தீயாய் சுடும் என் நிலவு 41

'என்னது இது?' என்று நினைத்துக்கொண்டே அதில் இருந்தவற்றை பிரித்து பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.

"என்ன தீரன் இது? எப்படி நமக்கு தெரியாம போச்சு?" என்று எழுந்தே விட்டான்.

"உட்காருங்க அமுதன். ஸ்ரீ நீயும் பாரு" என்று அவளை பார்த்தான்.

சரியென்று தலையசைத்து விட்டு எடுத்து பார்த்தவளும் அதிர்ந்து போனாள்.

"மாமா" என்று பார்க்க வேதனை புன்னகை ஒன்றை உதிர்த்தவன் மீண்டும் வேறு ஒரு பைலை எடுத்து நீட்டி.

"இதைவிட சுவாரசியமான விஷயம் ஒன்னு இருக்கு. பார்க்குறிங்களா?" என்று அங்கிருந்த மேசையின் மேல் வைத்தான்.

நடுங்கும் கரத்தோடு மேலும் குழப்பத்துடன் அந்த பைலை எடுத்து பார்த்தவன் விழிகள் அதில் நிலைகுத்தி நின்றன.

"தீரன் இது..? " என்று அதிர்ச்சியாய் விழிகளில் நீர் ஊற்றெடுக்க  அவனை நோக்கினான்.

"100% உண்மை. நல்லா விசாரிச்சுட்டேன்." என்றான் தீரனும் கலங்கி.

"எப்படி நாம எல்லோருமே கூட தானே இருக்கோம். நமக்கு எப்படி தெரியாம போனது." என்றான் இரு கரங்களிலும் முகத்தை பதிந்து கொண்டு.

"அமுதா" என்று பதறியபடி அவன் தோளில் கரம் வைத்து, "என்னாச்சு அமுதா? அதுல என்ன இருக்கு?"  என்றாள் ஸ்ரீஷா.

சிலநொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன் நிமிர்ந்து அவளை நோக்கி, "ஹ்ம்! உங்க அக்காவோட மரணஓலை" என்றான் விழிகளில் கோபம் தெறிக்க

"என்ன சொல்றிங்க? அக்காக்கு என்ன? " என்று அவனருகில் இருந்த பைலை எடுத்து பார்த்வள்,

"மாமா! " என்று அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.

"எனக்கும் அப்படி தான் இருந்துச்சு ஸ்ரீ. உங்க அக்கா என்னை வேலை செஞ்சுருக்கா பார்த்தியா?" என்றான் விழிகளில் நீரோடு.

"இப்பயே போய் ரெண்டு அரை பளார் கண்ணத்துல கொடுக்கணும் போல இருக்கு. ஆனா நமக்கு தெரிஞ்சிருச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சுதுன்னா நிச்சயமா யோசிக்காம யாருக்கும் சொல்லாம இங்கிருந்து கிளம்பிடுவா" என்றான் தீரன்.

"உங்களுக்கு எப்போ தெரிஞ்சுது?" என்று கேட்டான் அமுதன்.

"எனக்கு டைவர்ஸ் வாங்கிட்டு கோர்ட்லர்ந்து வெளிய வந்தப்போ அவன் கண்ல தெரிஞ்ச ஏதோ ஒன்னு அவளை தொடர்ந்து போக சொல்லியது. அவளுக்கு தெரியாம பின் தொடர்ந்து போனப்ப தான் தெரிஞ்சுது" என்றான் தீரன்.

"மாமா! ப்ளீஸ் கொஞ்சம் விவரமா சொல்லுங்க" என்றாள் ஸ்ரீஷா.

"சொல்றேன் டா." என்று இருவரையும் சிலநொடிகள் பார்த்த தீரன் பின் மெல்ல தொடர்ந்தான்.

"நான் பின்தொடர்ந்து போனப்ப உங்கக்கா போன இடம் ஒரு வக்கீலோட வீடு. எதுக்கு இவ திடீர்னு வக்கீல் வீட்டுக்கு போறான்னு யோசனையா இருந்தது. டைவர்ஸ்காகன்னா ஏற்கனவே வாங்கியாச்சு. அதுவுமில்லாம அந்த வக்கீல் வேற ஒருத்தர். இவர் வேற ஆளா இருக்காரேன்னு சந்தேகம் வந்து விசாரிச்சப்ப அந்த வக்கீல் வாயே திறக்கலை. எனக்கு என்ன செய்றதுன்னு புரியாம குழம்பிட்டு இருந்தப்ப என் நெருங்கிய நண்பனோட அண்ணன் வக்கீல் தான்னு ஞாபகம் வந்து அவரிடம் இதுபற்றி கேட்டப்ப மிருதி பார்த்த வக்கீல் இவருக்கு தெரிஞ்சவர்னு அவர்தான் உங்க அக்காக்கு தெரியாம எல்லாவற்றையும் விசாரிச்சு சொன்னார்." என்று நிறுத்தினான்.

"என்ன சொன்னார்?" என்று புருவம் சுருக்கி கேட்டான் அமுதன்.

