தீயாய் சுடும் என் நிலவு 36
மனம் என்னவோ குழம்பிய குட்டையாய் தெளிவில்லாமல் அன்று பொழுதே செல்லாமல் யோசித்து கொண்டே இருந்தாள் மிருதி.
'என் பொண்ணை பிரிஞ்சது தப்போ?' என்று நினைக்க.
'ஏன் அதுவே உனக்கு இப்போ தான் புரியதா?' என்று கேலி செய்தது மனம்.
'சும்மா அவளை குழப்பாதே! நீ செஞ்சது தப்பு இல்ல. உனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால தான் உன் பொண்ணை அங்க அனுப்பிருக்க. சோ, பீல் பண்ணாத' என்றது இன்னொன்று.
'உண்மையா சொல்லு.. உன் பொண்ணை பிரஞ்சது மட்டும் தான் உனக்கு இப்போ வருத்தமா இருக்கா? இல்ல... உன் புருஷனையும் பிரிஞ்சதும் தானே?' என்று மீண்டும் ஒரு மனம் வம்பிழுத்தது.
'அதெல்லாம் எதுவுமில்லை. எதையாவது உளராதே!' என்று முறைத்தது.
'நீ என்னை சும்மா அதட்டி அமைதியாக செய்யலாம். ஆனா உண்மைன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யுது. இன்னைக்கு உன் புருஷன் உன்னை ஏறெடுத்தும் பார்க்கலைன்னும் உன் பொண்ணை தூக்க முடியலைன்னும் எவ்வளவு வருத்தம் இருந்தது. இது தான் நிஜம். சொன்னா என்னை முட்டாள்னு சொல்விங்க. எப்படியோ போங்க' என்று அமைதியானது.
"அய்யோ!" என்று இரு கரங்களாலும் தன் தலையை பிடித்து கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து நிமிர்ந்தவள் ஒரு நொடி லேசாக அதிர்ந்தாள்.
ஒரு டேபிளில் தீரனும் திஷாவும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
ஓடி சென்று குழந்தையை தூக்க சொல்லி மனம் தவித்தது.
மிகவும் சிரமப்பட்டு அடக்கியவள். விழிகளை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அப்பா! எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்பா." என்றது குழந்தை.
மிருதி தன்னை பார்த்து கொண்டிருப்பாள் என்று அறிந்தும் ஒர விழியால் அவளை நோக்கியவன்.
"பாப்பா! உங்க அம்மா அங்க இருந்து உன்னை தான் பார்த்துட்டு இருக்காங்க. இப்போ உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தேன் நான் காலி" என்றான் மெதுவாய்.
"அப்பா! அம்மா நம்மகிட்ட வந்து பேசணும்ல அப்போ ஐஸ்க்ரீம் வாங்கி தாங்க" என்ற குழந்தையை வாய் பிளந்து பார்த்தான்.
தலையில் லேசாக அடித்து கொண்டவன்.
"என் பொண்ணு எனக்கு ஐடியா கொடுக்குற நிலையாகிருச்சே?" என்று புலம்ப.
"நல்ல ஐடியா யார் கொடுத்தா என்னப்பா?" என்று சிரித்தாள் திஷா.
"உங்க அம்மா மாதிரியே அடமும் வாயும் ஜாஸ்தியாகிடுச்சு உனக்கு" விழிகளை உருட்ட.
"சரி பா. அம்மாவை பார்க்கும்போது கண்டிப்பா மறக்காம இதை சொல்லிடறேன்" என்று நமுட்டு சிரிப்பு சிரித்தது.
"அடபாவமே! முதலுகே மோசமாகிடும். வேண்டாம்டா தங்கம். நீ குட் கேர்ள் தானே?" என்றான் சற்று கெஞ்சலாய்.
"சரி சரி ப்பா. ஐஸ்க்ரீம் சொல்லுங்க முதல்ல" என்றது.
"ரெண்டு ஐஸ்க்ரீம் கொண்டு வாங்க" என்றான் தீரன்.
இதை கேட்ட மிருதி நிமிர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தாள்.
"என்னது ஐஸ்க்ரீமா? திஷாக்கு ஒத்துக்காதே... யாராகேட்டு ஐஸ்க்ரீம் வாங்கித்தறார்." கோபம் வர அங்கே வேலை செய்யும் பெண்ணை அழைத்தாள்.
"அக்கா! இங்க வாங்க" என்ற மிருதியிடம் வந்து நின்றாள் பணிப்பெண்.
"என்னம்மா?" என்றார்.
சில நொடிகள் ஏதோ கூறியவுடன் அந்த பெண் இவர்களிடம் வந்தார்.
இவையனைத்தையும் அவள் அறியாமல் கவனித்து கொண்டிருந்தவன் தன் மொபைலில் எதையோ பார்த்து கொண்டிருக்க, "சார்!" என்ற பெண்ணிடம்.
