தீயாய் சுடும் என் நிலவு 45
"என்ன தீரன் உங்க மனைவி என்ன சொல்றாங்க? " என்றார் மென்மையாய் சிரித்து.
"ரொம்ப சோதிக்கிறா சார் " என்று சோகமாய் சிரித்தான்.
"இன்னும் ஃபைவ் ஹார்ஸ் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது நடக்குதா பார்போம்" என்று பேசிக்கொண்டே மிருவை சோதித்தார்.
"இவங்க பல்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு. இப்போ அபாய்ய கட்டத்தை தாண்டிருச்சுன்னு தான் சொல்லணும். ஆனாலும் அவங்க மூளை முழுமையா செயல் பட மறுக்குது. நமக்கு இருக்கிறது இந்த நாலு மணி நேரம் தான். பேசுங்க என்ன வேணாலும் பேசுங்க. அவங்க மூளை வேலை செய்யற மாதிரி உங்க சந்தோஷமான பழைய நினைவுகளை பத்தி பேசுங்க. இதுக்கு கடவுள் விட்ட வழி தான்" என்று வெளியேறினார்.
சிறு நம்பிக்கையுடன் பேஸ் தொடங்கினான். எவ்வளவு முடியுமோ அவ்வளவும் பேசினான். அவளின் மூடிய விழிகளைல் இருந்து கண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருக்க அதுவும் நின்றுவிட்டது.
ஸ்ரீஷா, அமுதன் இருவரும் தங்கள் பங்கிற்கு பேசினர்.
இருந்தும் எந்த பயனும் இல்லாமல் போக, நேரமும் கடந்து கொண்டியிருந்தது.
என்ன செய்வது என்று மூவரும் பதட்டமடைய தீரனின் முகம் சட்டென்று பிரகாசம் அடைந்தது.
"என்ன தீரன்?" என்று அமுதன் கேட்க.
"அவளோட உயிரே நம்மாகிட்ட இருக்கும் போது நம்ம ஏன் இதை யோசிக்கலை" என்று மெல்ல சிரித்தான்.
இவனுக்கு என்ன ஆயிற்று என்று இருவரும் அவனை வினோதமாய் பார்த்தனர்.
"என்னன்னு சொல்லுங்க மாமா? நேரம் வேற போய்டே இருக்கு" என்று ஆர்வத்தை தாளாமல் ஸ்ரீஷா.
"சொல்றேன். நீங்க இப்போ நான் சொல்றதை செய்ங்க" என்று தன் எண்ணத்தை கூற இருவரும் சந்தோஷமாக வெளியேறினர்.
மிருதியின் அருகிலேயே அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தீரன்.
"ஆனாலும் நீ ரொம்ப அழுத்தகிக்காரி தான். உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன் இருந்தும் என்னை ஏற்க மாட்டேன்னு என்னடி பிடிவாதம் உனக்கு. இன்னும் எத்தனை வருஷம் தான் இப்படி என்னை தவிக்க விட போற?" என்று ஆவலுடன் சண்டையிடு கொண்டிருந்தான்.
அரைமணி நேரம் கடந்ததும் ஸ்ரீஷா உள்ளே நுழைந்தாள்.
"எங்க?" என்று தீரன் கேட்க, ஸ்ரீஷாவின் பின்னாடி வந்தான் அமுதன்.
"அப்பா" என்று அமுதனிடம் இருந்து தீரனிடம் தாவினாள் மிதிஷா.
"செல்லக்குட்டி! வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சியவன் மிருதியை காட்ட.
"பேபி" என்று அமுதன் அழைக்க.
"யெஸ் டார்லி!" என்று அவன் முன் நின்றாள் திஷா.
"செல்லம் அம்மாகிட்ட பேச ரெடியா? நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல?" என்று திஷாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து புன்னகைத்தபடி கேட்டான் அமுதன்.
"விடு டார்லி. அம்மாக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க. கண்டிப்பா என்கிட்ட பேசுவாங்க" என்று மழலையாய் சிரித்தது.
பெரியவர்கள் மனதில் இருக்கும் எந்த சங்கடங்களும் தெரியாமல் இலங்கன்று பயமரியாது என்பது போல் பேச மற்றவர்கள் சிரித்தனர்.
தன் அன்னையின் அருகில் சென்று அவளின் முகத்தை தொட பார்த்தது, முடியாமல் போக, "பேபி" என்றது மெதுவாய்.
"யெஸ் டார்லி" என்றான் அழகாய் சிரித்து அவள் செய்ததை பார்த்து.
"என்னை கொஞ்சம் தூக்கி அம்மா கிட்ட காட்டு," என்றதும் "சரி" என்று மிருதியின் முகம் அருகே தூக்கினான்.
அன்னையின் முகத்தருகே சென்று இரண்டு கன்னங்களிலும் மாற்றி மாற்றி முத்தம் தந்து பின் திரும்பி தீரனை பார்த்தது குழந்தை.
"அப்ப" என்றதும் "என்னடா?" என்று அருகில் வந்தான் தீரன்.
"நான் அம்மாவை எழுப்பிடுவேன் உங்க யாருக்கும் அம்மாவை எப்படி எழுப்பனும்னு தெரியலை இப்போ பாருங்க" என்று சிரித்தது.
