தீயாய் சுடும் என் நிலவு 44
இரு கரம் கூப்பி இறைவனை உள்ளத்தில் உள்வாங்கி கண்ணீர் வழிய விழிமூடாது மனமுருகி வேண்டி கொண்டிருந்தான் தீரன்.
அருகிருந்த தூணில் சாய்ந்து விழிமூடி அமர்ந்தவன் மனம் முழுவதும் மிருதியின் உடல், நலம் பெற வேண்டுமென்று வேண்டுவதில் மட்டுமே இருந்தது.
"கடவுளே யாருக்குமே தீங்கு நினைக்காத நல்ல பொண்ணு என் மிருதி. அவ எந்த பாவமும் செய்யாத பொழுது எதுக்கு இந்த தண்டனை. என் திஷா அவ அம்மா இல்லாம எப்படி இருப்பா. என் ஆயுளை எடுத்துக்கோ என் மிருதி நல்லபடியா குணமாகி வரனும். நான் செஞ்ச தப்புக்கு தான் அவ என் மேல கோபமா இருக்காளே தவிர வேற எதுவுமே இல்ல. என் மேல உயிரையே வச்சிருக்கா. எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷத்தை வச்கு காக்க தெரியாத ஜடமா இருந்திருக்கேன் இத்தனை நாள். அவளை என் உள்ளங்களில வச்சு தாங்கணும்னு ஆசையா இருக்கு. ஒரே ஒரு முறை எனக்கு அந்த வாய்பை கொடுங்களேன்." என்று மனமார மன்றாடி கொண்டிருந்தான்.
இவனின் வேண்டுதல் அங்கே இறைவனுக்கு கேட்டு விட்டதோ என்னவோ? அவனை மேலும் சோதிக்க நினைத்து சிரித்தாரோ என்னவோ யார் அறிவார்???
அங்கே மிருதியின் பூ உடல் பூகம்பமாய் தூக்கி போட ஆரம்பித்தது.
மருத்துவர்களும் பதறி போய் அவளுக்கு தேவையான சிகிச்சைகளை அவசரகதியில் பதட்டமாய் செய்து கொண்டிருந்தனர்.
நீண்ட நேரம் போராடியும் அவளின் உடல் சமாதானம் அடைந்த பாடில்லை.
மிருதியின் அறை வாசலில் நின்று கொண்டிருந்த அமுதனுக்கும் ஸ்ரீஷாவிற்கும் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை.
மருத்துவர்களும் செவிலியர்களும் மாற்றி மாற்றி அறைக்கு உள்ளேயும் வெளியேவும் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்ததை கண்டு மிகவும் பயந்திருந்தனர்.
"அமுதா. மாமாக்கு போன் பண்ணு." என்றாள் ஸ்ரீஷா.
"எதுக்குடா?" என்றான் அவனும் கவலையான குரலில்.
"என்ன எதுக்கு? இங்க அக்காக்கு திடீர்னு என்ன நடக்குதுன்னே தெரியலை. மாமா இங்க இருக்க வேண்டாமா?" என்றாள் கோபமாய் ஸ்ரீஷா.
"இல்லடா. மிருதிக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு ஏற்கனவே அவரே ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்காரு. இதுல நாம இப்போ போன் பண்ணனுமா?" என்றான் தயக்கமாக.
தெய்வத்தின் முன் மண்டியிட்டு மனதால் கதறிக்கொண்டிருந்த தீரனுக்கு மனதில் சிறு நெருடலும் அதை தொடர்ந்து படபடப்பும் தோன்ற வேகமாய் எழுந்து மின்னலென மருத்துவமனை நோக்கி ஓடினான்.
"இருந்தாலும் மாமாக்கு சொல்லனும். நீங்க முதல்ல போன் பண்ணுங்க.." என்று முடிக்கும் முன்னரே மூச்சு வாங்கியபடி அவர்களின் முன் வந்து நின்றான்.
"என்னாச்சு ஸ்ரீ? மிருதி நல்லா இருக்காள்ல?" என்று கேட்டுக்கொண்டே வியர்வையில் நனைந்திருந்த முகத்தை துடைத்தான்.
"இல்ல மாமா. அதுவந்து அக்காக்கு..." என்று முடிக்காமல் பதட்டமாய் இழுக்க, தீரனுக்குள் பூகம்பமே வெடிப்பது போல் இருந்தது.
"என்ன ஏன் தயங்குற? மிருதிக்கு என்ன?" என்று கேட்டுக்கொண்டே மிருதியின் அறைமுன் நின்றான்.
அறை கதவின் கண்ணாடி வழியே எட்டி பார்க்க அவனுக்கு தூக்கிவாரி போட்டது.
"அய்யய்யோ எதுக்கு மிருதிக்கு இப்படி ஆகுது? அமுதா ஏன் டாக்டர்ஸ் எதுவும் பண்ணாம இருக்காங்க?" என்று கதற, "மிருதிக்கு எதுவும் இல்லை தீரன். நீங்க இப்படி அழுதா அவளுக்கு எப்படி சரியாகும்?" என்று ஆறுதல் கூறினான் அமுதன்.
இருபது நிமிடங்கள் கடந்திருக்க மிருதியின் உடல்நிலையோ தொடர்ந்து அவ்வாறே இருக்க, பொறுக்க முடியாமல் தடுப்புகளையும் மீறி உள்ளே நுழைந்தான்.
"சார் நீங்க உள்ள வரக்க கூடாது. ப்ளீஸ் வெளியே இருங்க" என்று நர்ஸ் கூறுவதை காதில வாங்காமல் உள்ளே சென்றான்.
