான் உன் நண்பன் மா" என்றான் பாவமாக நின்று.

"மாட்டினியா? " என்று அமுதனின் காதை பிடித்து திருகினாள்.

"ஆஅ... வலிக்குது தி.. தெரியாம சொல்லிட்டேன். நீ என் செல்லம்... பட்டு... சமத்து... காதை விடும்மா..." என்றான் கெஞ்சலாக.

அருகில் நின்று ஸ்ரீ சிரித்துக் கொண்டிருக்க...

"அடிப்பாவி... நான் இங்கே வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா சிரிக்கிற?? உங்க அக்கா என்னை அடிக்கிறாளே என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு... நான் உன் வருங்கால புருஷன் மா." என்றான் அமுதன் பாவமாக.

"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே வருங்காலம்னு என் அக்கா தான் இப்போ என் கூட இருக்க நிஜம்" என்றாள் குறும்பாக.

"அடிப்பாவி... நீயம் இவக்கூட சேர்ந்து கெட்டு போய்ட்டடி... அக்காவும் தங்கச்சியும் ரொம்ப ஓவரா தான் போறீங்க..." என்னும் பொழுதே அவன் வாயில் செல்லமாக ரெண்டு அடி போட்டாள் மிருதி.

"தீரன் என்னங்க உங்க பொண்டாட்டி என்னை இப்படி அடிக்கிறா நீங்க பார்த்துட்டே இருக்கீங்க..? நான் உங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்" என்றான் அமுதன் அப்பாவியாக.

"நா வரல பா உங்க ஆட்டத்துக்கு" என்றான் தீரன் மெல்ல சிரித்து.

"அம்மா! என் பேபி பாவம் விடுங்க" என்று அன்னையின் முன் வந்து நின்றாள் மிதிஷா...

"ஒஹ் பாவமா? அப்போ ஒன்னும் செய்யலாம்... நீ எனக்கு பத்து கிஸ் கொடு நான் இவனை விட்டுடறேன்" என்றாள் தீவிரமாய்.

"ஓகே" என்று கீழே குனிய சொல்லி தன் பிஞ்சு இதழ்களால் எண்ணிலடங்கா முத்தங்களை வாரி இறைத்து கொண்டிருந்தது. அதில் தாயின் மனமும் குளிர்ந்துவிட மிருதியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

"ஹப்பா.. என் தி முகத்துல உண்மையான சிரிப்பை இன்னைக்கு தான் பார்க்கிறேன். இதுக்கு தான் நாங்க காத்திட்டு இருந்தோம். இப்போ போலவே எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும்." என்று வாழ்த்தினான் அமுதன்.

"ஓகே.. அக்கா இன்னைலர்ந்து இங்க மாமாகூட தான் தங்க போறாங்க. சோ அவங்க திங்ஸ் லாம் இங்க ஷிப்ட் பண்ணனும் அமுதா" என்றாள் ஸ்ரீயம் மன நிறைவுடன்.

"ஏய் அதுக்குள்ள என்ன அவசரம்? உன் கல்யாண வேலைல்லாம் இருக்குல்ல.. ?" என்றாள் மிருதி.

"அக்கா நீங்க என்ன பத்து ஊர் தாண்டியா இருக்கீங்க? பக்கத்து வீட்ல தானே இருக்கீங்க? அப்புறம் என்ன? லக்கேஜ் லாம் நானே கொணடு வந்து வைக்கிறேன்." என்றாள் ஸ்ரீ.

"சரி உங்கப்பா அம்மா எப்போ வராங்க? இன்விடேஷன் கொடுக்க ஸ்டார்ட் பண்ணணும்ல?" என்றாள் மிருதி.

