தீயாய் சுடும் என் நிலவு 30
"என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன்.
அப்போ தான் அன்னைக்கு காலைல உன்கிட்ட சந்தோஷமா பேசிட்டு ஆஃபீஸ்கு போனேன். மறுபடியும் என் பிரென்ட் போன் பண்ணான். அவன் சொன்னதை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துட்ட மாதிரி இருந்துச்சு" என்று நிறுத்தினான்.
அவனின் கரத்தை எடுத்து தன் இரு கரங்களுக்குள் மென்மையாய் பிடித்து கொண்டாள். அவளின் இந்த சின்ன ஆறுதல் கூட பெரிதாக பட்டது தீரனுக்கு.
"சோபியா விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டதா எனக்கு தகவல் வந்தது. அவ்ளோ தான் எனக்கு என் மேலேயே ரொம்ப வெறுப்பு. எல்லோர் மேலயும் கோவம் எல்லை மீறுச்சி. ஆபிஸ்ல இருக்க முடியலை. சோபியா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா? இவனை நம்பினதுக்கு அவ உயிரை விட்றது தான் ஒரே வழின்னு உயிரை விட்டிருப்பாளோன்னு தோணுச்சு. எத்தனை முறை நான் மன்னிப்பு கேட்டாலும் அவளோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காதுன்னு ஊமையாய் அழுதேன். என்ன இருந்தாலும் நான் நேசிச்ச முதல் பெண். அந்த சோகத்தை மறக்க முடியாதுன்னாலும் வழக்கம் போல் குடிக்க சென்றேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது அளவு தெரியாமல் குடித்தேன். எப்படி இருந்தாலும் தூங்க வீட்டுக்கு வந்து தான ஆகணும். போதை தலைக்கேறிய நிலையில நண்பனின் உதவியோடு வீட்டுக்கு வந்தேன்" என்றவன் தன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு அழுதான்.
என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் போனாலும் தான் விரும்பிய உயிர் அழுவதை பார்க்க முடியாமல் அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அன்னையானாள்.
சிறிது நேரம் கழிந்தவுடன் மீண்டும் பேச தொடங்கினான்.
"வீட்டு வாசல் வரை நண்பன் விட்டுட்டு போக அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு எதுவுமே ஞாபகம் இல்லை. மறுநாள் எப்பவும் போல கண் முழிச்சா நீ வீட்ல இல்ல. தலைவலி ரொம்ப அதிகமாக வீட்டுக்குள்ளயே தேடினேன். நீ இல்ல. அக்கம் பக்கத்துல கேட்டா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே ஒருத்தியை தொலைச்சிட்டேன். இப்போ உன்னையும் காணாமல் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை." என்று நிறுத்தினான்.
அவனின் இடத்தில் தன்னை நிறுத்தினாள் மிருதி.
"ஒரு வேளை உன் வீட்டுக்கு போயிருந்தா? அதனால உன் வீட்டுக்கு போனேன். அங்க உங்கப்பா உன்னை காணோம்ன உடனே என்னை வாயில வசை பாடி கடைசில அவர் ஆத்திரத்தை என்னை அடித்து தீர்த்து கொண்டார்." என்று மெதுவாய் சிரித்தான்.
தன் வாயில் கரம் வைத்து மூடியவள் அதிர்ச்சியாய், "என்ன அப்பா உங்களை அடிச்சாரா?" என்றாள்.
"நீ வேற. அவர் அடியோடு நிறுத்திட்டார். என் பொண்ணுக்கு இந்த நிலைமைன்னா அவர் இடத்துல நான் இருந்திருந்தா கொலையே பண்ணிருப்பேன். என் மூஞ்சிலையே முழிக்காதன்னு சொல்லிட்டார். உனக்கு. என்ன ஆச்சுன்னு பதட்டத்துல எல்லா இடத்துலயும் தேடினேன். கிடைக்கலை. போலீஸ் கம்பலைன்ட் கொடுக்க போகும் போது அம்மா வந்தாங்க," என்று நிறுத்தியவன் அவளிடம் இருந்து நிமிர்ந்து அமர்ந்தான்.
"அத்தையா ?" என்றாள் மெதுவாய்.
"ஹ்ம். வந்தவங்க அவங்க பங்குக்கு கன்னம் பழுக்க வெச்சு வாங்கினாங்க. உன்னால அவ கஷ்டப்பட்டது போதும். எங்க அண்ணன் பொண்ணை கட்டி வச்சா உறவு நீடிக்கும்னு பார்த்தா மொத்தமா அறுத்துட்டியே. நீ யாரோ நான் யாரோ இனி என் முகத்துலையே முழிக்காதன்னு அம்மாவை திட்டி அனுப்பிட்டார் மாமா. என்ன ஆனாலும் சரி இனி நீ அவளை தேடக்கூடாது மீறி தேடினா என் உடம்பு கூட கிடைக்காத மாதிரி பண்ணிடுவேன்னு திட்ட வட்டமா சொல்லிட்டு போய்ட்டாங்க." என்று தலை குனிந்தவன்.
அப்பயும் எப்படியாவது உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணேன் முடியலை. வீட்டுக்குள்ளையே முடங்கினேன். ரெண்டு மாசம் அப்படியே இருந்தேன். நீ இல்லாத வீட்ல உன் ஞாபகங்களோடும் உன் வாசனையோடும் நினைவுகளோடும் உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம என் நாட்கள் நரகமா நகர்ந்துச்சு." என்றான் தீரன்.
