தீயாய் சுடும் என் நிலவு 31
தீயாய் சுடும் என் நிலவு 31
"என்ன கேட்கணும் கேளு?" என்றான் தீரன்.
"உங்களுக்கு நடந்தது எல்லாமே தவறானது தான். எனக்கும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உண்மை தான். ஆனா..." என்று நிறுத்தி அவனை பார்த்தாள்.
"நீங்க வேற ஒரு பெண்ணை விரும்பும் போது உங்களால எப்படி என் கழுத்துல தாலி கட்ட முடிஞ்சது? உங்க அம்மா சொன்னா கூட கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கும் இதை பத்தி எதுவும் தெரியாம அவளுக்கு இதுல விருப்பம் இருக்கானு நேரடியா கேட்காம அவளுக்கும் சேர்த்து நீங்க எப்படி முடிவு செய்யலாம்? யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?" என்றாள் மிகவும் கோபமாக தீரனின் விழிகளை நேராக பார்த்து.
"மிரு" என்றான் எதுவும் பேச முடியாமல்.
"என் மனசுல இருக்கிறதை நான் முதல்ல பேசி முடிச்சிடறேன். அதுவரைக்கும் எதுவும் பேசாதீங்க" என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.
"கல்யாணத்துக்கு முன்னாடி என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? முதல்ல நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல. எனக்கு கல்யாணம் வேண்டாம்னு எவ்வளவோ அடம் பிடிச்சேன்.
என்னோட குறிக்கோளே வேற... எனக்கு பிடிச்ச படிப்பை முடிச்சிட்டு பிடிச்ச வேலைக்கு சுதந்திரமா போகணும். நினைச்சபடி படிச்சேன். எனக்கு பிடிச்ச வேலைக்கு ட்ரை பண்ணி வேலையும் கிடைச்சிடுச்சு. புது வேலைக்கு போக போறோம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன். எல்லாமே நாசமா போறதுக்கு முதல் காரணம் நான் என் அப்பா மேல வச்ச அதிதீவிர அன்பு தான். அதே நேரம் அவர் அவங்க தங்கச்சி மேல வச்ச பாசம் தான்." என்று பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, சிறிது மௌனமானாள்.
"அவர் அவங்க தங்கச்சி வருத்தபடக்கூடாதுன்னு எதுவும் விசாரிக்காம என்னை சமாதானபடுத்தி இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்" என்றாள் மிருதி.
"எல்லா பொண்ணுங்களை மாதிரி எனக்கும் கல்யாண கனவு இருந்துச்சு. சரி கல்யாணம் முடிஞ்சவுடனே நம்ம குறிக்கோளை அடைய அவர் ஹெல்ப் பண்ணுவாருன்னு மனசை தேத்திக்கிட்டேன். ஆனா, நடந்ததே வேற, எல்லாமே தலைகீழாகிடுச்சு.
நார்மலா கல்யாணம் பண்ண புது மாப்பிள்ளையோட நடவடிக்கை எதுவுமே உங்ககிட்ட இல்ல. எதனால அப்படி இருக்கீங்கன்னு தெரியாம எத்தனை நாள் அழுதுருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மிருதி கண்ணீரோடு.
"மிரு" என்றான் அவனும் கண்களில் கண்ணீரோடு வேதனையாய்.
"கொஞ்ச நாள் போக போக நீங்க என்னை நெருங்கி வந்தப்ப, சரி இது தான் என் வாழ்க்கைன்னு உங்கக்கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சேன். ஆனா, நீங்க விரும்பின பொண்ணை மறக்கவும் இல்ல மனசுலர்ந்து தூக்கி எறியவும் இல்ல.. அதுக்கு பதிலா உங்கம்மா மிரட்டினாங்கன்னு கடமைக்குன்னு என்கூட சேர்ந்து வாழ்ந்துருக்கிங்க வெக்கமா இல்ல உங்களுக்கு? எனக்கு இப்போ உங்கக்கூட நான் சந்தோசமா விரும்பி வாழ்ந்த நாட்களை நினைச்சா அருவருப்பா இருக்கு. ஒரு பொண்ணுக்கு இதைவிட பெரிய தண்டனை என்னவா இருக்க முடியும்?
இது எதுவுமே தெரியாம நான் உங்களை மனசார விரும்ப ஆரம்பிச்சேன். உங்களை நம்பி உங்ககிட்ட என் பெண்மையை முழுசா காதலோடு கொடுத்தேன். அதுக்கு தகுதியானவரா நீங்க? இல்ல.. நிச்சயமா இல்ல. அந்த சோபியா உங்களை ஏமாத்திட்டான்னு சொன்னிங்களே? அப்போ நீங்க எனக்கு செஞ்சதுக்கு பேர் என்ன? இதுக்கு எதுக்குமே சம்பந்தப்படாத நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு ஏன் இந்த தண்டனை?" என்றாள் ஆத்திரம் தாளாமல் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து.
ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசாமல் அவ்வளவு அறைகளையும் வாங்கிக்கொண்டு தலை குனிந்து நின்றான் தீரன்.