"அவங்க கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்தாக்கூட ஆச்சர்ய பட்றதுக்கில்லை. அவங்களுக்கு பணம் தான் கா பெருசு.. அப்படி ஓடி ஓடி பணத்தை சம்பாரிச்சி என்ன பண்ண போறாங்கன்னு தெரியலை. அவங்களுக்கு ஒரே பொண்ணு நான். என் கல்யாணத்தை  எப்படி நடத்துனம். ஆனா என் தலையெழுத்து அவங்க போன் பண்ணி யாரோ மூணாவது மனுஷாக்கு விஷ் பண்ற மாதிரி விஷ் பண்றாங்க.. அக்கவுண்ட்ல பணத்தை போடறோம். நீ எல்லா ஏற்பாடயும் முடிச்சுரு. நாங்க சீக்கிரமா வர ட்ரை பன்றோம்ன்னு சொல்லிருக்காங்க. என் கல்யாணத்துக்கு நானே எல்லா ஏற்பாடும் செய்யணுமாம். வேடிக்கையா இருக்குல்ல... விடுங்கக்கா. நீங்களும் அமுதனும் இல்லைன்னா நான் என்னாகிருப்பேன்னெ தெரியாது." என்று கண்கலங்கினாள்.

மிருதி அமுதனுக்கு கண்ஜாடை காட்ட புரிந்துகொண்டவன் ஸ்ரீயின் தோளை தன்னோடு ஆதரவாய் சேர்த்துக்கொண்டான்.

"ஸ்ரீ மா. நீ எதுக்கு கவலை பட்ற.. உனக்கு பிடிக்கலைன்னா அவங்க பணம்கூட வேண்டாம்.. நானும் மாமாவும் இருக்கோம். அமுதன் இருக்கான். நாங்க பார்த்துக்குறோம்." என்று ஸ்ரீயின் தலையை வருடியவள்.

"இருந்தாலும் அவங்க வரட்டும் என்ன தான் இருந்தாலும் உனக்கு உயிர் கொடுத்தவங்க இல்லையா?" என்று சிரித்தாள். ஸ்ரீயும் எதுவும் பேசாது மிருதியை அணைத்து கொண்டு விசும்பியவள் தலையாட்டினாள்.

"சரிக்கா நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க நான் எல்லோரும் சாப்பிட ஏதாவது சமைச்சுடறேன்" என்றாள் ஸ்ரீ.

"அதெல்லாம் வேண்டாம் ஸ்ரீ மா. நான் சமைச்சுட்டேன். இங்கயே சாப்பிடுங்க எல்லோரும்" என்று வந்தார் தீரனின் அம்மா.

"சரிம்மா" என்று அனைவரும் உணவருந்தி ஓய்வெடுக்க சென்றனர்.

"பேபி நான் இன்னைக்கு உன்கூட தான் இருக்க போறேன். நீ எனக்கு நியூ கேம் விளையாட சொல்லி தரேன்னு சொல்லிருக்க" என்றாள் திஷா.

"ஆமாம்மா டார்லிங். விளையாடலாம்" என்றான் அமுதனும் உடனே.

"நீங்க ரெண்டு பேரும் திருந்தவே மாட்டிங்களா? திருட்டு பசங்களா? எனக்கு தெரியாம ஐஸ்க்ரீம் சாப்பிட பிளான் போட்றிங்க தானே?" என்றாள் மிருதி விழிகளை உருட்டி.

"ஹீ ஹீ ஹீ " என்றனர் இருவரும், இவர்களை கண்ட அனைவரும் சிரிக்க, "சரி போய் தொலையுது... ஆனா ஒரே ஒரு ஐஸ்க்ரீம் தான்" என்றாள் கண்டிப்பாய்.

"ஓகே ஒகே" என்றாள் திஷா.

"அமுதா" மிருதி அன்பாய் அழைக்க, "என்ன தி?"  என்றான் அமுதன்.

"இங்க ஓகே சொல்லிட்டு அங்க போய் நிறைய சாப்பிட்டு உன் டார்லிங்கு பீவர் வந்தா.." என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

அமுதனும் மிதிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, "வந்தா" என்றனர்.