"நர்ஸ்" என்று டாக்டர் கத்த,
"டாக்டர் ... ப்ளீஸ் ஒரே ஒரு முறை நான் அவகிட்ட பேசுறேன்" என்று அவரின் முன் மண்டியிட, "என்ன சார் நிலவரம் புரியாம பேசறீங்க? ப்ளீஸ் முதல்ல வெளிய போங்க. அவங்களை காப்பதணும்ல எங்களை ட்ரீட்மெண்ட் செய்ய விடுங்க" என்றார் கடுமையாக.
"ப்ளீஸ் டாக்டர். ரெண்டே ரெண்டு நிமிஷம். நானும் அவளுக்காக தான் கேட்கிறேன். அதுக்கு பிறகு நான் வெளிய போய்டறேன்" என்று காலை பிடித்துக்கொண்டு கெஞ்சும் தீரனை பார்க்க மருத்துவருக்கே பாவமாய் இருக்க தாமதிக்காமல், "சரி ரெண்டே ரெண்டு நிமிஷம் மட்டும் தான்" என்று மருத்துவரும் செவிலியர்களும் விலகி நின்றனர்.
அவளின் முன் மண்டியிட்டு கரங்களை பற்றி இதழ் பதித்து அவளின் காதருகே பேச தொடங்கினான்.
"மிரு..." என்ற அவனின் குரலுக்கே அவளின் மூடிய விழிகளில் கண்ணீர் வழிய, "மிரு.. எனக்கு தெரியும் நான் பேசுறது உன் காதுல விழுகுது.நீ கேட்டுட்டு இருக்க.
அம்மு. உனக்கு என் மேல தான கோபம். ஆனா உன்னையே நம்பி ஒரு உயிர் காதோடு இருக்கே. அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன். அம்மா எங்கப்பா ன்னு என்கிட்ட கேட்கிறாளே என்ன சொல்லட்டும்.
நீ என்னை மன்னிக்க வேண்டாம். தப்பு தான் உனக்கு தெரியாம இந்த ஏற்பாடு பண்ணது. நீ இல்லன்னா நாங்களும் இல்ல மிரு.
உனக்கு பிடிக்கலைன்னா இனி நீ இருக்க பக்கம் கூட நான் வரமாட்டேன். தயவு செஞ்சு வந்துரு மிரு. உன்னோட பொண்ணுக்காகவாது இதிலர்ந்து சீக்கிரம் மீண்டு வந்துருடி. உன்னால முடியும்.." மீண்டும் அவளின் கரத்தில் இதழ் பதிக்க அவளின் சொற்கள் அவளுக்கு கேட்டது போல அவளின் உடல் மெல்ல அமைதியடைந்தது.
இதை கண்ட தீரனுக்கு நிம்மதி பெரு மூச்சு வர எழுந்து மருத்துவரை பார்த்து கண்ணீருடன் கரம் கூப்பினான்.
"ரொம்ப நன்றி டாக்டர்" என்று வெளியே சென்று நாற்காலியில் விழிமூடி அமர்ந்து கொண்டான்.
அங்கிருந்த அனைவரும் அவனையும் மிருதியையும் ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தனர்.
"இன்னும் ரெண்டு நாள் ஐ. சி.யூ ல தான் இருக்கணும். இன்னும் அபாய கட்டத்தை தாண்டலை. எதுவும் ஆகாதுன்னு கடவுளை வேண்டிப்போம். கண் திறக்கலைன்னா அடுத்து கோமா தான் " என்று சென்று விட்டார்.
அமுதனும் ஸ்ரீஷாவும் அதிர்ச்சியாக ஒருவரை பார்த்துக்கொண்டனர்.
அதன் பின்னர் மிருதியின் அரை வாசலிலேயே இருந்தான் தீரன்.
"நீங்க மட்டும் எப்படி இருப்பீங்க? நாங்க போகலை. இங்கயே இருக்கோம்." என்றான் அமுதன்
"ஆமா மாமா. நான் போகமாட்டேன்" என்று ஆடம் பிடித்து கொண்டிருந்தாள் ஸ்ரீஷா.
"ஸ்ரீ மா. பாப்பா வீட்ல இருக்கா. அம்மாவால நான் இல்லாம சமாளிக்குறது கஷ்டம்டா. நீங்க இருந்திங்கன்னா அமைதியா இருப்பா. அதுவுமில்லாம காலைலர்ந்து இங்கயே இருக்கிறது டையர்ட்டா இருக்கும். வீட்டுக்கு போய் குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. காலைல வாங்க" என்று இரவு அமுதனையும் ஸ்ரீரிஷாவையும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அவர்களும் அவனை சாப்பிட வைத்த பின்னரே வீட்டிற்கு சென்றனர்.
அவ்வப்பொழுது கண்ணாடி வழியே மிருதியை பார்த்து கொண்டே இருந்தான் தீரன்.
இரவு முழுவதும் உறங்காமல் அதிகாலையில் அமர்ந்தபடியே உறங்கி போனான்.
இரண்டு நாட்களுக்கு இப்படியே கடந்து போக டாக்டர் விதித்த கெடு படி இன்று மிரு கண் விழித்தாக வேண்டும்.
நார்மல் அறைக்கு மாற்றியிருந்தார்கள் மிருதியை.
எல்லோரும் அவள் கண்விழிக்க வேண்டுமென்ற தவிப்பிலும் பயத்திலும் அமர்ந்திருக்க தீரன் மட்டும் அமைதியாய் இருந்தது இருவருக்கும் வினோதமாய் இருந்தது.
மாலையும் வந்தது.
மருத்துவரும் வந்தார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top