1
"அப்பா! இப்போ என்னப்பா அவசரம்? இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள கல்யாணம்னு சொல்றிங்க? " என்றாள் மிருதி தன் கனவு நிராசையாய் போவது போல் எண்ணி..
"டேய்! பொண்ண பெத்த அப்பனோட கனவே பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரனும்னு தான்டா. நீ படிக்கணும்னு ஆசைப்பட்ட, படிக்க வச்சேன். அது எதுக்குன்னா உன் சொந்தக்காலில் உன்னால நிக்கமுடியும்னு உனக்கு நம்பிக்கை கொடுக்க தான்." என்றார் மகளின் தலையை கோதியபடி சீனிவாசன்.
"ஹ்ம்ம்... ஏன்பா எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணலைன்னு யாராவது ஏதாவது சொல்றாங்களா?" என்றாள் சந்தேகமாக.
"அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா உனக்கும் வயசாகிட்டே போகுது. " என்றார்.
சிறிதுநேரம் அவரையே பார்த்து கொண்டிருந்தவள்.
"சரிப்பா. நான் கல்யாணம் செஞ்சுகிட்டா உங்களுக்கு சந்தோஷம்னா நான் பண்ணிக்கிறேன்." என்றாள் மிருதி.
"மிருதிக்குட்டி நிஜமாவாடா. எனக்கு ரொம்பக சந்தோஷம்டா" என்றார் விழிகளில் மகிழ்ச்சி நீரோடு.
"உங்க அத்தைக்கு உன்னை மருமகளாக்கிகனும்னு ரொம்ப ஆசை. உனக்கு படிப்பு முடிஞ்சதுலர்ந்து கேட்டுட்டே இருக்கா. நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருந்தேன். நீயும் சம்மதிச்சிட்ட. இனி எல்லாம் நல்லபடியா நடக்கணும்." என்றார் சந்தோஷமாய்.
"யாரு அந்த நெட்ட கொக்கா மாப்பிள்ளை. இதுக்கு நீங்க என்னை பாழுங்கிணத்துல புடிச்சி தள்ளிவிடலாம்பா. அவனுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது. அவனை என்னால கல்யாணம் பண்ணமுடியாது." என்று பொறிந்தாள் மிருதி.
"மிருதி மாப்பிள்ளையை அப்டிலாம் பேசக்கூடாது. சின்ன வயசுல போட்ட சண்டையை வச்சு இப்போ யாராவது முடிவு பண்ணுவங்களாம்மா? இப்போ பையன் ரொம்ப பொருப்பாய்ட்டான். ஆஸ்திரேலியால இருக்கான்." என்றார் பெருமையாய்.
"என்னது ஆஸ்திரேலியாவா? என்னப்பா என்னை அவ்ளோ தூரம் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும்னு எப்படிப்பா முடிவு பண்ணிங்க?" என்றாள் அழ தயாராக.
மகளின் தோளில் கரம்போட்டு அணைத்துக்கொண்டவர்.
"டேய். அதை நான் யோசிக்காம இருப்பேனா? அவரோட டைம் இன்னும் ஒரு வருஷம் தான். அதுக்கப்புறம் இங்க தான் சொந்த பிசினஸ் செய்ய போறார்." என்று சிரித்தார்.
"சரிப்பா" என்றாள்.
"அத்தை மத்த சடங்கு சம்பரதாயம் எல்லாம்லா வேணாம்னு சொல்லிட்டா. அடுத்த இருபதாவது நாள் நல்ல முகுர்த்தம் வருது. மாப்பிள்ளையும் இன்னும் ஒரு வாரத்துல வரார். அவருக்கு பத்து நாள் தான் லீவு இருக்காம். அதனால எல்லாம் சிம்பிள்லா பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்க." என்றார்.
"அப்பா. என்னப்பா ஷாக் மேல ஷாக் கா தரிங்க. இன்னும் இருபது நாள் தான் இருக்கா" என்றாள் கண்ணீரோடு.
"நீ எதுக்கும் கவலை படாதடா. அப்பா எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்று வெளியே சென்றார்.
