தீயாய் சுடும் என் நிலவு 40

உறங்கியவன் கண் விழித்ததும் தேடியது மிருதியை தான். அவனை ஏமாற்றாமல் எதிரில் வந்து நின்றாள்.

"இப்போ எப்படி இருக்கு?" என்றாள் மெதுவாய்.

பதில் கூற மனம் விழைந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான், ஆனால் களைப்பில் மீண்டும் தள்ளாடியபடி மெத்தையில் அமர,

"என்னாச்சுங்க பார்த்து?" என்று நெருங்கியவளை தடுத்தது அவனின் வார்த்தைகள்.

"எனக்கு இப்போ பரவால்ல. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. இனி உங்க உதவி வேண்டாம். நீங்க போகலாம்" என்றான் குனிந்த தலை நிமிராமல்.

அவனின் வார்த்தையில் சம்மட்டியடித்தாற்போல் மிருதி நின்றுவிட விழிகள் லேசாய் கலங்கியது.

"இன்னும் முழுசா நீங்க குணமாகல... பார்த்துக்கோங்க" என்று திரும்பிப்பாராமல் வேகமாய் வெளியேறினாள்.

அவள் சென்றவுடன் மனம் தவிக்க ஆரம்பித்தது.

'அவ பார்க்க மாட்டாளான்னு ஏங்க வேண்டியது. இப்போ உனக்காக இங்க இருந்தா போ போன்னு துரத்த வேண்டியது.' என்று மனம் கடிந்துகொள்ள.

'எனக்கு மட்டும் ஆசையா என்ன? மிருவை என் உள்ளங்கைல பொத்தி வச்சுக்கணும்னு மனசு கிடந்து அல்லாடுது... ஆனா என்ன செய்ய? அதுக்கு இன்னும் நேரம் வரலை. எங்ககூட இருக்க முடியலைன்னு அவ வருந்தனும். அப்போ தான் இதெல்லாம் சரியாகும்' என்று தனக்குள் தர்க்கம் நடந்துகொண்டிருக்க அவனுக்கு வந்த அலைபேசியின் செய்தி அதை தலைகீழாக்கி நிலைகுலைய செய்தது.

"நல்லா செக் பண்ணிட்டீயா? உண்மை தானே?" என்றான் முக இறுக்கத்துடன்.

"ஆமா. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எவ்ளோ சீக்கிரம் முடியமோ அவ்ளோ சீக்கிரம்" என்ற எதிர்முனையின் பரபரப்பில் இவன் ஆட்டம் கண்டு தான் போனான்.

"சரி. இன்னைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு பார்க்கிறேன். எனக்கு இப்போவே எல்லாத்தையும் மெயில் பண்ணு" என்றான்.

"ஸ்ரீஷா" என்றவனின் குரலில் தெரிந்த மாற்றம் அவளை கவலை கொள்ள செய்தது.

"மாமா! என்ன மாமா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அக்கா அழாதகுறையா டென்ஷனா பேசினா? நீங்க இப்போ திடீர்னு போன் பண்றிங்க? அக்கா எங்க?" என்றாள் ஸ்ரீஷா.

"எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். நான் உண்கிட்டயும் அமுதன்கிட்டயும் பேசணும். இன்னும் ரெண்டு மணிநேரத்துக்குள்ள நீ அமுதன் வீட்டுக்கு வந்துடும்மா." என்றான் தீரன்.

தூக்கிவாரி போட்டது ஸ்ரீஷாவிற்கு.

"என்ன மாமா? ஏதாவது முக்கியமான விஷயமா? நீங்க இவளோ சீரியசா பேசி நான் பார்த்தது இல்லையே" என்றாள் பதட்டமாக.

"அதெல்லாம் ஒன்னுமில்லைடா. ஆமா ரொம்ப முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேன் வா. உங்க அக்காக்கு எதுவும் தெரியக்கூடாது இப்போ வைக்கிறேன்" என்று வைத்தான்.

அடுத்து அமுதனுக்கு போன் செய்தவன்.

"அமுதா! ரொம்ப முக்கியமான விஷயம். ஸ்ரீஷாவும் வரா. உன் பிரெண்டுக்கு எதுவும் சொல்லாத. நானும் வரேன்." என்று வைத்தான்.

அமுதனும் ஸ்ரீஷாவும் தான் என்னவாக இருக்கும் என்று குழம்பி போயினர்.

******

'அவருக்கு எப்படி இருக்கு தெரியலையே?' என்று வீட்டுக்குள் நடை நடந்து கொண்டிருந்தாள் மிருதி.

"ஹலோ! ஸ்ரீ. உன் மீட்டிங் முடிஞ்சுதா?" என்றாள் மிருதி.

"முடிஞ்சுதுகா. மாமாக்கு எப்படி இருக்கு? சாப்பிட்டாரா? நீங்கி சாப்பிட்டீங்களா?" என்றாள் ஸ்ரீஷா அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள.

"ஹம். கொஞ்சம் குறைஞ்சிருக்கு. சாப்பிட்டார். ஆனா.." என்று முடிக்காமல் இழுத்தபடி நிற்க.

"ஆனா என்னக்கா?" என்றாள் எதுவோ நடந்திருக்கு என்பதை.

"ஹ்ம்ம்.. கொஞ்ச தேறினவுடன் உன் மாமனுக்கு திமிர். எனக்கு உடம்பு சரியாகிடுச்சு. நீ போடின்னு சொல்லிட்டாரு" என்றாள் மிருதி சிறுகுழந்தை குற்றம் சாட்டுவது போல்.