"இப்படி உங்க மனசுல எனக்குன்னு அன்பு இல்லாம நாம சேர்ந்ததால இந்த குழந்தை உருவாகிருக்குன்னு தெரிஞ்சுருந்தா ஒருவேளை அன்னைக்கே அழிச்சிட்டு இருப்பேன். ஆனா, நான் உங்க மேல வச்ச காதல் உண்மையானது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு இம்மியளவு கூட குறையலை. இனியும் குறையாது" என்று அவனை முறைத்தாள்.
வேதனை தாளாமல் இரு கரங்களையும் முகத்தை மூடி கொண்டு குலுங்கினான் தீரன்.
அவன் அழுவதை கண்டு ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள மனம் துடித்தாலும் அமைதியாய் நின்றாள்.
"இப்போ என்ன அன்னைக்கு நைட் என்ன நடந்துதுன்னு தெரிஞ்சிக்கணும் அவ்ளோ தான? சொல்றேன்." என்று அன்று நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
****
"அன்னைக்கு நான் மாசமா இருக்கேன்னு டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தப்புறம் மயக்கமா இருந்துச்சு. எந்திரிக்க முடியாம தூங்கிட்டேன்.
இரவு பதினோரு மணி, முட்ட முட்ட குடிச்சிட்டு வீட்டிற்குள் வந்துருக்கிங்க.
உடம்பு முடியாததால சமைச்சு வைக்கல. அதனால கோபமாகி, என்னை தேடி கத்திக்கிட்டிட்டே வந்திங்க போல, மாத்திரை சாப்பிட்டு மயக்கத்துல இருந்ததால எனக்கு எதுவும் தெரியலை.
என்னை காலால தள்ளி விட்ருக்கிங்க. என்கிட்ட எந்த அசைவும் இல்லாமல் போக மறுபடியும் தள்ளிருக்கிங்க. இதெல்லாம் நீங்க என்னை அடிக்கும்போது சொன்னது.
அதோட,
"எந்திருடி! புருஷன் வேலைக்கு போய்ட்டு வரும்போது சமைச்சு வைக்கணும்னு தெரியாதா? இப்படி பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்?"னு இப்படி திட்டியும் எந்திரிக்காததால என்ன செஞ்சிங்க?
"எத்தனை தடவை கூப்பிட்டுட்டு இருக்கேன். எதுவுமே கேக்காத மாதிரி படுத்திருந்தா என்ன நினைச்சிட்டு இருக்க நீ? வீட்ல இருக்கிறதே சமைக்கிற ஒரு வேலை மட்டும் தான். அதையும் செய்ய முடியாதா உன்னால? இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?" ன்னு குடிபோதையில் என்ன பேசுகிறோம் தெரியாம பேசினிங்க.
"இல்ல நான் பேசுறது கேட்டும் சும்மா படுத்திருக்கியா? எந்திருடி" ன்னு ஓங்கி வயிற்றில் காலால் எட்டி உதைச்சீங்க.
இது எதுவும் தெரியாம தூங்கிட்டிட்டுருந்த எனக்கு திடீரென்று வயிற்றினில் ஏற்பட்ட தாக்குதலில் வலி தாங்க முடியாம அழ ஆரம்பிச்சேன்.
அதோட அன்னைக்கு என்ன சொன்னிங்க தெரியுமா?
"வீட்ல இருக்க ஒரு வேலைய கூட செய்ய முடியலைன்னா அப்புறம் எதுக்கு என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எதுக்குடி ஒத்த கால்ல நின்ன? வேலை செய்யாம இருக்கிறதுக்கு இது என்ன புது நடிப்பா?" ன்னு கேட்டிங்க.
உடலில் ஏற்பட்ட வலியைவிட உங்க வார்த்தைகள் இதயத்தை நொறுக்கிடுச்சி.
அதோட,
"நான் வேற பொண்ண காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், நான் கல்யாணாம்னு பண்ணா மாமாவை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு ஒத்தைகால்ல நின்னு அடம் பிடிச்சியாமே? வெக்கமால்ல உனக்கு. உன்னால தான் என்னோட வாழ்க்கை இப்படி தலைகீழாகிடுச்சு. எங்கம்மா எங்க... பையன் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட போறான்ன்னு இதான் நேரம்னு என்னை பிளாக்மெயில் செஞ்சு உன்னை என் தலைல கட்டி வச்சிட்டாங்க. பிடிக்காத ஒரு பொண்ணுகூட வாழு வாழுன்னா எப்படி வாழ்றது? என் வாழ்க்கை இப்படி ஆகுறத்துக்கு நீ தான் காரணம். உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்" ன்னு சொல்லிட்டு வெளிய போய்ட்டீங்க.
பக்கத்து வீட்டு அகிலாக்கா தான் கூப்பிட்ட உடனே வந்து என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து கூட இருந்தாங்க.
உங்க பேச்சில அதிர்ச்சியா இருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சி தந்தது டாக்டர் சொன்னது.
உங்களுக்கு அபார்ஷன் ஆகிடுச்சுன்னு சொன்னப்ப, எதுக்கு உயிரோட இருக்கணும்னு ஒரு நொடி தோணுச்சு.
ஆனா, நான் என்ன தப்பு பண்ணேன்? எதுக்காக சாகனும்? என்னை பிடிக்கலைன்னு சொன்ன உங்கக்கூட இனி ஒரு நொடிக்கூட இருக்கக்கூடாதுன்னு அமுதனை வர சொல்லி போய்ட்டேன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top