"எனக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கும் அவளுக்கு சேர வேண்டிய எல்லா சொத்தையும் மாற்ற முடியுமான்னு கேட்டு முடியும்னு தெரிஞ்சு உயில் எழுதி வச்சிருக்கா. ஒருவேளை அவள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து இறந்துட்டா அவளுக்கு சேரவேண்டிய எல்லா சொத்துமே எனக்கும் திஷாவுக்கும் தான் போய் சேரணும்னு எழுதி வச்சிருக்கா." என்றான் அழுது அழுது முகம் வீங்கி.

"எதுக்காக தி உங்க பேர்ல எல்லாவற்றையும் எழுதி வைக்கணும்?" என்ற அமுதனை பார்த்து சிரித்தவன்.

"அதான் பார்த்திங்களே ரிப்போர்ட்ல? அவளுக்கு ப்ரைன்ல பிளட் களாட்ஸ் இருக்கு."  என்றவன் ஸ்ரீஷாவை பார்த்து, "நம்ம வீட்டுக்கு நான் வந்தப்ப அவளுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இடையில் நான் சென்னை வந்திருந்தப்ப ரொம்ப தலைவலிக்குதுன்னு  டெஸ்ட்  எடுத்து பார்த்துருக்கா. அப்போ தான் தெரிஞ்சுருக்கு. ஆபரேஷன் செஞ்சா பிழைக்க 50% தான் சான்ஸ் இருக்குன்னும் பத்து முதல் பன்னிரெண்டு லட்சம் செலவு ஆகும்னு சொல்லிருக்காங்க. டாக்டர்ஸ் இப்படி சொன்னதும் இவங்க தான் பெரிய தியாகியாச்சே அதான் பிழைக்கும்வோம்னு உத்திரவாதம் இல்ல. பிறகு எதற்கு ட்ரீட்மெண்ட்னு முடிவு செஞ்சு என்னையும் பக்கத்துல நெருங்க விடாம இவ்ளோ வேலை செஞ்சுருக்கா. அவ இல்லாம நாங்க எப்படி இருப்போம்?" என்று கண்கள் கலங்க குலுங்கினான்.

"இப்ப என்ன செய்யலாம் தீரன்?" என்றான் அமுதன்.

"நீங்க ரெண்டு பேரும் எனக்கு உதவி செஞ்சா இதை சரிசெய்ய முயற்சிக்கலாம்." என்றான் தீரன்.

"என்ன செய்யணும் சொல்லுங்க? கண்டிப்பா செய்கிறோம்" என்றனர் இருவரும் சேர்ந்து.

"மிருதி பார்க்கின்ற டாக்டரை பார்த்து அவளுக்கு தெரியாம எல்லாவற்றையும் பற்றி பேசிட்டேன். இப்போ நாம செய்யவேண்டியது மிருதியை ஹாஸ்ப்பிடலில் ஆப்ரேஷன் செய்ய கொண்டு சேர்க்கனும்" என்றான்.

"அப்போ ஆப்ரேஷன் செய்ய தேவையான தொகை?" என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

"நான் இவ்ளோ நாள் எதுக்கு சென்னைல இருந்தேன்னு நினைச்சீங்க? இதுக்கு தான். ஊர்ல இருந்த சொத்துல கொஞ்சம் சொத்தை விற்றுவிட்டு பணத்தோடு வந்திருக்கிறேன்." என்றான் தீரன்.

இதை கேட்டதும் அமுதனுக்கும் ஸ்ரீஷாவிற்கும் விழிகள் கலங்கினர்.

"சரி. அடுத்து என்ன செய்யணும்னு சொல்லுங்க?" என்றான் அமுதன்.

"என்னோட பிளான்படி பதினைந்து நாளுக்கு முன் மிருதி செக் அப் போனப்ப ஆப்ரேஷனுக்கு தயாராகுற மாத்திரைகள் கொடுத்தாச்சு" என்றவுடன் விழிகளை விரித்து அவனை பார்த்தாள் ஸ்ரீஷா.

"மாமா டாக்டர் எப்படி சம்மதிச்சாங்க?" என்று ஸ்ரீஷா கேட்கவும் லேசான புன்னகையை உதிர்த்து, "முதல்ல முடியவே  முடியாதுன்னு சொல்லிட்டாரு. பிறகு எல்லாவற்றையும் எடுத்து கூறி இரண்டு நாள் அவரிடம் மிகவும் கெஞ்சி தான் சம்மதிக்க வைத்தேன்." என்றான் தீரன்.

"அக்காவை நல்லபடியா அந்த கடவுள் தான் காப்பாற்றி தரனும்" என்றாள் ஸ்ரீஷா.

"நிச்சயமா எதுவும்  மிருதியை என் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவேன். அவளுக்கு எதுவும் ஆகாது." என்றான் தீரன்.

"தி ஏன் இப்படி செஞ்சா? யாருகிட்டயுமே எதுவும் சொல்லாம இருந்திருக்கிறாளே?" என்றான் அமுதன் வேதனையாய்.

"நம்ம யாருக்குமே தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு தான் அவளே நம்மளை விட்டு விலகி இருந்தா" என்றான் தீரன்.

"சரி மாமா டாக்டர்ஸ் எப்போ டேட் கொடுத்திருக்கங்க? எப்படி இதை நடத்தபோறோம்?" என்றாள் ஸ்ரீஷா.







Bạn đang đọc truyện trên: AzTruyen.Top