தீயாய் சுடும் என் நிலவு 17
17
"ஹிம்.. அதெல்லாம் இருப்பேன். நீ எது பண்ணாலும் அக்காவோட எதிர்காலத்தை ஞாபகத்துல வச்சிக்கிட்டு யோசிச்சு பண்ணு அமுதா. அவ்ளோதான் நான் சொல்வேன்." என்றாள் ஸ்ரீ.
"நிச்சயமா ஸ்ரீ. அதுக்காக தான் நான் அவரை பார்க்க போறேன். இனி அவ நல்லா இருக்கணும்." என்று சிரித்தான்.
மறுநாள் அமுதன், மிருதி, குழந்தை என்று மூவரும் தீரணை சந்திக்க சென்று கொண்டிருந்தனர்.
"பேபி" என்றது தனது சின்ன சிறிய பிஞ்சு குரலில் குழந்தை.
"என்ன டார்லிங்?" என்றான் அமுதன் சிரித்தபடி.
"நா...ம்... எ...த போ...தோம்... ?" என்றாள் மிதிஷா.
மிதியின் குழந்தை மிருதியின் முதல் எழுத்து தீரனின் முதல் எழுது என்று சேர்த்து மிதிஷா என்று வைத்திருந்தாள் மிருதி.
மிதிஷாவை சில நொடி நோக்கியவன் மிருதியை பார்த்து, "அம்மா சொல்லுவாங்க டார்லிங். எனக்கும் தெரியலை" என்றான் அமுதன் கிண்டலாய் சிரித்து.
அமுதனை முறைத்த மிருதி.
"மிதி குட்டி.. நாம இப்போ அப்பாவை பார்க்க போறோம்" என்றாள் ஒரு பெருமூச்சை விட்டு.
அம்மாவையே பார்த்து கொண்டிருந்த குழந்தை, "ஹை... அப்பாவை பா..த போ..தோம்.. " என்றது கை தட்டி.
அவளை ஒரு நொடி வியப்பாய் பார்த்த இருவரும் பின் மெல்லிய புன்னகைத்தனர்.
அவர்களுக்கு முன்னே கூறிய நேரத்திற்கு முன் வந்து நின்றிருந்தான் தீரன்.
தீரனின் அருகில் செல்ல செல்ல மிருதிக்கு இதயம் வேகமாய் துடிக்க படப்படப்போடு முன்னேறினாள்.
அவளின் பரிதவித்து புரிந்தாலும் தன் தோழியை கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை.
"ஏய் தி! எதுக்கு இப்படி டென்சன் ஆகுற? உன் புருஷன் தான? ரிலாக்ஸ்.. உன்னை ஒன்னும் முழுங்க போறதில்லை." என்றான் அமுதன்.
"வாய மூடுடா எருமை. கிண்டல் பண்ற நேரமா இது?" என்று அவனிடம் கிசுகிசுத்தாள்.
மூன்று வருடத்திற்கு முன் எதிரில் இருப்பவள் பார்க்க மனமில்லாமல் போனவனுக்கு, இன்று தூரத்தில் வரும் தன்னை விழிமூடாது நோக்கும் தன்னவனின் பார்வைக்குள் தொலையாமல் இருக்க தவித்தாலும் அவனின் பார்வை மேனியில் தகித்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது அருகில் சென்றாள்.
அவர்களை எதிர்நோக்கி இருந்தவனின் பார்வை மிருதியின் மேல் பட வேகமாக புன்சிரிப்புடன் எழுந்து நின்றான். அவளின் பின்னால் வரும் அமுதனை கண்டவுடன் நெற்றி சுருக்கி கேள்வியாய் நோக்கி பின் மிருதியிடம் நின்றது.
"வந்து ரொம்ப நேரம் ஆச்சா? " என்றாள் மிருதி பார்வை போரை முடிக்க.
"ஹு க்கும்.." என்று செருமினான் விழிகளில் வலியும் ஆத்திரமும் ததும்ப, "இல்ல இப்போ தான் வந்தேன். பை மினிட்ஸ் தான் ஆச்சு. உக்காருங்க" என்று அமர்ந்தான் தீரன்.
அவனின் விழிகள் மிருதியின் பார்வை தரிசனத்துக்கு ஏங்க, அவளோ அவன் வேண்டுதலுக்கு செவி சாய்க்காமல் இருந்தாள்.
