தீயாய் சுடும் என் நிலவு 20

"என் தப்பு தான். அதுக்கான தண்டனையை தான் இந்த மூணு வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன். இப்ப எனக்கு ஒரு பொண்ணும் இருக்கா. என்ன நடந்தாலும் சரி மிருதியோட கோவத்தை மாத்த முயற்சிப்பேன்." என்றான் தீரன்.

"எனக்கு உங்க மேல கோபம் இருக்கு. இருந்தாலும் தி காக தான் இதெல்லாம். என்னன்னு பார்க்குறிங்களா? அவா நினைச்சிருந்தா உங்க மேல போலீஸ் கம்ப்பிளைன்ட் கொடுத்திருக்கலாம். ஆனா, அவ அதை செய்யலை செய்யவும் மாட்டா. ஏன்னா நீங்க எப்படியோ அவ உங்கமேல உயிரையே வச்சிருக்கா. உங்களால் அவளோட அப்பாகிட்டையே மாசகணக்குல பேசாம இருந்தா. இதெல்லாதுக்கும் மேல மிதிஷான்னு உங்க ரெண்டு பேரோட முதல் எழுத்தோட உங்க பொண்ணுக்கு பேர் வச்சிருக்கா." என்றான் அமுதன்.

"ஐயோ" என்று தலையில் அடித்துக்கொண்டு கண்கலங்கினான் தீரன்.

"நான் இதெல்லாம் என் சுயநலத்துக்காகவும் செய்யறேன்னு சொல்லலாம். என் பிரென்ட் தி நல்லா இருக்கனும். உங்களை தவிர வேரேந்த ஆணுக்கும் அவா வாழ்க்கைல இடம் இல்லன்றதை நான் புரிஞ்சுகிட்டேன். நான் இங்கே வந்ததோ உங்ககிட்ட பேசினதோ அவ்ளுக்கு எக்காரணுத்துக்காகவும் தெரியக்கூடாது. தெரிஞ்சா இங்க இருக்கமாட்டா. அவ ரொம்ப காய பட்ருக்கா. நீங்க போய் நீங்க உடனே உங்களை மன்னிச்சு ஏத்துப்பான்னு சொல்ல முடியாது. நீங்க வெய்ட் பண்ணி தான் ஆகணும். உங்களோட அன்பை அவளுக்கு புரிய வைங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் அவா சாய்ஞ்சு அழறதுக்கு தோழனாக தோள் கொடுத்து தூக்கி விட்ருக்கேன். எல்லாமே என்னால முடிஞ்சவரைக்கும் செஞ்சுருக்கேன். என்னால முடியலைன்னா இதோ எனக்கு கடவுள் கொடுத்த வரமா இருக்க என் ஸ்ரீ செஞ்சுருக்கா. இனி நீங்க தான் அவளோட காயத்துக்கு மருந்தா மாறனும்." என்றான் அமுதன்.

"இப்போ நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க" என்றான் அமுதன்.

"சொல்லுங்க" என்று அமுதனை பார்த்தான் தீரன்.

நீங்க போய் நின்னவுடனே நிச்சயமா தி எவ்ளோ முடியுமோ அவ்ளோ இன்சல்ட் பண்ணுவா உங்களை. அவளும் அதுக்கு கஷ்ட படுவா. ஆனா அவளோட டார்கெட் நீங்க அவ லைஃப்ல திரும்பி வரக்கூடாது அவ்ளோதான்."; என்றான் அமுதன்.

"ஏன்? எனக்கு ஒரு சந்தேகம், எதுக்கு உங்களை வருங்கால கணவர்னு என்கிட்ட இந்த்ரோடுஸ் பண்ணா? அவளுக்கு என்னை பிடிகளையோ?" என்றான் தீரன் மெதுவாக இதயத்துடிப்பு எகிற.

"உங்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எவ்ளோனா அவளோட சந்தோஷத்தைவிட வாழ்க்கையைவிட உங்களை தான் பிடிக்கும். ஏன்னா அவளுக்கு இப்போ ஹெல்த் சரி இல்ல." என்றான் அமுதன்.

மெல்ல சிரித்தவன் உடனே "நான் கூட கேட்டேன் உனக்கு ஆர்கூட சேர்ந்து வாழ ஆசை இல்லையா? ஏதோ ஒரு தடவை நடந்த தவறால இப்போவும் அவரை அந்த அளவு வெருக்குறியா?" என்றான் அமுதன்.

"மிருதிக்கு என்னா ஆச்சு?" என்றான் பதற்றமாய்.

"இருங்க சொல்றேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? " என்று அவன் விழிகளைல் சிரிப்பு மின்ன தொடர்ந்தான்.

"ஏற்கனவே மூணு வருஷம் அவர் அனுபவிக்கிற தண்டனையே போதும். திரும்பி அவர்க்கோடோ வாழ போனா அவருக்கு தேவைல்லாம இன்னும் கஷ்டம் அதிகம். இப்போ போலவே முகம் கொடுது பேசாம இருந்துட்டா அவர் பொண்ணு கூட மட்டும் அடுத்தகட்டதுக்கு போகணும்னு நினைக்கிறேன். அவருக்குன்னு வேற வாழகைய தேடிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்" என்றான் அமுதன் தன் தோழியை நினைத்து கண்கள் பணிக்க.

இந்த நிலையிலும் மிருதி தனக்காக கவலை பாடுவதை எண்ணி நெகிழ்ந்து போனான்.

"பிளீஸ் மிருதிக்கு என்ன ஆச்சு? " என்றான் தீரன் மீண்டும்.

"இது .. எப்படி நான் சொல்றது? நீங்க தான் மிருதிக்கிட்ட பேசி கேட்டு தெரிஞ்சிக்கணும்." என்றான் அமுதன்.

"பிளீஸ் தீரன். அவ என் மேல ரொம்ப கோபமா இருக்கா. ஐ‌பி‌ஓ போய் நான் கேட்டா சொல்லுவாளா? அதுவும் இல்லாம் உங்கலௌக்கு யார் கேட்டான்னு கத்துவா. பிளீஸ் என்ன ஆச்சு சொல்லுங்க?" என்றான் தீரன் கெஞ்சுளாய்.

"அது தீரன்.." என்று மீண்டும் அமுதன் தயங்க, "பிளீஸ் அமுதன். உங்க ஃப்ரெண்ட் தி மேல பிராமிசாகேக்குறேன் சொல்லுங்க"? என்றான் தீரன்.

"சரி சொல்றேன். அன்னைக்கு நீங்க பலமா மிருதி வயிற்றுல தாக்கினதுனால அவளுக்கு கற்பப்பைக்குள்ளையே பிளீடிங்க் அதிகமாகிடுச்கு. இது ரொம்ப றார் கேஸ்னு டாக்டர் சொல்றாங்க. பிளட் ஹீமோரேஜ் ன்னு சொல்றாங்க. எங்களுக்கு இதை பத்தி முதல்ல எதுவும் தெரியலை. மிதிஷா பிறந்தப்புரம் கூட எங்களுக்கு தெரியலை. அப்போகூட தி நல்லா தான் இருந்தா. தீடிர்ன்னு ஒரு ரொம்ப வயிறு வலிக்குது துடிச்சு போயிட்டா. அவளால நிக்க கூட முடியலை. ஹாஸ்பிட்டல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்த்தோம். இப்போ இந்த ஏழு மாசமா ரொம்ப கஷ்டபட்றா" என்றான் அமுதன்.

மிகவும் அதிர்ச்சியாக அமுதனை பார்த்த தீரன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top