தீயாய் சுடும் என் நிலவு 11

அமுதா நீ என்ன நினைக்கிற? இப்போ எனக்குள்ள ஒரு உயிர் வளருது உண்மைதான். ஆனா இதோட இருந்த எதுவுமே அறியாத இன்னொரு உயிர் போயிருச்சே." என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

ஸ்ரீஷா "அக்கா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் தான். ஆனா நாளைக்கு இந்த குழந்தை பிறந்தப்புறம், ஏன்மா எனக்கு மட்டும் அப்பா இல்லைனு கேட்டா என்னக்கா சொல்றது?" என்றாள் கண்கள் கசக்கியபடி.

"நீ சொல்றது உண்மை தான் ஸ்ரீ. என்னை அவர் விரும்பி இருந்து இப்படி நடந்திருத்தாலே தப்பு. ஆனா அவர் மனசுல நான் இல்லாம, வேற பொண்ணு இருக்க அதையும் வெளிபடையா சொல்லாம என்னோட குடும்பம் நடத்திருக்காரு." என்றாள் மிருதி மெதுவாக.

"தி" என்றான் அமுதன் அவளின் தூக்கம் தன்னையும் வாட்ட

"இல்ல தி. இன்னைக்கு நான் பேசிட்றேன். எந்த ஒரு பெண்ணும் வரபுரௌஷன் தன்னை மிகவும் நேசிக்கணும்னு தான் ஆசைபடுவா. நானும் அப்படி தானே விரும்பினேன். அவர் என்கிட்ட ஆசையா நாலு வார்த்தை பேசணும் அன்பா நடந்துக்கணும்னு எவ்ளோ நாள் எங்கிருக்கேன். ஆனா அவருக்கு நான் ஒரு மனுஷியாவே தெரியலைன்னு அப்புறமா தான் தெரிஞ்சது." என்றாள் மிருதி.

"அக்கா வருதபடாதீங்க அக்கா. எல்லாம் சரியாகிடும்." என்றாள் ஸ்ரீஷா.

"அவர் வேற ஒரு பெண்ணை விரும்புறாருன்னு தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்காது. அவர் வேணா என்னை விரும்பாம இருந்திருக்கலாம். ஆனா, நான் அவரை உண்மையா நேசிச்சேன். அவர் இவ்ளோ நான் செஞ்ச அட்டகாசத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். அவர் என்ன கேட்டார் தெரியுமா? நான் வேற பெண்ணை விரும்புறேன்னு தெரிஞ்சப்புறமும் என்னை தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிறுக்கியே உனக்கு வேக்காமா இல்லைன்னு கேட்டார். அந்த நிமிஷமே நான் செத்துட்டேன் அமுதா." என்று கதறினாள் மிருதி.

"இனி என் வாழ்க்கைல நானும் என் குழந்தையும் தான். அவ என்ன ஆசைபட்டாலும் அதை நிறைவேத்துறது தான். இனி அவர் எங்களுக்கு தேவை இல்ல.

நான் ஏற்கனவே உங்களுக்கு ரொம்ப தொந்தரவா இருக்கேன். இப்போ எனக்குள்ள இன்னொரு உயிரும் வளரதால சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போகணும்." என்றாள் மிருதி.

"இப்போ உன் உடம்பு இருக்க கண்டிஷனுக்கு வேலை கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்." என்றான் அமுதன்.

"ஆமாக்கா! " என்றாள் ஸ்ரீ.

"இல எனக்குன்னு ஒரு வேலை வேணும். அதுக்கு இப்போ முதல்ல ஏற்பாடு பண்ணனும்" என்றாள் மிருதி.

"தி. நீ சொன்னா கேக்க மாட்டியா? நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்குறோம்" என்றான் அமுதன் விடாபிடயாக.

"இல்ல அமுதா.." என்று அவள் முடிக்கும் முன் இடையில் புகுந்தால் ஸ்ரீஷா.

"அக்கா நீங்க வந்தப்புரம் எனக்கு அக்கா தாங்கை இல்லன்ற ஃபீலிங்க் இல்ல. இதே உங்க கூட பிறந்த தங்கச்சியா  இருந்தா என் டோல் பேச்சு கேக்கமாட்டீங்காளா?" என்றாள் ஸ்ரீஷா.

சிறிது நேரம் தயங்கிய மிருதி இறுதியில் ஒப்புக்கொண்டாள்.

"சரி இந்த ஒரு மாசம் உங்க ரெண்டு பேருக்காக வீட்ல இருக்கேன். ஆனா அடுத்த மாசம் என்னை தடுக்க கூடாது " என்றாள் மிருதி.

"சரி" என்று சிரித்தனர் அமுதநௌம் ஸ்ரீஷாவும்.

"ஆமா என்னை விடுங்க. நீங்க ரெண்டு பெரும் லவ் பந்த்ரா விஷயத்தை எப்போ என்கிட்ட சொல்லலாம்னு இருக்கீங்க?" என்றாள் மிருதி ஒற்றை புருவம் உயர்த்தி.

சிறிதுகொண்டிருந்த இஒருவரின் முகமும் மறுநொடி திருவிழாவில் துலைந்த குழந்தையை போல் முழித்தனர்.

அமுதனும் ஸ்ரீஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, வயிற்றை பிடித்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் மிருதி.

"இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இந்த ரியாக்சன் தரிங்க?" என்றாள் மிருதி.

"இல்ல தி. சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல..." என்று இழுத்தான் அமுதன்.

எச்‌எம்‌எம்.." என்று அவளும் ராகமாய் இழுத்து அமுதனை பார்க்க.

"ஆமாக்கா... நீங்களே ஏற்கனவே மனசு சரி இல்லாம இருக்கீங்க. அதுல இதை பத்தி இப்போ எதுக்கு சோள வேண்டாம்னு தான் .விட்டுட்டோம்." என்றாள் ஸ்ரீஷா.

"அப்படியா அமுதா? நீங்க  ரெண்டு பெரும் சந்தோஷமா இருந்தா அது எனக்கும் சந்தோஷம் தானே? நானே இதை பத்தி உங்ககிட்ட கேக்கணும்னு வைட் பண்ணிட்டு இருந்தீங்களோ?" என்று இருவரின் காதையும் பிடித்து செல்லமாய் திருகினாள்.

"ஆஹ்... வலிக்குது" இருவரும் ஒரு சேர கத்தினர்.

"எப்படியோ எனக்கு ரொம்ப சந்தோஷம் அமுதா. எப்படி இருக்க போறேன்னு தெரியாம பித்துபிடிச்சவ மாதிரி வந்தேன். எனக்கு ஒரு சுட்டி தங்கைய கொடுத்திருக்க. அதுவுமில்லாம,  அந்த தங்கச்சிக்கு இப்போ நீயே மாப்பிள்ளைன்னு தெரிஞ்சப்புறம் ரொம்ப சந்தோஷம். உன்னை விட யாராலையும் அவளை நல்லா பார்த்துக்க முடியாது" என்று சிரித்தாள் மிருதி.

"ஆமா நீ எப்படி கண்டுபிடிச்ச?" என்றான் அமுதன்.

"ஹ்ம்ம" என்றுய அவன் தலையில் செல்லமாய் குட்டினாள்.

"இதுக்கு என்ன சி. பி. ஐயா கூபிடனும்? அக்டான் உன் நெத்திலையே எழுதி ஒட்டி இருக்கே" என்றாள் மிருதி.

"என்ன தி? இப்படி சொல்லிட்ட?" என்று அப்பாவியாய் கேட்டான் அமுதன்.                                        

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top