தீயாய் சுடும் என் நிலவு 43
திஷாவை கூட்டி கொண்டு வீட்டினுள் நுழைய, குழந்தையை கண்ட மிருதி ஓடி சென்று அனைத்து கொண்டாள்.
சிலநொடிகளில் தான் தான் குழந்தையை அணைத்திருக்கிறோம் அவள் சிலை போல் நிற்பதை கண்டு அதிர்ச்சியாகி, "பாப்பா! என்னடா?" என்று கேட்க எதுவும் பேசாமல் விலகிய திஷா.
"ஸ்ரீ மா. வாங்க அங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று ஸ்ரீஷாவின் கரத்தை பற்றி அழைக்க அவளே ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்.
"ஏன்டா தங்கம். அப்பா உங்களை இங்க என்கூட தான் இருக்க சொன்னார். அப்பா வாட்டும் ங்க கூட்டிட்டு போய் விடறேன் சரியா?" என்று கேட்டாள்.
மிருதியை ஒரு நொடி திரும்பி பார்த்த திஷா, " சரி ஸ்ரீ மா. அப்போ உன் ரூம்ல நான் இருக்கேன்" என்று அவள் அறைக்குள் சென்று விட்டது.
குழந்தையின் நிராகரிப்பு மிருதியின் மனதை வெகுவாய் பாதித்தது.
அதே இடத்தில் தரையில் மடங்கி அமர்ந்து அழ தொடங்க, வேகமாக அவளை அணைத்து கொண்டு" விடுங்கக்கா.. சின்ன குழந்தை அவளுக்கு என்ன தெரியும்?" என்று தேற்றினாள்.
"இல்ல ஸ்ரீ. அவ சின்ன குழந்தையில்ல. என் மேல எவ்ளோ வெறுப்பு இருந்தா என்னை பார்த்து பேசாம போவா" என்று கண்ணீர் சிந்த.
"அதெல்லாம் ஒன்னுமில்ல. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். " என்று சமாதானம் செய்தபின் திஷாவிடம் சென்றாள்.
நோட்டில் ஏதோ ஒரு படத்தை வரைந்து வண்ணங்கள் அடித்து கொண்டிருந்த திஷா, இவளை கண்டதும் "அப்பா வந்துட்டாரா ஸ்ரீ மா. போலாமா?" என்று கேட்டாள்.
"இல்லடா இன்னும் அப்பா வரலை. சரி நீ ஏன் அம்மாகிட்ட பேசலை? அம்மாவை பிடிக்காதா உனக்கு?" என்றாள்.
"எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் ஸ்ரீ மா. அதான் பேசலை" என்றால் திஷா.
"என்னடா சொல்ற?" என்று கேட்கவும்.
"உங்களுக்கு தெரியுமா ஸ்ரீ மா. தினமும் நைட் அப்பா அம்மாவை நினைச்சு அழறாங்க. அம்மா ஏன் என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க" என்று கண் கலங்கியது.
"அழக்கூடாது. எல்லாம் சரி ஆகிடும்" என்று அவளுக்கு உணவளித்து உறங்க வைத்தாள்.
பின் தீரன் திஷா வை கூடி வருமாறு கூற, தூங்கும் குழந்தையை உறக்கம் கலையாமல் கொண்டு கிடத்தி வந்தாள்.
மறுநாள்,
"அக்கா! எங்க டாக்டர் கிட்ட கேட்டு உங்களுக்கு பத்து நாளைக்கு டையட் சார்ட் வாங்கிட்டு வந்துருக்கேன். இன்னைலர்ந்து நான் தான் தருவேன். நீங்க என்ன சாப்பிடனும்னு" என்றாள் ஸ்ரீ.
"எனக்கு எதுக்குடா?" என்று கேட்க.
"அதெல்லாம் எனக்கு தெரியாது நம்ம ரெண்டு பேருக்கும் இதே டையட் தான்" என்று இரண்டு நாளும் மறுத்துவர் கூறியவற்றை மிருதிக்கு சந்தேகம் வராத வண்ணம் செயல் படுத்தினாள்.