" சொல்லுங்க. ஐஸ்க்ரீம் கேட்ருந்தேன் இன்னும் வரலையே?" என்றான் கேள்வியாய்.
" சார்! ஐஸ்க்ரீம் ஸ்டாக் இல்ல. வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்க, எதிர் டேபிளில் இருவர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தான்.
"சார்! அதான் லாஸ்ட் இருந்தது" என்றார் அந்த பெண்.
" ஓ! அப்படின்னா சரி நீங்க போங்க" என்றான்.
அவர் சென்றதும் " செல்லம்! இங்க ஐஸ்க்ரீம் இல்லையாம். சோ, நாம வெளில போய் சாப்பிடுவோமா? உனக்கு ரெண்டு வாங்கி தரேன்" என்று சிரித்தான் தன் எரிமலை வெடிக்க போவதை உணர்ந்து.
' என்னது நான் இங்கயே சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். இவரு வெளில போய் வாங்கி தர போறாரா? இவரை' என்று வேகமாக எழுந்தாள்.
அவள் அருகில் வருவது தெரிந்தும் தன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, இவர்களிடம் வந்து நின்றவள், "ஹுஹும்..." என்று செருமினாள்.
எதுவும் கேட்காதது போல் இருவரும் அமர்ந்திருக்க, "ஹலோ!" என்றாள் சற்று சத்தமாய்.
மெதுவாய் தலைநிமிர்த்தி, "யெஸ்!" என்றான் தீரன்.
"குழந்தைக்கு ஐஸ்க்ரீம் தரக்கூடாது" என்றாள் அமைதியாய்.
'அப்படி வா செல்லம்' என்று உள்ளுக்குள் குதுகளித்தாலும்.
"ஒஹ் உங்க குழந்தைக்கு தரக்கூடாதுன்றது எதுக்கு என்கிட்ட சொல்றிங்க? உங்க ஹஸ்பண்ட்கிட்ட போய் சொல்லுங்க. உங்க ஷாப்ல இல்ல இல்ல. என் பொண்ணுக்கு எங்க வாங்கி தரனும் இல்ல வாங்கி தரக்கூடாதுன்னு நான் முடிவு செய்துக்குறேன்." என்று காட்டமாய் முடித்தான்.
"அவளுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடனே ரொம்ப சளி பிடிக்கும். அதனால அவளுக்கு ஐஸ்க்ரீம் தராதிங்க" என்றாள் மீண்டும் விடாமல்.
"எங்க அப்பாவை எதுக்கு மிரட்டுறிங்க? எங்கம்மாகே என் மேல அக்கறை இல்லை.... என்னை பிடிக்காம பார்த்துக்க முடியாதுன்னு விட்டுட்டு போய்ட்டாங்க.... எங்கம்மா மாதிரி அவர் விட்டுட்டும் போகலை. என்னை விடுதில சேர்க்கல. எங்கப்பா தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறார். அவருக்கு தெரியும் எது வாங்கி தரணும்னு. நீங்க போங்க. அப்பா வங்கப்பா." என்று நிறுத்தி நிதானமாக மழலை மொழியில் பேசிவிட்டு சேரில் இருந்து இறங்கி தீரனின் கரத்தை பிடித்து இழுத்தது.
அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட தீரன் எதுவும் பேசாமல் எழுந்து நடந்தான்.
"அப்பா! அம்மா நம்மலையே பார்க்கிறாங்களா?" என்றாள் திஷா. தீரனும் திரும்பி பார்க்க, அங்கே விழிகளில் நீரோடு நின்றிருந்தாள் மிருதி.
"பாவம் பாப்பா அம்மா. அம்மாகிட்ட அப்படியா பேசுவாங்க?" என்றான் தீரன்.
வெளியே வந்து நின்ற குழந்தை. "இல்ல. எனக்கு கூட அம்மாவை கட்டி பிடிச்சுக்கணும்னு ஆசையா இருக்கு போகட்டாப்பா..." என்றது கோபமாய்.
எதுவும் பேசாமல் திஷாவை பார்க்க, "அம்மா நம்ம கூட எப்பவுமே வேணும்பா. நான் என்ன பண்ணேன் எதுக்கு விட்டுட்டு போனாங்க" என்று அழுதாள் பெரிய மனுஷியின் தோரணையில்.
மகளை அணைத்துக்கொண்டவன் தனக்கு அன்னை போல் நடந்து கொள்ளும் மகளை பார்த்து விழிநீர் சுரந்தது.
"சரி டா. வா உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தறேன்" என்றான் தீரன்.
" எனக்கு வேணாம்பா. அம்மா சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று நடந்தாள்.
******
மார்கழி கோலம்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top