தீயாய் சுடும் என் நிலவு 18

தீரனை நெருங்கிய மிதுஷா சில நிமிடங்கள் உற்று பார்த்து கொண்டிருந்தாள்.

தீரனுக்கோ தரையில் கால் பதிடாமல் வானத்தில் பறப்பது போல இருந்தது.

தன் உயிரில் உருவான ஒரு பிஞ்சு மொட்டு தனக்கு தெரியாமல் மலர்ந்து இகழ்கள் விரித்து சிரித்தபடி தன்னிடம் வருவதை போல் இருக்க மகிழ்ச்சியில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

"நீ..க.. எத.. அப்பா..பா.." என்றாள் மழலை மொழியில்.

அதன் பிஞ்சு குரலில் உருகி போனவன் மெல்ல குழந்தையை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

"ஆமாடா" என்றான் சிரித்து.

"எது...குப்..பா.. அ.த..த ?" என்று கேட்டக.

"இல்லடா. கண்ல தூசி விழுந்துடுச்சு. அதான்." என்றான் தீரன்.

"ஏன் இவதோ..நாதா வத..த?" என்றது அவன் கன்னத்தை தடவி.

கண்களில் கண்ணீர் வழிய மிருதியை பார்த்தான் தீரன்.

அவளோ பதிலேதும் கூறாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

"டார்லிங்! அப்பா இவ்ளோ நாள் ரொம்ப தூரத்துல வேலை செஞ்சிட்டு இருந்தார். இப்போ தான் வந்துருக்காரு அதுவும் என் டார்லிங்கை பார்க்க." என்றான் அமுதன் மிதிஷாவிடம்.

"ஆமா...பா.பா.." என்றது குழந்தை ஆர்வமாய் தீரனிடம்.

"ஆமாம்" என்று நெகிழ்ச்சியாய் தலையாட்டியவன் மிதிஷாவை தூக்கி கண்ணீருடன் முகத்தில் மூத்த மழை பொழிந்தான்.

"சாரி டா. அப்பாவால சில காரணங்கலால வரமுடியலை. அதான் இப்போ வந்துட்டேனே. உனக்கு என்ன பிடிக்கும் அப்பாக்கு சொல்லு?" என்றான் தீரன் செல்லமாய்.

"எத...க்கு.. அம்மா..வை தா..ன் பிதி.. க்கும்.." என்றாள் மிதிஷா.

விழிகள் விரிய ஆச்சர்யமாய் பார்த்தாள் மிருதி.

'எனக்கும் தான்..' என்று மனதில் கூறிக்கொண்ட தீரன் மிருதியை ஓரவிழியால் பார்த்துக்கொண்டு, "ஓஹ் அப்படியா? என் செல்லக்குட்டிக்கு அம்மாவை தான் பிடிக்குமா? சூப்பர். வேற என்ன பிடிக்கும்? " என்று நெற்றியில் முத்தமிட்டான்.

"ஹ்ம்.. " என்று கன்னத்தில் கை வைத்து யோசித்த குழந்தை, "திதி பிதி.. க்கும்.. பேபி பிதி..க்கு..ம் .." என்றாள்.

"ஹுக்கும்.. போலாமா? டைம் ஆகுது" என்றாள் மிருதி.

ஏக்கமாய் தீரன் மிருதியை பார்க்க, ஒரு நொடி அவன் முகத்தை பார்த்தாலும் மறு அவன் கரங்களுக்குள் சரணடைய துடிக்கும் மனதை திசை திருப்பி கட்டுபடுத்தினாள்.

"போலாம் தி" என்றான் அமுதன்.

அவன் முகத்தை நேராக பார்க்க முடியாமல் "நாங்க கிளம்பறோம்" என்றாள் மிருதி.

'இந்த நொடி மீண்டும் தொடர வேண்டும். இப்போ போயிட்டா அதுக்கப்புறம் மிருதியை பார்க்க சான்ஸ் கிடைக்காம போய்டுச்சுனா? யோசி தீரா' என்று மனது கூற யோசித்தவன்.

"இன்னும் கொஞ்ச நாள் இங்க தான் இருக்க போறேன். குழந்தையை பாரக்கணும்னா பார்க்கலாமா?" என்றான் தயங்கி தயங்கி.

ஒரு நொடி அவன் விழியோடு கலந்தவள் உயிர் வரை சென்று அவன் ஸ்வாஸம் தீண்டுவது போல் இருக்க அதில் கரைய தொடங்கினாள்.

"ஹுக்கும்.." என்று அமுதன் செரும இருவரும் சொல்ல முடியாத உணர்வில் விழிகளை மீட்டெடுத்தனர்.

"ஹ்ம்.. நீங்க சொல்லும்போது தாராளமா பார்க்கலாம்" என்றாள் மிருதி.

"அம்மா.. அப்பா.. நம்..ம கூ..த வத..த்தும்.." என்றாள் மீதுஷா.

அவளின் சொற்களில் இருவரும் ஒரு நொடி திணறி விழிகள் மீண்டும் சந்திக்க மீண்டும், "ஹுக்கும் .. போலாம் தி" என்றான் அமுதன்.