"உன் கல்யாண நாள் அன்னைக்கு வரைக்கும்   ஸ்ரீ குட்டி உன் போன எடுக்க மாட்டா" என்றாள் லேசாக சிரித்து.

ஒரே நேரத்தில்,
"அய்யய்யோ தி ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் வாங்கி தருவேன்" என்றான் அமுதன்.

"ஐ இது ஜாலியா இருக்கு" ஸ்ரீ.

"இதெல்லாம் பெரிய விஷயமா வா பேபி நாம போலாம்" என்றாள் திஷா.

மூவரின் பதிலில் தீரன் கலகலவென சிரித்தான்.

'ஜாலியா... இருடி உன்னை பார்த்துக்குறேன்' என்று ஸ்ரீயை பார்த்து முறைத்தான் அமுதன்.

"ஆத்தா உங்கம்மா பண்ற பிளானை நீ எஸ்சிக்கியுட் பண்ண வச்சுராத வா போவோம். எல்லாம் என் நேரம்" என்று புலம்பியபடி திஷாவை அழைத்து சென்றான் அமுதன்.

"பாவம் மிரு" என்றான் தீரன்.

"யாரு அதுங்களா பாவம்... போங்கத்தான்... கொஞ்சம்விட்டா உங்களையும் விலைபேசி வித்துட்டு வந்துருங்க ரெண்டும்" என்றாள் மிருதி.

"சரி வா நீ ரெஸ்ட் எடுக்கணும்" என்று அழைத்து சென்றான் மிருதியை. 

தீரனின் அறையில் மெத்தையில் அமர்ந்திருந்தவளை லேசாக முறைத்தான் தீரன்.

"என்னத்தான்" என்றாள் மிருதி.

"ஹ்ம்ம் என் மச்சினுச்சியே பரவால்ல என் கஷ்ட்டத்தை புரிஞ்சு உன் லக்கேஜ்ஜை இங்க எடுத்துட்டு வரேன்னு சொன்னா... ஆனா நீ இருக்கியே.. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா... இப்போ என்ன அவசரம்னு கேட்ப...?" என்று தன் சட்டையை கழற்றியபடி வந்தான் தீரன்.

மேல் சட்டை அணியா வெற்று மார்புடன் தன்னை நெருங்கும் கணவனை கண்டவள் சற்று அதிரத்தான் செய்தாள்.

"அத்...தா..ன்.." என்றாள் திக்கலாய்.

"இவ்ளோ நாள் பிரிஞ்சிருந்தது போதும் மிரு. இனி எப்பவும் உன்கூடவே தான் நான் இருப்பேன்." என்று தன்னோடு அவளை சாய்த்துக்கொண்டான்.

இத்தனை நாட்கள் கழித்து அவனின் நெருக்கம் திக்குமுக்காட செய்ய அதை கண்டவன் உள்ளுக்குள் சிரித்து அவள் நெற்றியுடன் தன் நெற்றியை லேசாக முட்டினான்.

"இந்த அத்தானை உன் உயிருக்கும் மேலா பிடிக்கும்.. ஆனா நான் பக்கத்துல வந்தா மட்டும் இப்படி தந்தியடிக்குற ஏண்டி...?" என்றவன்.  இனியும் அவளை தவிக்க விடக்கூடாதென்று, "மிரு குட்டி உனக்கு இன்னும் ஹெல்த் சரியாக நாள் எடுக்கும். இனி வாழ்க்கை பூரா நீயே வேணாம்னாலும் நான் உன்கூடத்தான் இருக்கப்போறேன். சோ இப்போ எதை பத்தியும் யோசிக்காம கண்ணை மூடி தூங்கு." என்று மிருதியின் நெற்றியில் இதழ் பதித்தான்.

இதோ இவர்களின் வாழ்க்கை இனி இவர்களின் எண்ணப்படி சிறக்க வாழ்த்துவோம்.

நன்றி.

-தர்ஷினிசிம்பா.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top