"அக்கா நாளைக்கு காலைல என் பிரென்ட் ஹாஸ்ப்பிட்டல்ல ப்ளட் டொனேட் பண்றாங்க. நான் போய்ட்டு வந்திடறேன்" என்றாள் ஸ்ரீஷா.
"பிளட் கேம்ப் பா. நானும் பிளட் கொடுப்பேன். நாணும் வரேன் ஸ்ரீ" என்றாள் மிருதி.
"சரிக்கா" என்று உள்ளே சென்றவள்.
"என் வேலை முடிந்தது" என்று குறுந்செய்தி அனுப்பினாள் தீரனுக்கு.
"சரி பார்ப்போம்" என்றான் அவனும்.
மறுநாள், இருவரும் தயாராகி மருத்துவமனை சென்றனர்.
"என்ன யாரையும் காணோம்" என்றாள் மிருதி.
"இந்த டைம் ல ஒரே இடத்துல கூட்டம் ஸ்ரேயா மாட்டாங்க. தனி தனியா தான் எடுக்கிறாங்க." என்று தீரன் கூறிய அறையில் மிருதியை கொண்டு சேர்த்தாள்.
அங்கு மருத்துவர் பொதுவான கேள்விகளை கேட்டு பின் ஊசியை போடவர, "எதுக்கு ஊசி?" என்றாள்.
"பிளட் கொடுக்கிற எல்லாருக்கும் ஊசி போட்டுடி தான் எடுக்க சொல்லிருக்காங்க" என்று ஸ்ரீயின் தோழி நர்ஸ் கூற ஊசியை அமைதியாய் போட்டு கொண்டாள்.
சற்று நேரம் கழித்து கண்கள் ஏனோ சுழவது போல் இருக்க, "ஏன் எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு?" என்றாள் அரை மயக்கத்தில்.
அந்நேரம் உள்ளே நுழைந்தால் அமுதன்.
"என்ன அமு நீ இங்க?" என்றாள் ஆச்சரியமாய்.
"பிளட் கேம்ப் இல்ல. அதான் பிளட் கொடுக்க வந்தேன்" என்றான். அவனின் பேச்சை கேட்கும் முன்னே மயக்க நிலைக்கு சென்றாள் மிருதி.
அடுத்த சில நிமிடங்கள் அனைவரும் வேகமாய் செயல் பட, தீரனும் சேர்ந்து கொண்டான்.
"மாமா பாப்பா!" என்றாள் ஸ்ரீஷா.
"அம்மா வந்துருக்காங்க. அவங்ககிட்ட இருக்கா." என்றான் லேசான பதட்டத்துடன்.
"எதுவும் ஆகாது தீ நல்லா இருப்பா. டென்சன் ஆகாதிங்க" என்று அமுதன் தோளை தட்டி கொடுத்தான்.
அனைத்து இறைவனையும் வேண்டி கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
நான்கு மணி நேரம் கடந்துருக்க, எவருமே வெளிவராத நிலையில் தீரனுக்கு உயிரே போய் விடுவது இருந்தது.
மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
அரைமணி நேரம் சென்ற பின் வெளி வந்த மருத்துவர்.
"ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது.. இருந்தாலும் ஆனா இன்னும் அபாயகட்டத்தை தாண்டலை. அவங்க இன்னும் ஐ.சி.யூ ல தான் இருக்கணும். மூணு மணி நேரத்துக்குள்ள அவங்க ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னா கோமாவுக்கு போறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சிருக்கோம். இதுக்கு மேல கடவுள் விட்ட வழி" என்று சென்றுவிட்டார்.
தீரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் பயமாக இருந்தது.
மிருதியின் முகத்தை கையில் ஏந்தி எழுப்ப வேண்டும் போல் தோன்றியது.
"நான் கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரேன்." என்று கீழே இருந்த கோவிலில் வந்து கண்மூடி அமர்ந்து கொண்டான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top