"ஆமாடா. அம்மாக்கு நாங்க கூப்பிட்டா கேட்கவே இல்லை. எழவே மாட்றாங்க" என்றான் தீரன் கரகரத்த குரலில்.
"ஹய்யோ டாடி! அம்மா வேணும்னு நான் தான் அழணும். நான் தான் பேபி கேர்ள். சரி அழாதிங்க நான் அம்மாவை எழுப்பிடறேன்." என்று தீரனின் கண்ணீரை துடைக்கவும் எல்லோருக்கும் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
மிருதியின் நிலை எதுவும் புரியாமல் விளையாடும் குழந்தையிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தனர்
"மிருதியின் காதருகே சென்று "மம்மி" என்றது.
தன் அன்னையிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே முகம் சுருங்கி, "பேபி, அம்மா எப்பவும் தூங்கும்போது மம்மின்னு கூப்பிட்டா கோவமா அம்மான்னு கூப்பிடுன்னு திட்டுவாங்கள்ள? அப்புறம் ஏன் பேபி அம்மா இப்போ அமைதியா இருக்காங்க?" என்றாள்.
"இப்போ நீ சத்தமா இன்னொரு முறை கூப்பிடுடா அம்மாக்கு கேக்கலை போல" என்றான் அமுதன்
"ஆமா நான் மெதுவா கூப்பிட்டேன்ல? சரி இப்போ பாரு எப்படி கூப்பிடறேன்னு" என்று மீண்டும் மிருதியின் காதருகே "மம்மி, மம்மி" என்றாள் வேகமாக.
மின்னலாய் ஒருநொடி மிருதியின் விரல்கள் லேசாய் அசைந்து நின்றது.
அனைவரும் விழிகள் விரிய பார்த்தனர் தீரனை தவிர.
"நான் சொன்னேன்ல" என்று தான் அன்னையின் மூடிய விழிகளில் இருந்து வழியும் கண்ணீரை காண்பித்து.
அதை பார்த்த நர்ஸ் வேகமாய் சென்று மருத்துவரை கூட்டி வந்தாள்.
"நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. இன்னும் பேசுங்க கண்ணு மட்டும் முழிச்சிட்டாங்க. இனி பயப்பட தேவையில்லை" என்று வெளியேறினார்.
"நான் ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்" என்றதும் அனைவரும் வெளியேறினர்.
மெதுவாய் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவன் மனதின் எண்ணங்களை முழுவதுமாய் கூறி முடித்து கண்ணீருடன் எழுந்து வெளியே வந்தான். அதனால் தானோ அவன் பின்னே அசைந்த அவளின் விரல்களை காணாமல் விட்டுவிட்டான்.
நேராக அமுதனிடம் வந்தவன், "அமுதன் இனி சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டார்ல... நீங்களும் ஸ்ரீஷாவும் இங்க இருந்து பார்த்துக்கோங்க. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு" என்று வேகமாய் வெளியேறினான்
"என்னடா இவன்?" என்று இருவரும் ஓன்றும் புரியாமல் பார்த்தனர்.
மீண்டும் திஷா தான் பிஞ்சு இதழ்களை வைத்து பேசும் அழகை கேட்டதனாலே பிழைத்து வரவேண்டுமென்று முடிவோடு போராடி மீண்டு வந்தாள் மிருதி.
அவளின் விழி திறந்து பார்க்க, "அம்மா! அம்மா!" என்று குதித்தது குழந்தை. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க, மருத்துவரும் பரிசோதித்துவிட்டு, "இனி பயமில்லை இருந்தாலும் கேர்புல்லா பார்த்துக்கணும்" என்று சென்றுவிட்டார்.
அமுதன் மிருதி கண்விழித்ததை கூற தீரனுக்கு முயற்சிக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.
மறுநாளில் இருந்து மிருதியின் வேலைகளையும் அவன் வேலைகளையும் ஒன்றாய் அவனே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அமுதனும் ஸ்ரீஷாவும் எவ்வளவு வற்புறுத்தியும் மிருதியாய் காண மறுத்துவிட்டான்.
நேரம் கிடைக்கும் பொழுதும் மருத்துவமனை செல்பவன் மிருதியின் அறை வாசலிலே அமர்ந்து கொள்வான்.
அறை கதவின் கண்ணாடி வழியே அவளை கண்ணீரோடு கண்டு உள்ளே செல்லாமல் வீடு திரும்பி விடுவான்.
அவளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்று பரபரக்கும் கரங்களையும் எங்கும் உள்ளத்தையும் வெகு சிரமப்பட்டு அடக்கி கொள்வான்.
அடுத்த பத்து நாளில் மிருதி ஓரளவு தேரியிருந்ததால் நாளை டிஸ்சார்ஜ் என்று மருத்துவர் கூறி சென்றதும் மிருதிக்கு ஒரே ஆனந்தம்.
******
அனைவரும் ஏன் பதிவு போடவில்லை என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்.
சமீபகாலமாக என் வலது கரத்தில் அடிக்கடி வலி ஏற்படுவதால் பதிவு செய்ய முடியவில்லை.
ஏதோ முயற்சி செய்கிறேன். மன்னிக்க வேண்டும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top