"அப்படியா சொன்னாரு?" என்று சிரித்தாள் ஸ்ரீஷா.

" என்னடி சிரிக்கிற? உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீ உன் மாமனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ." என்றாள் வெடுக்கென்று.

"ஆமா ஆமா. சரி அமுதன் வீட்டுக்கு போறேன். வர லேட் ஆகும்கா. யாதவ் சொல்லத்தான் போன் பண்ணேன்." என்றாள்.

"சரி போய்ட்டுவா. பத்திரம்" என்று வைத்தாள் மிருதி.

*******

அஞ்சு மணி தீரன் அமுதன் வீட்டில் ஸ்ரீஷாவிற்காக காத்திருந்தான்.

"சாரி மாமா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு." என்று உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"எப்படி மா இருக்க?" என்று புன்னகைத்தான் தீரன்.

"நல்லா இருக்கேன் மாமா. எங்க இவங்க ரெண்டு பேரையும் காணமே?" என்றாள் விழிகளை சுழவிட்டபடி அமுதனை தேடிக்கொண்டே.

"அவங்க ரெண்டு பேரும் கிச்சன்ல என்னவோ பண்றாங்க" என்றான் மகளை பற்றி நினைத்து லேசாக புன்னகைத்து.

அவன் வீட்டிற்கு வந்ததும், "அப்பா!" என்று ஓடி வந்து கட்டிக்கொண்ட மகளை கண்டதும் கவலைகள் சிலநொடி ஒட்டமெடுத்தது.

"உங்களுக்கு இப்போ பீவர் எப்படி இருக்கு தீரன்?" என்று அமுதன் கேட்கவும் "அப்பா! உங்க... ளுக்கு என்ன... பா?" என்று தந்தையின் நெற்றியையும் கழுத்தையும் மாற்றி மாற்றி தொட்டு பார்த்த மகளின் அன்பில் விழிகள் கலங்க உள்ளம் குளிர்ந்தது தீரனுக்கு.

"எனக்கு இப்போ பரவால்ல டா." என்று கூறினாலும் தீரனின் லேசான தள்ளாட்டத்திலும் முக சோர்வையும் கண்டு கொண்ட அமுதன். வெந்நீர் வைத்து குடிக்க வைத்தான்.

"இவ்ளோ உடம்பு முடியல உங்களுக்கு. ரெஸ்ட் எடுத்துருக்கலாம்ல? நாளைக்கு பேசியிருக்கலாமே? என்ன அவ்ளோ அவசரம் தீரன்? இல்ல கண்டிப்பா பேசியே ஆகணும்னா நான் வந்திருப்பேன்ல?" என்றான் தீரன்.

வறட்சி புன்னகை ஒன்றை உதிர்த்த தீரன்.

"ரெஸ்ட்டா? நான் இப்போ இருக்க மன நிலைமைக்கு எதுவும் சொல்றதுகில்ல அமுதன். நாளைக்கு இல்ல.. இந்த ரெண்டு மணி நேரம் நான் தள்ளி போட்டதே தப்பு. அவ்ளோ சீரியஸான விஷயம். அங்கயே வர சொல்லிருக்கலாம். ஆனா, அங்க பேச வேண்டாம்னு தான் இங்கே வரசொன்னேன்." என்ற தீரனை ஆழமாய் நோக்கினான் அமுதன்.

"என்ன விஷயம் தீரன்?" என்றான் ஒருவித புரிதலுடன்.

"ஸ்ரீயும் வரட்டும்." என்றான் பார்வையில் முடிவுடன்.

"அப்பா சாப்...பிட்டியா?" என்ற மகளை உச்சி முகர்ந்தவன்.

"நான் சாப்பிட்டேன் டா தங்கம்" என்று புன்னகைத்தான்.

"சரி. நீங்க இருங்க நாங்க ஏதாவது சாப்பிட செய்றோம்" என்று திஷாவை பார்த்த அமுதன்.

"பேபி! நாம அப்பாக்கு ஏதாவது சாப்பிட செய்லாமா?" என்று கண்ணடித்து கேட்டான்.

"ஓகே பேபி" என்று மழலையில் புன்னகைத்து அமுதனிடம் தாவியது குழந்தை.

"உட்காருங்க தீரன்" என்று சமையலறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

பத்து நிமிடம் கழிந்திருக்கும் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"மாமா எப்படி இருக்கு உங்களுக்கு?" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"ஹம் நல்லா இருக்கேன்டா" என்று புன்னகைத்தான்.

வேண்டாம் என்று தீரன் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் சாப்பிட வைத்து அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்தனர்.

"என்ன விஷயம் இப்போ சொல்லுங்க?" என்றான் அமுதன்.

"திஷா குட்டி! போங்க உங்களுக்கு பிடிச்ச டிவில சேனல் பாருங்க. நாங்க கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்" என்றான் தீரன்.

"ஓகே பா" என்று உள்ளே ஓடியது குழந்தை.

இருவரையும் ஒருமுறை பார்த்தவன். தன் கைப்பையில் இருந்த ஒரு பைலை எடுத்து முன்னிருந்த மேசையின் முன் வீசினான்.

"எடுத்து பாருங்க" என்றான்.















Bạn đang đọc truyện trên: AzTruyen.Top