அவனின் வலி அவளையும் ஆட்கொள்ள தொடங்கியது. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
"ஒரு வழியாய் நீ நல்லபடியா இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சுது. அப்புறம் தான் நிம்மதியாச்சு." என்றான் தீரன்.
"ஆனா அதுக்கப்புறம் தான் எனக்கு வாழ்க்கையே புரட்டி போட்டுச்சு." என்றான் கண்ணீர் வழிவது கூட அறியாமல்.
என்ன என்பது போல் மிருதி பார்க்க, "சோபியா இறந்து போய்ட்டானு இருந்த எனக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. அடுத்த ஒரு வாரத்துல கிடைச்ச செய்தி. " என்றான்.
"என்ன?" என்றாள் மிருதி.
"சோபியா ன்னு நான் காதலிச்ச பொண்ணு பேரு சோபியாவே இல்ல. அவ பேரு ஜெரிட்டா. அவ என்னை விரும்பினது எல்லாமே சும்மா டிராமா. அவளுக்கு வேலையே இது தானாம். வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்யும் வாலிபர்களை காதலிப்பது போல் நடித்து பணம் பறிப்பது. நாங்க விரும்பின நேரத்திலேயே மேலும் ரெண்டு பேரை ஏமாத்திருக்கா. ஏதாவது ஒரு நேரத்தில் அவங்ககூட சண்டை போட்டுட்டு பிரிஞ்சிடறது இல்லைன்னா இது யாரையாவது செட். அப் செய்து தான் இறந்து விட்டது போல் காட்டிவிட்டு அடுத்த பையனை பார்ப்பது என்று இருந்திருக்கிறாள்.
முதல்ல கேட்டவுடனே என்னால இதை நம்ப முடியலை. ஆனா அவ ஏமாத்தினவங்கள்ல ஒருத்தர் போலீஸ் கம்பலைன்ட் கொடுத்துருக்கார். அதை விசாரிச்சு போலீஸ் அவளை அரேஸ்ட் பண்ணிருக்கங்க." என்றான் தீரன் தலையை கவிழ்ந்தபடி.
"என்ன இருந்தாலும் நம்ம மண்ணு பொண்ணுங்க வேற தான். காதலிச்சவனுக்காக உயிரையே கொடுக்கவும் தயங்க மாட்டாங்க. அவனுக்கு பிடிக்கலைன்னா அவனையே நினைச்சு தள்ளி நிக்கவும் தயங்க மாட்டாங்க... உன்னை மாதிரி" என்று சோகமாக புன்னகைத்தான் தீரன்.
என்ன சொல்லணும் என்று எதுவும் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"மிரு! அம்மா மட்டும் தான் எனக்கு. அங்க போனப்புறம் ரொம்ப தனியா பீல் பண்ணேன். அவளும் என்னை மாதிரி தனிமைல கஷ்டப்படரதை பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சமா விரும்ப ஆரம்பிச்சேன். ஆனா அவள் அந்த ரெண்டு வருஷமும் என்னை தன்னோட சுயநலத்துக்காக யூஸ் பண்ணிருக்கா.
என்னால இதை தாங்கவே முடியலை. இதுக்கும் மேல மதிப்பே இல்லாத அந்த காதலுக்காக உன்னை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். இதை எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு இந்த மூணு வருஷமா சொல்ல முடியாது அவ்ளோ வருந்திருக்கேன் மிரு. ஒரு நாள்கூட நிம்மதியா தூங்கினது இல்ல. உண்மையை சொல்லனும்னா இங்க வந்து நம்ம பொண்ணுகூட தூங்கினது தான் நல்லா தூங்கினது. " என்று நிறுத்தினான்.
திடிரென்று எழுந்து சென்றவள் ஒரு குவளை நீரை கொடுத்தாள்.
"இந்தாங்க. குடிங்க" என்று எதிரில் அமர போனவள் கரம் பற்றி தன் அருகே அமர வைத்தான்.
"நீ என்னை ஏத்துக்கலை ன்னு தெரியும் ஆனாலும் உன் பக்கத்துல இருக்கிறதே எனக்கு பெரிய நிம்மதி. இப்போல்லாம் நல்லா தூங்குறேன். தெரியுமா? " என்று சிரித்தான்.
"என் மனசுல இருக்கிறதை எல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழனும் போல இருந்தது. இப்போ உன்கிட்ட சொன்னப்புறம் மனசு லேசான மாதிரி இருக்கு." என்றான் தீரன்.
"என்னை பத்தி எல்லாமே சொல்லிட்டேன். இப்போ எனக்கு ஒன்னு தான் தெரியனும். அன்னைக்கு நைட் என்ன நடந்தது? வேற யாருகிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்க முடியாது. ஏன்னா நம்ம ரெண்டு பேர்க்குள்ள நடந்தது எப்படி கேக்க முடியும்? ப்ளீஸ் சொல்லு என்ன நடந்துச்சு? நீ ஏன் வீட்டை விட்டு போன? அப்படி நான் என்ன பண்ணேன்? எனக்கு தெரியணும் இல்லன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு மிரு." என்றான் தீரன் பாவமாய்.
அவனை சில நொடிகள் பார்த்தவள் பெரு மூச்சொன்றை விட்டாள்.
"சரி நான் சொல்றேன். அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க." என்று தீரனை பார்த்தாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top