அவசர மேனியில் திருமணம் நடந்தேற, இந்த இருபது நாளில் ஒரு முறைகூட நெட்டை கொக்கு நேரில் வரவில்லை, போனிலும் பேசவில்லை என்பது மிருதிக்கு எதுவோ போல் இருந்தது.
மணமேடையில் தான் முதல் முதலாக அவனை கண்டாள்.
ராஜகுமாரன் என்று கூறமுடியாது. ஆனாலும் அழகிய ஆண்மகன்.
அவன் அருகினில் நிற்கும்பொழுது உயிருக்குள் சென்று எதுவோ குடைவது போல் ஒரு உணர்வு.
திருமண வாழ்க்கை அழகாக ஆரம்பித்தது. அவள் பயத்திற்கு அர்த்தங்கள் இல்லாமல் செய்தான் அவளின் கணவன் தீரன்.
அழகாய் பேசி அன்பாய் நடந்து அவளின் மனதில் நிரந்தரமாய் புகுந்து கொண்டான்.
மூன்று மாதங்கள் முடித்துவிட, தீரன் திடிரென்று ஒரு நாள் மது அருந்திவிட்டு வந்தான்.
"என்ன தீரா, இது புது பழக்கம்?" என்றாள் எரிச்சலாக.
"சாரி டி. ஆபீஸ்ல இன்னைக்கு பார்ட்டி. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம குடிக்க வச்சிட்டங்க. இனி, இதுமாதிரி நடக்காம பார்த்துக்குறேன்." என்றான் தீரன்.
தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தீரனின் குழந்தை கெஞ்சலில் கரைந்து போனாள்.
"சரி. இதுதான் கடைசி." என்றாள்.
"ஓகே" என்று சிரித்தபடி உறங்கி போனான்.
ஆனால், அதற்குப்பிறகு மூன்று மாதங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நகர, மீண்டும் தினம் ஒரு காரணம் என்று மது அருந்திவிட்டு வர ஆரம்பித்தான்.
என்ன கூறியும் என்ன செய்தும் தீரனின் பழக்கம் மாறவில்லை.
மது அருந்திவிட்டால் மிருதி இருக்கும் அறைக்குக்கூட வரமாட்டான்.
தீரனுக்காக ஆசை ஆசையாக சமைத்து வைத்து காத்திருக்க, அதைப்பற்றி எண்ணம் துளியும் இல்லாமல் சுயநினைவு இல்லாமல் இருப்பான்.
காத்திருப்புகள் அதிகமாகி ஏக்கங்களாய் மாறின.
ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான்.
பேருக்கு என்று திருமண வாழ்க்கையை இருவரும் கழிக்க ஆரம்பித்தனர்.
என்ன காரணம் என்று எவ்வளவு முயன்றும் மிருதியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சோகங்களை சொல்லி அழ சொந்தங்களும் அருகில் இல்லாமல் காதலாய் பார்க்க வேண்டிய கணவனின் அன்பும் இல்லாமல் பித்து பிடிப்பது போல் தோன்றியது மிருதிக்கு.
தூரத்தில் இருக்கும் பெற்றோரிடம் கூறி அவர்களை கலங்கடிக்க விரும்பாமல் சந்தோஷமாக இருப்பதாக அனைவரிடமும் கூறுவாள்.
ஒரு வருட காலம் முடிந்து சென்னைக்கும் வந்தாயிற்று.
மற்றவர் முன் இவனல்லவா கணவன் என்பது போல் நடந்து கொள்பவன். தனிமையில் அவள் யாரென்றே தெரியாதது போல் நடந்துகொள்வான்.
மற்றவர் முன் அவனை விட்டுக்கொடுக்காத மிருதி நிச்சயம் ஒரு நாள் மாறுவான் என்று அவனுக்கான காதலோடு காத்து கொண்டிருந்தாள்.
காலையில் வேலைக்கு செல்லும் முன்,
"டேய் மாமா. எனக்கு எதுவும் பெருசா ஆசைலாம் இல்ல. நீ குடிக்கிறதை மட்டும் விட்ரு அதுபோதும். அப்போதான் எனக்கு புடிச்சவனா இருக்க நீ." என்றாள் மிருதி.
"சரி டா குட்டிமா. எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும். உன் மேல சத்தியமா இன்னைலர்ந்து குடிக்க மாட்டேன் போதுமா" என்று சென்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top