"ஹ்ம்ம்... இது என்.. ஹ்ம்.. நம்ம பொண்ணு மிதிஷா. இவர் அமுதன். எனக்காக கடவுள் அனுப்புன தூதுவர். நான் சொன்னேன்ல கல்யாணம் நடக்க போகுதுன்னு..." என்றாள் அவனை மட்டும் பார்க்காமல்.
"ஹெலோ!" என்று ஸ்நேகிதமாய் அமுதன் கரம் நீட்ட தீரனின் பார்வையில் தீஜுவாலைகள் பறந்தன. மறுநொடி மிருதியை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்தி "ஹெலோ" என்றான் மரணவாக்கியமாய்.
'தி உன்னால இவருக்கு நான் பெரிய வில்லனா தெரியுறேன். எரிக்கிற சக்தி இருந்தா இந்நேரத்துக்கு நான் பொசுங்கிருப்பேன். ஆனாலும் ரொம்ப தான் உன் மாமனுக்கு. இவ்ளோ நாள் நீ எங்கே இருக்கேன்னு கூட கேட்கலை. இப்போ மட்டும் இவ்ளோ உரிமை வருது.' என்று உள்ளுக்குள் புலம்பினான் அமுதன்.
அவனின் குரல் தோனியில் மிருதியின் உடலில் சிலிர்ப்பு தட்டியது.
அவளின் கவனத்தை திசை திருப்பியது குழந்தையின் குரல்.
"தி.. எனக்கு அங்க இருக்கிற சாக்லேட் வேணும்" என்றது அருகில் வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டை கை காட்டி.
அம்மாவும் மகளும் அங்கே கவனத்தை செலுத்த இது தான் சமயம் என்று தான் வலகரத்தை மேசையின் மேல் வைத்து தீரனின் புறம் நகர்த்தினான்.
இவன் செய்வது ஒன்றும் புரியாமல் பார்த்த தீரன் அவன் முன் வந்தவுடன் தன் கரத்தினை எடுத்துக்கொள்ள அங்கே இருந்த அட்டையை வேகமாக எடுத்து மேசையின் அடியில் ஆர்வமாய் நோக்கினான் தீரன்.
அது அமுதனின் விசிட்டிங் கார்ட் என்பதை புரிந்துகொண்டவன் அமுதனை ஓரவிழியில் பார்க்க அட்டையை திருப்புமாறு அமுதன் சைகை செய்தான். உடனே தீரன் திருப்பி பார்த்து முகம் மலர்ந்தான்.
'ஹப்பா இப்போ தான்யா இவர் மூஞ்சி நல்லாருக்கு. இவ்ளோ நேரம் யாரையோ இல்லல்ல என்னை கொலை பண்ண போற மாதிரில்ல இருந்துச்சு. தப்பிச்சேன்டா சாமி.' என்று உள்ளுக்குள் பெருமூச்சுவிட்டான் அமுதன்.
அதில், 'தி'ஸ் மை பிரென்ட் ஒன்லி. மீ பாவம் சோ நோ கோவம்' என்று எழுதி இருந்தது.
அதை படித்த தீரனின் முகத்தில் மகிழ்ச்சி கூத்தாட அமுதனை நோக்கினான். அந்த பார்வையில் ஸ்நேகித புன்னகை இருந்தது.
மகளிடம் பேசி முடித்த தி இருவரையும் நோக்க எதுவும் நடக்காதது போல் அமைதியாய் இருந்தனர்.
"என்ன?" என்றாள் மிருதி.
"என்ன?" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்.
"இல்ல ஒன்னுமில்ல" என்றாள் மிருதி.
"பேபி" என்றது குழந்தை.
"யெஸ் டார்லிங்" என்றான் அமுதன் மென்மையாய் புன்னகைத்து.
"இபா..ர்... தா..ன்.. தா..தியா..?" என்றது மழலை மொழியில்.
விழிகளில் ஒளிமின்ன தீரன் நோக்க, "எஸ் டார்லிங். இவர் தான் உன் அப்பா. போ போய் பேசுடா" என்றான் அமுதன்.
"ஓகே பேபி" என்று இறங்கி தீரனிடம் வந்தாள் மிதிஷா.
.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top