அவன் குரலில் இருந்த எண்ணத்தை கண்டுகொண்டவள் அமுதனை முறைக்க குறும்பு மின்ன சிரித்தான் அவன்.

'போதும் உங்க அத்தானை சைட் அடிச்சது போதும்' என்பது போல் இருந்தது அது.

அவனின் மனக்குரலை கண்டுகொண்டவள் அமுதனை விழிகளை உருட்டி முறைக்க அந்த காட்சி ரம்யமாய் பதிந்து போனது தீரனின் மனதில்.

"அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்குடா. கண்டிப்பா நாளைக்கு அப்பா உன்கூட இருப்பேன்" என்றான் தீரன்.

"ஹை .." என்று கைதட்டி குதித்தது குழந்தை.

"போலாம்" என்று குழந்தையுடன் சென்றாள் மிருதி.

அவளே அறியாமல் தீரனின் மனதையும் எடுத்து சென்றாள்.

மிருதியை சீண்ட நினைத்த அமுதன்.

"ஒருத்தங்க சும்மாவே எனக்கு பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா நேர்ல அவங்க அத்தானை பார்த்தவுடன் கண்ணை கூட மூட்றதில்லை அப்படி ஒரு சைட். ரொம்ப ஜாலியா இருக்காங்க போல" என்றான் மிருதியை ஓரக்கண்ணால் பார்த்து.

அவனை முறைத்த மிருதி, "வண்டி ஒட்ற வேலையை மட்டும் இப்போ ஒழூங்கா பார்க்கலை அவ்ளோ தான்" என்றாள் மிருதி

"ஓஹ் அப்படியா?" என்றான் அமுதன் சிரித்து.

"நான் கொலை பண்ணிட்டு ஜெய்லுக்கு போக விரும்பலை. சோ அதனால வாய மூடிட்டு வண்டியை மட்டும் ஓட்டு." என்றாள் மிருதி.

வாய் விட்டு சிரித்தான்.

"டார்லிங். நான் கேட்டதிலையே இது தான் மிக பெரிய ஜோக்" என்று சிரித்தான் அமுதன்.

மறுநாள் அமுதன் போன் அடிக்க, "ஹலோ" என்றான்.

"நான் தீரன் பேசுறேன்" என்ற குரலை கேட்டவுடன் அமுதனின் குரலில் புன்னகை மலர்ந்தது.

"ஹலோ தீரன். எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நல்லா இருக்கேன். நான் உங்களை பார்க்கணும் இன்னைக்கு" என்றான் தீரன்.

"கண்டிப்பா நானும் அதைபத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்று சந்திக்க முடிவு செய்தான்.

****

"வணக்கம்" என்று இருவரும் கை குலுக்கி அமர்ந்தனர்.

"நான் அமுதன். என்னை நேத்தே தி கூட பார்த்துருப்பிங்க. ஆக்சுவலா தி யும் நானும் ஸ்கூல் ல இருந்து பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். அவங்க பேரண்ட்ஸ்கு அடுத்து அவ நம்புறது என்னை தான்.

இவங்க ஸ்ரீஷா" என்று ஸ்ரீஷாவை அறிமுகபடுத்தினான்.

"வணக்கம் மாமா" என்று ஸ்ரீஷா கூப்பிட தீரன் ஆச்சர்யமாய் பார்த்தான்.

"என்ன அப்படி பார்க்குறிங்க? அக்கா வேணா என்கூட பிறக்காம இருக்கலாம். ஆனா அக்கா மூணு வருசத்துக்கு முன்னாடி எப்போ எங்க வீட்ல காலடி எடுத்து வச்சாங்களோ அப்பவே எனக்கு அவங்க அக்கா ஆகிட்டாங்க. அப்போ நீங்க எனக்கு மாமா தான? அதான் சொன்னேன்." என்றாள் ஸ்ரீஷா.

"ஓஹ்" என்று தன்னவளை நினைத்து கன்னத்தில் குழிவிழ சிரித்தான்.

"மாமா" என்று ஸ்ரீஷா உரக்க கூப்பிட அவளிடம் திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாய் நோக்கினான்.

"என்ன அக்காவை பத்தி கனவா?" என்றாள் கிண்டலாய்.

லேசான வெட்கம் கலந்த சிரிப்பில் தலையாட்ட.

"சொல்லுங்க. எதுக்கு வர சொன்னிங்க?" என்றான் அமுதன்.

"உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்னு தெரியலை. ஆனா இந்த மூணு வருஷமா நான் ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கனது இல்ல. எனக்கு ... நான் ... நிறைய தப்பு பண்ணிருக்கேன். ஏத்துகிறேன். ஆனா, இப்போ அப்படி இல்ல. என் தப்பையெல்லாம் உணர்ந்துட்டேன். எனக்கு மிருக்கூடவும் என் பொண்ணு கூடவும் இருக்கணும். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறதே ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் தெரியும். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்ததுன்னு சொல்ல வார்த்தைகளே கிடையாது. இவ்ளோ நாளா மிருவை மட்டும் நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு அவ கன்சிவா இருக்க விஷயமே தெரியாது. அவளும் அதை பத்தி சொல்லலை" என்றான் மிகவும் உடைந்து.



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top