2

"நல்ல வேலை எந்த கடவுள் புண்ணியமோ நான் வந்தேன். இல்லன்னா என்ன ஆகிருக்கும்?" என்றார் பக்கத்து வீட்டு அகிலாக்கா.

"காலைலர்ந்தே என்னவோ டயர்டா இருந்துதுகா. அதான் சாப்பிடலாம்னு தோசை ஊத்த மாவை கரைச்சிட்டு ஸ்டவ் ஆன் பண்ணலாம்னு லைட்டர் எடுத்தேன். என்ன நடந்துதுன்னு தெரியலைக்கா." என்றாள் சோர்வாய் மிருதி.

"உனக்கு புளியோதரைன்னா பிடிக்குமே. இன்னைக்கு அதான் செஞ்சேன். உனக்கு கொடுக்கலாம்னு வந்தா ஒரே காஸ் வாசனை. அவசர அவசரமா உள்ள ஓடிவந்து பார்த்தா. எனக்கு உயிரே நின்னு போச்சு. காஸ் பாட்டுக்கு வெளிய போயிட்ருக்கு. நீ மயங்கி கிழ விழுந்துருக்க. அப்புறம் ஜன்னலை திறந்துவிட்டு ஸ்டவ் ஆப் பண்ணிட்டு பேன போட்டு விட்டேன்." என்று புளியோதரையை உண்ண வைத்தார்.

"ரொம்ப நன்றிக்கா" என்றார்.

"அதெல்லாம் விடும்மா" என்றார் அகிலா. பின் மிருதியை பார்த்து,

"உடம்பு முடியலைனு உன் புருஷன்கிட்ட சொல்ல வேண்டியது தான?" என்றார் கடுப்பாய்.

"அவரே ஆபிஸில் ஆயிரத்தெட்டு டென்சன்ல இருப்பார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு தான்கா சொல்லல." என்றாள் மெல்ல சிரித்து.

"சரி. உங்க அப்பா போன் நம்பர் கொடு வர சொல்றேன்" என்ற அகிலாக்காவை அவசரமாக தடுத்தாள்.

"வேண்டாம்கா. அப்புறம் அப்பா ரொம்ப டென்சன் ஆகிடுவார்" என்றாள் பதற்றமாய்.

"சரி. உன் புருஷன் நம்பராவது கொடுடி." என்றார்.

'அப்படியே வந்துட்டாலும்' என்று நினைத்தவள்.

"இதுக்கு எதுக்குகா எல்லோரையும் டென்சன் பண்ணனும். கொஞ்சநேரம் படுத்து தூங்கினா சரியாகிடும்." என்றாள் மிருதி உள்ளுக்குள் தவித்தபடி.

"அப்போ நான் வரேன் ஹாஸ்ப்பிட்டலுக்கு கிளம்பு. ஏன்டி ஒரு சுவரு தான் ரெண்டு வீட்டுக்கும் குறுக்கால இருக்கு. உடம்பு முடியலைன்னா கூப்பிடமாட்டியா? அப்புறம் எதுக்கு அக்கம்பக்கம் லா இருக்கோம். கிளம்பு. வீட்டை பூட்டிட்டு வரேன்." என்று வெளியே சென்றார் அகிலா.

"சரிக்கா" என்று உடையை மாற்றி தயாரானாள் மிருதி.

இருவரும் ஆட்டோவில் மருத்துவமனை செல்ல,

அகிலா "ஏன்டி நல்லா படிச்சிருக்க. உனக்கு கட்டிக்க வேற மாப்பிள்ளையே கிடைக்கிலையா? சொந்தம்னு சொல்லி ஏன்டி கட்டிக்கிட்டு ஏன் இப்படி கஷ்டப்படற" என்று கேட்டார்.

ஒரு நாளும் தன் வாழ்க்கையை பற்றி எதுவும் சொல்லாமல் தன்னை தெரிந்து கொண்டு கேட்கும் அகிலாவை சோகமாய் பார்த்தாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை நல்லா பார்த்துக்குறார். சில நேரத்துல ஏதோ ஆபிஸ் டென்ஷன்ல இருப்பார் அவ்ளோ தான்." என்றாள் மிருதி பொய் சொல்கிறோம் என்று தெரிந்தும்.

"ஹ்ம்ம். பார்க்கிறேனே. அவர் உன்னை பார்த்துகிற லட்சணத்தை. எல்லா புருஷனுங்களுமே நல்லா பார்த்துக்கிறாங்க. உன் புருஷன் மட்டும் தான் பார்த்துகலைன்னு சொல்லலை. ஆயிரம் சண்டை சச்சரவு வந்தாலும் கடைசில அவங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் இருக்கும். ஆனா, ஒரு நாளும் உங்களை பார்த்தா அப்படி தெரியலை." என்றார் அகிலா.

பேச்சை மாற்ற, "அக்கா. வாங்க உள்ள போகலாம்" என்று மருத்துவனையினுள் சென்றனர்.

சோகத்திலும் மகிழ்ச்சி என்பது போல் இருந்தது மிருதிக்கு அவளின் கற்பசெய்தி.

'இனியாவது இந்த பிள்ளைக்காகவாது என்மேல பாசமா இருப்பார்ல?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்த பின், "நீ எதுவும் செஞ்சிட்டு இருக்காத. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று அகிலா உணவை எடுத்துவந்து மிருதியை சாப்பிட வைத்து மாத்திரைகளை கொடுத்தார்.

"உன் புருஷனுக்கு சொன்னியா?" என்றார் அகிலா.

"இல்லக்கா. அவர் வீட்டுக்கு வந்ததும் சர்ப்ரைஸ் சொல்லனும்" என்றாள் மிருதி.

"சரிம்மா. நான் வரேன். உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு" என்று சென்றுவிட்டார் அகிலா.

'இவருக்கு எதுவும் சாப்பிட செய்யலையே. போன் செஞ்சு ஏதாவது வாங்கிட்டு வர சொல்லலாம்.' என்று தீரனுக்கு போன் செய்தால் அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க ஏமாற்றத்துடன் அமர்ந்தாள் மிருதி.

'சரி. வந்தப்புறமே வாங்கிட்டு வரசொல்லலாம்' என்று விட்டுவிட்டாள்.

'நீ அப்பா ஆகபோறன்ற விஷயத்தை சொல்லி உன் முக மாறுதல்களை மனதினுள் சேமித்து வைத்திட ஆசை.' தீரனுக்காக காத்திருந்தாள்.

'எனக்கு உன் தோள்ல சாய்ஞ்சி தூங்கனும் போல இருக்கு மாமா. இந்த விஷயம் தெரிஞ்சதும் நீ என்னை தாங்கனும். என் மேல நீ வச்சிருக்க அன்பை முழுஷா தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்.' என்று நினைத்த படியே மாத்திரையின் வேலையால் உறங்கி விட்டாள் மிருதி.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top